Anitha Kumar
Well-known member
- Joined
- Oct 2, 2024
- Messages
- 277
- Reaction score
- 353
- Points
- 63
அத்தியாயம்: 12
கொய்யாக்கா…
சிலருக்குக் கனிந்த பழம் பிடிக்கும்… சிலருக்கு அணில் கடித்தப் பழம் பிடிக்கும். சிலருக்குக் காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட சுவை பிடிக்கும். ஆனால் நம் மனோவிற்கு… காய் தான் பிடிக்கும். கடிக்கக் கூட முடியாத கருங்காயின் துவர்ப்பிலும், புளிப்பிலும், லேசான இனிப்பிலும் அலாதி பிரியம்.
கத்தியால் வெட்டாது, பற்களால் மெல்ல மெல்ல கொறித்து, கால்களை ஆட்டிக்கொண்டு உண்டுகொண்டிருந்தாள்.
என்ன! அதை ஆட்டுக் கொட்டகையில் வைத்து உண்பது தான் சற்று விசித்திரமாக இருந்தது. உண்பது மட்டுமல்ல ஆளே வித்தியாசமாகத்தான் இருந்தாள்.
நீல வண்ண ஷிபான் சேலை உடுத்தி, கைகள் நிறைய கல்யாண வளையல்கள் அணிந்து, கழுத்தில் தங்க நகை மின்ன, சகல அலங்காரத்துடன் ஆட்டு மந்தைக்குள் ஒருத்தி இப்படித் தின்பது மட்டுமல்ல பேசுவதும் விசித்திரமாகத் தான் இருக்கிறது.
"நான் வீட்ட விட்டு போய் பத்து நாள் தான் ஆகுது. அந்த கேப்ல ஆறு பேரா இருந்த நீங்க, எப்படிப் பத்தா மாறுனீங்க? நாலு பேர் எக்ஸ்ட்ராவா வந்திருக்குன்னா! என்ன அர்த்தம்… ம்…" என்று கழனித் தொட்டியின் திண்டில் அமர்ந்துகொண்டு, கோழிக் குஞ்சுகளிடம் விசாரணை செய்துகொண்டிருந்தாள். அதன் எண்ணிக்கை கூடி விட்டதாம்.
'பைத்தியம் பிடித்து விட்டதோ இவளுக்கு...'
"சொல்லுங்க என்ன அர்த்தம்?"
"அந்த அளவுக்கு அதுங்க தங்களோட இனவிருத்திக்காக தீயா வேல செஞ்சிருக்குங்கன்னு அர்த்தம். நீயும் அதுங்க மாதிரிப் பிள்ள குட்டிங்கப் பெக்குறதுல இறங்கி வேலை பாத்தா அதுங்களுக்கு டஃப் குடுக்கலாம்!” என்றபடி வந்தாள் நித்யா.
தோழியைக் கண்டதும் வேகமாக சென்று அணைத்துக்கொண்டவள், "உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் டி நித்தி." என்று உருக்கமாகவே சொல்ல,
"மிஸ் பண்றவதே மிஸஸ் ஆனதும் ஆள மறந்தியாக்கும். ஒரு ஃபோன் இல்ல மெசேஜ் இல்ல... இன்னைக்குக் கூட மறு வீட்டு விருந்துன்னு காலைலயே வந்திட்ட... ஆனா என்னைப் பாக்க வரல. வந்து ஒரு எட்டு என்னைப் பாக்குறதுல எங்கடி குத்துது உனக்கு." என்று உரிமையுடன் கடிந்தாள்.
"ஃபோனத் தொடக் கூட டைம் இல்லடி. பகல் பூராம் அத்தை பின்னாடி சுத்தியே பொழுது போய்டுது. ராத்திரி..."
"அத்தான கொஞ்சியே போய்டுது. சரியா..."
'ஆமா! அந்தச் சண்டியன கொஞ்சிட்டாலும்.' என்று உள்ளுக்குள் புழுங்கியவள்,
"நீ பாத்தியாக்கும்?"
"ம்... பாத்தேன் பாத்தேன்..." என்று நொடித்தவள்,
"நீயும் அண்ணனும் ஜீப்ல இருந்து இறக்கி வர்றச்ச... பொருத்தம் சூப்பரா இருந்தது டி. கண்ணுக்குள் கலர் கலர் கனவெல்லாம் வந்தது. உனக்கு எதுவும் வந்ததா?" என்று கேட்க, சின்னதாய் இதழ் விரித்தாள் மனோ.
"என்னடி தம்மாத்துண்டா சிரிக்கிற! பயங்காட்டிட்டாளுகளா அந்த த்ரீ தேவீஸ்ங்க." என்று தோழியிடம் விசாரணை செய்ய,
"இல்லடி. நான் அந்தத் தேவிங்கள பாக்கவே இல்லை."
"என்னடி சொல்ற! அத்தன பில்டப்போட வில்லிங்க ரேஜ்ஜுக்கு அறிமுகப்படுத்திட்டு... பிச்சுப் பாத்த அத்திப்பழம் அத்தனையும் சொத்தங்கிறது கணக்கா சொல்ற."
"நிஜம் டி... ஆளையே பாக்கல. கல்யாணத்தப்ப மண்டபத்துல பாத்தது. அத்தை வீட்டுக்குக் கூட அவளுக வரல. அப்றம் பொங்க வைக்க கோயிலுக்கு வந்தாளுக. அப்படியே போய்ட்டாளுக. வீட்டுக்கு வர்றதுக்குத் தடை போட்டிருக்காங்க போல. நான் அத்தைட்ட கேட்டேன்.
அதுக்கு அத்தை, 'விடும்மா... நல்லது நடக்குற இடத்துல அவள்களப் பத்தி ஏன் பேசிட்டு.'ன்னு போய்ட்டாங்க. வெற்றி அத்தான்ட்ட கேட்டேன். அவரு, 'ஏன்! நாங்க நிம்மதியா இருக்குறது உனக்கு பொறுக்கலயா.'ன்னுட்டு போய்ட்டாரு. தாத்தாவும் மாமாவும் கூட பேச மாட்டேங்கிறாங்க." என்றாள்.
அவள் சொன்னது உண்மை தான். ஆனால் மூன்று தேவிகளுக்கும் தடை போடவில்லை. மூத்த தேவி சித்ராவிற்கு மட்டும் தான் தடை. போட்டது வீரா தான். அவள் செய்த காரியத்திற்கு தண்டனையாக. மற்ற இரு தேவிகளும் சித்ராவிற்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லி சண்முகத் தாத்தா வீட்டிற்கு வருவதில்லை.
நம் மனோவிற்கு, அத்தை வீட்டிற்கு வருவதை நிறுத்திய இடைப்பட்ட காலத்தில் நடந்த எதுவும் காற்றாகக் கூட செவிகளைச் சென்றடையவில்லை.
"நம்ம புஷ்பாட்ட கேட்டிருக்கலாம்ல. அவ ஏங்கிற காரணத்தப் புட்டு புட்டு வச்சிருப்பா."
"வச்சிட்டாலும்... அவ புது பொண்ணுங்கிற பகுமானத்துல கால்ல சக்கரத்தக் கட்டிட்டுச் சுத்துறா. எந்நேரம் ஃபோன் பண்ணாலும், 'நாங்க விருந்துக்கு வந்திருக்கோம் மைனி.'ன்னு யார் பேரையாது சொல்லி, என்னென்ன தின்னோம்னு ஹோட்டல் மெனுக்கார்ட்ட ஒப்பிக்கிறா. திங்கிறதுக்குன்னே பிறந்தா மாதிரி சாப்பாட்ட பத்தி மட்டுமே பேசிட்டு, வைச்சிடுறா."
"அப்ப நேர்ல பாத்து விசாரிக்க வேண்டியது தான! இந்தப் பத்து நாளும் உங்கூட தான உன் நாத்தனாரு இருந்திருப்பா!"
"பத்து நாள் இல்ல... ஒரு வாரம் தான் இருந்தான். ஆனா வாய்ப்புதே கிடைக்கல. ரெண்டு நாள் முன்னாடித்தே விருந்து முடிச்சிட்டு போனா. இன்னேரம் பெங்களூருல செட்டில் ஆகிருப்பா... கிளம்பும் போது அவளே எங்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டா."
"எதுக்காம்?" என்றதும் மனோவிற்கு புஷ்பா பேசியது நினைவு வந்தது.
கட்டிளங்காளைகளுக்கு ஒரே தங்கை என்பதால் அவளும் சில பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ளாள். 'அழகான அண்ணன்களுக்கு தங்கச்சிய பிறந்தது என் தப்பா?' என்று புலம்பும்படி தொல்லைகள் வந்தது.
வீராவையும் வெற்றியும் கரெக்ட் செய்ய வேண்டியே புஷ்பாவுடன் நட்பாக பழகியவர்கள் பலர். இவளைக் கவனித்தால் அந்த வீட்டில் நுழைந்து விடலாம் என்று கற்பனைக் கோட்டையைக் கட்டி, புஷ்பாவிடம் தூது விட்டவர் பலர். ஏன் அந்தத் தேவிகள் கூட புஷ்பாவை விழுந்து விழுந்து கவனிப்பர்.
"பார்த்து வா புஷ்பா! கீழே கல்லு கிடக்கு." என்று வெட்ட வெயில் அடிக்கும் சாலைக்குக் கூட, சாலை எப்படி இருக்கிறது என்று அறிக்கை கொடுத்து, கைத்தாங்களாக அழைத்துச் செல்வர். எதற்கு? நாளைக்கு நாத்தனாராக வரப்போகிறாள் என்பதற்கு. நடிப்பு என்று பச்சையாகத் தெரிந்தது.
ஆனால், தன் அண்ணன்களின் பெயருக்குப் பின்னால் உரிமையில்லாத கண்டவர்களின் பெயரும் இணைந்து பேசப்படுவது புஷ்பாவிற்கு என்றுமே பிடித்ததில்லை. அவர்கள் கொடுக்கும் ராஜ உபச்சாரத்தை ஏற்கவும் பிடிக்கவில்லை. ஏற்காது போனால் துவேசம் தூற்றுவார்கள் என்றும் தெரியும்.
நம் மனோவும் முறைப் பெண் தானே. எங்கே அவளும் அந்த கேட்டகரிக்குள் இருப்பாளோ என்ற நினைப்பே மனோவிடம் அதிகம் பழகவிடாது செய்துவிட்டது.
"என்னை மன்னிச்சிடு ரஞ்சிதம்... ஸ்கூல் படிக்கிறப்பவும் காலேஜ் படிக்கிறப்பவும் உன்னைத் தெரிஞ்சா மாதிரிக் காட்டிக்கல. அதுக்குக் காரணம், நாம அத்த மக்க, மாம மக்கன்னு சொன்னா நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், உன்னையும் எங்கண்ணன்களையும் சேத்து வச்சு கேலி பேசுவாளுக. ஏற்கனவே நான் தான் உனக்கு அண்ணே பொண்டாட்டியா வருவேன்னு சொல்லிட்டு மூணு தேவிங்க சுத்திட்டு இருக்காளுக. அதுல நீயும் ஒருத்தியா போட்டில இருக்கியோன்னு லைட்டா பயம் எனக்கு. ஆனா உங்கூட பழகுன இத்தன நாள்ல எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது. உன்னை வீரா அண்ணனுக்குன்னு பேசி கல்யாணப் பத்திரிகை அடிச்சதுல யாருக்கு சந்தோஷமோ இல்லயோ. எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்று அணைத்துக் கொண்டவள், மறந்தும் தேவிகளைப் பற்றி பேச்செடுக்கவே இல்லை.
இதுவரை தோழிகள் என்று மட்டும் இருந்த உறவு, மதினி நாத்தனார் என்று விரிந்ததில் இருவருக்கும் சந்தோஷம். நன்கு அனுபவித்தனர்.
"ஆக... அம்புட்டு பேரும் உன்னோட இன்வெஸ்டிகேஷனுக்கு ஒத்துழைப்புத் தராம உனிய டேக் டைவர்ஷன் பண்ணிருக்காங்க."
"ஆமா டி..."
"அப்பக் கல்யாணத்தன்னைக்கு அந்த விரட்டு விரட்டுச்சே ஒரு கிழவி! அது?"
"சொன்னா நம்ப மாட்ட... டோட்டலி சேஞ்ச்... நான் நினைச்சதுக்கு மாறா நடந்தது எல்லாமே... அப்படியே மாறிடுச்சிக் கிழவி. கிழவி மட்டுமில்ல அவரு அத்தைங்க மூணு பேருமே, இப்ப கப்சிப் தான்."
"என்னடி சொல்ற! எப்படி?" என்றவளுக்கு விளக்கம் கொடுத்தாள்.
அந்த வீட்டில் மனோ, வீராவிற்கு அடுத்து அதிகம் பயம் கொள்வது காசியம்மாளிடம் தான். அவரிடம் வாங்கிய அடியில் உடலில் இன்னும் வரிவரியாகக் கோடு இருப்பதுபோல் கற்பனை தோன்றும்.
அதனால் தான், திருமணத்தின் போது வீராவின் குடும்பத்தைப் பற்றி நினைத்து அதிகம் கவலை கொண்டாள்.
ஆனால் அவள் பயந்த அளவிற்கு அங்கு எதுவும் நடக்கவில்லை. கலங்கிய மனத்துடன், வீராவின் மனைவியாகக் கால் தடம் பதித்தாலும், முதல் நாளைத் தவிர்த்து மீதி வந்த நாள்கள் தெளிந்த நீரோடைபோல் அழகாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
காலைவேளையே புஷ்பா கணவனுடன் வந்துசேர, மனோ தன் அத்தையுடன் ஓட்டிக்கொண்டாள். இப்பொழுதெல்லாம் வெற்றி புஷ்பாவை அருகில் வைத்துக் கொண்டு, மனோவிடம் வம்பு பேசினான். தனியாக மட்டும் சிக்குவதில்லை.
பேச்சும் சிரிப்புமாக மதிய உணவு முடிந்த தருணம், மனோ தனியாக எடுத்து வைத்திருந்த காசிப் பாட்டியின் நகைகளை எடுத்துக்கொண்டு,
"இதுல நேத்து நீங்க கல்யாணத்துல போட்டு விட்ட நகை இருக்கு பாட்டி. எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கங்க." என்று பெட்டியை நீட்ட,
"உங்கிட்ட நான் அதைத் திரும்பிக் கொண்டான்னு கேட்டேனாக்கும்... கொண்டு போய் உம்பீரோ வை.”
“எனக்கு வேண்டாம்.” என்றாள் சின்னக் குரலில்.
“உனக்குன்னு குடுக்கல... எம்பேரன் பொண்டாட்டிக்கு நான் குடுத்தது அது." என்று பாட்டி சொல்ல, மனோ அசையாது நின்றாள்.
'வீராவின் மனைவி என்பது சோலையப்பன் மகளுக்குக் கிடைத்தப் பதவி உயர்வு என்றதற்காக, தான் சோலையப்பன் மகள் என்ற அடையாளம் மறைந்து போகாது. என் முதல் அடையாளம் என்றும் சோலையப்பன் மகள் தான்.' என்று உறுதியாக இருந்தவள்,
நீங்கள் வாங்கும் வரை நான் நகர மாட்டேன் என்பதுபோல் நின்றாள்.
"எவடி இவ... சிவாமி.... ஏய் சிவாமி... இங்கன வெரசா வா... வந்து உம்மருமக என்னத்த நீட்டுறான்னு பாரு." என்று உரக்க அழைக்க, சிவகாமி மட்டுமல்லாது அந்த வீட்டுப் பெண்பிள்ளைகள் மூவரும் ஆஜராகி நின்றனர்.
அவர்கள் 'என்னத்த?' என்று கேட்கும் முன்னரே, "என்னம்மா?" என்று வந்து நின்றார்கள் பெண் பிள்ளைகள்.
"உம்மருமகளுக்கு ஏத்தத்தப் பாத்தியா! கல்யாணத்துக்குன்னு நான் குடுத்த நகைய கொண்டுவந்து நீட்டுற எம்முன்னாடி." என்று குற்றம்போல் சொல்ல,
"குடுத்தா வாங்கி வைக்க வேண்டியது தானம்மா. சும்மா போட்டுக்கத்தான குடுத்தீங்க." என்று விமலா சொல்ல,
"எங்க!! கொண்டா..." என்று செண்பகம், மனோவின் கையில் இருந்த பெட்டியை வெடுக்கென்று வாங்கிக் கொண்டார்.
வளர்மதி, தன் உடன்பிறப்புகள் என்ன பேசுவார்கள் என்று கணித்திருக்க வேண்டும். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கிக் கொண்டார்.
'உன் அண்ணன் வீடு மட்டுமில்ல அது. உன் மகனுக்குப் பெண்ணை எடுத்து சம்மந்தமும் செய்திருக்கிறோம் என்ற நினைப்புடன் தான் எப்பொழுதும் நீ நடந்து கொள்ளவேண்டும். உன் பிறந்த வீட்டுக் கெத்தைக் காட்டுகிறேன் என்று உன் அக்கா தங்கையுடன் சேந்து எங்காவது வார்த்தையை விட்டாய் என்றால் நிரந்தரமாக உன் தாய் வீட்டிலேயே இருக்க வேண்டி வரும்.' என்று வளர்மதியின் கணவன், புஷ்பா-சந்தோஷ் திருமணத்தின் போதே எச்சரித்திருந்தார்.
காசி பாட்டிக்கு வாய்த்த மருமகள் மட்டுமல்ல மருமகன்களும் சுத்தமான தங்கம். குணத்தில் எதுவும் குறை சொல்ல முடியாது. நேர்மை, நீதி என்று மனசாட்சிக்குப் பயந்து நடந்துகொள்வர். அது தவறும் பட்சத்தில் மகள் மனைவி என்று பார்க்க மாட்டார்கள்.
அத்தோடு அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்குமே வீராவின் மீது நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவன் தயவால் தான் தொழில் பெருகிக் கொண்டு இருக்கிறது. ஆதலால் அவன் பேச்சிற்கு மறுபேச்சில்லை. அப்படித்தான் அவனின் மாமாக்கள் நால்வருமே நடந்து கொள்வர்.
பெட்டியை வாங்கிய செண்பகம், உள்ளிருக்கும் நகைகளை ஆராய்ந்தார்.
மனோ, இது நடக்கும் என்று தெரிந்ததால் அமைதியாக நின்று கொண்டாள். ஆனால் சிவகாமியால் அப்படி இருக்க முடியவில்லை.
"என்ன மதினி செய்றீங்க நீங்க?" என்றார் செண்பகத்திடம்.
"எல்லாம் சரியா இருக்கான்னு பாக்குறேன் சிவாமி. அத்தனையும் தங்கம்ல... உம்மருகளுக்கு அத சுதானமா வச்சுக்க தெரிஞ்சிருக்கா தெரியலயான்னு பாக்க வேண்டாம்மா!." என்று தலைதூக்காது சொன்னவர்,
"ம்மா... இங்க பாரேன்... இந்த மாலைல பூ ஒன்னக் காணும். ஒட்டியானத்துலயும் சங்கிலி ஒன்னு அறுந்திருக்கு. இந்த கல் செட்லயும் கல்லு கருத்திருக்கு. நீர் இறங்கிருக்கும்னு நினைக்கிறேன். கல் ஜாமானெல்லாம் கலட்டி வைக்கும் போது காட்டன் துணியால துடைச்சி வைக்கணும்னு தெரியாதவளுக்கெல்லாம் எதுக்கும்மா நகைய தூக்கிக் குடுக்குற." என்று குறை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில் தாயிடம் ஆரம்பித்தவர்,
"என்னடி இது! ஓசிக்கு வாங்குன நகைய பத்திரமா பாத்துக்கத் தெரியாதா?. தங்கம் என்ன முக்கா துட்டுக்கா விக்கிது. இப்படி அத்திட்டு வந்தும் தொலச்சிட்டு வந்தும் நிக்கிற." என்று காட்டமாகக் கேட்க, கண்ணில் நீர் ததும்பி நின்றது மனோவிற்கு.
அது பாட்டியைச் சுட்டிருக்க வேண்டும். முதல் நாளே தன் பேரன் மனைவியைக் கண்ணீர் வடிக்க வைக்க வேண்டாம் என்பதற்காக,
"போதும் டி உங்க விசாரணை. அந்த நகையெல்லாம் பழசு தான். எனக்கு எங்கம்மா போட்டது. அதத்தான் எம்பேரன் பொண்டாட்டிக்குப் போட்டு விட்டேன். அது நான் அவளுக்குன்னு குடுத்தது. பிஞ்சது, பிய்யாதது, கருத்தது கருக்காததுன்னு அது எப்படி இருந்தாலும் இனி அவ தான் அதுக்குப் பொறுப்பு. கொண்டா அத." என்று மகள்கள் கையில் இருந்ததைப் பிடுங்கி, விரட்டி விட நினைத்தார்.
ஆனால் செண்பகம், "என்னம்மா பேசுற. உம்பேரெ பொண்டாட்டிக்குச் சுத்தமா கூறில்ல… நல்ல குடும்பத்துல இருந்து பொண்ணெடுத்திருந்தா நகையோட அரும தெரிஞ்சிருக்கும். இப்படி ஒன்னுமில்ல இடத்துல இருந்து எடுத்ததாலத்தே குடுத்ததக் கூட ஒழுங்கா வச்சிக்கத் தெரியல" என்று செண்பகம் சொல்ல,
"அதெல்லாம் காசு செலவு பண்ணி வாங்குறவங்களுக்குத்தேன் தெரியும்க்கா. இவள மாதிரி அடுத்தாள ஏமாத்தி சேக்குறவளுக்கு, எங்கருந்து தெரியப்போது." என்று ஒத்து ஊதினார் விமலா.
"அதுவும் சரித்தான். ஒன்னத்துக்கும் வக்கில்லாத குடும்பத்துல பிறந்தா, திருடியும் ஏமாத்தியும்ந்தேன் நக நட்டெல்லாம் சேக்க முடியும். அவ அப்பனும் ஆத்தாலும்மா போட்டிடப் போறாயிங்க." என்று செண்பகம் சொல்லி முடிக்கும் முன் அடித்திருந்தார் அவரின் கணவன் இன்பராஜ்.
காசி பாட்டி குரல் கொடுத்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் அமைதியாகிவிட, உள்ளே நடந்த சம்பாசணைத் தெளிவாகக் கேட்டது.
அதிலும் செண்பகம் மனோவைத் திருடி என்றதும், சோலையப்பனைப் பேசியதையும் கேட்ட வீரா, உடல் விரைக்க, முஷ்டியை இறுக்கியபடி அமர்ந்திருந்தான். சில நொடிகளுக்குப் பின் தன் மாமன்களை ஏறிட, அதில் அவர்கள் என்ன கண்டார்களோ திமுதிமுவென்று உள்ளே சென்று தத்தம் மனைவிமார்களைக் கண்டிக்கத் தொடங்கினார்.
"என்ன வாய் டி உன்னிது. அடுத்த ஆளுங்கள நா கூசாம பேசாதன்னு உங்கிட்ட சொல்லித் தானக் கூட்டீட்டு வந்தேன். உன் அதிகாரம் எதுவா இருந்தாலும் அத உன் வீட்டோட வச்சுக்கணும். அடுத்த வீட்டு பிள்ளைய இப்படி எலும்பில்லாத நாக்கால வதைக்காத… அதே மாதிரி அடுத்து வீட்டுப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காம, கிளம்பு..." என்றார் இன்பராஜ்.
"இது எப்படி மச்சான் அடுத்த வீடாகும். எங்கம்மா நகைய பிச்சதுக்கு நாங்க தான கேள்வி கேக்கணும்." என்று தமக்கைக்காகப் பேசி தன் கணவனிடம் திட்டு வாங்கினார் விமலா.
'அது அவர்கள் வீட்டுப் பிரச்சினை. அதை அவர்கள் பார்த்து கொள்வர். அப்படி நீங்கள் தீர்த்து வைக்க வேண்டுமென்றால் நிரந்தரமாக உன் தாய் வீட்டிலேயே இருந்து நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டு.' என்க, அவர்கள் மறுப்பாக தலையசைக்கும் மாட்டை விரட்டுவது போல் விரட்டிச் சென்றனர்.
அது தான் கடைசியாக அந்த சகோதரிகளைக் கண்டது. அதன் பின் குடும்பமாக வந்தார்கள்... சென்றார்கள்... அவ்வளவு தான்.
அங்கு உடைந்து நின்றது என்னவோ காசி பாட்டித் தான். தான் ஆசையாக கொடுத்த நகைகள் இங்கும் அங்கும் பந்தாடப்படுவது அவருக்கு அவமதிப்பாகவே இருந்தது.
ஏனெனில் மனோ அதை வாங்க மறுத்து விட்டாள்.
"என்ன சிவாமி இது... நீயாது அவட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா... நீ சொன்னா கேப்பா.. இந்தா இதக் கொண்டு போய் அவ பீரோல வைக்கச்சுக் சொல்லு." என்க,
"என்னை மன்னிச்சிடுங்கத்த... உங்களுக்கு ரஞ்சிதம் போட்டிருக்குற நகை குறையாத் தெரிஞ்சா நாங்க வாங்கி போடுறோம். அப்படி இல்லன்னா அவ புருஷன் இருக்கான். அவன் வாங்கிக் குடுப்பான். இத்தன நடந்ததுக்கு பின்னாடி இதை வாங்கிக்கிறது சரியா இருக்குமான்னு தெரியலத்த." என்று மாமியாரின் பேச்சை நயமாக மறுத்தார்.
தன் தம்பியையும் தன் தாய் வீட்டையும் ஏளனமாகப் பேசி பின் சுயமரியாதை முக்கியம் இல்லையா. அதை நகைக்காக அடகு வைப்பதா? என்றிருந்தது சிவகாமிக்கு.
"என்னடா பேசுறா உங்காத்தா!! அவ கொண்டு வந்த நகைல குறையக் கண்டு பிடிச்சா நான் இதத் தந்தேன். எம்பேரன் பொண்டாட்டிக்குன்னு தந்தேன். நான் குடுக்கக் கூடாதா!" என்றபோது தளுதளுத்த குரல் அவருக்கு.
"யாரு சொன்னா நீ குடுக்க கூடாதுன்னு... நல்லா குடு. உங்கையாலயே குடு..." என்றவன்,
"ஏய்... மனோ..." என்று கத்த, வேகமாக கணவனின் முன் வந்து நின்றாள்.
"வாங்கிக்க." என்றதும், தலை குனிந்தவள் சின்னதாக தலையசைத்து மறுப்பைத் தெரிவிக்க,
"வாங்குன்னேன்..." என்று அவன் அழுத்திச் சொல்லவும் மீற முடியாது வாங்கிக் கொண்டு, அறைக்குள் சென்று அடைமழையாய்க் கொட்டித் தீர்த்தாள் கண்ணீரை.
இதுபோன்ற ஒரு நகை தானே அவளை எளிதாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, இந்த வீட்டின் பக்கம் வரக் கூடாது என்று துரத்தியது. என்று நடந்து முடிந்ததை நினைத்து இப்பொழுது அழுதாள்.
ஆலாபனை தொடரும்...