Gayathri Senthil
Member
- Joined
- Jun 16, 2026
- Messages
- 28
- Reaction score
- 31
- Points
- 13
இது அன் அஃபிஷியல்
சஹானா வீட்டிற்கு வந்து தன் குழந்தையை படுக்கையில் கிடத்தியவள் தானும் வந்து அவன் அருகில் அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.
மறக்க நினைக்கும் அநேக நினைவுகள், நெஞ்சுக்குள் சுனாமி அலையாக எழுந்து கொண்டுதான் இருந்தது, கண்களில் மட்டும் கண்ணீர் நிறைந்த படியே இருந்தது, கௌதமும் பாரில் அமர்ந்திருந்தான்,
அவன் கைகளில் இருந்து வழிந்த ரத்தத்தை பார்த்தால் அங்கிருந்த பேரர், “சார் என்னாச்சு சார்?” என்று வேகமாக அவன் அருகில் ஓடி வந்தார்.
“சார் எதாவது வேணுமா?* என்று கேட்க கேட்க, அவன் எதுவுமே சொல்லவில்லை அமைதியாகவே வெரித்து கொண்டு இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை.
அங்கிருந்து எழுந்தான், வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
“ என்னடா ஆச்சு இவருக்கு ,சிங்கரா இருந்தா கூட இவ்ளோ ஸ்ட்ரெஸ்ல தான் இருப்பாங்க போல இருக்கு, பணம் காசு இருந்தா சந்தோஷமா இருக்கலாம் என்று யார் சொன்னது, பார் அவரை..”
என்று அவன் அருகில் இருந்த இன்னொரு வேலையாளிடம் சொன்னவன், அந்த இடத்தை கிளீன் செய்ய சொன்னான்.
தன் கைகளில் ரத்தம் வந்து கொண்டிருப்பதை கூட உணர மாட்டாதவன், ரெஸ்ட் ரூம் சென்றவன் தன் கையை கழுவிக் கொண்டு தன் கைக்குட்டையால் இறுக்க கட்டியபடி தீபக்கிற்கு அழைத்தான்.
“என்ன? நான் சொன்னதா என்னாச்சு?” என்று கேட்க,
“ பாஸ் சொல்லி இருக்கேன் பாஸ், நீங்க சொல்லி முழுசா ஒன் அவர் கூட முடியல பாஸ்” என்று தடுமாற்றத்துடன் அவன் கூற..
“ இடியட், எனக்கு இம்மீடியேட்டா டீடைல்ஸ் வேணும், இப்பவே வந்தாகணும்” என்று அவன் அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,
“பாஸ், ஏன் பாஸ் இந்த விஷயத்தில் இவ்வளவு டிப்ரெஸ்ட் ஆகி இருக்கீங்க, அவங்களுக்கும்.. உங்களுக்கும்..” என்று மீண்டும் அவன் தடுமாற்றத்துடன் இழுக்க,
“ஜஸ்ட் டூ, வாட் ஐ சே, அதை தவிர்த்து வேற எந்த கொஸ்டின் என்கிட்ட கேட்க,புரிஞ்சுதா?” என்றவன்,
“ பாஸ் நமக்கு ப்ரோக்ராம் இருக்கு பாஸ், கான்செர்ட் கிளம்பனும், நீங்க இப்போ பார்லயா பாஸ் இருக்கீங்க?” என்றதும், ஒரு கணம் நிதானித்தான்.
‘தான் இப்போது குடிப்பது உசிதம் அல்ல, பாடும் போது, தொண்டை பிரச்சனை செய்தால் என்ன செய்வது, போய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தவன்
“ நான் இப்ப பார்ல தான் இருக்கேன், நான் சொல்ற பர்சன் காண்டாக்ட் டீடைல்ஸ் கொண்டு வா” என்றவன் சிலருடைய தகவலை சொல்ல, “ஓகே பாஸ்” என்று சிறிது நேரத்தில் அங்கே வந்தான் தீபக்.
அந்த பாரின் வெளிப்புறம் ரெஸ்ட்டாரன்ட் போல் தான் இருக்கும்,அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்தபடி தன் மொபைலில் இருந்த அவளின் புகைப்படத்தை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்,
தீபக் அருகில் வரவும் சட்டென அதையும் மறைத்து வைத்தவன், “என்ன, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?” என்று கேட்க,
“நீங்கள் சொன்ன மாதிரி நீங்க சொன்ன டீடைல் இன்ஃபார்ம் பண்ணிட்டேன் பாஸ், அவர் உங்க கிட்ட பேசனும்னு சொன்னாரு” என்று கால் போட்டு அவனிடம் கொடுத்தான்,
“கௌதம் ஸ்பீக்கிங்” என்றவன், “ஓகே எனக்கு இன்னைக்கு நைட்டுக்குள்ள வந்து ஆகணும்” என்று சொன்னான்.
“ சரி” என்று அந்த பக்கத்தில் இருந்து விஷயத்தை வாங்கியவன், காலை கட் செய்து இருந்தான்.
அவன் போனை திரும்ப ஃபோனைக் கொடுக்கும் பொழுது தான், அவன் கையில் இருந்த ரத்தத்தையும் அதை அவன் கர்சிப்பினால் கட்டி இருந்ததையும் பார்த்த தீபக்,
“ பாஸ் என்ன, ரத்த காயமா இருக்கு? எப்படியாச்சு?” என்று பதறியபடி கேட்டான்,
“விடு” என்று கையை விலக்கிக் கொள்ள முயல,
“சொல்லுங்க எப்படியாச்சு?”
“ஒன்னும் இல்ல, அந்த கிளாஸ் டம்ளர் உடைஞ்சிருச்சு” என்று அவன் கூறவும்,
“ ஓஹோ.. உடைஞ்சிடுச்சா உடைச்சிட்டீங்களா?” என்று கேட்க ,சட்டை நிமிர்ந்து பார்த்தான் கௌதம்.
“ இல்ல பாஸ் உடஞ்சி இருந்தாலும், கீழ விழுந்து தான் உடஞ்சிருக்கணும், கையில எப்படி? என்றான்.
“நீ எனக்கு பிஏவா? லாயரா ? எவ்ளோ கொஸ்டின்ஸ் கேட்டுட்டு இருக்க ” என்று கடுப்புடன் கேட்டவன்.
“இப்ப என்ன?” என்று எரிச்சலாக கேட்டான்,
“ ஹாஸ்பிடல் போலாம் பாஸ் ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டுட்டு வரலாம், இல்லனா இந்த ஹோட்டல்ல இங்க டாக்டர் இருக்காரானு என்று கேட்போம்,
“ பிகாஸ் இது ஒரு ஸ்டார் லக்ஸூரியஸ் ஹோட்டல்ல, நிச்சயம் டாக்டர் இருப்பாங்க “என்று சொல்ல,
“ ஓகே பாரு” என்றான்.
“அப்போ, நீங்க இன்னும் ட்ரிங்க்ஸ் பண்ணலயா பாஸ் ?”என்று தயக்கமாக கேட்டான் ,
“இப்ப நான் டிரிங்க்ஸ் பண்ணனுமா, இல்லை பாட்டு பாடனுமா?”
“ பாடனும் பாஸ், நீங்க தண்ணி அடிக்கலனா கூட பரவால்ல, கண்டிப்பா பாட்டு பாடுங்க, அப்புறம், ‘தண்ணீ தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்னு’ பாட ஆரம்பிச்சா, நான் என்ன பண்றது? அப்புறம் ஆடியன்ஸ் என்னைய தண்ணி தொட்டியிலயே முக்கிடுவாங்க” என்று அவன் வேகமாக சொல்ல, அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து லேசாக சிரித்தான் கௌதம்.
அதன் பிறகு அங்கிருந்த டாக்டரை வரவழைத்து அவனுக்கு கையில் ஒரு கட்டும் போட்டு டீடியையும் டாக்டர் போட்டு விட்டு சென்றார்.
“ஏன் பாஸ் இன்னிக்கு என்ன பாட்டு போட போறீங்க?” என்று கேட்டான், திரும்பி அவனை பக்க வாட்டாகப் பார்த்தான் கௌதம்.
“இல்ல சினி சாங்க்ஸ்ஸா, ஆல்பம் சாங்ஸா?” என்று தீபக் கேட்க,
“பாடும் போது பாரு” என்றவன்,
“சரி இப்போ ட்ரிங்க்ஸ் பண்ண நாட் இன்ட்ரெஸ்டட், ஈவினிங் கான்சர்ட் இருக்கிறதுனால, சோ இங்கிருந்து கிளம்புறேன், பட் ஒரு டிரைவ் போயிட்டு வரேன்..”
“ பாஸ் இப்ப போய்தான் ஆகணுமா? ரெஸ்ட் எடுக்க கூடாதா?” என்று கேட்டான் தீபக்,
“எனக்கு உடம்புக்கு ரெஸ்ட் தேவை இல்லை, மனசுக்கு தான் கொஞ்சம் ஃப்ரீ ஆகணும்” என்றவன், “கி” என்றான்.
“பாஸ் நீங்களே டிரைவ் பண்ணிட்டா போகப்போறீங்க, நீங்களே ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்க?”
“ டேய் தெரியும்டா, கீ கொடு” என்று மீண்டும் அவன் முகத்தில் கடுமை பரவியது,
தீபக்கிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு, அதேபோல் முகத்தில் மாஸ்கை எல்லாம் அணிந்து கொண்டு, அங்கிருந்து கிளம்பினான் கௌதம்.
அதே நேரம் வீட்டில் தன் அருகில் படுத்திருந்த ஸ்வரனுக்கு குளிர் அதிகமாக திடீரென்று முனகினான்.
“ என்னானது?” என்று பார்க்க, குழந்தைக்கு குளிர் எடுத்துக் கொண்டிருந்தது, பயந்துவிட்டாள் சஹானா,
அவனுக்கு போர்த்தியே விட்டாலும் காய்ச்சல் நேற்றைய விட இன்று அதிகமாக இருந்தது போலும்,
ஏசி அறையில் இருந்தது அவனுக்கு இருந்த காய்ச்சலை அதிகப்படுத்தி இருந்தது, பயந்து போனவள் அவனை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பி விட்டாள்.
கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய கௌதம், அப்படியே காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
அவன் பங்கார் சவுத் வழியாக புக்கிட் ஜலில் நோக்கி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, சாலையோரத்தில் ஒரு பெண் பதற்றமாக காய்ச்சலால் மயங்கிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கேப் ஏறுவதை பார்த்தான்,
ஒரு கணம் அந்த உருவத்தையே கூர்ந்து பார்த்தவன் அந்த காரை பின் தொடர ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் அந்த கேப் பன்டானி ஹாஸ்பிடல், கோலாலம்பூர் என்று பெயர் பலகை தாங்கி நின்ற அந்த மருத்துவமனை முன் நின்றது ,வேகமாக அதிலிருந்து இறங்கியது சஹானாவே தான்..
குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் மருத்துவமனைக்குள் செல்ல பின்னோடு வந்தவன் அவள் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்தான்.
வேகமாக உள்ளே சென்றாள் சஹானா, அதற்குள் இவன் காருடன் உள்ளே வருவதை பார்த்த செக்யூரிட்டி அவன் மாஸ்கில் வேறு இருந்ததால் அந்த செக்யூரிட்டிக்கு யார் என்று தெரியவில்லை,
“சார் கார் பார்க் பண்ணிட்டு வாங்க” என்று கூறவும், ஒரு கணம் யோசித்தவன், ‘எப்படியும் கேட்டால் சொல்வார்கள்’ என்று காரை பார் செய்து விட்டு உள்ளே சென்றான்.
அவன் பார்க் செய்து வருவதற்குள் எங்கே சென்றாள் சஹானா என்று தெரியவில்லை, சுற்றும் முற்றும் பார்த்தான், அவள் ஓடி வந்த வேகத்தை பார்த்தால் நிச்சயம் எமர்ஜென்சியில் தான் கேட்டிருப்பாள்.
ரிஷப்ஷன் சென்று, “ஒரு பொண்ணு, இப்போதான் குழந்தையை தூக்கிட்டு வந்தாங்க ,அவங்க எந்த பக்கம் போனாங்க?” என்று கேட்கவும்,
அந்த ரிசப்ஷினிஸ்ட், “யாரு சார்?” என்று கேட்டாள்,
“ இப்போ, இப்பதான் ஜஸ்ட் ஒரு 2 மினிட்ஸ் முன்னாடி, டு டூ பைவ் மினிட்ஸ் முன்னாடி” என்று கூறவும்,
“ ஓ அவங்களா, சஹானா ஸ்வரன்..” என்று கேட்க, “சட்டென அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது ,குழந்தையின் பெயர் ஸ்வரன்னா?” என்று கேட்டான்.
அந்த ரிசப்ஷனிஸ்ட்க்கு சந்தேகம் ஆகிவிட்டது, “அப்போ நீங்க பேஷண்டுக்கு சொந்தக்காரங்க இல்லையா? ரிலேட்டிவ்ஸ் நினைச்சு தானே..” என்று அவள் கேட்க,
யாரும் அருகில் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சுற்றி பார்த்தவன், தன் கூலர்ஸ் மாஸ்க் கழட்டியவன், “அவங்க தெரிஞ்சவங்க தான்” என்று சொல்ல,
“ சார்” என்று அந்த பெண்ணின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்க சொன்னவன், “ப்ளீஸ் நான் பர்சனல் விஷயமா வந்திருக்கேன், சத்தம் போட்டு ஊரக்கூட்டக் கூடாது, எனக்கு தெரிஞ்சவங்க தான், அதான் விசாரிக்குறேன் என்றான்.
“சஹானா.. சைல்ட் ஸ்பெலிஸ்ட் ரகு சார் ரூம், ரைட் காரிடார்ல இருக்கு, அங்கே தான் சார் போனாங்க” என்று ரிசப்ஷனிஸ்ட் தெரிவித்தாள்.
அந்த பெண்ணிற்கு கையும் ஓடவில்லை ,காலும் ஓடவில்லை “சார் ஒரே ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ்..” என்று அந்த நிலைமையிலும் கேட்க, கடுப்பாக தான் இருந்தது அவனுக்கு..
அவள் கேட்ட ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு, சஹானா சென்ற தகவலைப் பற்றி எல்லாம் வாங்கிக் கொண்டு பின் தொடர்ந்தான்.
அவன் மாஸ் அணிந்திருந்ததால், அவன் யார் என்று பெரும்பாலும் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை, அவர்களும் குழப்பமாக அவனைப் பார்த்தபடி தான் இருந்தார்கள்.
ஹாஸ்பிடலுக்கு உள்ளே மாஸ்க் அணிந்து வருவது ஓகே, கூலர்ஸ் கூடவா யாராவது அணிந்து வருவார்கள் என்பது போல் இருந்தது மற்றவர்கள் பார்வை,
அவன் சஹானா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தான், அவள் இருந்த பதற்றத்தில் அதை எல்லாம் கவனிக்கவில்லை ,உள்ளே பேசுவது நன்றாகவே கேட்டது.
“ என்னமா மார்னிங் தானம்மா இன்ஜெக்ஷன் பண்ணிட்டு போனா, குழந்தையை கொஞ்சம் இன்னும் வீட்டில் இருந்து பார்த்துக் கூடாதா, அவனுக்கு ஏசி செட் ஆகல”
“அது வந்து டாக்டர், வீட்ல பார்த்துக்க ஆள் இல்ல, அதனால தான் கூட்டிட்டு போனேன் ஆபிஸ்க்கு” என்று சொல்ல
அவள் பேசுவதையெல்லாம் கேட்க கேட்க சுர் என்று ஏறிக்கொண்டிருந்தது கௌதமிற்கு.
“ஓகே, இனி கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க, வேற வழி இல்ல, நீங்க லீவ் போட்டுட்டு, கூட இருந்து தான் ஆகணும், இல்லனா ப்ராப்ளம் சீரியஸா தான் ஆகும், இந்த மெடிசென்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க” என்று சொல்லி,
“சிஸ்டர் அவங்க மெடிசின் வாங்கி வந்ததும், அதை அவனுக்கு ஐ வி போட்டு விடுங்க, நான் மற்ற பேஷண்ட்ஸ் பாத்துட்டு வரேன், பிறகு பார்க்கலாம் என்று அங்கிருந்து அவர் வெளியேற, சஹானா வேகமாக சென்றாள் அவர் பின்னால்,
“ வேறு ஏதாவது ஆபத்தா டாக்டர்? வேற எதுவும் எமர்ஜென்சி இல்லையே” என்று பதற்றமாக வினவினாள்.
“அவனுக்கு ஆல்ரெடி ஃபீவர் அன்ட் கோல்ட் இருக்கு,இந்த டைம்ல போய் வெளியே கூட்டிட்டு போகலாமா , அதுவும் ஏசில இருந்திருக்கீங்க, நார்மலா தான் இருக்கான், அவனுக்கு அது செட் ஆகல அதான், ஹய் ஃபீவர் காமிக்குது” என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவள் மருந்து வாங்க சென்றாள்.
கீழே குனிந்தபடி அமர்ந்திருந்தான் கௌதம், அவள் சென்றதும் சட்டெனை எழுந்தவன் குழந்தை அறையை எட்டிப் பார்த்துவிட்டு, டாக்டரின் பின்னாலையே நடந்தான், அனுமதி எதுவும் கேட்காமல்
அறைக்குள் நுழைந்துவிட்டான்.
சட்டென்று தன அருகில் ஒருவன் மாஸ்க் கூலர்ஸுடன் வந்தவுடன் டாக்டரே பயந்துவிட்டார்,
‘அதுவும் பர்மிஷன் இல்லாமல் வருகிறானே யார் இவன்?’ அதிர்ச்சியுடன் அவர் பார்க்க, அவனும் கதவை திரும்பிப் பார்த்து சஹானா சென்று விட்டாளா என்று பார்த்துக் கொண்டிருக்க,
யார் நீ என்று பதற்றத்துடன் கேட்டார் டாக்டர்,
கூலர்ஸை கழட்டியவன், “சாரி டாக்டர், உங்கள பயமுறுத்து இப்படி வரல, நான் இப்படியே வெளியே வந்தால் என்ன ஆகும் தெரியும்ல” என்று அவனும் தயக்கமாக கேட்க ,அவருக்கும் கண்கள் விரிய,
“சிங்கர் கிருஷ் தானே நீங்க?” என்று கேட்க ,ஆமாம் என்பதைப் போல் தலை அசைத்தான் அவன்.
“எனக்கு நீங்க ஒரு ஃபேவர் பண்ணனும் சார்” என்றான்,
“என்ன?” என்று அவர் பார்க்கவும், அவன் கூறியதைக் கேட்டு, “நோ இதை அன் அஃபிஷியலா பண்ண முடியாது என்று பதற்றமாக வந்தது அவர் குரல்.
“இதை லீகலா பண்ண என்னால முடியும்,அதை
ஃபேஸ் பண்ண உங்க பேஷன்ட்டால முடியுமா?” என்று கூர்மையாக கௌதம் கேட்க,
அவன் மேலும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ டாக்டர் தான்.
தொடரும்.