Gayathri Senthil
Member
- Joined
- Jun 16, 2026
- Messages
- 28
- Reaction score
- 65
- Points
- 13
உங்க அம்மாவை கேளுங்கள்
கிராண்ட் ஹயாட் ஹோட்டலின் வரவேற்பறையில் நிலவிய அந்த அமைதி, கௌதமின் நெஞ்சில் பேரலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
'ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ... நடுநிசியில் அவசர அவசரமாக ஏறிச்சென்ற சஹானா... அவளது செல்போன் நாட் ரீச்சபிள்...'
தோழி லிசா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கௌதமின் மூளையில் தீப்பொறியாகப் பற்றிக்கொண்டது.
சஹானாவுக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்திருக்கிறது என்பது அவனது ஆழ்மனதிற்குத் தீர்க்கமாகப் புரிந்தது. ஆனால், அவள் எங்கே போனாள்? யாரால் அழைத்துச் செல்லப்பட்டாள்? என்ற கேள்விகளுக்கான விடைகள் கிடைக்காமல் அவனது உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.
தன் கைகளில் இருந்த அவன் மகன் ஸ்ரவனைக் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் கௌதம். அந்தச் சிறியவனின் மெல்லிய உடம்பும், அவனது அழுகை சத்தமும் கௌதமின் நெஞ்சில் சஹானாவின் நினைவுகளை மீண்டும் மீண்டும் உலுக்கிக் கொண்டிருந்தன.
அதேநேரம்... ஹோட்டலின் பிரதான வாயில் வழியே, சுற்றிலும் நடப்பது எதுவுமே தெரியாதவள் போல மிகவும் இயல்பான பாவத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தாள் பிரபல நடிகை அனாமிகா!
அவளது உடையில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அவளது கண்களில் நேற்றிரவு நடந்த சம்பவங்களின் சுவடுகளும், ஒருவித வஞ்சச் சிரிப்பும் மறைந்திருந்தன.
சஹானாவைத் தேடி அனைவரும் பதற்றத்துடன் நிற்பதைப் பார்த்தவள், ஒன்றும் அறியாத பாவனையில் மெல்ல அவர்களை நோக்கி வந்தாள்.
"ஹாய் கௌதம்! என்ன இங்க எல்லாரும் கூட்டமா நிக்கிறீங்க? இன்னைக்கு ஈவினிங் உனக்கு பிரம்மாண்டமான லைவ் கான்சர்ட் இருக்கே... இன்னும் டிரெஸ் கூட சேஞ்ச் பண்ணாம, ரெடியாகாம என்ன பண்றீங்க?" என்று சாதாரணமாகக் கேட்டாள்.
அவளது குரலைக் கேட்டதும் கௌதம் மெதுவாகத் தலைநிமிர்ந்து பார்த்தான். அவனது கூர்மையான பார்வையில் அனாமிகாவின் முகம் விழுந்தது.
அனாமிகாவின் கண்கள் ஸ்ரவன் மீது பட்டன. அவன் அழுகையைக் கண்டதும், போலியான பரிவோடு அவனை நெருங்கினாள்.
"அச்சச்சோ! என்னடா இது, நம்ப குட்டிப் பையன் ஸ்ரவண் அழுதுட்டே இருக்கான்? ஹாய் குட்டி... என்னடா வேணும் உனக்கு? மம்மி உனக்கு ஏதாவது ஸ்வீட்டோ இல்ல பொம்மையோ வாங்கித் தரவாடா?" என்று அவனைத் தொட்டுக் கொஞ்சுவது போல நடித்தாள்.
ஆனால், கௌதமின் கண்கள் அனாமிகாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. அவளது பேச்சிலும், தொடுதலிலும் ஏதோ ஒரு செயற்கைத்தனமும், அவளது முகத்தில் லேசான பதற்றமும் ஓடுவதை அவனது நுட்பமான பார்வை கண்டுகொண்டது.
அப்போது, பக்கவாட்டுப் பாதையிலிருந்து கௌதமின் தாய் மீனாட்சி பதற்றத்துடன் நடந்து வந்தார். அனாமிகாவைப் பார்த்ததும், "அனாமிகா! நீ எங்கம்மா போன? காலையில இருந்து உன்னைக் காணோமேனு தேடிட்டு இருக்கோம்..." என்றார்.
அனாமிகா லேசாகச் சிரித்து மழுப்பினாள். "அது வந்து ஆன்ட்டி... நேத்து நைட் என் ஃபிரண்ட்ஸ் கூட திடீர்னு வெளிய போக வேண்டியதாச்சு. அதான் லேட் ஆயிடுச்சு. அப்புறம் இன்னைக்கு நம்ம கௌதம்க்கு பெரிய கான்சர்ட் இருக்கே, அவனைப் பாத்து ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு, கூடவே இருந்து கேர் பண்ணிக்கலாம்னு தான் வந்தேன் ஆன்ட்டி!" என்று மிதமிஞ்சிய அக்கறையைக் காட்டினாள்.
மீனாட்சி பெருமூச்சு விட்டபடி, "நல்லவேளை நீயாவது வந்தியே... இங்க பாரு, இந்தச் குட்டி பையன் அவங்க அம்மாவைத் தேடி அழுதுட்டே இருக்கான். அவ எங்க போய் தொலைஞ்சான்னே தெரியல! போறவ மொத்தமா போறதை விட்டுட்டு, இந்த அரைகுறையா இங்க விட்டுட்டு போயி... எவன் கூட போனாளோ" என்று சஹானாவைத் தூற்றத் தொடங்கினார்.
அவர் பேசி முடிப்பதற்குள், கௌதமின் குரல் இடியென முழங்கியது!
"அம்மா!"
அந்தச் சத்தத்தில் வரவேற்பறையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தூக்கிவாரிப் போட்டாற்போலப் பார்த்தார்கள்.
கௌதமின் கண்கள் அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தன. "போதும் நிறுத்துங்க! அவளைப் பத்தி இன்னாரு வார்த்தை தப்பா பேசினீங்க... அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்!" என்று தன் சொந்தத் தாயையே எச்சரிக்கும் தொனியில் கத்தினான்.
அவனது முகத்தில் தாண்டவமாடிய அந்த அரக்கத்தனமான கோபத்தைக் கண்டு அனாமிகா உள்ளுக்குள் லேசாக நடுங்கிப்போனாள்.
மீனாட்சிக்குத் தன் மகனின் இந்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் பொங்கியது.
"ஆமாடா! பெரிய இவன் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணாத! என்னைப் பொறுத்தவரைக்கும் அவளை நான் ஒரு மனுஷியாவே மதிக்க மாட்டேன்! பணத்துக்காக உன்னை விட்டுட்டு ஓடினவளுக்கு நீ இன்னும் பரிந்து பேசுறீயா?" என்று கோபமாகத் திட்டியவர், ஸ்ரவனின் கையைப் பிடிக்க முயன்றார்.
"கண்ணா, ஸ்ரவன்... வா பாட்டி கூட! உனக்கு நல்ல சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தர்றேன். அழக்கூடாது சரியா?" என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் ஸ்ரவண் கௌதமின் கழுத்தை மேலும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, "எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் பாட்டி... அம்மா வேணும்! நான் இனிமே அடம் பிடிக்க மாட்டேன், குட் பாயா இருப்பேன்னு அம்மா கிட்ட சொல்லுங்க பாட்டி... என் அம்மாவை வரச் சொல்லுங்க!" என்று விம்மினான்.
அந்தக் பிஞ்சு குழந்தையின் வார்த்தைகள் கௌதமின் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தன. 'ஒருவேளை... நான் ஸ்ரவனைக் அவளிடமிருந்து பிரித்துவிடுவேனோ என்ற பயத்தில், சஹானா மீண்டும் தன் குழந்தையைக் காப்பாற்ற எங்களை விட்டு விலகி ஓடிவிட்டாளோ?' என்ற சந்தேகப் புயல் அவனது மனதிற்குள் வீசத் தொடங்கியது.
அதே வினாடியில்...
அனாமிகாவின் ஹேண்ட்பேக்கிற்குள் இருந்த மொபைல் போன் சத்தமாக அதிர்ந்தது!
அனாமிகா அவசர அவசரமாகப் போனை எடுத்துத் திரையைப் பார்த்தாள். அவளது முகத்தில் ஒரு நொடி பயம் வந்து மறைந்தது.
"ஓ... ஓகே ஓகே! அது அந்த ஜீப்லதான் இருக்கும்... அந்த ஸ்கார்பியோவுல..." என்று போனில் பேசியபடியே, ஏதோ அவசியமான பொருளைத் தன் அறையிலிருந்து எடுப்பவள் போல, வேகமாகத் திரும்பி காரிடாரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
'ஸ்கார்பியோ?!'
அந்த வார்த்தை கௌதமின் மூளையில் ஒரு பெரிய மின்சாரத்தைப் பாய்ச்சியது!
'நேற்றிரவு லிசாவும் சஹானா ஒரு ஸ்கார்பியோ ஜீப்பில் தான் ஏறிப்போனாள் என்று சொன்னாளே... இப்போது அனாமிகாவும் அதே ஸ்கார்பியோவைப் பற்றிப் பேசுகிறாளே!'
கௌதமிற்குள் சந்தேகம் உறுதியானது.
தன் கையில் இருந்த ஸ்ரவனை மெதுவாகத் தீபக்கிடம் ஒப்படைத்தான். "தீபக், இவனை பத்திரமா பாத்துக்கோ!" என்று சொல்லிவிட்டு, அனாமிகாவிற்குத் தெரியாமல் அவள் பின்னாடியே இரகசியமாக அடியெடுத்து வைத்தான்.
அனாமிகா தன் அறையைத் தாண்டி, காரிடாரின் மூலையில் இருந்த ஆள் நடமாட்டமில்லாத ஒரு பால்கனி பகுதிக்குச் சென்றாள். சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, போனைத் தன் செவியில் அழுத்திப் பேசத் தொடங்கினாள்.
அவளுக்குச் சற்று தொலைவில், ஒரு பெரிய தூணின் நிழலில் ஒளிந்து நின்ற கௌதம், அவளது ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்தான்.
அனாமிகாவின் குரலில் கொடூரமும் அவசரமும் கலந்திருந்தன,
"ஹலோ! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க! அந்த ஸ்கார்பியோ ஜீப் அங்க இருந்த எந்த அடையாளமும் யாருக்கும் கிடைக்கக் கூடாது! அந்த ஜீப்போடவே சேர்த்து அவளை எரிச்சுடுங்க! சாம்பல் கூட அந்த கிருஷ்க்கு கிடைக்கக் கூடாது, புரிஞ்சதா? எரிச்சுட்டு, அப்படியே அந்த காரை மலையில இருந்து கீழே உருட்டி விட்டுருங்க!"
கௌதமின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அவனது ரத்தம் உறையத் தொடங்கியது.
அனாமிகா மீண்டும் விஷமாய் முணுமுணுத்தாள், "அவ மயக்கத்துல இருக்கும்போதே வேலையை முடிச்சுடுங்க! அஞ்சு வருஷம் கழிச்சும் அந்த கௌதம் மனசுல அவதான் இருக்கா... அவளால நான் எவ்வளவு தகிடுதத்தம் வேலை பண்ணியும் என்னால கௌதம் கிட்ட நெருங்கவே முடியல! சீக்கிரம் அவளைக் கொன்னு முடிங்க!"
அந்தக் கடைசி வாக்கியம் அனாமிகாவின் வாயிலிருந்து வந்த அடுத்த கணமே...
ஒரு சீறும் சிங்கத்தைப் போலப் பாய்ந்து வந்தான் கௌதம்!
அனாமிகா போனைக் கட் பண்ண முயன்ற அந்த வினாடியில்,
அவளது நீளமான கூந்தலைப் பின்னிருந்து கொத்தாகப் பிடித்து ஓங்கித் திருப்பினான்!
"ஆஹ்ஹ்ஹ்!" என்று அலறியபடி அனாமிகா சுழன்று விழுந்தாள்.
"ஏய் கொலக்காரி! சஹானா எங்கேடி?" கௌதமின் குரல் நரம்புகளைக் கிழிப்பது போல வெளிப்பட்டது.
அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன.
அனாமிகா தலையைப் பிடித்துக்கொண்டே, "என்ன... என்ன கேக்குறீங்க கௌதம்? என்னை ஏன் பிடிச்சுத் தள்ளுறீங்க? உங்க அம்மா சொன்ன மாதிரி அவ எவன் கூடயோ..." என்று மீண்டும் சஹானாவைப் பழித்துப் பேச முயன்றாள்.
"பளார்!"
கௌதமின் வலது கை அனாமிகாவின் கன்னத்தில் இடியென இறங்கியது!
அவளது தலை பக்கவாட்டில் சுழன்றது. கௌதம் அவளது சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
"இப்ப ஒழுங்கா உண்மையச் சொல்லல... நான் போலீஸ், கோர்ட்னு எதுக்கும் போக மாட்டேன்! உன்னை இங்கேயே என் கையாலயே முடிச்சுடுவேன்!" என்று உக்கிரமாக மிரட்டினான்.
அனாமிகாவின் உடம்பு நடுங்கத் தொடங்கியது. கௌதமின் கண்ணில் தெரிந்த வெறி அவளைப் பயமுறுத்தியது. இருந்தாலும் சமாளிக்கும் குரலில்,
"எனக்கு... எனக்கு எதுவும் தெரியாது கௌதம்!" என்று கத்தினாள்.
"உனக்கு எதுவும் தெரியாதாடி?" என்று கத்திய கௌதம், அவளது முகத்தில் மீண்டும் ஒரு பலத்த அறையை விட்டான்!
"பளார்!"
அந்த அறையின் வேகத்தில் அனாமிகா சுவரோரம் இருந்த இரும்பு ஜன்னல் கம்பியில் பலமாக மோதி கீழே விழுந்தாள்.
ஏற்கனவே நேற்றிரவு நெற்றியில் ஏற்பட்டிருந்த காயம் மீண்டும் பிளந்து ரத்தம் பீறிட்டது. அவளது உதடு கிழிந்து, வாயிலிருந்தும் ரத்தம் வழிந்தது.
"ஆஹ்! கௌதம்... விடுங்க... எனக்கு வலிக்குது!" என்று அலறினாள்.
கௌதம் அவளது நெஞ்சைப் பிடித்துச் சுவரோடு சேர்த்துக் அமுக்கினான். "என்னை கொலைகாரனா மாத்திடாதடி! ஒழுங்கா சொல்லு... என் சஹானாவை எங்கே வச்சிருக்கீங்க?"
அனாமிகாவால் வலியைத் தாங்க முடியவில்லை.
கௌதமின் கரங்களின் அழுத்தம் அவளது மூச்சை நிறுத்துவது போல இருந்தது. மரண பயம் அவளைக் கவ்விக்கொண்டது.
அலறியபடி,
"எனக்குத் தெரியாது கௌதம்... என்னை விட்டுடுங்க! உண்மையத் தெரிஞ்சுக்கணுமா... போய் உங்க அம்மாவைக் கேளுங்க!" என்று வெடியைப் போட்டாள் அனாமிகா!
கௌதம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவனது கரங்களின் பிடி தளர்ந்தது.
"அம்மாவா?!"
அவனது மூளை இயங்குவதை நிறுத்தியது. "ம்மாஅஅஅ!" என்று தன் முழு பலத்தைக் கொண்டு ஆத்திரத்தில் கத்தினான்.
அவனது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் இருந்த மீனாட்சியும், தீபக்கும் ஓடி வந்தனர்.
அங்கே நெற்றியிலும் வாயிலும் ரத்தம் வழிய, சுவரோரம் விழுந்து கிடக்கும் அனாமிகாவையும், கொலைவெறியோடு நிற்கும் கௌதமையும் பார்த்த மீனாட்சி பதறிப்போனார்.
"டேய் கௌதம்! என்னடா பண்ற? எதுக்குடா இப்படி கத்துற? அனாமிகாவை ஏன்டா இப்படி அடிச்சு வச்சிருக்க?" என்று அனாமிகாவைத் தூக்க ஓடிவந்தார்.
கௌதம் தன் தாயை நோக்கித் திரும்பினான். அவனது பார்வையில் இருந்த அதிர்ச்சியும் வெறுப்பும் மீனாட்சியை ஒரு அடி பின்வாங்க வைத்தன.
"மாம்! சஹானா எங்கே? ரெண்டு பேரும் சேர்ந்து அவளைக் கொலை பண்ற அளவுக்குக் கீழ இறங்கிட்டீங்களா? உங்க மேல நான் எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன்... ஆனா நீங்க இந்த அளவுக்குக் கேவலமானவங்களா?" என்று தன் தாயை நோக்கிக் கத்தினான்.
மீனாட்சி பேரதிர்ச்சியடைந்தார். "டேய்! என்னடா உளறுற? எனக்கு எதுவும் தெரியாதுடா! நான் யாரையும் கொல்லவும் இல்லை, கடத்தவும் இல்லை! அனாமிகா... நீயாவது சொல்லேன்டி..." என்று தத்தளித்தார்.
அப்போது, தரையில் அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டிருந்த அனாமிகா, விஷமச் சிரிப்புடன் கத்தினாள்.
"யோசிக்காதீங்க கௌதம்! இவங்க உங்க பெத்த அம்மாவே கிடையாது!"
அந்த வார்த்தை அந்த காரிடாரில் ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியது!
கௌதமின் உலகம் அப்படியே தலைகீழாகச் சுழன்றது. அவனது பாதங்களுக்குக் கீழே இருந்த தரை நழுவுவது போல இருந்தது. மெதுவாகத் திரும்பி மீனாட்சியைப் பார்த்தான்.
மீனாட்சியின் முகம் வெளுத்துப்போய், உதடுகள் நடுங்கின.
"என்னமா சொல்றா அவ?" கௌதமின் குரல் கரகரப்பாக, உடைந்த கண்ணாடியைப் போல வெளிப்பட்டது.
மீனாட்சி கண்ணீருடன், "அது... கௌதம்... அது வந்துடா..." என்று வார்த்தைகள் வராமல் திணறினார்.
"சொல்லுங்கமா! நீங்கதானே என் அம்மா?" என்று கௌதம் அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.
"நான் தான்டா உன் அம்மா! இவ ஏதோ பொய் சொல்றாடா..." என்று மீனாட்சி பதற்றத்துடன் கௌதமின் கரங்களைப் பிடிக்க முயன்றார்.
கௌதம் சட்டெனத் தன் தாயின் கரங்களை இறுகப் பற்றினான். அந்தக் கரங்களை மெதுவாக உயர்த்தி, தன் தலை மீது வைத்துக் கொண்டான்!
தன் தாயின் கையைத் தன் தலை மீது வைத்தபடி, அவனது கண்கள் கலங்கி வழிந்தன.
"என் மேல சத்தியமா சொல்லுங்கமா... சஹானாவை என்ன பண்ணீங்க? அவளை எங்க கொண்டு போய் வச்சிருக்கீங்க?" என்று தன் உயிருக்கு உயிரான அம்மாவிடம் கேட்டான்.
மீனாட்சியின் கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைப் பொழிந்தன. தன் வளர்ப்பு மகனின் தலை மீது கை இருக்கும் நிலையில், அவரால பொய் சொல்ல முடியவில்லை.
"என் மேல சத்தியமா சொல்றேண்டா கௌதம்... சஹானாவை நான் எதுவும் பண்ணலடா! அவ எங்க இருக்கான்னு எனக்கு நிஜமாவே தெரியாதுடா!" என்று கதறி அழுதார்.
குறுக்கிட்ட அனாமிகா, "பொய் சொல்றாங்க கௌதம்! இவங்க உங்க அம்மாவே இல்லைன்னு நான் சொல்றேன்ல!" என்று கத்தினாள்.
கௌதம் தன் தலை மீதிருந்த தாயின் கையை எடுக்கவே இல்லை. அதே நிலையில், உடைந்த இதயத்தோடு தன் தாயின் கண்களைப் பார்த்தான்.
"சொல்லுங்கமா... நீங்க என் அம்மாவா?"
மீனாட்சிக்கு மேல் கொண்டு உண்மையைக் மறைக்க முடியவில்லை. கௌதமின் தலை மீதிருந்த தன் கைகள் நடுங்க, கதறித் துடித்துக் கீழே சரிந்தார்.
"நான் உன் பெத்த அம்மா இல்லைடா கௌதம்! உன்னை இந்த
வயித்துல சுமக்குற பாக்கியம் எனக்குக் கிடைக்கலடா!" என்று உண்மையை உடைத்து அலறினார்!
அந்தப் பயங்கரமான உண்மை கௌதமின் நெஞ்சைப் பிளக்க, அவன் நிலைகுலைந்து நின்றான்.
தொடரும்.