உயிருக்குள் மெல்லிய கீறல் விமர்சனம் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிருக்குள் மெல்லிய கீறல் விமர்சனம்

New updates

LATEST

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
#ஜோதி_ரிவ்யூ

கதையின் பெயர் : உயிருக்குள் மெல்லிய கீறல்

எழுத்தாளர் : கோமதி அருண்

உலக நாதன் மற்றும் அருளானந்தன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் அவர்கள் இருவரின் குடும்பமும் பல வருடங்களாக நட்புடன் பழகி வருகிறது. உலக நாதனின் தொழில் தோல்வியடைய அவர் உதவியின் மூலம் நாயகன் வேதாந்த் தேவாந்திரா குடும்பம் மீண்டு வருகிறது. அவனுக்கு அருளானந்தன் மீது அத்தனை நன்றியுணர்வுடன் கூடிய பாசம் ஏற்பட, அவரது மகள் ஆத்யாவிற்கும் இவனுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், இரு குடும்பத்து நபர்களிடம் காணப்பட்ட ஒற்றுமை, அவர்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய சம்பவங்கள் என சுவராஸ்யமாகவும் அருமையாகவும் கதை நகர்கிறது.

வேதாந்த் தேவேந்திரா அப்பா... பெயரில் இருக்கும் கெத்து ஆளிடம் இருக்கிறது. குடும்பத்தில் பிறந்த மூத்த வாரிசு, குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழி நடத்தும் பொறுப்புடையவன், மிகச் சிறந்த தொழிலதிபர் என பன்முகம் கொண்டவன் முகத்தில் சிரிப்பை மட்டும் பார்க்க முடியாது.

அதிலும் நாயகி ஆத்யாவிடம் எப்பவும் எதிரும் புதிருமாக தான் இருக்கிறான். அதற்கு இவனை மட்டும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் இவனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் அவளும் இல்லை.

படு கெத்து, வாயாடி, பதிலுக்கு பதில் கொடுப்பதில் வல்லவர் ...

இவளது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவமும், அப்பாவின் இழப்பும் மறக்க முடியாத தழும்பாக மாறி விட, ஒரு நாள் இவளைக் காணாமல் தேடி அலைந்து கண்டுபிடிக்க பட்ட சிரமம், அதன் பிறகு நடந்த சம்பவத்தை மறக்கவே முடியல

அவளது மனதிற்குள் மறைந்திருந்த காயமும், சொல்லப்படாத உண்மைகளும், அவனை அருகில் வர விடாமல் துடித்த விதமும், அவர்களை மட்டுமல்ல நம்மையும் அதிர வைக்கிறது.

எப்படியாவது அவளை மறுபடியும் சரி பண்ணிடலாம் என்றால் எங்கே?

ஆத்யாவின் முன் கதை சுருக்கத்தில் தவறு இருவர் மீதும் உள்ளது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயிருந்தால் அந்த அளவுக்கு காயப்பட்டிருக்க மாட்டாளே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவன் பேசிய, நடந்த விதத்தை எந்த இடத்திலும் நான் சரி என்று சொல்லவில்லை.

அப்பா பாத்திரம் அருமை. பாவம் மனுஷன், கடைசியில் அப்படி ஒரு முடிவு!

விக்ராந்த் நாயகனின் தம்பி இவளது நண்பன்

இருவரின் நட்பும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து பார்த்து செய்வதும், மற்றவரிடம் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை இருப்பதும் அழகு

பூரிக்குட்டியின் காதலும் அதற்காக செய்யும் சேட்டையும் ரசனை

அதிலும் அண்ணனின் நண்பன், ஆத்யாவின் அண்ணனாகிய நிரஞ்சனை படுத்துகிற பாடும், பூர்ணவ் தன் வாயாலே மாட்டிக் கொண்டு முழிக்கும் இடமும் ஆஹா

😂😂😂😂

இந்தக் கதையில் ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. வரிசையாக வர்றாங்க

அதிலும் ஆத்யாவின் காதலை கவிதை மூலம் சொன்ன விதமும், தன் மனதில் இருப்பதை பாட்டின் மூலமாகவே வேதாவும் வெளிப்படுத்தும் இடம் நன்றாக உள்ளது.

நிறைய பாத்திரங்கள் வந்து கதையை கலகலப்பாக வைத்திருக்கின்றனர்.

"சட் அப் யுவர் மவுத்

உன் சட்டி பானை கவுத் ... " பாடல் சிரிப்பை வர வைக்கிறது.

முடிவு பிரமாதம்

எட்டு வருடத்திற்கு முன்பு முகநூலுக்கு வந்த போது அறிமுகம் ஆகிய சீனியர் எழுத்தாளர் மதிப்பிற்குரிய கோமதி சிஸ். அவர்களின் கதையில் 4, 5 படித்து விமர்சனம் செய்து இருக்கிறேன். பிறகு இப்போதுதான் மறுபடியும் வாய்ப்பு அமைந்தது.

"ஏன்டி உன்னைப் பிடிக்குது" வெற்றிவேலை இந்தக் கதையில் பார்த்ததும் அந்த காவலரை அன்று ரசித்தது அப்படியே ஞாபகம் வந்து விட்டது.

பிரசாத் பாத்திரம் இன்னும் மறக்கல.

போட்டிக்கதை வாசிக்க நல்லா இருக்கு, நீங்களும் வாசித்து பாருங்க.

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்

 
Last edited:
Top Bottom