Idhazhya Isai
Active member
- Joined
- Jun 16, 2026
- Messages
- 175
- Reaction score
- 124
- Points
- 43
அத்தியாயம் 28
ராம் சிங்கப்பூர் சென்று வேலை செய்தது சிங்கப்பூரில் இருக்கும் மெடிகோர் சொலுசனின் பிரதான நிறுவனத்தில் தான்.
அங்கே அவனுக்கு அன்றைய பொழுதின் சி இ ஓ வாக இருந்தது ராஜசேகர் தான்.
ஆளுமையிலும் திறமையிலும் எவ்வித குறையும் கூற முடியாத அளவிற்கு தன்னுடைய நிறுவனத்தை திறம்பட செயல்படுத்திக் கொண்டிருந்தார் ராஜசேகர்.
அங்கு வேலைக்கு வந்திருந்த ராம் அந்த நிறுவனத்தின் அடிப்படை தொழிலாளியாக இருந்தவன், பின் படிப்படியாக தன்னுடைய திறமையாலும், மக்களை கவரும் வசீகரப் புன்னகையாலும் உண்மையான அன்பாலும் அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்து, பின் தன் மெருகேற்றிக் கொண்ட திறமையினால் அடிப்படை தொழிலாளியாக இருந்தவன், ராஜசேகருக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அந்த நிறுவனத்தின் மிகப் உயர்ந்த பதவியில் இருக்கும் பொறுப்பாளனாக பணியமர்த்தப்பட்டான்.
அதனால் ராஜசேகருடன் நல்லதொரு இணைப்பு உண்டானது, அதன் வழி ராஜசேகரனின் மகனான ராவணார்யனுடனும் நல்ல நட்பு உண்டானது.
ராவணார்யனுக்கும் ராம் என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அந்த தமிழ்நாட்டிற்கே உரித்தான பழமை மாறாத செந்தமிழ் பேச்சும் அனைவரிடமும் பாகுபாடின்றி காட்டும் அன்பும் அக்கறையும் இராவணார்யனை ராமின் புறம் ஈர்த்திருந்தது.
இருவரும் நல்ல நண்பர்களாக பழகத் துவங்கியிருந்தனர். ராவணார்யனின் பல வருட நண்பனான கவினும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.
சிறிது நாட்கள் செல்லச் செல்ல தங்களுடைய மெடிகோர் சொலுஷன் நிறுவனத்தை இந்தியாவில் சென்னையில் நிறுவுவதற்கான பணியினை துவங்க இந்தியா கிளம்பி வந்திருந்தார் ராஜசேகர்.
அப்பொழுது சிங்கப்பூரிலிருந்த தலைமைச் செயலகத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ராவணன், கவின் மற்றும் ராஜசேகரின் மற்றுமொரு முழுமையான நம்பிக்கைக்கு பாத்திரமான ராமிடமும் சேர்த்து பொறுப்பினை ஒப்படைத்து விட்டு இந்தியாவிற்கு புறப்பட்டு இருந்தார்.
இயல்பாகவே ராமிற்குள் இருக்கும் திறமையும், இயற்கையிலேயே அதீத திறமை கொண்ட ராஜசேகரின் உதிரத்தில் உண்டான ராவணார்யனுக்கும் இருந்த திறமையின் காரணத்தினால் இருவரும் அந்த நிறுவனத்தை மிகத் திறமையாக வழிநடத்தினர்.
அதன்பால் அவர்களால் மேலும் புதிது புதிதான மருத்துவ இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு, அது உள்ளூர் மார்க்கெட்டில் ஆரம்பித்து உலக மின்னணு சந்தை வரையிலும் அதீத மதிப்பைப் பெற்று மெடிகோர் சொல்யூஷனுக்கு நல்லதொரு வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்திருந்தது.
ராவணனுக்கு அவனின் அம்மா வசுந்தரா தான் உயிர். ராவணன் ஒற்றை மகனாக பிறந்ததால் ஒரு தாயின் பாசமும் பரிவும் அந்த குழந்தையை தவிர வேறு எங்கும் பகிர வாய்ப்பில்லாததால், தன் அன்னையின் முழுமையான அன்பு எனும் ஆனந்தக் கடலில் மூழ்கி என்றும் தீராத அமிர்தமாய் பெருகி இருக்கும் தன் அன்னையின் பாசத்தை வேண்டுமட்டும் பருகி அனுபவித்துக் கொண்டிருந்தான் ராவணன்.
இயல்பாகவே ராமிற்குமே தாய்ப்பாசம் அதிகம் என்பதால் ராவணனின் தாயிடம் தானும் நன்றாக பேசிப் பழகுவான்.
சாதாரணமாகவே மனிதர்களை ஏற்றத்தாழ்வின்றி நன்கு மதிக்கத் தெரிந்த ராவணனின் தாய் வசுந்தரா ராவணன் மற்றும் அவனின் நண்பர்கள் இருவர்கள் என மூவரையும் எந்த ஒரு பாகுபாடுமின்றி தன் பிள்ளைகளாகவே ஏற்று அத்தனை பாசமாக வைத்திருப்பார்.
மூவரும் தொழிலில் முழுமுனைப்போடு இறங்கி, தங்களின் முழு திறனையும் அதில் காட்டி, வேலை செய்தாலும் அவர்களுக்கென்று மாசத்தில் ஒன்றிரு நாளை ஒதுக்கி, எங்கேனும் மூவருமாக சென்று தங்களின் ஓய்வான தருணங்களை இனிமையானதாக மாற்றி மிகவும் சந்தோஷமாக தங்களுடைய நாட்களை கழித்தனர்.
ராமிற்கு என்னதான் தன் நண்பர்களின் மூலம் அதிகமான இன்பங்கள் அள்ள அள்ள குறையாமல் கிடைத்தாலும் கூட, அவனின் எண்ணம் முழுவதும் நிறைந்திருந்த அவனின் குடும்பமும், அவனின் ஆசை காதல் மனைவியும் மனத்திரையில் முழுவதும் நிறைந்து நிற்பதால் அவனின் தனிமை தற்போதைய அந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் செய்யும்.
அவ்வப்பொழுது அதனை நினைத்து சோர்ந்து அமர்வதை பார்த்த ராவணன், அவனின் அருகில் சென்று,
“என்ன மச்சான் ஏன் ஒரு மாதிரி டல்லா உட்கார்ந்துருக்க..!”
“டேய் அவனை பத்தி உனக்கு தெரியாதா அவனுக்கு அவனுடைய ஃபேமிலி ஞாபகம் வந்திருக்கும்…”
“ஓ.. ஏண்டா ராம், நீ இங்க வந்து முழுசா ரெண்டு வருஷம் முடிய போகுது, இந்த ரெண்டு வருஷத்துலையும் கொஞ்சம் கூட மாறாம எப்படிடா அதே அன்பையும் பாசத்தையும் உன் குடும்பத்து மேல வச்சிருக்க…!”
அவளின் கேள்வியில் ஒரு அர்த்தமுள்ள பார்வையை அவன் புறம் வீசினான் ராம்.
“ராம் எனக்கு ஒரு சந்தேகம்டா நீயும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கோம்… ஒருவேளை உன்னை மாதிரியே நான் உன் வீட்டுக்கு போனா, என்னை அவங்க நீ தான்னு நம்பி ஏத்துக்குவாங்களாடா..!”
“வாய்ப்பே இல்லை மச்சான்.. என்னதான் உருவத்துல ஒரே மாதிரி இருந்தாலும், உணர்வுகள்ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுவும் என் அம்மாவும் பொண்டாட்டியும் பாசத்தை அள்ளிக் குடுக்கிறதுல அளவே இல்லாத ஆளுங்க, அப்படி இருக்கும்போது நீ என்னதான் உருவமாற்று வேலை பார்த்தாலும் அது அவங்க கிட்ட செட் ஆகாது மச்சான்…”
“என்னமோ போடா… நீ ஒவ்வொரு நேரமும் உன் குடும்பத்தை பத்தி ஃபீல் பண்ணி சொல்றப்போ எல்லாம், எனக்கும் ரொம்ப சீக்கிரம் உனக்கு கிடைச்சது போலவே ஒரு காதல் மனைவியும், உங்க ஃபேமிலி மாதிரியே இன்னொரு அழகான அன்பான ஃபேமிலியும் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுதுடா மச்சான்…”
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல மச்சான்… அதான் உங்க அப்பா இந்தியாவுல ஒரு பிரான்ஞ் ஓபன் பண்ண போறாருல்ல, அவர் ஓபன் பண்ணதுக்கு அப்பறம், சிங்கப்பூர்ல இருக்குற ஹெட் ஆஃபீஸ்ல உங்க அப்பாவ சி இ ஓ வா மாத்திட்டு நீ சென்னை பிரான்ஞ்ல இருந்துக்கோ, நானும் உன் கூடவே சென்னை பிரான்ஞ்ல வேலைக்கு சேர்த்துக்கிறேன்…
அப்போ நாம எல்லாரும் அங்கேயும் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுவோம், நீ எதிர்பார்த்த மாதிரியே எங்க ஃபேமிலி கூடவும் சந்தோஷமா இருக்கலாம், அங்கேயே உனக்கு ஒரு நல்ல வைஃப்பும் லைஃப்பும் அமையும் ஓகேவா..!”
“கண்டிப்பா மச்சான்… என்கூட எல்லாத்துலயும் பங்கு போடறதுக்கு, என்னோட உடமையை எடுத்து போட்டுக்கிட்டு, என் கூடவே சண்டை போடுறதுக்கு, நான் மட்டுமே முழுசா அனுபவிச்சுட்டு இருக்கிற என் அம்மாவுடைய அன்பையும் பாசத்தையும் பங்கு போட்டு, நான் கஷ்டப்படும்போது என்னுடைய கஷ்டத்துல பங்கு போடவும், என்னுடைய சந்தோஷத்துல கட்டி அணைச்சு சந்தோஷத்தை பகிர்ந்துக்கவும், இப்பிடி என்னுடைய எல்லா விஷயத்துலயும் எனக்கு உறுதுணையா யாராவது ஒரு சொந்தம் கூட இல்லையேன்னும், உடன்பிறப்புன்னு ஒருத்தர் கூட இருந்திருந்தா நல்லா இருக்கும்னு நானும் பல காலம் ஏங்கி இருக்கேன்டா… அது இனிமே என் லைஃப்ல நடக்காது, ஆனா உன்னுடைய ஃபேமிலி மூலமா அதை நான் அனுபவிக்கணும்னு எனக்குமே நிறைய ஆசை வருதுடா…”
“என்னடா இவ்வளவு லென்த் பேசுற..! உன் பேருக்கும் நீ சொன்ன இந்த டயலாக்குக்கும் சுத்தமா சம்பந்தமில்லையேடா… அவனாவது ராம் அவனுடைய பேருக்கேத்த மாதிரி நேச்சுரல் குணமே அதுதான்… ஆனா நீ அப்படி இல்லையடா.. அப்படி இருக்க இப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசாத மச்சான், உனக்கு செட் ஆகல…! ஏற்கனவே எனக்குள்ளுமே பல நாளா தீராத ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கு..”
“சந்தேகமா என்னடா..?” ராம் கேட்டிருந்தான்.
“பின்ன எதிரெதிர் துருவமா நம்மளுடைய இதிகாசத்துல பேர் பெற்ற நீங்க ரெண்டு பேரும், எப்படி இப்படி நண்பர்களா இருக்கீங்கன்னு, நான் நினைக்காத நாள் இல்லடா…”
“டேய் பேருக்கும், கேரக்டருக்கும் என்னடா சம்பந்தம்..! எங்க அப்பா என்ன நினைச்சு அந்த பேரு எனக்கு வச்சாரோ தெரியாது… ஆனால் நான் சொல்றது அத்தனையும் உண்மை தான்…”
“சரிடா மச்சான் ரொம்ப ஃபீல் பண்ணாத, இன்னும் 2 3 வீக்ஸ்ல சென்னை பிரான்ஞ்சுடைய இண்டீரியர் ஒர்க்ஸ் எல்லாம் முடிஞ்சுரும், அதுக்கப்புறம் நீ கிளம்பிடுவ, அப்புறம் நாங்க மட்டும் தான் இங்கே இருந்து கஷ்டப்படணும் என்னடா மச்சான்..” ராவணனிடம் கேள்வி கேட்டவன் ராமை கவலையாக பார்த்திருந்தான் கவின்.
“டேய்… அப்படி எல்லாம் பண்ண முடியாது.. நான் முதல்ல இந்தியா போயிட்டு, அதுக்கப்புறம் நீங்க கிளம்பி வர்றதெல்லாம் சரிப்பட்டு வராது, போறதா இருந்தா நம்ம எல்லாருமே சேர்ந்து ஒன்னாவே போறதா பிளான் பண்ணிக்கலாம்… அதை பத்தி நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன் சரியா..”
“சரிடா மச்சான்… அப்போ இந்த சந்தோசமான விஷயத்தை நான் போய் சீதா கிட்ட சொல்லிட்டு வரட்டுமா..”
“அப்பா டேய் இருடா பொண்டாட்டி தாசா.. உடனே உன் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணி சொல்லனுமா..” கவின் கூற
“இல்லடா நான் திரும்பி வரேன்னு சொன்னா சீதாவும் வீட்ல உள்ள எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்கடா..”
“டேய் நீ சொல்லிட்டு போறப்போ இருக்குற சந்தோஷத்தை விட, நீ சொல்லாம சர்ப்ரைஸா போறப்போ இருக்குற இருக்குற அந்த ஹாப்பினஸ் ஃபீல், அது வேற மாதிரி இருக்கும்டா..” கவின் கூறியதை கேட்ட ராவணனும்,
“நீ அப்படியே ட்ரை பண்ணு மச்சான்… அதுவும் ஒரு மாதிரி பெஸ்ட்டான ஸ்வீட் சர்ப்ரைஸ் தான, இதெல்லாம் வெளிநாட்லயோ, இல்லன்னா வெளிமாநிலத்துலயோ இருந்து போனா தானே கிடைக்கும், நம்ம சென்னை போயிட்டா அதுக்கப்புறம் இங்க வர்றதுக்கான வேலையே இருக்காது… அப்படியே வந்தாலும் ரொம்ப கம்மியான டேய்ஸ் தான் பிளான் பண்ண வேண்டியதா இருக்கும்… அதனால நீ கவின் சொல்ற மாதிரி ட்ரை பண்ணு மச்சான்…”
ராவணனும் கவினும் கூறியதைக் கேட்டு தானும் அதனை எண்ணிப் பார்த்து மகிழ்ந்தவன் அவர்கள் கூறியவாரே செய்ய நினைத்தான்…
அடுத்த ஒன்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் தற்பொழுது சீதா பணிபுரிந்து கொண்டிருக்கும் இதே மெடிகோர் சொல்யூஷன் இரண்டு வருடங்களுக்கு பிறகு அன்று ஆரம்பிக்கப்பட்டதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியோடும் துள்ளலோடும் சிங்கப்பூரிலிருந்து கிளம்பினான் ராம்.
அவன் தான் வேலை செய்யும் நிறுவனம் மற்றொரு கிளையாக வளர்ச்சி பெற்றதை நினைத்து மகிழ்ந்ததை தாண்டி தன்னுடைய குடும்பத்தினை பார்க்க போகிறோம் என்பதில் தான் அதிகமான ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தான்.
நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டதைப் போலவே அன்றைய தினமே மூவருக்குமான ஃப்ளைட் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
கவினும் அன்றைய தினம் இவர்களுடன் விமான பயணம் வருவதாகத் தான் முடிவு செய்யப்பட்டு இருந்தது..
ஆனால் அன்றைய பொழுது அவனின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியவன் நான் சிறிது நாட்கள் கழித்து வருவதாக கூறி, விமான நிலையம் வரை வந்து ராம் மற்றும் ராவணன் இருவரையும் விமானம் ஏற்றிவிட்டு சென்றிருந்தான்.
தன் தொழில் மற்றுமொரு அடியினை எடுத்து வைத்ததினால், அதனை பார்ப்பதற்காக மிகுந்த சந்தோஷமாகவே பயணம் மேற்கொண்டான் ராவணன்.
தன் மனைவி மற்றும் குடும்பத்தினை பார்க்க போகிறோம் என்கின்ற ஆர்வத்தில் மிகவும் உற்சாகமாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ராம்.
இவர்கள் இருவரின் ஆசையும் கனவும் அந்த ஒரு விமான விபத்தில் மொத்தமுமாய் தடைப்பட்டு சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது.
அதன் பின்னான மேலும் சில நினைவுகள் எண்ணத்திரையினில் ஓட, குடை போல் மூடியிருந்த விழித்திரையின் உள்ளே கருமணிகள் அசைந்தாட, தனது விரல்களை அசைத்து மெல்ல தன்னை உணர முயற்சித்தான் ராம்.
ராமின் அருகில் ஒரு சேரில் அமர்ந்து , வெகுநேரமாக அவனின் முகத்தையும் அவனின் மார்பில் தெரிந்த இதய வடிவ மச்சத்தையும் ஆசையாய் வருடியவள், அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சீதா,
ராமின் அருகில் ஓடிக்கொண்டிருந்த மானிட்டரில் தெரிந்த அளவுகள் சரியாக இருப்பதையும், ராமின் மூச்சுக் கற்று சீராக வெளிவருவதையும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், அவளை அறியாமல் அப்படியே பெட்டில் தலை சாய்த்து இன்றைய ஒரு நாளில் பற்பல அதிர்ச்சிகரமான விஷயங்களை தாங்கியதன் விளைவாக உண்டான மனச்சோர்வின் காரணமாக உறங்கியும் போயிருந்தாள்.
வெகு நேரமாக தனது இடுங்கிய புருவங்களுக்கு இடையே அடுக்கடுக்கான பற்பல நினைவுப் பேழையில் பதுங்கி இருந்த நினைவுப் புத்தகத்தின் பக்கங்களில் வேகமாக நகர்ந்து சென்ற வண்ணம் இருக்க,
விமான விபத்தின் பொழுது அவன் கத்தியபடி மயங்கியிருந்த “ராவணா…!!!” என்னும் பெயரை உரத்தக் கூறியவாரே பட்டென விழிகளை பிரித்து எழுந்தமர்ந்தான் ராம்.
(தொடரும்

)