அத்தியாயம் 7
சுரேஷ் சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் "என்னடா சொல்ற" என அதை வெளியில் காட்டாமல் கேட்டான் அர்ஜுன்.
" ஆமாடா எனக்கு என்னமோ நீ லவ்வுல விழுந்துட்டயோன்னு டவுட்டா இருக்கு".
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல".
"ஒன்னும் இல்லாமலா லவ் னு சொன்னதும் உன் கண்ணுல அப்படி ஒரு சந்தோசம்", .
"நீயே கற்பனை பண்ணாத".
"அப்படியா! நெஜமாவே நீ உன்கிட்ட எந்த வித்தியாசமும் இல்லையா?".
"அப்படி எதுவும் இல்லடா நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என சமாளித்தான் அர்ஜுன்.
"என்னமோ டா நல்லா இருந்தா சரி, எனக்கு டியூட்டிக்கு டைம் ஆயிடுச்சு கிளம்புறேன் அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்".
"என்ன?".
"நம்ம அசோக்குக்கு கல்யாணம் ஆக போறதுனால இன்னைக்கு நைட்டு பசங்க எல்லாம் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கோம் மிஸ் பண்ணாம வந்துடு".
"இல்லடா என்னால வர முடியாது" .
"ஏன்?".
" அது வந்து முக்கியமான வேலை இருக்கு".
"முக்கியமான வேலையா?".
"ஆமா!".
"எனக்கு தெரியாம அப்படி என்ன? முக்கியமான வேலை".
" அதெல்லாம் சொல்ல முடியாது " என்றான் அர்ஜுன்.
"என்னடா? சொல்ற, நீ ஆள் வேற சரியில்ல லவ்வ பத்தி கேக்குற, இப்ப எங்க கூட பார்ட்டிக்கு வரமாட்டேன்னு சொல்ற, கேட்டா முக்கியமான வேலை இருக்குங்குற".
"இங்க பாருடா நீயா தேவை இல்லாம எதுவும் கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது" .
" அப்ப இன்னைக்கு நைட் நீ வரல".
"வரல".
"நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் வராங்க".
"வரட்டும் டா ".
"அசோக் உன்ன கேப்பாண்டா".
" அவன் கிட்ட நான் பேசுறேன்".
"சரி அதுக்கு மேல உன் இஷ்டம்" என அங்கிருந்து சென்ற சுரேஷ்,, " இவன் ஆளே சரியில்லையே என்னமோ இருக்கு கண்டுபிடிக்கிறேன் டா" அவன் மனதில் நினைத்துக் கொண்டே சென்றான்.
" அப்பாடா!,, இவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள எவ்வளவு பாடா இருக்கு அர்ஜூன் எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ" என்றவன் எப்பொழுது இரவு ஆகும் என காத்திருந்தான்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவன் , இரவு சரியாக பத்து மணி ஆனதும் மெல்ல கதவை கதவை திறந்து எட்டிப் பார்த்தான் அர்ஜுன்.
ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்த சுபா "திருட்டு பயலே எத்தனை தடவைதான் கதவு கிட்டே இருந்து எட்டி எட்டி பார்ப்பா என்ன? விஷயம் இங்க வா " என்றார்.
நெலிந்தபடி அவர் அருகில் வந்து "ஒன்னும் இல்லம்மா "என்றான்.
"என்ன? விஷயம் சொல்லு , நீ இப்படி எல்லாம் பண்றவன் கிடையாதே , ஏதா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா வந்து அம்மா கிட்ட பேசுவ, இன்னக்கி என்ன சின்ன பைய மாதிரி இப்படி பண்ணிட்டு இருக்க".
"எனக்கு தூக்கம் வரல".
"ஏன்?".
"தெரிலம்மா " என்றவன் தன் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்தான்.
"அம்மா".
"ம்".
"உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?".
" என்ன ? கேளு".
"லவ்வ பத்தி நீங்க என்னம்மா நினைக்கிறீங்க" என கேட்க அமைதியாக அவனையே பார்த்தார் சுபா.
"என்னம்மா? அப்படி பாக்குறீங்க, நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா".
"அப்படி எல்லாம் இல்ல".
"நீங்களும் அப்பாவும் லவ் மேரேஜ் தானே!".
" ஆமா,, ".
" லவ் பத்தி எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா!".
" டேய் அதெல்லாம் சொல்லி தெரியற விஷயம் இல்லடா தானா தெரிஞ்சுக்கிற விஷயம்" என்றபடி அங்கு வந்தார் பிரபு.
"நீங்க வந்துட்டீங்களா" என்ற படி நைசாக எழுந்தான் அர்ஜுன்.
"எங்க? ஓடுற "என அவன் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்தார்.
"என்னங்க இவன் உங்கள பார்த்து ஓடுறான்".
"இந்த கேள்வியை தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் கிட்ட கேட்டு, இன்னைக்கு சுரேஷ்கிட்ட கேட்டு இப்போ உன்கிட்ட கேக்குறான்".
"அப்படியா ! என்ன விஷயம் அர்ஜுன் இந்த கேள்வியை எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்க".
"அது வந்து அம்மா சும்மா தெரிஞ்சுக்கலாம் னு தான்".
" லவ் பண்றது ஒரு ஆழமான அற்புதமான உணர்வு டா , அது யார் மேல வரும்னு சொல்ல முடியாது , அது சொல்லாமல் வரும் ஆனா கண்டிப்பா ஒரு தடவை வந்துச்சு நம்ம மனசு விட்டு போகாது, அந்த காதல் நம்ம உயிரோடு உறைஞ்சு போயிடும் " என்றார் பிரபு.
"நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சோம் , எங்களை ரெண்டு பேரு வீட்லயுமே ஏத்துக்கல அதனால நாங்க படைப்பு முடிச்சு , உடனே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டோம் ,, கஷ்டப்பட்டு வேலை பார்த்து இப்ப நல்ல நிலைமையில் இருக்கோம் , அது மட்டுமில்ல ,,, என்னை கட்டுன புடவையோட தான் உங்க அப்பா கூட்டிட்டு வந்தார் அப்போ எப்படி என் மேல காதலோட அன்பா இருந்தாரோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்காரு , இந்த அன்பு எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்ல முடியாது " என்றார் சுபா உணர்ச்சியுடன் .
"இப்ப இருக்குற லவ் அப்டி இல்ல".
"ஏன் ? அப்படி சொல்றீங்க".
"ஆமா,, இப்ப இருக்க பசங்க பொண்ணுங்க எல்லாம் உண்மையாவா லவ் பண்ணிட்டு இருக்கீங்க , இப்ப லவ் அந்த வார்த்தையை காதால கேட்க கூட முடியல ".
"உண்மையான காதல் மனச பார்த்து வராது".
அவர்கள் பேச பேச கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் "சரி எனக்கு தூக்கம் வருது குட் நைட்" என எழுந்தான்.
"என்ன ? நாங்க இவ்ளோ சொல்றோம் , நீ கேட்டுட்டு எதும் சொல்லாம போற".
" லவ் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன் கேட்டுட்டேன் " என்றபடி எழுந்து சென்றான் அர்ஜுன்.
" சுபா".
"என்னங்க?".
"நீ என்ன? நினைக்கிற".
" எதை பத்தி" .
" அர்ஜுன் இப்ப நம்ம கிட்ட கேள்வி கேட்டுட்டு போறானே அதை பத்தி".
"பையன் இதுலையோ சிக்கியிருக்கான்னு தெரியுது , ஆனா அதை அவன் வாயால சொல்லுவான் அதுவரைக்கும் நம்ம வெயிட் பண்ணுவோம்".
சிறிது நேரம் கழித்து மீண்டும் எட்டிப் பார்த்தான் யாரும் இல்லாமல் போக மெதுவாக வந்து வழக்கம் போல் பைக்கை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தான்.
ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து இருந்தாள் இமையா , ஒரே இருட்டாக இருந்தது மல்லிகை பூ வாசம் மட்டும் வந்து கொண்டே இருந்தது பைக்கில் இருந்து இறங்கியவன் மெல்ல அவள் அருகில் வந்தான்.
" இன்னைக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு நீங்க வர மாட்டீங்க நினைச்சேன் பரவால்ல வந்துட்டீங்களே!".
"அது எப்படி? திரும்பி பாக்காமயே நான் வந்தத கண்டுபிடிச்ச , இத்தனைக்கும் நான் பைக்க அவ்வளவு தூரம் நிப்பாட்டிட்டு ,நீ கண்டுபிடிக்க கூடாதுன்னு மெல்ல வந்தேன் தெரியுமா!" என்றான் படி அவள் அருகில் அமர்ந்தான் அர்ஜுன்.
அதை கேட்டு சிரித்தாள் .
"எதுக்கு? இப்படி சிரிக்கிற".
" நான் ஒரு ஆன்மா என்னால எதையும் உணர முடியும் இது கூட உங்களுக்கு தெரியலையா!".
" ஆமால , அத நான் மறந்தே போயிட்டேன், நீ ஏன் நான் வரமாட்டேன்னு நினைச்ச, எவ்ளோ நேரம் ஆனாலும் நான் வராம இருப்பேனா ? ஏன்னா! எனக்கு இங்க,, ".
"சொல்லுங்க உங்களுக்கு".
"ரொம்ப பிடிச்சிருக்கு".
" என்னது? " ,என கேட்டவள் சட்டேன அவனை நிமிர்ந்து பார்க்க .
" அது வந்து, இந்த இடத்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னேன், ஆமா நீ என்ன? நெனச்ச".
" நான் ஒன்னும் நினைக்கல".
" இல்லையே நீ வேகமாக என்ன பார்த்ததை பார்த்தா எதோ நினைச்சு இருக்க".
" அதை விடுங்க உங்க வீட்ல அம்மா அப்பா எல்லாம் எப்படி? இருக்காங்க" .
" நல்லா இருக்காங்க".
"உங்க கூட பிறந்தவங்க".
"யாருமே இல்ல நான் ஒரே பையன் தான்".
" உங்க அம்மா அப்பா உங்கள அடிப்பாங்களா? ".
" இல்ல நான் அவங்க ரெண்டுபேரோட செல்லம் , ரொம்ப சேட்டை பண்ணுவேன், செல்லமா கண்டிப்பாங்க , எனக்கு புடிச்ச மாதிரி டாக்டர் படிக்க வச்சாங்க, இப்ப கூட கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்காங்க, நான் தான் எதும் சொல்லாம இருக்கேன் ".
"ஏன்?பண்ணிக்க வேண்டியது தானே , மனசுல என்ன சின்ன பையன் நினைப்பா!".
"ஹலோ! கல்யாணம்ங்குறது , மனசுக்கு ஒரு பொண்ண பாத்த உடனே பிடிக்கணும் , இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் அப்டினு நம்மளுக்கு தோணும் அப்பதான் லவ் பண்ண முடியும்".
" ஏன்? லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ண வேண்டியதுதானே" .
" அப்படி இல்ல என்னோட கூட வேலை பாக்குற ஒரு பொண்ணு ஒரு பையன சின்சியரா லவ் பண்ணா, ஆனா! அவன் அவளை ஏமாத்திட்டான் அதுல இருந்து லவ்வுனாலே எனக்கு வெறுப்பு ஆயிடுச்சு,, கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணை லவ் பண்ணனும்னு தான் நான் முடிவு எடுத்தேன்".
" எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா".
" சொல்ல முடியாது தான் இருந்தாலும் எனக்குன்னு வர வைஃபை நான் அளவில்லாம காதலிக்கணும் ,
என்னோட அன்பான அவளை நான் திக்கு முக்காட வைக்கணும் , அவளை எப்பவும் போல டெய்லியும் நான் காதலிக்கணும் அதுதான் என்னோட ஆசை "என்றான் அர்ஜுன் .
அவன் சொல்ல சொல்ல அவளும் ஆசையோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் , சட்டென அவன் திரும்பி பார்க்க அவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
"இதுவரைக்கும் அந்த பொண்ணை நீங்க பாக்கலையா?".
" இல்ல "என்றவன்" நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?" என கேட்டான்.
"இல்ல எனக்கு அப்படி யாரை பார்த்து தோனல ஆனா ! என்ன நானும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன் , என் ஆசைதான் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு உங்க ஆசையாவது நிறைவேற வாழ்த்துக்கள்" என்றபடி தன் கையை அவனிடம் நீட்டினாள்.
அவன் அவளை நிமிர்ந்து பார்க்க" சும்மா கை கொடுங்க "என்றாள் ,
அவன் அவள் கையை தொட்டு , "உன்ன என்னால தொட முடியுது" என கேட்டான் ஆச்சரியமாக..
" நல்ல ஆத்மாக்களுக்கு சில சக்தி இருக்கும்.
" அப்படியா !" .
" எங்களால எதையும் உணர முடியும் , செய்யவும் முடியும்" , .
"நிஜமாவா!".
"ஆமா".
" இப்ப நான் என் மனசுல என்ன நினைக்கிறேன் சொல்லு பார்ப்போம்" என்றவன் அவளையே கூர்ந்து பார்க்க அவனை ஒரு நிமிடம் பார்த்தவள் சட்டென அவனிடமிருந்து தன் கையை பிரித்து கண்டு எழுந்தாள்.
"என்ன?ஆச்சு".
" அது வந்து ஒன்னும் இல்ல".
" ஏன்?என்னமோ போல இருக்க".
"ஒன்னும் இல்ல விடுங்க " .
"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லட்டுமா!".
" என்ன? ".
" நீங்க நினைக்கிறது நடக்காது " என்றாள் இமையா.
அர்ஜுன் மனசுல அப்டி என்ன? நெனச்சிருப்பான் , உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம் 