- Joined
- Sep 8, 2024
- Messages
- 344
- Reaction score
- 164
- Points
- 63
அத்தியாயம் -20
அலைபேசியின் மறுமுனையில் வந்த செய்தியைக் கேட்டு அப்படியே திகைத்து நின்று விட்டாள் இசைவாணி.
‘என்ன சொல்றாரு இவர்? வீணை வாசிப்பதையே நான் நிப்பாட்டிட்டேனா? கச்சேரி இனிமே ஒத்துக்கப் போறதில்லையா? இப்படி ஒரு தகவல் நான் சொல்லாம எப்படி போகும் சபாவுக்கு? யாரு சொல்லி இருப்பாங்க?’
மனதில் கேள்விகள் வரிசையாகப் பிறந்தன பெண்ணவளுக்கு.
“மேடம்.. மேடம்..” அதற்குள் இந்தப் பக்கத்தில் இருந்து பதில் எதுவும் வராமல் அமைதியாக இருக்கவும் எதிர்முனையில் இருந்து அழைப்புக் குரல் வந்தது.
மீண்டும் மீண்டும் அழைத்த பின்னர் தான் தன்னிலைக்கு வந்தாள் இசைவாணி.
“மே.. மேடம்.. லைன்ல இருக்கீங்களா?”
“சார்.. சொ.. சொல்லுங்க.. சாரி சார்! நீங்க என்ன சொல்றீங்க? எதுவும் புரியலையே எனக்கு!”
குழப்பமான குரலில் கேட்டாள்.
“என்ன மேடம் சொல்றீங்க? நீங்க இனிமே கச்சேரி எதுவும் ஒத்துக்கப் போறதில்லேன்னும் வீணை வாசிக்கிறதையே நிப்பாட்டிட்டதாவும் சொன்னாங்களே மேடம்! அதனால தான் நாங்களும் உங்களுக்கு ஃபோன் பண்ணவே இல்ல. நிறைய பேர், உங்க கச்சேரி எப்போ எப்போன்னு கேட்டுட்டே தான் மேடம் இருக்காங்க. நாங்க தான் அவங்க கிட்ட எப்படி பதில் சொல்றதுன்னு தயங்கிட்டு இருந்தோம். நீங்க இப்படி சொல்றீங்களே மேடம்!”
“இந்தத் தகவல் யார் கிட்ட இருந்து வந்தது உங்களுக்கு? எப்போ யாரு சொன்னாங்க?”
“உ.. உங்க ஹஸ்பண்ட் தான் மேடம் சொன்னாரு. உங்களுக்கு அப்ப குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகுதுன்னு சொன்னார் மேடம்!”
சட்டென கோபமும் வருத்தமும் ஒரு சேர வந்தது இசை வாணிக்கு.
‘இந்த அளவுக்குப் போயிட்டாரா மனுஷன்? நான் கச்சேரி பண்றது தான் இவரை உறுத்துது. அதைக் கெடுக்கணும்னு எப்படியெல்லாம் யோசனை பண்ணி இருக்காரு? இவரோட புத்தி இந்த அளவுக்கு இறங்கி வேலை பார்க்கும்னு சுத்தமா நினைச்சுக் கூடப் பார்க்கல. ச்சே..’
அவரிடம் என்ன பதில் சொல்வது என்று கூட அவளால் யோசிக்க முடியவில்லை அந்த நேரத்தில்.
“மே..மேடம்!”
அவருடைய குரலில் இப்போது சங்கடம் தெரிந்தது.
“எஸ்.. சொல்லுங்க!”
“உங்களுக்கு இது தெரியாதா மேடம்? அப்படின்னா உங்க முடிவு என்ன? இனி கச்சேரி பண்ணுவீங்களா மேடம்? சொன்னீங்கன்னா உடனே தேதி குறிச்சிடலாம் மேடம்!”
ஆர்வமாகக் கேட்டார் எதிர்ப்பக்கம் பேசியவர்.
இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாத இசைவாணிக்கு, அவர் அடுக்கிய கேள்விகளுக்கு பதில் என்ன தருவது என்று புரியாமல் குழம்பினாள்.
கட்டிய கணவனை ஒரு மூன்றாம் மனிதரிடம் எப்படி விட்டுத் தர முடியும் அவளால்?
‘இது சம்பந்தமாக எதுவுமே எனக்குத் தெரியாது என்று கூறினால் என்ன நினைப்பார் அவர்?’
அவள் யோசித்து முடிவு எடுப்பதற்குள் மீண்டும் அவரே பேசினார்.
“சார் வந்து சொன்னதும், நீங்க தான் சொல்லி அனுப்பி இருப்பீங்கன்னு நாங்க நினைச்சோம் மேடம்!”
“இருங்க.. இருங்க.. குழந்தை பிறந்த ஒரு வாரத்தில நான் ரொம்ப வீக்கா இருந்தேன். என்னால எழுந்து நடக்கக் கூட முடியல. அதுதான் அவர் என்னைப் பார்த்து அப்ப ரொம்ப பயந்துட்டார். அதனால அப்படி வந்து சொல்லி இருக்கார். மத்தபடி எதுவும் இல்ல”
“உங்களுக்கு இது தெரிய வேண்டாம்னு சொன்னார் மேடம் சார்! அதனால தான் நாங்களா உங்களுக்கு கால் பண்ணி எதுவுமே கேக்கல”
“ஓ! என் ஹெல்த் நினைச்சுத் தான் சாருக்கு கொஞ்சம் பயம்! வீணை வாசிக்கிற நினைப்பிலேயே இருப்பேன்னு தான் எனக்கு அது தெரிய வேண்டாம்னு சொல்லி இருப்பாரு. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க வேண்டாம் சார்!”
“அப்படின்னா..?” என்று இழுத்தார் அவர்.
“ஆமா சார்.. நான் எப்பவும் போல கச்சேரி பண்றதா தான் இருக்கேன். என்னோட ஹெல்த் கண்டிஷன் இப்ப நல்ல நார்மல்ல தான் இருக்கு. சோ.. நோ பிராப்ளம்! சார் கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க டேட் பார்த்துட்டு எனக்கு கண்ஃபர்ம் பண்ணுங்க சார்!”
“கொஞ்சம் லைன்ல இருங்க மேடம்! நான் இப்பவே உங்களுக்கு டேட் பார்த்துச் சொல்லிட்றேன்”
கூறியவர் அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே பதில் கூறி விட்டார்.
“வர்ற இருபதாம் தேதி உங்களுக்கு ஓகேயா மேடம்?”
“சண்டேயா சார் ஆகுது?”
“எஸ் மேடம்! உங்க ரசிகர்கள் சண்டே அன்னைக்கு தான் கேட்கிறாங்க மேடம் உங்க கச்சேரி. அதனால தான் அப்படிப் பார்த்து வைக்கிறோம்”
“ஓ ஓகே ஓகே! அன்னைக்கே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க. எந்தப் பிரச்னையும் இல்ல”
“ஓகே மேடம்! ரொம்ப தேங்க்ஸ் மேடம் நீங்க கால் பண்ணி பேசினதுக்கு. அப்புறம் கச்சேரிக்கு ஒத்துகிட்டதுக்கு”
“அதனால என்ன சார்? ஓகே.. நான் வைக்கிறேன்”
“ரொம்ப நாளாச்சு என்றதால ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு கொடுத்துடலாம் மேடம்! உங்க சார்பில நீங்களும் ஒரு நியூஸ் போட்டா கூட சந்தோஷம் மேடம்!”
“ம்ம்.. ஓகே! அதுக்கென்ன, கொடுத்துட்டாப் போச்சு. நாளைக்கே கொடுத்துட்றேன்”
தன் வீணை கலைப் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதை நினைத்து சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், கணவன் செய்த காரியத்தை நினைத்து மனதில் கோபம் தான் மூண்டது அவளுக்கு.
‘மனசுல எவ்வளவு பொறாமையும் வன்மமும் இருந்தா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருப்பாரு. என் மனைவி இனி எந்தக் கச்சேரியும் செய்ய மாட்டான்னு இவர் சொன்னா, நான் அதை அப்படியே ஏத்துகிட்டு பேசாம இருப்பேன்ற நினைப்பா இவருக்கு? என்ன தான் நான் சபாவில சமாளிச்சுப் பேசி இருந்தாலும், அவங்களுக்கு சந்தேகம் இருக்கத் தானே செய்யும்! ஏன் இப்படி வந்து சொல்லிட்டுப் போனாருன்னு? அப்ப அவமானம் யாருக்கு? இவருக்குத் தானே! இதெல்லாம் இவருக்கு நிஜமாவே புரியுதா இல்லையா? ஹும்ம்.. சொரணை உள்ள மனுஷங்க தான் இதுக்கு எல்லாம் கவலைப்படுவாங்க! இவருக்குத் தான் அதெல்லாம் சுத்தமா இல்லையே!
இப்ப அடுத்த வாரம் நான் கச்சேரி போகப் போறது தெரிஞ்சா என்ன பண்ணுவார் இவர்? ருத்ர தாண்டவம் ஆடுவாரோ? இல்லேன்னா போகக்கூடாதுன்னு கண்டிஷன் போடுவாரா? சரி பார்க்கலாம்.. என்ன நடக்கப் போகுதுன்னு’
அடுத்த வாரம் கச்சேரி இருக்கும் விபரத்தை தன் அம்மா வீட்டில் மட்டுமே கூறினாள். பிரதாபன் சபாவில் கூறிய விவரங்களை யாரிடமும் கூறாமல் மறைத்து விட்டாள் இசைவாணி.
தன் மாமியாரிடம் மட்டும் கூறலாம் என்று முதலில் நினைத்தவள், பிறகு அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.
சபாவின் பத்திரிகையில், தான் கொடுக்கும் அறிவிப்பைப் பார்த்த பிறகு தான் தன் கணவனுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டும் என்று நினைத்து, அதற்கேற்ப காயை நகர்த்தினாள்.
அடுத்த இரண்டு நாட்களில் இசைவாணியின் அறிவிப்பு வந்தது பத்திரிகையில். இசைவாணி அதில் உறுப்பினராக இருந்ததால் மாதம் தவறாமல் வீடு தேடி பத்திரிகை வந்து விடும்.
இசைவாணி, தன்னுடைய அறிவிப்பை அதில் பார்த்து விட்டு, வேண்டுமென்றே பிரதாபனின் கண்ணுக்குத் தெரியும் விதமாக, அந்தப் பக்கத்தை முன்னே வருவது போல் மடித்து, தங்கள் அறையிலேயே வைத்திருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே வெளியே இருந்து வந்தவன், பத்திரிகையைப் பார்த்து விட்டுப் பிரித்துச் செய்தியையும் படிக்க ஆரம்பித்தான்.
‘என் ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் சந்தோஷ அறிவிப்பு என்னவெனில், நான் மீண்டும் உங்களைப் பார்க்க வந்து விட்டேன். ஆம்.. என் கலைப் பயணத்தைத் துவங்கப் போகிறேன். அடுத்த ஞாயிறன்று உங்களை என் வீணை இசையால் மகிழ்விக்கக் காத்திருக்கிறேன். அனைவரும் தவறாது வரவும். அன்புடன் இசைவாணி’
அந்த அறிவிப்பு கூறியது இது தான்.
வாசிக்க வாசிக்க முகம் மாறியது பிரதாபனுக்கு. அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தாள் இசைவாணி. அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்து ரசித்தாள்.
‘என்ன இது? இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்துருக்கா? நான் தான் அவ்வளவு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டு வந்தேனே.. இனிமே கச்சேரிக்கே வரமாட்டான்னு! அப்புறம் எப்படி?’
அவனால் மனதில் தான் நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர வாய் விட்டுக் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இவனுடைய தண்டவாளம் வண்டவாளம் ஏறி விடுமே!
ஆனாலும் எதுவுமே கேட்காமல் இருக்க முடியவில்லை அவனால். வேறு பக்கம் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் மனைவியையே பார்த்தான். அவளோ, இவன் புறம் திரும்பக் கூடவில்லை.
“ஆமாஆஆ.. இதில அடுத்த வாரம் உனக்கு கச்சேரின்னு போட்ருக்கு?”
அப்போது தான் அவன் குரலைக் கேட்டு அவனைப் பார்ப்பது போல் பார்த்தாள் இசைவாணி.
“ஆமா.. கச்சேரி தான்! என்ன அதுக்கு?”
“அதுக்கென்னவா? எதுக்கு உனக்கு அதெல்லாம்? குழந்தை இருக்கிறப்ப கச்சேரி தேவையா? தேஜூவை யாரு பார்த்துப்பா? குழந்தை அழ மாட்டா?”
“ஒன்னும் அழ எல்லாம் மாட்டா! அது தான் பார்த்துக்க எங்க அம்மா, உங்க அம்மா இருக்காங்களே! அப்புறம் என்ன? அதெல்லாம் சமர்த்தா இருந்துப்பா தேஜூ! உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம்!”
“இவ்வளவு நாள் விட்டது அப்படியே விட வேண்டியது தானே இசை! குழந்தைய மட்டும் கவனிச்சுட்டு வீட்டில இருக்க வேண்டியது தானே இனிமே”
“என்னது.. இவ்வளவு நாள் விட்டதா? நான் எதுவும் விடலை. ஒரு பிரேக் மட்டும் தான் எடுத்தேன். புரிஞ்சதா? நான் வீணை வாசிக்கிறதில உங்களுக்கு என்ன பிரச்சினை ஆகுது? இனிமே இது பத்தி எந்தப் பேச்சும் வேண்டாம். நான் பழைய மாதிரி கச்சேரி செய்ய ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு தான்!”
அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள். பிரதாபனால் எதுவும் பதில் பேச முடியாது மனதினுள் வெகுண்டான்.
முன்பு போலவே அதே அஸ்திரத்தைக் கையில் எடுத்தான். அவள் கச்சேரி முடிந்து வந்ததும், பேச்சால் அவளை இம்சித்தான். இரண்டு கச்சேரி முடிவதற்குள்ளாகவே, குழந்தையை வைத்துக் கொண்டு அவன் பேசும் பேச்சுகளைக் கேட்டுக் கொஞ்சம் கலங்கித் தான் போனாள் இசைவாணி.
அன்று ஒரு நாள் மாலை நேரம். திடீரென சபாவில் இருந்து நிர்வாகத்தினர் இசைவாணியைப் பார்த்துப் பேச வேண்டும் என்று வந்தனர். வீட்டில் இசவாணியும் மனோகரியும் மட்டுமே இருந்தனர். குழந்தை தூங்கி இருந்தாள்.
“சொல்லுங்க சார், என்ன விஷயம்? திடீர்னு வந்துருக்கீங்க!”
“ஆமாம்மா.. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!”
“சொல்லுங்க”
“நம்ம சபாவில இனிமே மாசத்துக்கு ரெண்டு புரோகிராம் உங்களோடது வைக்கிறதா இருக்கோம்மா. ஏன்னா, இருக்கிறதில உங்களோட வாசிப்புக்குத் தான் வரவேற்பு அதிகம் இருக்கு. உங்களுக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். மாசத்துக்கு ரெண்டு புரோகிராம் விடாம தொடர்ந்து வச்சா நம்ம சபா இன்னும் நல்லா டெவலப் ஆயிடும்மா. அதுக்குத் தான் இந்த ஏற்பாடு! நீங்க என்னம்மா சொல்றீங்க?”
இசைவாணிக்கு இதைக் கேட்டு சந்தோஷமாக இருந்தாலும் பிரதாபனை நினைத்து பயமாகவும் இருந்தது.
ஏற்கனவே ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும் அவன் செய்யும் பிரச்சினை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில் மாதம் தவறாமல் இரண்டு கச்சேரி என்றால், பொறாமையில் வயிறே வெடித்து விடுமே அவனுக்கு! அவை எப்படி பிரதிபலிக்குமோ தெரியாது!
யோசனை செய்தவளை மனோகரி தான் உற்சாகப் படுத்தினார்.
“என்ன இசை யோசிக்கிறே? எவ்வளவு நல்ல வாய்ப்பு இது! அதை பயன்படுத்திக்க வேண்டாமா நீ? ஆகட்டும்னு சொல்லும்மா”
“இல்ல அத்த.. இவரை நினைச்சு தான்..”
“அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ சரின்னு சொல்லு”
அவர் கொடுத்த தைரியத்தில் அவர்களிடம் ஒத்துக் கொண்டாள் மாதம் இரண்டு கச்சேரிக்கு.
வந்தவர்கள் சந்தோஷமாகப் புறப்பட்டுச் சென்றனர்.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கோபத்தில் குதித்தான் பிரதாபன்.
“அதெப்படி நீ ஒத்துக்கலாம்? மாசத்துல ரெண்டு கச்சேரி எல்லாம் சரிப்பட்டு வராது! உன் இஷ்டத்துக்கு ஆட்றே நீ! பொம்பளையா லட்சணமா இருக்க முடியாது உனக்கு? உன் அழகைக் காட்டி அந்தச் சபாக்காரங்க சம்பாதிக்கத் திட்டம் போட்றாங்களா? அவங்க சொன்னா உனக்கு புத்தி வேணாம்? வெக்கமா இல்ல உனக்கு? உன் வீணை வாசிப்புக்காகத் தான் கூட்டம் சேருதுன்னு நீ இன்னுமா நம்பிட்ருக்கே? இப்ப குழந்தையும் பெத்து இன்னும் மெருகேறி இருக்கியா, அதுதான் நல்ல உன்னை வச்சு ஆளுகளைச் சேர்க்க திட்டம் போட்றாங்க!”
“அய்யோ! போதும் நிறுத்துங்க”
எழுந்து வெளியே சென்று விட்டான் பிரதாபன். இசைவாணியால் அழாமல் இருக்க முடியவில்லை. தன் கணவனின் பேச்சை நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அவளுக்கு. திடீரென அவள் மனதில் குழந்தை தேஜூ வந்து நின்றாள்.
‘தேஜூ இப்ப சின்னக் குழந்தையா இருக்கலாம். ஆனா அவ வளர வளர, இவர் பேசுற பேச்செல்லாம் அவளும் கேட்டு வளர்றது குழந்தைக்கு நல்லதா? விவரமே அறியாத அந்த வயசுல, என்ன எதுக்குன்னு தெரியாம அவளுக்கு ஒரு வெறுப்பு வந்துடாது எல்லார் மேலேயும்? ஒரு வேளை இந்த சங்கீத கலை மேலேயே வெறுப்பு வந்துட்டா? அப்புறம் நான் என்ன பண்ணுவேன்? இல்லேன்னா ஒருவேளை அப்பா திட்ற மாதிரி என் அம்மா நடந்துக்குறான்னு சொல்லி என்னையே அவ வெறுத்துட்டா?’
இசைவாணியின் கண்களில் இருந்து பொலபொலவெனக் கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிந்தோடியது.
உண்மையில் இப்படி எதுவும் நடக்குமா என்று உறுதியாகத் தெரியாது! ஆனாலும் அவளுடைய பாழாய்ப் போன மனம் கண்டதையும் எண்ணிக் கலங்கியது.
தன் மகள் தன்னையோ அல்லது தன் உயிராக இருக்கும் இந்தச் வீணைக் கலையையோ மட்டும் வெறுத்து விட்டாள் என்றால் அதை மட்டும் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று தோன்றியது அவளுக்கு.
அப்படி என்றால் இதற்கு வேறு என்ன தான் வழி? பிரதாபனும் தான் பேசுவதை நிறுத்தும் ஆளாகத் தெரியவில்லை. எப்படியாவது அவள் தானாகவே வெறுத்துப் போய் வீணை வாசிப்பதையே நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டல்லவா இவற்றை எல்லாம் செய்கிறான் அவன்?
சபாவுக்கு ஃபோன் செய்து, மாதத்தில் இரண்டு கச்சேரி முடியாது என்றும் ஒன்று மட்டும் போதும் என்றும் கூறி விட்டாள்.
வேறு அவள் என்ன தான் செய்வாள் பாவம்?
இசைவாணியின் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. தேஜூவை நினைத்து மனதில் கவலையும் பயமும் கொண்டாள்.
இப்படியாகவே நாட்கள் கடந்தன. தேஜூவுக்கு இப்போது பத்து மாதங்கள் ஆகி விட்டது.
அந்த சமயத்தில் தான் அந்த ஒரு சம்பவம் நடந்தது. அவள் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட அந்த சம்பவம்!
இசைக்கும்..