உன் முகம் (அத்தியாயம் -17) | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் முகம் (அத்தியாயம் -17)

New updates

LATEST
Joined
Jul 6, 2026
Messages
53
Reaction score
35
Points
18
அத்தியாயம் -17

மருத்துவமனைக்கு வந்த அர்ஜுன் தன் வேலையில் கவனம் செலுத்தினான் ஒரு கணவன் அவனிடம் வந்தனர்,

"சொல்லுங்க உங்களுக்கு என்ன? பிரச்சனை".

"எனக்கு என் பொண்டாட்டியை புடிக்கல டிவோர்ஸ் கேட்டா குடுக்க மாட்டேங்குறா , என்னோட முடிவு சரியா தப்பான்னு எனக்குள்ளயே குழப்பமாவும் இருக்கு டாக்டர் ".

" ஓகே ,உங்களுக்கு அரேஞ்ச் மேரேஜா? ".

"இல்ல சார், லவ் மேரேஜ் தான்",

"லவ் பண்ண போது அவங்களை புடிச்சது, இப்ப ஏன்? புடிக்கல".

"குழந்தைகள் இருக்காங்களா?".

"ரெண்டு பசங்க" என்றான் பெருமையாக.

"டிவோர்ஸ் க் அப்புறம் பசங்க?" .

"அவங்களை நான் என்னோட வச்சுப்பேன், அவ மட்டும் வேணாம்".

"ஏன்? அவங்க வேணாம்".

"அவ மொத அழகா இருந்தா, இப்ப அவ குண்டாகிட்டா அதனால எனக்கு அவளை புடிக்கல",

"அப்டியா,! அப்போ நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க".

"கேளுங்க டாக்டர்".

"இதே நீங்க குண்டாகி அவங்க டிவோர்ஸ் கேட்டா குடுப்பீங்களா?".

"அதெப்படி சார் தர முடியும்".

"ஏன்,? தர முடியாது".

"அது வந்து ,," என அவன் தடுமாற.

" ஏன்னா! பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் , குழந்தைங்க அப்டினு முக்கியத்துவம் கொடுக்குறதுனால அவங்களை கவனிக்க மாட்டாங்க, அதனால தான் உங்களுக்கு அவங்களை புடிக்காம போயிருக்கு, நீங்க அவங்களை இப்டி நெனச்சதுக்கு அவங்க தான் உங்களை டிவோர்ஸ் பண்ணனும், என்ன? நான் அதுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா!" .

"ஐயோ! வேணாம் சார் ,, மனைவி இல்லாம என்னால இருக்க முடியாது, இப்ப நான் என் தப்பை உணர்ந்துட்டேன் என்னை மன்னிச்சிடுங்க ".

"என் கிட்ட மன்னிப்பு கேட்காதீங்க , உங்க மனைவி மனசை புரிஞ்சுக்கோங்க , வாழ்க்கை சந்தோசமா இருக்கும் என்ற அர்ஜுன் மாலையில் வீட்டிற்கு வந்தான்.

"அர்ஜுன்".

"சொல்லுங்கப்பா".

" பிரஸ் ஆகிட்டு வா உன்கிட்ட பேசணும்".

"சரிப்பா" என்றவன் சென்று பிரஷ் ஆகி வந்து சோபாவில் அமர அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் அவள்.

" என்ன? தனு கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போன , இவ்ளோ நேரம் " .

"அது வந்து ,, அத்தை இன்னைக்கு நிறைய சிறப்பு பூஜை எல்லாம் இருந்துச்சு, இந்த பூஜையில் கலந்துகிட்டா ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க அதனாலதான் நான் எல்லா பூஜைகளையும் கலந்துகிட்டேன் , உங்க பேர்லையும் மாமா அத்தான் பேர்லையும் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் , நான் வேண்டிக்கிட்டதுலயே சீக்கிரம் உங்களுக்கு குணம் ஆயிடும்" என்றவள் திருநீரை எடுத்து சரஸ்வதியின் நெற்றியில் பூசி விட்டு, நான் உங்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வறேன் எனக் கிச்சனுக்கு செல்ல போனவளை ,,

" ஒரு நிமிஷம் நில்லு தனு" என்றார் சேதுராம்.

"என்னங்க? மாமா".

"நீயும் உட்காரு உன்கிட்டயும் பேசணும்" என்றதும் அர்ஜுனின் பக்கத்தில் அமராமல் வெக்கப்பட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.

"இப்ப சொல்லுங்கப்பா என்ன?விஷயம்".

"இன்னைக்கு ஜோசியர் வந்தார்".

"என்ன?சொன்னார்".

"நாளான்னைக்கு நாள் நல்லா இருக்கு அப்பவே நிச்சயத்தை வச்சு அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாரு".

" அதுக்குள்ள என்னப்பா? அவசரம் " .

" இந்த மாசத்துல இதுதான் கடைசி முகூர்த்தமாம் இதை விட்டா இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் முகூர்த்தம் இருக்குன்னு சொன்னார் அதனாலதான் உனக்கு சம்மதம் தான? " .

"ம் " என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி விட்டு எழுந்து சென்று விட்டான் அர்ஜுன்.

"அச்சோ ! எனக்கு வெக்கமா இருக்கு" என வேகமாக தன்னறைக்குள் ஓடி வந்த் தனு வந்ததும் கதவைத் தாழிட்டவள், "அப்பாடா! ஒரு வழியா கல்யாண பேச்சு எடுத்துட்டானுங்க , தனு இந்த கல்யாணம் முடிக்கறதுக்குள்ள நீ எவ்ளோ டிராமா நடிக்கணுமோ சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சா நிம்மதியா இருக்கலாம் , இன்னக்கி பிரண்ட்ஸ் கூட செம்மயா, ஜாலியா ஊர் சுத்தியாச்சு, நல்லவேளை நம்ம சொன்னதையும் இதுங்க நம்பிடுச்சுங்க, ஆனா ! நல்லவளா நடிக்கிறது நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்கு " என்றாள் தனக்குள் .

இங்கு தன்னரைக்கு பொத்தென விழுந்தான் அர்ஜுன் அவனுக்கு ஏனோ மனம் அவ்வளவு வேதனையாக இருந்தது.

அவன் முன்னாள் வந்து நின்றாள் இமையா.

" வாழ்த்துக்கள் இமையா" என்றான்.

" எதுக்கு?எனக்கு வாழ்த்து சொல்றீங்க".

" நீங்க ஆசைப்பட்ட மாதிரி என்னோட கல்யாணம் நடக்க போகுது அதற்காக தான் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன் நீ எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா?" என அவன் கேட்க .

அவன் அப்படி கேட்டதில் அவளுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது,

" கடவுளே!இப்ப இவர்கிட்ட நான் என்னத்த சொல்றது , எப்படியாவது இந்த கல்யாணத்தை நம்ம தான் தடுத்து நிறுத்தனும்" என நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் சரஸ்வதி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க மெல்ல அவர் அறைக்குள் எட்டிப் பார்த்தார் தனு ,

"இன்னக்கி பூரா என்னை எவ்ளோ வேலை வாங்குற , கல்யாணம் வரை உன்னை விட்டு வைக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா! அதுக்குள்ள நீ என்னை ரொம்ப டென்ஷன் பண்ற அதனால நீ செத்து போயிடு என அருகில் வந்து தலையணை எடுத்தவள் அவரையே பார்த்துக் கொண்டிருக்க.

திடீரென "அத்தை" என சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்தார் சரஸ்வதி.

வேகமாக தலையணையை கீழே போட்டாள்.

"தனு இந்நேரம் இங்க என்ன? பண்ற" .

"அது ஒன்னும் இல்ல அத்தை உங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்த்திட்டு போலாம்னு வந்தேன்" .

"இப்ப பரவால்ல எந்த வலியும் இல்ல".

" மாத்திரை போட்டிங்களா? ".

"போட்டேன் ".

" சரிங்க அத்தை நீங்க தூங்குங்க நான் வரேன்" என வெளியே வந்த தனுவிற்கு வேர்த்துவிட்டது உடல் எல்லாம்.

"இது எப்படி?நடந்துச்சு அந்த சரஸ்வதி அசந்த நேரம் பார்த்து அவளை போட்டு தள்ளிரலாம்னு நம்ம நினைச்சோம். ஆனால் அந்த ரூம்ல திடீர்னு அத்தை னு சத்தம் கேட்டுச்சு , நம்மளும் கூப்பிடல வேற யாரு கூப்பிட்டிருப்பாங்க என யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை , சரி எதுவா இருந்தாலும் காலைல நம்ம பாத்துக்கலாம்" என அப்படியே விட்டுவிட்டாள்.

இமையா தான் சரஸ்வதியை காப்பாற்ற "அத்தை" என்று கூப்பிட்டாள்.

மொட்டை மாடியில் நின்று நிலவை பார்த்துக் கொண்டிருந்தவள் இமையா என குரல் கேட்டதும் திரும்பி பார்த்தாள் அர்ஜுன் நின்றிருந்தான்.

"என்ன ? அர்ஜுன் நீங்க இன்னும் தூங்கலையா?".

" இல்ல, எப்படி ? தூக்கம் வரும்,மனசுல சந்தோசம் இருந்தா தான் அதெல்லாம் வரும், நான் தான் மனசுக்குள்ள மழை அளவுக்கு கவலையை வச்சிருக்கேனே எனக்கு எப்படி ? தூக்கம் வரும்".

" இல்ல அர்ஜுன் நான் என்ன? சொல்ல வரேன்னா,, ".

"எனக்கு புரியுது, கல்யாணம்னா சந்தோஷமா தானே இருக்கணும்னு ஆனா! என்னால முடியல இமையா நானும் எவ்வளவு முயற்சி செஞ்சு பார்க்கிறேன் சத்தியமா என்னால முடியல, உனக்கு வேணாம் இது கல்யாணமா இருக்கலாம் ஆனா! என்னை பொறுத்த வரைக்கும் தண்டனை, வாழ்நாள் ஆயுள் தண்டனை தான் இந்த கல்யாணம்" என அவன் கூறிவிட்டு செல்ல.

அப்படியே தரையில் அமர்ந்தவள் அழ ஆரம்பித்தாள் , "கடவுளே! நான் என்ன? பண்ணுவேன், அர்ஜுன் உங்க கிட்ட என்னால சொல்ல முடியல நான் சொன்னா எப்படி நீங்க என்னை தப்பா நினைப்பீங்க அதுக்காக தான் என்னால சொல்ல முடியல" என்றாள்.

மறுநாள் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன , துரைசாமி செண்பகமும் வந்திருந்தனர் , "அம்மா இப்பவும் சொல்றேன் என் பேச்சைக் கேளுடி" என செண்பகம் சொல்லிக் கொண்டிருக்க.

அறைக்கு வந்த துரைசாமியிடம் , "அப்பா இந்த பொம்பளையை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க பாத்திங்களா,, இப்டி ஏமாத்தி கல்யாணம் பண்ணாதன்னு என்கிட்ட சொல்றாங்க , இவங்க இங்க இருக்க வரைக்கும் நம்ம பிளான் எதுவும் நடக்காது போல, நம்ம கடன்காரங்களா ஆகணும்னு தான் இவங்க நினைக்கிறாங்க" என்றாள் கோவமாக.

"நான் அப்படி சொல்லலங்க , அவங்க சொத்து நமக்கு வேண்டாம் தான் சொல்றேன் அவங்க ரொம்ப நல்லவங்க, அவங்கள நீங்க ஏமாத்தறீங்க அது தப்புன்னு தாங்க சொன்னேன் " .

அதை கேட்டவர் அவர் கன்னத்தில் "பளார் " என அறைந்து , " எங்களுக்கு உன்னோட உபதேசம் தேவைஇல்ல, இங்கே பாரு நீ தனுவுக்கு அம்மா அதுக்காக மட்டும்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன், அந்த வேலையை மட்டும் தான் பார்க்கணும் அதை விட்டுட்டு தேவையில்லாததை எல்லாம் பேசிட்டு இருந்த நான் மனுசனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன் , ஒழுங்கா இரு " என மிரட்டி விட்டு செல்ல அதற்கு மேல அங்கு நெருக்க முடியாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தார் செண்பகம்.

" என்னாச்சு? அண்ணி ஏன்? அமைதியா இருக்கீங்க " என கேட்டார் சரஸ்வதி.

"ஒரே பொண்ணுக்கு கல்யாணம் முடியபோதுல , எல்லா பெத்தவங்களுக்கு அந்த கவலை இருக்கத்தான் செய்யும் " என்றார் அங்கு வந்த துரை சாமி தன் மனவியை முறைத்தப்படி .

"கவலைப்படாதீங்க தனு எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க பார்த்துக்க்கறோம் , அவ ரொம்ப நல்ல பொண்ணு".

" ஐயோ ! அவ ஒரு வேச பாம்பு அவள பத்தி தெரியாம இப்படி பேசிட்டு இருக்கியே சரஸ்வதி" என தனக்குள் நினைத்துக் கொண்டார் செண்பகம்.

சற்று நேரத்தில் தனுவின் அறை கதவு தட்டப்பட திறந்து பார்த்தாள், வசந்த் நின்று இருந்தான் வேகமாக அவனை உள்ளே இழுத்து கதவை சாத்தினாள்.

"இங்க என்ன? பண்ற" என்றவளை கட்டியணைத்தவன் அவள் உதட்டில் முத்தமிட இவளும் முத்தமிட்டாள்

சற்று நேரத்தில் அவளை விட்டு விலகியவன், "என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியல தனு உன்னை பார்க்காமல் இருக்க முடியல உங்க அப்பா உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துட்டாரு நான் சாகப் போறேன் , உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டியா என்னால பாக்க முடியாது" என்றான்.


அதைக் கேட்ட "கல கல "வென சிரித்தாள்.

"நான் கவலையா சொல்றேன் , நீ எதுக்கு இப்படி சிரிக்கிற என்னை பாத்தா உனக்கு சிரிப்பா இருக்கா?" .

"லூசு மாதிரி பேசாதடா இந்த கல்யாணமே பொய்".

"என்னது? பொய்யா?".

"ஆமா! சொத்துக்காக தான் நான் அந்த அர்ஜுனை கல்யாணம் பண்ண போறேன் அது தெரியாம நீ பாட்டுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்க".

"நிஜமாவா! தனு".

"ஆமாண்டா ! எங்க அப்பா சூதாட்டத்தில், குதிரை பந்தயத்தில் எல்லாம் தோத்துட்டாரு என்னாலையும் வசதியாக வாழ்ந்து பழகிடுச்சு , அதனாலதான் இந்த வீட்டுக்கு வந்து நல்லவ வேஷம் போட்டேன்".

"அப்போ இந்த கல்யாணம்".

"சும்மா ஊருக்காக , கல்யாணம் முடிஞ்சதும் அந்த பெருசு இரண்டையும் ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டுட்டு அர்ஜுனனையும் போட்டு தள்ளிடுவேன், அதுக்கு அப்புறம் சொத்தை அப்பாகிட்ட கொடுத்துட்டு , நமக்கு வேண்டியது எடுத்துக்கிட்டு ஃபாரின் போய் நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம்" என்றவள் அவனை அணைத்து கொண்டாள்.


❤️ அர்ஜுனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுடுமா, இல்ல தெரியாமலே அவளை கல்யாணம் பண்ணிப்பானான்னு தெரிஞ்சுக்க, அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
 
Top Bottom