JTN 14
New member
- Joined
- Oct 26, 2024
- Messages
- 5
- Reaction score
- 8
- Points
- 3

ஹாய் பிரண்ட்ஸ்...
வணக்கம்
நான் JTN 14...
என்னோடு நீயாக உன்னோடு நானாக கதையிலிருந்து சிறுதுளி...
கையில் பிறந்த இரண்டே நாட்களான குழந்தையுடன் கை கால்களில் கல்லும் முள்ளும் ஏற, எதையும் கருத்தில் கொள்ளாமல் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.
அவளின் எண்ணம் முழுதும் அவளின் மகவை அவர்களின் கண்களில் படாமல் பாதுகாக்க வேண்டும், அவளின் கணவனின் நிலையும் தெரியவில்லை, பிள்ளை பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்க சரியாக உண்ணாமலும் ஓய்வெடுக்காமலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தாள் அவனின் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக...
நெடுநேரம் ஓடியவள் சுத்தமாய் முடியாமல் ஓரிடத்தில் நிற்க, சரியாய் ஒரு கரம் அவளின் கூந்தலை பற்றி தூக்கியது சிவந்த கண்களுடன் கொடூரமான முகத்துடனும்...
..................××××××××××××..............
எந்த நம்பிக்கைல இவளை நாங்க மருமகளா ஏத்துக்குவோம்னு நீ இவ்ளோ பெரிய காரியத்தை செஞ்சு வச்சுருக்க மித்ரன் , இவ தான் எங்க குடும்பத்து மருமகன்னு வெளிய சொல்லிக்க முடியுமா? இல்லை நீ தான் இவளை உன் பொண்டாட்டின்னு சொல்லி வெளிய கூட்டிட்டு போக முடியுமா? உன் ஸ்டேட்டஸ்க்கும் அழகுக்கும் இவளை உன் பக்கத்துல பாக்கும் போதே எனக்கு கொமட்டிகிட்டு வருது, மரியாதையா இவளை எந்த மலைக்காட்டுல புடிச்சியோ அங்கையே போய் விட்டுட்டு வந்துரு, சொல்றது புரியுதுல? "என்ற அன்னையை சாவகாசமாய் பார்த்தவன்...
"ஐ ம் சாரி மாம், ஐ லவ் ஹெர் எனக்கு அவளை பிடிச்சிருக்கு,எந்த நிலமைலயும் அவளை விட்டுற மாட்டேன்னு அவளுக்கும் அவ ஊர் மக்களுக்கும் நான் வாக்கு குடுத்துருக்கேன்"...
"நீங்க சொல்ற இந்த சில்லி ரீசன்காக அவளை என்னால விட முடியாது, அவ உங்களுக்கு எப்படி தெரியுறான்னு எனக்கு தெரியல, ஆனால் என்னோட கண்ணுக்கு அவ தான் பேரழகியா தெரியுறா, சோ மிஸ்டேக் அவ அழகுல இல்லை, உங்க பார்வைல தான்... மாற வேண்டியது நீங்க தான்"என்று அழுத்தமாக தாயிடம் உரைத்தவன் அவளை வீட்டிற்குள் அழைத்து சென்றான்.
விரைவில் அத்தியாயங்களுடன் JTN 14...
நன்றி...
KEEP IN SUPPORT FRIENDS THANKYOU
Last edited: