என்னில் கலந்தாய் 26 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னில் கலந்தாய் 26

New updates

LATEST
Joined
Jun 30, 2026
Messages
90
Reaction score
79
Points
18
அத்தியாயம் 26


குரைக்கிற நாய் கடிக்காது என்ற வாக்கு மொழியின் அடிப்படையில் அந்த இளைஞனும் மதிய உணவு இடைவேளையில் குறைத்ததோடு சரி அதற்கு பின் மாலையில் வந்து கடித்து குதறுவதாக குரைத்தது எல்லாம் வாய் மொழியாகவே போனது, அவனை ஆளவே காணவில்லை. மறுநாள் காலையும் மதியமும் அப்படியே பொழுது போயிருக்க சூர்யா சஞ்சனாவிடம் வந்தான்,

“ என்ன சஞ்சனா ஒன்னும் பிரச்சனை இல்ல தானே? “

“ இல்ல இல்ல சூர்யா “

“ அதானே பார்த்தேன் அவன் வரதுக்கு வாய்ப்பு இல்லன்னு தெரியும் சரி இருந்தாலும் ஒருவார்த்தை கேட்டுட்டா நிம்மதியா இருக்கலாம்ல அதான் கேட்டேன் “

“ ம்ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்ல சூர்யா அதுக்கப்புறம் அவனை ஆளவே காணோம் “

“ ஓகே ஓகே சஞ்சனா.
நான் இன்னைக்கு காலையில கொஞ்சம் லேட்டா தான் வந்தேன் அதான் காலையிலேயே கேட்க முடியல, அப்புறம் இண்டெர்வெல்ல கேட்கலாம்னு வரும்போது ப்ரொபசர் வந்து கூட்டிட்டு போயிட்டாரு,
சரி லஞ்ச்ல நீங்க சாப்பிட போறதுக்கு முன்னாடி வந்து கேட்கலாம்ன்னு பார்த்தேன் அதுவும் வாய்ப்பில்லாம போச்சு, அதனால் தான் சாப்பிட்ட உடனே வந்து கேட்ருவோம்ன்னு வந்துட்டேன் “ சூர்யா நீளமாக பேச முயற்சி செய்தான்.

“ ஆமா ஆமா அப்போல்லாம் கேட்டா ரொம்ப நேரம் பேச முடியாது, இப்போன்னா கூட கொஞ்சம் நேரம் கடலைய போடலாம்ல “ முனங்கினாள் கற்பகம்.

“ என்ன…. “ அவளை பார்த்து சூர்யா கேட்க,

“ ஹையோ சூர்யா உன்னோட பொறுப்ப பாக்கும்போது எனக்கு உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்குது டா “ நக்கலாக சொல்ல,

“ இவ ஒருத்தி சும்மா கிடக்க மாட்டா, நாம ஏதாவது பேசும்போது தான் சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி புகுந்துகிட்டு இடையில இடையில என்னத்தையாவது கம்பு சுத்திகிட்டு இருப்பா “ மனதிற்குள் தான் சொல்லிக் கொண்டான்.

“ அது நீங்க நம்ம கிளாஸ் பிள்ளைங்க இல்லையா நான் தான துணையா இருக்கணும் அதனால தான் கேட்டேன் “ ஏதோ சொல்ல வேண்டும் என்று வெளியில் சொல்லி வைத்தான்.

“ ஆமா ஆமா “ இன்னும் கூடியது நக்கல் பேச்சு

அதை புரிந்து அவளிடம் பேச்சை குறைத்து விட்டு,

“ இருந்தாலும் என் நம்பர் உன்கிட்ட இருந்ததால பிரச்சனை இல்லைன்னு எனக்கொரு மெசேஜ் நீ போட்டுருக்கலாம் சஞ்சனா. நிஜமா சொல்லணும்னா உன்கிட்ட இருந்து மெசேஜ் வரமுன்னு நான் நைட் முழுக்க எதிர்பார்த்தேன் தெரியுமா? “

இவளை நம்பி வேலைக்கு ஆவதில்லை என்ற முடிவோடு அவளது நம்பரை வாங்க வேண்டுமென்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான்.

“ நீ உன் நம்பரை என்கிட்ட கொடுத்திருக்கனும் சூர்யா, அப்படி கொடுத்திருந்தா நான் உனக்கு இன்பார்ம் பண்ணி இருப்பேன் நீ அவகிட்ட கொடுத்த பாத்தியா அதுதான் தவறான செயல் “

“ சரி தப்பு கணக்கு கிடையாது கரடி யாருக்கு என்ன வேணுமோ அதை நோக்கி தான் போகணும் அத விட்டுட்டு கிடைக்குதுன்னு எல்லாத்தையும் கேட்கக்கூடாது “ என்று சூர்யா சொல்ல,

சஞ்சனா சிரித்து விட்டாள்,

“ ஏன்டா டேய் நக்கலா பண்ற? “ சூர்யாவை அவள் அடிக்க வர சூர்யா விலகிக் கொண்டான் சஞ்சனா சிரிப்பை கண்டவள்,

“ ஏன்டி சனா நீயுமா அவனோட சேர்ந்துட்ட, அவன் என்னை கரடின்னு சொல்லுறான் நீ சிரிச்சுட்டு இருக்க “ பொய்யாய் ஒரு முறைப்பு.

சூர்யா இப்போது சத்தமாக சிரிக்க

“ என்ன டா ரொம்ப சிரிக்க என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? “

“ மெண்டலு மாதிரி “ என்று இன்னும் சிரிக்க,

“ கொப்பன் மவனே டேய்….. “ என்று அவள் இன்னும் கொஞ்சம் கத்த,

“ என்னடா உங்களோட பெரிய ரோதனையா போச்சு எப்ப பார்த்தாலும் கிளாஸ்ல ஏய் ஓய்ன்னு கத்திகிட்டே தான் கிடக்குறீங்க, என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு? “ கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் ப்ரோபஸ்ஸர்

அவரை பார்க்கவும் சூர்யா தனது இடத்திற்கு நகர்ந்து விட,
சஞ்சனாவும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
கற்பகம் அமைதியாய் உட்கார,

“ கற்பகா நீதானே இப்போ கத்துன? “

“ ஆமா சார் “

“ எதுக்கு கத்துன? “

“ அது இந்த டேபிளு காலுலயே இடிச்சிடுச்சு சார் அதான்… ”

“ இல்லையே நீ அப்படி கத்துன மாதிரி தெரியலையே, யாரையோ மிரட்டுற மாதிரி இல்ல கத்துன “

“ ஹையோ சார் நிஜமாக காலுல தான் இடிச்சிருச்சு “ பொய்யாய் காலை பிடித்துக் கொண்டு அமருவது போல் அமர,

“ காலம் கெட்டுப் போச்சு, பொய் தான் சொல்லுறான்னு தெரியுது ஆனா ஒன்னும் செய்ய முடியல, என்னத்த சொல்ல “ புலம்பி கொண்டே நகர்ந்துவிட்டார்.
பாவம் 60 வயதிற்கு மேலும் வறுமையின் காரணமாய் இன்னும் இந்த ப்ரோபஸ்ஸர் வேலையை விடாமல் இழுத்து பிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆதலால் அவரால் முடிந்தது அதுதானே.

அவர் சென்ற பின் கற்பகம் சூர்யாவை பார்க்க,
அவன் அங்கிருந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“ மகனே சிரிக்கவா செய்ற இருடா உன்னை பாத்துக்கிறேன் “ அவள் கருவிக் கொண்டிருக்க,

ஆனால் அவனோ கருத்தாய் சஞ்சனாவை கண்டு கொண்டிருந்தான். அவளது பார்வையும் அவனின் மீது தான் இருந்தது. ஒருவரை ஒருவர் விரும்பி விருப்பமாய் பார்க்கும் பார்வை அது.

ஹ்ம்ம் இந்த பார்வை தான் எத்தனை அழகு,
ஒரே வகுப்பறையில சின்ன இடைவேளைக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு,
ஒருவரை ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு,
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதை அந்த வகுப்பறைக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த அறியாமை உணர்வுக்கு எப்போதும் அழகியல் மிக அதிகம் தான்.
எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் அத்தனை பேரும் நமது கண்களுக்கு தெரிவதில்லை,
மாறாக நாம் யாரை விரும்புகிறோமோ அவர்களே நமக்கு பிரதானமாகி போவதையெல்லாம் என்னவென்று சொல்ல,

அத்தகைய நிலையில் தான் இருந்தார்கள் சூர்யாவும் சஞ்சனாவும். இந்நிலை மாறாது அப்படியே சில நாட்களும் கடந்தது.
வாய்ப்பு கிடைக்காத போது பார்வையையும்,
கிடைக்கும் போது சின்ன சின்ன பேச்சுக்கலையும்,
பேச நேரம் அமையாத போது சிறு இதழ் விரிப்பின் சிரிப்புங்களாலும் இடைவிடாது உணர்வு பரிமாற்றங்களை பரிமாறி கொண்டார்கள்.

இத்தகைய பரிமாற்றம் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்களை வகுப்பறையில் காதலர்களாக அனைவருக்கும் அடையாளப்படுத்தியது அதை சிறிது காலம் கடந்து தான் அவர்கள் அறிந்து கொண்டார்கள். அப்படி அறிந்து கொண்ட போது இருவருக்குள்ளும் அளவீடு இல்லாத அளவுக்கு ஆனந்தமே இருந்தது. இந்த ஆனந்தத்தை இன்னும் அழகாக்க காதலை காதலிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணம் சூர்யாவிற்கு வர அத்தகைய சூழலில் தான் அவளது பிறந்தநாளும் வந்தது.

அவளது பிறந்தநாளை தனது வாழ்வின் சிறந்த நாளாக மாற்ற நினைத்த சூர்யா தனது காதலை சஞ்சனாவிடம் சொல்லிவிடும் முடிவுக்கு வந்தான், ஆனால் அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது மறுநாள் கல்லூரி விடுமுறை என்பது.

விடுமுறையில் அவளை பார்ப்பது என்றால் அது இயலாத காரியம் ஆதலால் என்ன செய்வது என்று யோசித்தவன் அவளுக்கு தெரியாமல் அவளது மொபைலில் இருந்து தனக்கு அழைப்பை விடுத்து அவளது நம்பரை எடுத்து விட்டால் பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லி விடலாம் கூடவே ஒருவேளை வாய்ப்பு இருந்தால் அவளது போட்டோ கேட்டு வாங்கி அவளை பார்த்தும் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவளது இருக்கையில் வந்து அமர்ந்து வேகமாக அவள் வைத்திருந்த பேக்கினுள் மொபைலை தேட,

அது அவனை வெகு நேரம் தேட விடாமல் உடனே கிடைத்துக் கொண்டது அதை எடுத்தவன் வேகமாக தனது நம்பரை அதில் டயல் செய்து தனக்கு அழைப்பை விடுத்த நொடி பின்னால் இருந்து குரல் கொடுத்தாள் சஞ்சனா,

“ டேய் திருட்டு பயலே, என் பேக்குள்ள கைய விட்டு என்ன டா செஞ்சுட்டு இருக்க? “ முன்பு போல் அல்லாமல் இப்போது சாதாரணமாக திணறல் இல்லாமல் பேசினாள், அதன் பொருட்டு அவளது குரலை கேட்கவும் பக்கென்றானது சூர்யாவிற்கு,

சட்டென அழைப்பை துண்டித்து நிமிர்ந்து பார்த்தான் சஞ்சனா அவனைப் பார்த்துக் கொண்டே மீண்டும் கேட்டாள்,

“ என்ன டா பண்ற? “

“ ஒன்னும் பண்ணலையே “

“ ஒன்னும் பண்ணாதவன் அங்க இருக்காம இங்க வந்து ஏன் இருக்கான்? “
“ அதுவா அது பொம்பள புள்ளைங்க எடத்துல உக்காந்தா நல்லா படிப்பவரும்னு எங்க கண்ணம்மா டீச்சர் சொல்லிருக்காங்க அதான் உட்கார்ந்து பாத்தேன் “ கேவலமாய் ஒரு காரணம் சொல்லி பல்லை காட்டினான்.

“ அப்படியா? ஆனா உன்ன பாத்தா அப்படி தெரியலயே…. “ இழுத்து கொண்டே பார்க்க,

அப்போது தான் சூர்யாவின் கையில் சஞ்சனாவின் மொபைல் இருப்பதை பார்த்தாள், அவள் பார்வை அலைபேசியில் விழுவதை உணர்ந்து அவனும் அதை பார்க்க,

திரையில் சூர்யாவின் நம்பர் இதயத்தின் லோகோவோடு Thief என்ற பெயரில் மின்னியது,
அதை பார்த்த சூரியாவுக்கு ஒன்றும் புரியாமல்,

“ தீப்பா…? தீப்ன்னா திருடன்னு தானே அர்த்தம்? இந்தா புள்ள இது உனக்கே அநியாயமா தெரியலயா? காவலனாக போறவன இப்படி களவாணியாக்கி வச்சுருக்கியே… “ என்று நியாயம் கேட்க,

“ திருட்டு பயல திருடன்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்கலாம் குடு டா போன “ அவள் அலைபேசியை அவனிடமிருந்து பறித்துக் கொண்டாள், அதே நேரம் எங்கே அவன் தான் அவனுக்கு வைத்திருக்கும் செல்ல பெயரை யூகித்து விடுவானோ என்ற பதட்டம் அவளை பற்றிக்கொள்ள சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவளது நேரமோ என்னமோ தெரியவில்லை அவனுக்கு விஷயம் புரியும் முன்பே கல்லூரி முடிந்ததற்கான மணி ஒலிக்க அனைவரும் பரபரப்புடன் வீட்டிற்கு கிளம்ப சஞ்சனாவும் நிம்மதி பெருமூச்சோடு தனது அலைபேசியை மீண்டும் பேக்கில் போட்டுவிட்டு கற்பகத்தோடு நடையை கட்டினாள்.

அங்கிருந்து நகர்ந்து விட்டாலும் கூட அந்த படபடப்பு அவளை விட்டு அகன்றுவிடவில்லை.
நேரம் நகர்ந்து நள்ளிரவு 12யை தொட்டிருக்க,

அவளது அலைபேசியின் நோட்டிபிகேஷன் பக்கத்தில் முறைத்த முகமாய் தலையில் ரவுடி கட்டு கட்டிய தோற்றத்தில் காட்சிக்கு வந்தான் சூர்யா,

அதை பார்க்கவும் மனம் துள்ள அந்த செய்தியை உடனே திறந்து பார்த்தாள்,

“ இதமாய்,
இதயத்தை,
இடமாற்றி,
இன்பமாய் என்னில் கலந்தவளுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….

இப்படிக்கு,
உந்தன் இதய திருடன்.

என்று அவள் குறிப்பாக வைத்திருந்த அவனது பெயரை தான் கண்டுவிட்ட கொண்டாட்டத்தோடு வாழ்த்தை பகிர்ந்து இருந்தான்.



தொடரும்……
 

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
அருமையான பதிவு

இவர்களுக்கு எல்லாம் வயசு ஒரே வயசு தானா?
 
Top Bottom