Anitha Kumar
Well-known member
- Joined
- Oct 2, 2024
- Messages
- 277
- Reaction score
- 353
- Points
- 63
அத்தியாயம்: 27
நீ இன்றி நான் இல்லை...
என்றுணர்ந்த பின்,
கோபம் கனலாய்ச் சுடுவதும் சுகம் தான்...
ஆனால்...
நீயே நானாக ஆனபின்
கண்ணீர் துளியில்
கோபக்கனலைக் கரைப்பது விந்தை....
அந்த விந்தை வீராவிற்கு என்றுமே நிகழும். அதிலும் தன் மனம் கவர்ந்தவளின் கண்ணீரும் கெஞ்சலும் அவனை இளக்கப் போதுமானது. அவன் கொண்ட காதல் அவளை அப்படியே, அதாவது அவள் செய்யும் மடத்தனத்துடன் ஏற்றுக்கொண்டது.
ஒரு குழந்தைக்குப் புகட்டுவதுபோல் ஊட்டி முடித்தான்.
வாயோரம் ஒட்டி நின்ற சாப்பாட்டுத் துணுக்கை விரலால் அழுத்தித் துடைத்தான். இதழின் மென்மை, ஒட்டு மொத்த கோபத்தையும் சிறகாய் மாற்றிப் பறக்க விட்டிருந்தது. குனிந்து மெல்லிதாக அதை ஒற்றி எடுத்தான்.
அதில் காதல் காமம் என்று எந்த உணர்வும் இல்லை. அவனின் மரப்பாச்சி பொம்மை அவனுக்குத் தருவாளே! அதுபோல் இருந்தது. அதில் சோர்வுற்றவள்,
"கோபம் போய்டுச்சா?" என்றாள் ஏக்கமாக.
"இல்ல..." என்றதும் கழுத்தை இன்னும் இறுக்கி, நெஞ்சில் புதைந்தவள்,
”சாரி அத்தான். அந்த சித்ரா பேசுனத கேட்டு நான் உங்கள தப்ப நினைச்சிட்டேன்…” என்று நெஞ்சில் இதழ் பதித்தாள், அந்தக் கோபத்தைக் குறைக்கும் பொருட்டு.
“நீ தப்பா நினைக்கிறது என்ன புதுசா? அதுவும் என்னைப் பத்தி நல்லவிதமா நினைக்க உனக்குத் தான் தோனவே தோனாதே.” என்று விரக்தியோடு கூற,
“இல்ல அத்தான்… நான்… எனக்குப் பயம் வந்திடுச்சி.”
“எங்கிட்ட இருந்து பயந்து ஓடுறத இன்னைக்கி நேத்தா பாக்குறேன்…” என்று கசந்த குரலில் சொல்ல, எம்பி அவனின் உதட்டில் முத்தமிட்டவள், அவனின் பனியனை இழுத்துப்பிடித்து,
“அப்படி ஓடுனா விரட்டி பிடிச்சி தூக்கிட்டு வரத் தெரியாத உங்களுக்கு? இதுக்கு முன்னாடி செய்யல... என்னை அடிச்சி அடச்சி வைச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டவருக்குச் சொல்லித் தரணுமா என்ன!” என்றாள் கெஞ்சலைத் துறந்து அதிகாரமாக.
வீராவின் கண்களில் ரசனை கூடியது. அவளின் கெஞ்சலை விட மிரட்டல் வேறு விதமாக அல்லவா அவனைக் கவரும்!
இதழோரங்கள் அழகாய் விரிய, “ஓ… எனியப் பாத்து பயந்து ஓடுற ஆட்டப் பிடிச்சிக்கொண்டு வந்து பிரியாணி போடணுமாக்கும்.”
“ம்… போட்டா என்ன தப்பு… நான் எவ்ளோ தேடினேன் தெரியுமா உங்கள! ஏன் வரல? நானா திரும்பி வந்திடுவேங்கிற மிதப்பா!!! இல்ல தொல்லை ஒழிஞ்சதுங்கிற சந்தோஷமா!!!” என்க, சின்னப் புன்னகை அவனிடம்.
அதில் மயங்கிப் போனவள், "இனி நானே போனாலும் என்னை நீங்க விடக் கூடாது. இதுக்கு முன்னாடி பண்ணா மாதிரி அடிச்சிட்டு, மருந்து மாத்திரலாம் வாங்கி குடுத்துனாலும் கூடவே வச்சிக்க அத்தான். சரியா…" என்று சொன்னபடியே கன்னம், நெற்றி, மூக்கு என்று படபடவென்று குட்டி குட்டி முத்தங்கள் வைத்தாள்.
அப்பொழுது கூட விட்டுச் செல்லமாட்டேன் என்று உத்திரவாதம் தராதவளை என்ன செய்யவது?
“சாரி அத்தான்…” என்று பிணாத்தியவாறே முத்தமிட, அது அவனைக் கூசச் செய்திருக்க வேண்டும். அவளின் முகத்தைப் பிடித்து நிறுத்தியவன்,
“என்ன டி பண்ற?”
“நீங்க கோபமா இருக்கீங்க அத்தான்… நான் சமாதானம் செய்றேன்.” என்றாள் பாவமாக.
அவனின் கரத்தை எடுத்து தன் இடையில் வைத்தாள். இதுவரை அணைக்காது இருந்த கை இப்பொழுது பட்டுடல் தீண்டியதும், லேசாக அணைத்து அதன் அளவெடுத்தது.
“மெலிஞ்சிட்ட டி.” என்றான் நெற்றி முட்டி பரிவாக.
“எல்லாம் உங்கள பாக்காம, உங்க கூட பேசாம இருந்ததாலத்தான். இதுக்கு பேரு பசலை நோய் அத்தான்.” என்றவளின் மூக்குத்தியில் இதழ்பதித்தான்.
“உங்களுக்கு ஒரு காதலி இருந்தாங்கிறத என்னால ஏத்துக்கவே முடியல அத்தான். எனக்கு மட்டும் தான் நீங்க. உங்க மனசுல என்னைத் தவிர வேற யாருக்கும் இடம் இருக்க கூடாதுங்கிற நினைப்பு என்னைப் பைத்தியமாக்கிடுச்சி.” என்றாள் கொஞ்சலோடு.
“அதென்ன ‘இருந்தாங்கிற’ இப்பவும் இருக்கா… எப்பவும் இருப்பா… உன் உசுரா…” என்றான் கழுத்தடியின் வாசம் பிடித்தபடி.
“கோபம் போய்டுச்சியா…” என்றாள் கனிந்துவிட்ட குரலில்.
“ம்... நீ தான் சமாதானப் படுத்திட்டியே…” என்க, தோளில் புதைந்து கிடந்த அவனின் முகம் உயர்த்தி, தன் விழிகளோடு கலக்கவிட்டு,
“அப்ப சொல்லுங்க. நான் ஆர்வமா இருக்கேன் கேட்க.”
“என்ன சொல்லணும்.?”
“என்னோட காதல, நான் உங்க கண்ணப் பாத்து சொன்னேன்ல. அது மாதிரி நீங்க சொல்லுங்க. உங்க காதல…”
“அதச் சொல்லித்தான் தெரியணுமா டி உனக்கு? நீ உணரவே இல்லையா!”
“அதெல்லாம் உணர்ந்ததுனாலத்தான் இப்படி கிடக்கிறேன். சந்தோஷமா… இல்லாட்டி கடனேன்னு ஒரு வாழ்க்கை தான் அமைஞ்சிருக்கும்.” என்றவள்,
“ம்ச்… நீங்க என்னை லவ் பண்றீங்க தான…” என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்க, முறைத்தான்.
“அந்தச் சித்ரா சொன்னா… வெற்றி அத்தான் சொன்னாரு… எனக்காக நீங்க என்னென்ன செஞ்சிங்க... உங்க மனசுல நான் எங்க இருக்கேன்னு. ஆனா நீங்க சொல்ல மாட்டேங்கிறிங்க. ஏன்?”
“எதுக்கு சொல்லணும்?”
“எதுக்குன்னா! எல்லாரும் தெரிய வேண்டாமா?”
“என் மனச போஸ்டர் அடிச்சி ஒட்ட நான் தயாரா இல்லை."
“போஸ்டர் அடுத்தவங்களுக்கு அத்தான். எனக்கு மெயின் பிக்சர் வேணும். சொல்லுங்க. எங்கிட்ட மட்டும் சொல்லுங்க. நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்." என்று கொஞ்ச, அவன் மாட்டேன் என்று தலையசைத்தான்.
"ப்ளீஸ் ப்ளீஸ்... நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியும் சொல்லல… இப்பவும் சொல்ல மாட்டேங்கிறிங்க... உங்க காதலச் சொல்ல எப்பத்தான் தைரியம் வரும் உங்களுக்கு? நாலு பிள்ள பெத்ததுக்கு அப்றமாது வருமா?” என்று நக்கலாக சொல்ல, அணைப்பு இறுக்கியது. அவனின் காதலின் அளவைச் சொல்வது போல்.
மலரோடு மலரை இணைக்கும் அந்த மேகாரிக் காட்டில், மன்னவனைத் தன் அணைவில் மயக்கிய பூந்தாரகை, மாரனின் மாய உலகத்திற்குள் செல்ல, விடியா இரவாக... கலையா கனவாக இருவரும் சயோகித்துக் கிடந்தனர்.
எத்தனை களைப்பு வந்தாலும் தன் கேள்வியை மட்டும் அவள் நிறுத்தவே இல்லை. 'ஏன் என்னிடம் உன் காதலைச் சொல்ல மாட்டேன் என்கிறாய்?' என்பதிலேயே வந்து நின்றாள்.
"சொல்லிருந்தா மட்டும் உடனே வந்து கட்டிப்பிடிச்சி கொஞ்சிருப்பியாக்கும்."
"இல்ல தான். ஆனாலும் நீங்க சொல்லிருக்கணும்ல. ஒருக்க கூட சொல்லணும்னு தோனவே இல்லயா."
"இருந்தது..."
"எப்ப?"
"காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற வரை. அது தான் உம்பின்னாடி நான் வந்த கடைசி நாள்." என்றான்.
"எப்ப??" என்று தாடையைத் தட்டியவளுக்கு அந்த நாள் நினைவு வந்தது.
கல்லூரிக்குச் செல்லத் தொடங்கி, ஒரு மாதம் சென்றிருக்கும். அப்பொழுது வகுப்பிற்கு, கை, கால்களில் கட்டுப் போடப்பட்ட நிலையில், இரு சிறுவர்கள் உண்டியலுடன் நுழைந்தனர். தாய், தந்தை அற்ற எங்களுக்கு உதவுங்கள் என்று யாசித்தனர். பல மாணவிகள் காசை உண்டியலுக்குள் போட்டிருக்க, மனோவின் வகுப்பு பேராசிரியர் மட்டும்,
"உங்களை யாரு காலேஜுக்குள்ள விட்டா?" என்று கேள்வி கேட்டார்.
"ஹா... அது... பெரிய டிச்சர் விட்டாங்க." என்று அந்தச் சிறுவர்களும் சொல்ல, சந்தேகமடைந்த பேராசிரியர்,
"இவங்கள HOD-ட கூட்டுட்டு போ." என்று பணித்தார் மனோவை. அவளும் துறைத் தலைவர் அறைக்குச் செல்ல, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி, பிரின்சிபாலிடம் கூட்டிச் செல்லக் கூறினர். அவள் அலுவலக கட்டடத்தை அடையும் சமயம் சரியாக அங்கு வந்த வீரா, இரு சிறார்களையும் போட்டு அடிக்கத் தொடங்கி விட்டான்.
காலில் கட்டுப்போட்டிருந்த சிறுவன் கத்திய கத்தில் மனோவின் ஈரக்குலையே நடுங்கியது. அடித்து இழுத்துச் சென்றவனை, "நீ எல்லாம் மனுசனா?' என்ற ரீதியில் வெறுப்போடு பார்த்தவளின் பார்வை வீராவைச் சுட்டது.
அவள் பயந்து பார்த்திருக்கிறான். ஆனால் வெறுத்து, அற்ப பதரைப் பார்ப்பது போன்ற பார்வை அன்று தான் கிடைத்தது.
காதலைச் சொல்ல தயக்கமோ கூச்சமோ இல்லை... ஜோராக கல்லூரிக்கு, கலர் கலர் சுடிதாரில் வருபவளைப் பார்த்து ரசித்தவனாள், நிகழ்ந்த களேபரத்தில் அவளின் அருவருப்பான பார்வையை ஏற்க முடியவில்லை. மீண்டும் அந்தப் பார்வையைச் சந்திக்கப் பிரியம் இல்லாது சொல்ல வந்தது மறந்தே விட்டான்.
"அந்தப் பசங்க பாவம்ல... ஏற்கனவே தலைலயும் கால்லயும் அடி பட்டிருந்தது. நீங்க அடிச்ச அடில எப்படி துடிச்சான் தெரியுமா..." என்றாள் குற்றச்சாட்டாக.
"அவனுங்களா!!" என்று நக்கலாக சிரிக்க,
"அடிக்கிற உங்களுக்கு எப்படி புரியும். அதெல்லாம் என்னை மாதிரி அடி வாங்குறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அவமானம், இயலாமை, ஆற்றாமைன்னு வெளில காட்டிக்க முடியாத கோபம் வரும். அதை அடக்கி வைக்கும் போது தலை வலிக்கும், உடம்பு நடுங்கும், இதயம் வேகமா துடிக்கும். ஒரு வித மன அழுத்தம் வரும்." என்றவள்,
"ஆமாம்... எதுக்கு அந்தப் பசங்கள அடிச்சீங்க?" என்று முதலில் கேட்க வேண்டியதைக் கடைசியாகக் கேட்டாள்.
"அந்தப் பயலுக ரெண்டு பேரும் அநாதைங்க கிடையாது. அவனுங்களுக்கு அடி எதுவும் படல. எல்லாமே செட்டப். மாவு கட்டுப் போட்டு விட்டு ஸ்கூல், காலேஜ், கோயில் திருவிழா மாதிரியான இடத்துல பிச்சை எடுக்கவிட்டு சம்பாதிச்சிட்டு வரச் சொல்லி அனுப்புனதே அவனுங்கல பெத்தவைங்க தான். நானும் நாலஞ்சி தடவ பிடிச்சி கண்டிச்சேன். அவனுங்க அம்மா-அப்பாட்டையும் படிக்க வைங்கன்னு காசுலாம் குடுத்திட்டு வந்தேன். எங்கிட்ட வாங்கிட்டு மறுபடியும் அதே தொழிலில் இறங்கி விட்டிருக்காய்ங்க. அதான் பிடிச்சி நாலு போடு போட்டேன். போலிஸ்ல பிடிச்சுக் குடுப்பேன்னு பயம் காட்டுனேன்.
அந்த வயசுல சமூகத்தப் பாத்து பயப்படலன்னா பின்னாடி பயமே இல்லாம போய்டும். அப்றம் துணிஞ்சி என்ன வேணும்னாலும் செய்வாய்ங்க. அதான்.... இப்ப அவனுங்க ரெண்டு பேரும் படிச்சிட்டு இருக்காணுங்கா. நல்லா படிக்கிறதா சொன்னான்." என்க, கணவனின் பேச்சில் உள்ள பொருள் உணர்ந்து வேகமாக கட்டிக்கொண்டாள்.
முரடணாய் இருந்தாலும், தன்னவன் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பதை நினைத்து உள்ளுக்குள் சிறு பூரிப்பு. அவன் செய்யும் சண்டித்தனம் கூட அழகு என்றது அவள் மனம்.
இரவெல்லாம் ஓடி, பொழுது புலர்ந்தது...
மாட்டேன் என்றவளைப் பிடித்திழுத்து தான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது வீராவிற்கு.
"ப்ளீஸ் அத்தான்... அத்தைய கூட நான் சமாளிச்சுப்பேன். ஆனா உங்க அப்பத்தா... முடியவே முடியாது. அந்தக் கிழவி கடும் கோபத்துல இருக்குறதா வெற்றி அத்தான் சொன்னாரு. என்னால அடிலாம் வாங்க முடியாது அத்தான். ஏற்கனவே வரிக்குதிரையா மாறுன அனுபவம் இருக்கு. நான் வரல…" என்று கெஞ்சியவளை மூட்டை போல் தூக்கித்தான் சென்றான்.
காசிப்பாட்டி, தெரு முக்கிற்கே கேட்கும் அளவிற்கு வசைபாடி வரவேற்றார்.
"எடுபட்ட சிறுக்கி... எம்புட்டு அதுப்பு இருந்தா... ரெண்டு வாரமா போய் ஆத்தா வீட்டுல உக்காந்திருப்ப... புருஷன பாக்கணுமே... சோறு பொங்கிப் போட்டு கவனிக்கணுமே.... குடும்பம் நடத்தணுமேங்கிற நினைப்பு இருக்கா அந்தக் கழுத்தைக்கு. இந்தச் சிறுக்கியால எம்பேரன் வீடு தங்கல. ஆளும் மெலிஞ்சி உருத்தெரியாம போய்ட்டான். வரட்டும்... இவள வெட்டி விட்டுடு, எம்பேரனுக்கு ஏத்த நல்ல பொண்ணாப் பாத்து கட்டி வைக்கிறது தான் என் மறுவேளையே... இனி அவ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க விடமாட்டேன்..." என்று கத்திக்கொண்டிருக்க,
"வாம்மா... ஏன் அங்கயே நிக்கிற... உள்ள வா..." என்று வீராவின் பின்னால் மறைந்து நின்றவளை சண்முகத்தாத்தா அழைக்க, மனோ பாட்டியைப் பார்த்தாள்.
“அவ கிடக்குறா… நீங்க உள்ள கூட்டீட்டு போப்பா.” என்றதும், கூந்தலை அள்ளி முடிந்தவர், தன் பேரனைத் தவிக்கவிட்டுச் சென்றவளின் மீது பாய்ந்தார்.
"ஏன் அப்பாத்தா இந்த வயசுலயும் இந்தக் குதி குதிக்கிற? கொஞ்சம் பொறுமையாத்தேன் இருரேன்.” என்று வீரா அடக்கப் பார்க்க, கையில் தடியுடன் வழி மறித்து நின்றார்.
“சரி விடு உன் கோபம் நியாயம் தான்… அதுக்காக வாசல்ல வச்சி வேண்டாம். உள்ள கூட்டிட்டு போய் கூட கும்மு. எங்க போய்ட போறா…” என்று அசால்ட்டாகச் சொல்ல,
‘எது!! கும்மவா!!’ என்று அவள் அதிர்ந்து பார்க்க, வீரா, ‘வாங்கு டி.’ என்று கண் சிமிட்டினான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள், "ஏய் கிழவி... இப்ப நீ வழிய விடல... நாம்பாட்டுக்கு எங்கப்பா வீட்டுக்குக் கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன். இங்க வரவே மாட்டேன். அப்றம் நீ உன் கொள்ளுப் பேரன பாக்க என்னைத் தேடித்தான் வரணும். சொல்லிட்டேன்." என்று விட்டு திரும்ப, அவளின் கரம்பற்றி நிறுத்தினான் வீரா.
"என்ன சொன்ன கொள்ளுப் பேரனா??"
"ம்... நான் மாசமா இருக்கேன்." என்று வெட்கத்தோடு சொல்ல, காசிப்பாட்டிக்கு ஏகப்பட்ட குஷி...
"ஆத்தா மாரியாத்தா... என் குலம் தழைக்கப் போது... சிவாமி... ஏய் சிவாமி... உம்புருஷன்ட்ட சொல்லி நம்ம கோயில்ல அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணு. இன்னைல இருந்து ஒரு வாரத்துக்கு நம்ம வீட்டு சோறு தான் ஊருக்கே. அப்படியே கிடா வெட்டி பொங்க வைக்கணும் அதுக்கு சேந்து ஏற்பாடு பண்ணு..." என்றவர், மனோவை நெட்டி முறித்து எடுத்தார்.
"ரெண்டு பேரும் கொஞ்சம் சேந்து நில்லுங்க... இதோ வர்றேன்..." என்ற சிவகாமியும் குழந்தை போல் ஓடிச் சென்று ஆலம் கரைத்து வந்து எடுக்க,
"எப்ப கன்பார்ம் பண்ண?” என்று கடுகடுத்தான் மனைவியின் காதுக்குள். அவனின் அனல் காற்றின் உஷ்ணத்தை அறியாதவள்,
"நேத்து காலைல அத்தான்." என்று சந்தோஷமாக ஆரம்பிக்க, கரம் நசுக்கப்பட்டது.
“ஸ்…ஆ… அத்தான் வலிக்குது.” என்று நெளிய,
"நேத்து முழுக்க எங்கூட தான டி இருந்த.... ஏன் அதச் சொல்லல?"
'ஆமால... சொல்லிருக்கணும்ல...' என்ற ஞானோதயம் தாமதமாக பிறக்க, அதற்குள் கரம் புத்தூர் கட்டுப் போடும் அளவிற்கு சென்றிருந்தது.
வெற்றி சின்னச் சிரிப்புடன் வரவேற்க, பாட்டி தன் தோஸ்த்துங்களுக்குத் தகவல் சொல்லி விட்டார். சண்முகம் தாத்தா தன் நண்பனின் குடும்பத்திற்கு ஃபோனில் தகவல் சொல்ல, சிவகாமி சமையலறையில் மருமகளுக்குப் பிடித்த பாயாசத்தைச் செய்யத் தொடங்கினார்.
சோலையப்பனும் செவ்லநாயகியும் மாலை பொழுதில் வந்திருந்தனர். அதிலும் சோலையப்பன் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அவர் மேல் போடப்பட்டது போலி புகார் என்று நிருபித்துவிட்டார் மருமகனின் உதவியுடன்.
பெருமாளிடம் வேண்டிக் கொண்டது போல், மகள் அறியா வண்ணம் அவளைப் பாதுகாப்பாய் சேர்க்க வேண்டிய இடத்திலும் சேந்து விட்டார். சந்தோஷமாக அவள் வாழவும் செய்கிறாள் என்பதில் பெற்ற மனம் குளிர்ந்து போனது.
க்ரீனிஸ் கிழவிங்கள் அத்தனை பேரும் வந்து வாழ்த்தி விட்டு, தாங்கள் பிள்ளைப் பெற்றக் கதையைச் சொல்லிவிட்டுச் சென்றனர். புஷ்பாவும் அலைபேசியில் வாழ்த்துக்கள் சொல்ல, செண்பகம் குடும்பத்தை தவிர்த்து மற்ற அத்தைகள் வந்து சேர்ந்தனர்.
வீடு மினி திருவிழா கண்டது.
மனோ எப்பொழுது மாடியேறுவோம் என்று ஆவலோடு காத்திருக்க, அவள் கணவனோ ஆத்திரத்தோடு காத்திருந்தான்.
அவனின் முன்னால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.
இதுவே வாடிக்கையாகிப் போனது.
அவனைக் கோபப்படுத்தி சமாதானம் செய்யும் விளையாட்டு அவளுக்கு இயல்பாகவே வந்தது. அவனிடம் வாங்கும் திட்டையும், கொட்டுக்களையும் விரும்பியும் விரும்பாமலும் வாங்கிக் கொண்டு அவனோடு இசைந்தாள்.
வீராவின் கோபம் ஒருபக்கம், மனோவின் மைண்ட் வாய்ஸ் ஒரு பக்கம் என்று ஆவாரம் தோப்பில் கயிற்றுக் கட்டிலில் அவ்வப்போது சமாதானம் அரங்கேறியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
"கொஞ்சம் சீக்கிரம் கிளம்புன்னு சொன்னா எங்க கேக்குற நீ? கடைசி நேரத்துல அவதி அவதின்னு போயே பழக்கமாகிடுச்சி… மடச்சி..." என்று வீரா திட்ட,
"அத்தான் திட்டாம வாங்க. என்னால ஃபோக்கஸ் பண்ண முடியல." என்று புத்தகத்திற்குள் தலையை விட்டிருந்தவள், மடியில் கிடந்த, ஒன்றரை வயது உறங்கும் குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.
ஆதுரன்…
கண் முழித்திருந்திருந்தால் காரையே இரண்டாக்கியிருப்பான். அராத்து… அழுவதில் அன்னையை மிஞ்சி விடுவான். கோபத்தில் வீராவைப் போல்.
நல்லவேளையாக உறங்குகிறான்.
"ஹால்டிக்கெட் எடுத்திட்டியா?"
"ம்..."
"புக்?"
"ம்..."
"சிப்பர் பாட்டிலு..." என்க, முறைத்தாள் கணவனை. அவளின் தலையில் நங்கென்று வலிக்காது கொட்டியவன்,
"நான் பையனுக்குக் கேட்டேன்."
"பைல வச்சிருக்கேன். அவனுக்குக் கண்டத வாங்கித் தரவேண்டாம். கைகாட்டி அழுது அடம் பண்ணாலும் வாங்கிக் குடுக்கக் கூடாது. இப்பத்தான் பால்குடி நிப்பாட்டிருக்கோம்... அதுனால கவனமா பாத்துக்கங்க... வாழைப்பழம் இந்த டப்பால இருக்கு. பாத்ரூம் போகணும்னா..."
"நல்ல மரமா பாத்து கூட்டீட்டு போறேன்." என்க, அவனின் தோளில் இரண்டு அடி போட்டாள்.
"நைட்டெல்லாம் ஒரே அழுகையாம்… எனக்கு காய்ச்சலே வந்திடுச்சி. பால் குடி மறக்க வைக்கிறது எனக்கு மட்டுமில்ல அவனுக்குக் கஷ்டமா இருக்கு. படிக்கவே முடியல. எல்லாம் இவனால தான்." என்றாள் மகனின் தலை கோதியபடி.
அவளின் முலங்கையில் நறுக்கென்று கிள்ளியவன், “நேத்து முழுக்க கம்மாய்ல வந்து உக்காந்திட்டு. படிக்க முடியலன்னு எம்மகெ மேல பழியப் படுற… உக்காந்து படிக்காம உன்னை யாரு டி வரச் சொன்னா?” என்று கடித்தான்.
பின்னே! காளைக்கு பயிற்சு கொடுக்கும் கண்மாயில், விசிலடித்து கணவனையும் காளையும் உற்சாகப்படுத்தி விட்டு, பரீட்சை… படிக்கவில்லை என்றால்…
"இப்பயவது படிக்கிறாயா? பிள்ளையத் தடவிக் குடுத்திட்டு உக்காந்திருக்க…”
"ஐயோ அத்தான்... நல்லவேளை நியாபகப்படுத்துனீங்க... இது தான் லாஸ்ட் பரீட்சை. நல்லா எழுதணும்." என்று கவிழ்ந்து கொள்ள,
"அந்த அக்கறை போன நேத்து நைட் தோப்புல ஆட்டம் போடும் போது இருந்திருக்கணும்."
"நான் மட்டுமா போட்டேன்."
"அடம்பிடிச்சி நீ தான டி என்னை வர வச்ச."
"ம்.... மறக்க முடியாது நைட்ல. ரொம்ப நாள் கழிச்சி அமைஞ்சது..." என்று அவனின் தோளில் சாய வர, தலையைப் பிடித்துத் தள்ளி விட்டவன்,
"அரைமணி நேரத்துல நீ எக்சாம் ஹால்ல இருக்கணும். அதை மனசுல வச்சிட்டு அத்தான டிஸ்டர்ப் பண்ணாம, வண்டி ஓட்ட விடு..." என்றவன்,
“பெயிலு கியிலு ஆகி மானத்த வாங்கிடாத…” என்று எச்சரிக்க, அவனின் இடையில் கிள்ளி வைத்தவள்,
"அதெல்லாம் ஆக மாட்டேன். நான் சும்மா தான இருந்தேன். கண்டதையும் பேசிட்டு... டிஸ்டர்ப் பண்ணாதீங்க." என்று முறைத்துவிட்டு, புத்தகத்தில் ஆழ்ந்தாள்.
அவளின் MBA கனவு முழுமையடையும் நாள் இன்று.
நித்யாவும் அவளின் கணவனுடன் வந்திருந்தாள். அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்து கிண்டல் அடித்துக் கொண்டே பரீட்சை எழுதும் அறைக்குச் சென்றனர்.
வீரா அங்கேயே இருந்து, உறங்கி எழுந்த மகனைக் கவனித்துக்கொண்டான்.
அடுத்த குழந்தைக்கு அடிப்போட்டு, தாய் பாலை நிறுத்தும் யோசனையில் உள்ளதால், இரு நாள்களாக இரவில் சிவகாமியிடம் ஒப்படைத்துள்ளனர் ஆதுவை.
ஆதலால் தாயைப் பகலில் அதிகம் தேடியது குழந்தை. இன்று பரீட்சை என்று வீட்டில் விட்டு விட்டு வெளியேற, கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். அதனால் தான் மகனையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்தான்.
ஒரு மணிக்கு மேல் மனோ வந்து விட, நித்யாவையும் உடன் அழைத்துக் கொண்டு வீராவின் ஜீப் நரசிங்கபட்டியை நோக்கிச் சென்றது. நித்யாவிற்கு அதே ஊரில் உள்ள ஆடவனுடன் திருமணம் நடந்தது.
தோழிகள் இருவரும், இல்லை புஷ்பாவுடன் சேர்ந்து மூவரும் இ-காமர்ஸ் பிசினஸ் ஆரம்பித்து, இதோ அது வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்திருந்தனர்.
GG Trade…
Golden Grocery…
அது வெளி உலகிற்கு…
க்ரீனிஸ் கிழவிங்கள் தான் உண்மையான பெயர்.
அந்தப் பெயரில் தான் ஆரம்பித்தாள் மனோரஞ்சிதம்.
“ரொம்ப லக்கியான பேருங்க. ஆரம்பிச்ச ஒரே வர்ஷத்துல நிறைய லாபம் பத்திட்டோம். அடுத்தடுத்த வர்ஷத்துல பெரிய லெவலுக்குப் போய்டும். எல்லாம் அந்தக் கிழவிங்க ராசி தான். இப்பக் கூட அந்தக் கிழவிங்க தான் புரணி பேசிக்கிட்டே எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்கிறாங்க. குட் கிழவிஸ்… பட் க்ரீன் கலர் பேச்ச மட்டும் விட மாட்டேங்கிறாங்க.”
அப்படி என்ன தொழில் செய்கிறாள் என்றால்,
தேன்...
அதைத்தான் வியாபாரம் செய்கிறாள் மனோ. கணவன் தனக்கெனக் கொடுத்த தோட்டத்தில் பலவித மலர்களை நட்டு, தேனீப் பண்ணை அமைத்து, அதை இணையம் வாயிலாகவும், சில பல டிப்பார்மெண்டல் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். சிறிய அளவில் என்றாலும் நல்ல லாபம் கிடைத்தது.
மனோரஞ்சிதம் வளரும் தொழில்முனைவோர் பட்டியலில் இருக்கிறாள். சில விருதுகள் கிடைத்தது.
அனைத்தையும் சாத்தியப்படுத்தியது தன் கணவன் என்ற நினைப்பு வரும் ஒவ்வொரு முறையும் முகம் அடி வானமாய் சிவக்கும் அவளுக்கு.
தன்னையும், தன் கனவையும், தான் அவ்வபோது செய்யும் மடத்தனத்தையும் பொறுத்துக்கொண்டு தன்னை முழுதாக ஏற்றுக் கொண்ட தன் இணைக்கு இணையாக யாரும் இல்லை என்ற நினைப்பு, கர்வச் சிகரத்தைத் தொட, சென்று தன் கணவனின் கரத்திற்குள் தானாக அடைந்து கொண்டாள்.
காதலுடன் தன் மனையாளின் இடையணைத்து உச்சி முகர்ந்தது அந்தக் காளை…
கோபத்தின் உச்சியிலும் குறையாத நேசம் கொண்டவன்,
அவன் சொல்லாது புரிய வைத்தக் காதல், சொர்க்கத்திற்கு இருவரையும் இழுத்துச் சென்றது…
அவர்களின் ஆலாபனை தொடரட்டும்…
நன்றி
சுபம்…