இரட்சிப்பாயா இராவணா 💕 அத்தியாயம் 19 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இரட்சிப்பாயா இராவணா 💕 அத்தியாயம் 19

New updates

LATEST

Idhazhya Isai

Active member
Joined
Jun 16, 2026
Messages
175
Reaction score
124
Points
43

1000175671.jpg


அத்தியாயம் 19

தனக்கு உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்த தனமோ தனக்கு அருகில் இருந்த திவ்யாவின் கையை இறுகப் பற்றினார்.

தன் அம்மா ராவணனனையும் யாழையும் ஒன்றாக பார்த்து உணர்ச்சிவசத்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவளாக,

“அம்மா ஒன்னும் இல்லம்மா, ரிலாக்ஸா இருங்கம்மா..!”

“தி…திவ்… திவ்யா எனக்கு ஒரு மாதிரி படபடன்னு மயக்கம் வர மாதிரி இருக்கு திவ்யா..! என்ன அங்க உட்கார வைக்கிறியா..!”

திடீரென்று தனம் இவ்வாறு கூறியதை பார்த்து அதிர்ந்து ராவணனோ, “ஐயோ அம்மாக்கு என்ன ஆச்சு..?”

பதறி கூறியவனாக ஒரு கையில் யாழையும், மற்றொரு கையில் தனத்தையும் பிடித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் வந்து அமர வைத்தவன்,

“நர்ஸ்…” அங்கே வேலை செய்து கொண்டிருந்த செவிலிப் பெண்ணை அழைத்து உடனடியாக தண்ணீர் எடுத்து வருமாறு கூறியவன் மற்றொரு நர்ஸை அழைத்து தனத்திற்கு ரத்த அழுத்தத்தின் அளவு பார்க்குமாறு கூறினான்.

பிபி செக் செய்த அந்த பெண்ணோ பிபி லெவல் அதிகமாக இருப்பதை கூறவும், “உடனே வீல் சேர் எடுத்துட்டு வாங்க க்யிக்..!” அங்கிருந்த செவிலியரை துரிதப் படுத்தினான்.

அவர்கள் உடனே வீல் சேரை எடுத்து வந்து கொடுக்க, தனத்தை வீல் சேரில் அமர வைத்து, தானே அவரோடு அதனை தள்ளிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்து சென்று, அவரை பெட்டில் படுக்க வைத்தவன்,

“அம்மா ஒன்னும் இல்லம்மா..! ரிலாக்ஸா இருங்க அவ்ளோ தான், நீங்க இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்தீங்க, வேற எதையோ மனசுல போட்டு யோசிச்சிட்டு இந்த மாதிரி உங்களுக்கு ஆயிருக்குன்னு எனக்கு தோணுது, உங்களுக்கு ஒன்னும் ஆகாது நீ..நீங்க கொஞ்ச நேரம் மட்டும், எனக்காக கொஞ்ச நேரம் மட்டும் கண்ணை மூடி படுத்து ரிலாக்ஸ் பண்ணுங்கம்மா..!”

முகமெங்கும் ஆங்காங்கே சிறு துளி பூத்திருக்கும் வியர்வை துளியோடு படபடப்பை முகத்தில் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு ராவணன் கூறியதை கேட்டு அருகில் இருந்த திவ்யாவோ,

“அம்மா அதான் சார் சொல்றாருல்ல, நீங்க கொஞ்ச நேரம் கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணுங்க..!”

தன் அம்மாவிற்கு எதனால் திடீரென்று இப்படி ஆனது என்று திவ்யா உணர்ந்தாலும் தற்சமயம் அதனை கேட்டு மேலும் தன் அம்மாவின் உடல் நிலையை மோசமாக்குவதற்கு துணியாமல் அவ்வாறு கூறியிருந்தாள்.

ராவணனும் திவ்யாவும் கூறியதை கேட்டு சரி என்று தலையசைத்த தனமோ அமைதியாக கண்கள் மூடி படுத்திருந்தார்.

தன்னுடைய பாட்டியின் இந்த நிலையை அருகில் இருந்து பார்த்த யாழ் நிலாவே சற்று பயந்து போனவளாக, திவ்யாவிடமிருந்து ராவணன் புறம் தாவி,கலங்கிய கண்களோடு நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தவள் “ப்ரண்ந் எங்க பாட்டிக்கு என்ன ஆச்சு..? குழந்தையின் அந்த கலங்கிய கண்களையும், பயந்த முகத்தையும், காரகரத்த குரலையும் வைத்து குழந்தையின் நிலை உணர்ந்த ராவணனோ,

“பாட்டிக்கு ஒன்னும் இல்லடா செல்லம், பாட்டி நேத்து நைட்டு தூங்கவே இல்லையாம், ரொம்ப நேரம் போன்ல கேம் விளையாடிட்டு இருந்தாங்களாம்…. அதனால் தான் இப்ப தூக்கம் வருதுன்னு தூங்குறாங்க சரியா.. நீ பயப்படாத செல்லம்…!”

புன்னகையான முகத்தோடு யாழின் கண்ணன் கிள்ளி கூறினான் ராவணன்.

அப்போ பாத்திக்கு ஒன்னும் இல்லியா..! அவங்க நேத்து அதிகமா போன் பார்த்ததால தான்.. இந்த மாதிரி தூங்குதாங்களா…? தலையை ஆட்டி ஆட்டி கேட்டாள் யாழ்.

“ஆமாண்டா செல்லம், பாட்டி முன்னை விட அதிகமா போன் பாக்குறாங்களாம், அதனால் தான் இந்த மாதிரி வந்துருக்கு, நீங்களும் இனிமே அதிகமா ஃபோன் பாக்காதீங்க…” ராவணன் கூற சரி என்பதை போல் தலையாட்டினாள் யாழ் நிலா.

சிறிது நேரம் தாமதித்து தனத்தை செக் செய்து அவர் ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது என்பதை உணர்ந்த பிறகு,

“அம்மாவுக்கு திடீர்னு என்ன ஆச்சு..? ஏன் இந்த மாதிரி ஆகிடுச்சு..? அவங்க ஹெல்த் கண்டிஷன் ஓகேவா இருக்கா..? இல்ல வேற எதுவும் பிரச்சனையா..? திவ்யாவிடம் வினவினான் ராவணன்.

அதனைக் கேட்டு திவ்யாவோ, “சார் அது வந்து..!”

யார் என்று தெரியாத, முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவன், நேற்றைய பொழுது மருத்துவரின் அருகில் பார்த்தது, இன்றைய பொழுது குழந்தையை தூக்கி வைத்து நன்றாக பேசினான் அதனை வைத்து தன் குடும்ப பின்னணியை எப்படி கூறுவது..? என்று தயங்கிய திவ்யாவோ,

“அது ஒன்னு இல்ல சார்..! அது சரியாகிடுவாங்க, அவங்க வேற ஏதையாவது நினைச்சுட்டு இருந்திப்பாங்க சார், வயசாயிடுச்சுல்ல, இது மாதிரி எல்லாம் வராது சாதாரண தானே சார்..! நான் குழந்தைக்கு ஐவிஎஃப் போடணும்..! அம்மா இங்க இருக்கட்டும்..”

“ஆங் ஓகே நீங்க போய் ஐ வி எஃப் போட்டுட்டு வாங்க, அதுவரைக்கும் அம்மா இங்கே ரிலாக்ஸா இருக்கட்டும்..” கூறியவன் யாழை செல்லம் கொஞ்சி,

“குட்டிமா நீங்க உங்க அம்மா கூட போயி சமத்துப் பிள்ளையா ஐவிஎஃப் போட்டுட்டு வருவீங்களாம்…! பாட்டியும் உங்க ஃபிரண்டும் இங்கேயோ உங்களுக்காக காத்துட்டு இருப்போம்மா ஓகே…!”

அவன் ஐ வி ஃப் என்று ஊசியை தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டவளாக, “ஆனா ப்ரண்ந் எனக்கு ஊசி வேணாம்…வலிக்குது..!”

கண்கள் சுருக்கி உதட்டை பிதுக்கி மூக்கின் நுனி நொடியில் சிவந்த நிலையில் யாழ் கூறுவதை பார்த்த இராவணனோ “அச்சோ செல்லமே ரொம்ப வலிக்குதாடா.., வேணும்னா என் தங்கத்துக்கு வலிக்காத மாதிரி இன்ஜெக்க்ஷன் போட சொல்லலாமா…!”

“இல்ல வேணாம் எப்பதி போத்தாலும் ஊசி வலிக்கும்..!”

“அச்சோ அறிவு..! ஆனா செல்லம், வலிக்காத மாதிரி ஊசி போடறதுக்குனு ஒரு வழி இருக்கு, நீங்க கொஞ்ச நேரம் மட்டும் ஃபிரண்டு சொல்றத கேட்டிங்கன்னா… வலிக்காத அந்த இன்ஜெக்க்ஷன போட்டு உடனே உங்களை உங்க அம்மா கிட்ட குடுத்துடுவாங்க ஓகே..!” இரு கட்டை விரலையும் உயர்த்தி இராவணன் கூற,

“அப்போ கண்திப்பா வலிக்காதுல்ல..!”

“ஃப்ரண்ட் சொன்னா நம்புவீங்க தானே..! உங்களுக்கு இன்னைக்கு வலிக்காத மாதிரி ஊசி போடுவாங்க அதுக்கு உன் ஃபிரண்டு நான் கேரண்டி.. ஓகே..?”

“ஓகே..!” என்று முகத்தை தொங்க போட்டுக்கொண்டு கூறிய யாழ் திவ்யாவுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றிருந்தாள்.

இப்பொழுது தனமும் ராவணனும் மட்டும் அந்த அறையில் இருந்தனர்.

சீதா வேறொரு தளத்தில் வேலை செய்து கொண்டிருப்பதால், இங்கு நடந்த எதுவும் அவளுக்கு தெரியாது போயிருந்தது. அதுபோக மருத்துவமனையின் இது போன்ற நிகழ்வுகள் சகஜம் என்பதால் அதனை யாரும் பெரிதாக கண்டு கொண்டிருக்கவில்லை.

ராவணன் தனத்தின் முகத்தை சில கணம் பார்த்தவன் அவரின் அருகில் சென்று அமர்ந்து தனத்தின் கையை எடுத்து தனது கைக்குள் பொருத்திக் கொண்டவன் மிக மிக மென்மையாக அதே சமயம் அன்பான வார்த்தைகளோடு

“அம்மா என் பேர் ராவணார்யன்..! உங்க பேரு என்னமா..?”

அவனின் பேரை கேட்டதும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவர் “என் பேரு தனலட்சுமிப்பா..!”

“அம்மா எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு என் வயசுல ஒரு பையன் இருக்கும்னு நினைக்கிறேன்..! இப்போ இந்த நிமிஷம் என்னை உங்க பையனா நினைச்சு என்கிட்ட சில விஷயங்கள் சொல்ல முடியுமாம்மா..?”

ராவணன் இவ்வாறு கேட்டதும் ஒன்றும் புரியாமல் அவனின் முகத்தையே ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தார் தனம்.

“நேத்தும் சரி, இனிக்கும் சரி, உங்க முகத்துல என்னை பார்த்த உடனே ஒரு விதமான மலர்ச்சியும் அதிர்ச்சியும் ஒரு சேர வந்து உங்க மனசுக்குள்ள ஏதேதோ எண்ணங்கள் ஓடிட்டு இருக்கு, ஏன்னு தெரியல ஆனா, என்னால அது உணர முடியுது, நேத்து கூட உங்களுடைய மனசு அந்த அளவுக்கு வேதனைப்பட்டு நீங்க கலங்குன மாதிரி எனக்கு தோணல, ஆனா இன்னைக்கு நானும் யாழ் குட்டியும் பேசி விளையாண்டுட்டு இருக்கும்போது உங்கள் மனசுக்குள்ள பல விஷயங்களை போட்டு குழப்பிக்கிட்டு இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு…

நீங்க என்ன ஒரு டாக்டராவோ, இல்ல வேற ஒரு மனுஷனாவோ பாக்காம, உங்க பையனா, உங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சு உங்க மனசுல உள்ளதை என்கிட்ட மனசு விட்டு சொல்லுங்கம்மா…! யார்கிட்டயாவது சொல்லிட்டா உங்க மனசுல உள்ள பாரம் குறையும், இது போல அடிக்கடி வராமலும் தடுக்கலாம்…!”

தனத்தின் கண்களை அன்பாக பாசமாக கணிவாக பார்த்துக் கொண்டே ராவணன் கேட்க கேட்க, தனத்தின் கண்களில் அவரையும் மீறி கண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி இருந்தது….!

அவரின் கண்ணீரைப் பார்த்து ராவணனின் கண்களும் சிவந்து, இப்பொழுதோ அப்பொழுதோ என்று நீர் சுரந்து வெளியேற காத்திருக்க, அதனை உணர்ந்த தனமோ பட்டென தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர்,

“எனக்கு மொத்தம் மூணு பசங்க, இப்போ குழந்தையோட வந்தாளே அவ பேரு திவ்யா..! எனக்கு இரண்டாவது பையன் ராம்…! மூணாவது பையன் தீபக்…! இந்த குழந்தை என் மகளோட குழந்தை இல்ல, என் பெரிய பையனோட குழந்தை, ஆனா இந்த குழந்தைய தூக்கி ஆசை தீர செல்லம் கொஞ்ச வேண்டிய என் பையன் இப்போ உசுரோட இல்ல, நீங்க அப்படியே என் பையனை மாதிரியே இருக்கீங்க.., உங்கள பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் பையன் ஞாபகம் தான் வருது, யாழ் நிலாவுக்கு மட்டும் அவளோட அப்பா இருந்துருந்தா, இந்நேரம் அவளை இளவரசி மாதிரி தங்கி இருந்திருப்பான்…! ஆனா அந்த குழந்தைக்கு அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கலைன்னு நினைக்க நினைக்க என்னால தாங்க முடியல தம்பி…!”

தனம் கூற ஆரம்பித்ததும் அதனை மிக கவனமாக கேட்க ஆரம்பித்திருந்த ராவணன் அவர் பாதியில் நிறுத்தி இருக்கவும்,

“அப்போ இவங்க உங்க பொண்ணுன்னா..! யார் யாழோட அம்மா…!” என்று சில நொடி நிறுத்தியவன், “அப்போ உங்க பையன் மட்டும் தான் இறந்து போனாரா..! இல்ல உங்க மருமகளும் சேர்ந்து…!”

“ஐயோ..! இல்ல தம்பி என் பையன் மட்டும் தான் எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டான், ஆனா என் மருமக, என்னோட இன்னொரு மக, எங்க வீட்டு மகாராணி, எங்க எல்லாரையும் எந்த விதத்திலும் கலங்க விடாம, எந்த இடத்துலயும் தயங்க விடாம, எங்களையெல்லாம் அவ்வளவு அக்கறையா அன்பா பாசமா பாத்துக்குற பொண்ணு…

அப்படி ஒரு பொண்ணு என் பையனுக்கு மனைவியா கிடைச்சதும், எங்க வீட்டுக்கு மருமகளா கிடைச்சதும் நாங்க செஞ்ச பாக்கியம்..! ஆனா அந்த பாக்கியவதிக்கு தான் அவளுடைய கணவன் அவ ஆயுசுக்கும் கூட இல்லாம போயிட்டான்…!”

உள்ளம் நெகிழ்ந்து கூறும் பொழுது மீண்டும் தனத்தின் கண்களில் கண்ணீர் வலிய அதனை தனது கரம் கொண்டு மென்மையாக துடைத்து விட்டான் ராவணன்.

“அப்படி உங்க பையனுக்கு என்ன ஆச்சு மா..? உங்களுக்கும் உங்க குடும்பத்து உள்ளவங்களுக்கும் நடந்த அந்த கொடுமையான நிகழ்வுகளை சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க, இல்லன்னா பரவால்லம்மா…”

சிறிது தயங்கிக் கொண்டே இராவணன் கூற, அவனின் தயங்கிய முகத்தை பார்த்தும், வார்த்தையும் கேட்ட தனத்திற்கு ஒரு மாதிரி ஆகிவிட

“அதுதான் நீயே சொல்லிட்டயேப்பா.. நான் உங்க புள்ள மாதிரிமான்னு, என் பிள்ளை கிட்ட என் மனசுல உள்ளது சொல்லாமையா…! சொல்றேன்ப்பா, கடந்த மூன்று வருஷமா என் மனசுல ஆறாத ரணமா இருக்குற பல கொடுமையான விஷயங்களை என் புள்ளையான உன்கிட்ட சொல்றேன்…!”

தீர்க்கமான விழிகளுடன் ராவணனை பார்த்த தனமோ ராம் மற்றும் சீதாவிற்கு இடையில் ஏற்பட்ட காதலில் ஆரம்பித்து, அவர்களின் திருமணம் குழந்தை பேரு, அதன் பின் திவ்யாவுக்கும் நடந்த திருமண பந்ததில் குழந்தையின்மை காரணமாக உண்டான பிரச்சனை, திவ்யாவிற்கும் ஸ்ரீதருக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் மற்றும் ராமன் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய பொழுது ஏற்பட்ட விமான விபத்து..! என அனைத்தையும் மிகப் பொறுமையாக கூறி முடித்து இருந்தார்.

அதனைக் கேட்ட ராவணனோ “என்னம்மா சொல்றீங்க இவ்வளவு நடந்து இருக்கா..! உங்க மருமக உண்மையிலேயே க்ரேட் தான்மா எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையை அவங்க கடந்து வாழ்ந்துட்டு இருக்காங்க…!”

“அவள் அதை கஷ்டமாவே எடுத்துக்கிட்டது இல்லப்பா…! நானும் எத்தனையோ முறை அவகிட்ட வேற ஒரு வாழ்க்கை அமைச்சுக்க சொல்லி கேட்டு பார்த்துட்டேன், ஆனா அவ முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாப்பா, தான் தம்பி மனைவி இப்படி இருக்கும்போது தனக்கு மட்டும் இன்னொரு வாழ்க்கை தேவையா அப்படின்னு நெனச்சுக்கிட்டு என் பொண்ணும் அவளுக்காகவே காத்துட்டு இருக்குற பையன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு வீம்பா இருக்கா…! இவங்க ரெண்டு பேரும் நீயா நானான்னு நிக்கிறாங்க, இவங்க வாழ்க்கைய நினைச்சாலே எனக்கு பல நாள் தூக்கம் கூட வர்றது இல்லப்பா..!”

“அம்மா கவலைப்படாதீங்கம்மா உங்களுடைய இந்த மன வேதனைக்கு எல்லாம் ஒரு நாள் தீர்வு கிடைக்கும், உங்க பையன் உங்க கூட இல்லன்னா என்ன..! இனிமே என்னை உங்க பையனா நினைச்சுக்கோங்கம்மா…! இனி உங்களுக்கு ராம் அப்படிங்கற பையன் உங்க கூட இல்ல அப்பிடிங்குற எண்ணம் வரவே கூடாது…!

அதுக்கு பதிலா இந்த ராவணார்யன் உங்க பையனா இனி எப்பவுமே இருக்க போறான்…!” அவரின் கைக்கு மேலும் அழுத்தம் குடுத்து உறுதியாக கூறிய இராவணனின் தலையை, தாய்மைக்கே உரித்தான பாசத்தோடு பரிவோடு வருடிக் குடுத்தார் தனம்.

அவரின் அந்த தலை வருடலில் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது இராவணனுக்கு….!🥰

(தொடரும் 💕💕💕)




 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,425
Reaction score
918
Points
113
தனம்மா அப்படியே மருமக பேரையும் வேலை செய்யற இடத்தையும் சொல்லியிருக்கலாம்
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,381
Reaction score
3,229
Points
113
அவங்களை பொறுத்த வரை எல்லாம் சொல்லியாச்சு

ஆனால் இவனுக்கு தான் சீதா அவரது மருமகள்னு தெரியல
 

Idhazhya Isai

Active member
Joined
Jun 16, 2026
Messages
175
Reaction score
124
Points
43
அவங்களை பொறுத்த வரை எல்லாம் சொல்லியாச்சு

ஆனால் இவனுக்கு தான் சீதா அவரது மருமகள்னு தெரியல
தெரியல 🤣🤣🤣
 

Idhazhya Isai

Active member
Joined
Jun 16, 2026
Messages
175
Reaction score
124
Points
43
தனம்மா அப்படியே மருமக பேரையும் வேலை செய்யற இடத்தையும் சொல்லியிருக்கலாம்
சொல்லியிருக்கலாம் தான் ஆனா சொல்ல விட மாட்டோம் 🤩🫣
 

ராஜேஷ்கருப்பையா

Well-known member
Staff member
Joined
Aug 24, 2025
Messages
664
Reaction score
462
Points
63
Age
44
இவன் இவன் சுத்துறது தனத்தோட மருமகளை தான் சேர்த்து சொல்லி இருக்கலாம்
 
Top Bottom