- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
இன்று, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் முதல் நாள். புதிதாக கல்லூரியில் சேர்ந்திருக்கும் மகிழ்மதி, ஹேமா மற்றும் கவின், வெற்றி என்று நால்வரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால்... ஒன்றாக கல்லூரிக்குள் வந்தார்கள்.
கவினும், மகிழ்மதியும் ஒரே பிரிவில் படிப்பதால் அவர்கள் இருவரும் ஒன்றாகவும்.
வெற்றியும், ஹேமாவும் ஒரே பிரிவில் சேர்ந்திருப்பதால் அவர்கள் இருவரும் ஒன்றாகவும் பேசிக்கொண்டு வந்தார்கள்.
இவர்களை வரவேற்பதற்காக மூத்த மாணவர்கள், கல்லூரி வாயிலின் இரு புறங்களிலும் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.
சரவணன், செகண்ட் இயர் ட்ரிபிள்இ மாணவன். புதிதாக வரும் இவர்களை பார்த்ததும், தனது நெருங்கிய நண்பன் ஜோஷ்வாவின் காதுகளில், "ஸ்கூல்லயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே, ரெண்டு பேர் ஒண்ணா வருது. லவ்வர்ஸ் ஃபர்ஸ்ட் என்று சொல்லிவிட்டு. நெருங்கி வரும் கவின் இடம் கை கொடுத்து உங்க நேம் என்ன? என்ன டிபார்ட்மென்ட்?" என்று கேட்க.
சரவணனுக்கு கைகொடுத்த கவின், "என்னோட பேரு கவினேஷ் நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் ஜாயின் பன்னிருக்கேன்".
சரவணன், "வாவ் சூப்பர், ஆல் த பெஸ்ட்" என்று கவினின் தோளில் தட்டி கொடுத்தான். "நீங்க" என்று மகிழ்மதியிடம் கை நீட்டினான்
மகிழ்மதி, சரவணன் கையை பிடித்து, "நான் மகிழ்மதி, நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்தான் என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நகர்ந்து நிற்க.
வெற்றியும், ஹேமாவும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
சரவணனின் நண்பன் ஜோஸ்வா, "நீங்க நாலு பேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சீங்களா?"
நால்வரும், "ஆமாம் என்று தலை அசைத்தார்கள்.
நீங்க லவ்வர்ஸ்ஸா என்று சிரித்துக் கொண்டே சரவணன் கேட்க,
நால்வரும் சரவணன் முகத்தை பார்த்து முறைத்தார்கள்.
மகிழ்மதி, அவங்க ரெண்டு பேரும் எங்க ஸ்கூல்ல படிச்சவங்க. ஒரே டிபார்ட்மெண்ட் எடுத்திருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் அண்ட் ஒரே ஏரியாக்காரர்களும். அதனால ஒன்னா பேசிட்டு வந்தோம்.
சரவணன், "சாரி சாரி சாரி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நால்வரும் அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரிக்குள் சென்றார்கள்.
___________________________________________________
வெள்ளிக்கிழமை, அதிகாலை முதல் முகூர்த்தத்தில். கண்மாயின் மேற்கு கரையில், துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேத விற்பனர்கள், அன்னைக்கு கண்திறப்பு மற்றும் பிராண பிரதிஸ்டை செய்வதற்கு யாகசாலை பூஜைகள் செய்ய தொடங்கியிருந்தார்கள்.
துர்க்கையின் கண் திறப்பதற்கு வேம்பாறு தேசத்தின் அரசன் ஜெயந்தி நாதன், முன்னிலை வகித்து, யாகசாலையில் அமர்ந்தான். பூஜைகள் நடத்தினான். இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிய நேரத்தில், ஜெயந்தி நாதன், அம்மனின் கண்களை திறக்க, அம்மனின் கண்ணை கட்டி இருந்த துணியை அவிழ்த்து, யாகசாலையின் கரியினால் செய்த மையை, அம்மனின் கண்ணில் அஞ்சனம் தீட்டி விட்டான். வேத விற்பனர்கள் பூக்களை இறைத்து பூஜைகள் செய்தார்கள்.
அம்மனுக்கு உயிர் ஊட்டுவதற்காக, பிராணப் பிரதிஷ்டை வேள்வி நடத்த, ஆவுடைய தேசத்தின் மன்னனான பிறைசூடன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கும்ப தீர்த்தத்தை பிறை சூடன் தனது தலை மேல் சுமந்து சென்று, அன்னைக்கு அபிஷேகித்து, பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தான்.
நவராத்திரிகளுக்கும் அன்னைக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த நவராத்திரிகளுக்கும் அம்புலி தேசத்து மக்கள் அனைவரும், பால், தயிர் அரிசி, வெள்ளம், உப்பு, மஞ்சள் போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்தி, பூஜை செய்து கொண்டிருந்தார்கள்,
கௌதமி நந்தர், நினைத்தபடி 48 நாட்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இறுதி நாளான இன்று, ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக கூடி, அன்னதான விழாவில், உண்டு முடித்து விழாவை நிறைவு செய்தார்கள்.
இந்த 48 நாட்களிலும், திரியம்பகன், வீட்டுக்கு உள்ளே இருக்கும், பாதாள அறையை விட்டு வெளியே வராமல், தனக்கு தானே வைத்தியம் செய்து கொண்டு, தன்னுடைய மகனின் உதவியோடு மருந்துகளை உட்கொண்டு வந்தான். அதனால் உடல் நல்ல முறையில் தேறி இருந்தது. அவனுக்கு ஏற்பட்ட ரத்த இழப்பின் காரணமாக, உடல் சோர்வு, நடையில் தடுமாற்றம், போன்றவை இருந்து வந்தது. இப்போது விராடன் செய்த மருத்துவத்தால் புண் வடுக்கள் ஆறி, உடலும் நல்ல முறையில் தேறியது.
ராமேஸ்வரம் சென்று திரும்பி வந்ததைப் போல பாவனை செய்ய.....
திரியம்பகன், சிறிய விபூதி பொட்டலத்தோடு இளவரசரை சந்திக்க விராடனோடு அரண்மனைக்குச் சென்றான்..
அரண்மனைக்குள் தங்கி இருக்கும் 11 சந்நியாசிகளும் இமய மலைக்கு தல யாத்திரை செல்ல கிளம்பினார்கள். அரண்மனை வாசிகள் அனைவரும், அவர்களிடம் ஆசி பெற்று, அவர்களின் கைகளால் விபூதியை பூசிக் கொண்டார்கள்.
அதே நேரத்தில், விராடனும் திரியம்பகனும் உள்ளே வந்து, இளவரசனை காண வேண்டும் என்று சொல்ல,
இளவரசன் கௌதமி நந்தரிடம் ஆசி பெற்று, அவரது கைகளால் விபூதி பூசிக்கொண்டு இருந்தான்.
திரியம்பகன், "இளவரசே".... என்று அழைக்க.
கௌதமி நந்தர், திரியம்பகனையும், விராடனையும் ஒன்றாய் நிமிர்ந்து பார்த்தார், அவர் கண்களில் தெரிந்த பிம்பத்திற்கு சொந்தக்காரர்கள் இருவர், எதிரில் நிற்பதை கண்டதும், "கடவுளே... உன்னுடைய கட்டளைக்காக, என் கண்ணில் தெரிந்ததை மறைத்து கூறி விட்டேனே! என்று தனக்குத்தானே நொந்து கொண்டார். "என்னதான் நடந்திருந்தாலும் நாம் இதை சொல்லி இருக்க வேண்டும். என்று அவர் மனது இப்போதும் கெஞ்சியது. "படைத்தவனுக்கு பாதுகாக்கத் தெரியும் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்"
அமுதன், "வாருங்கள் விராடரே... வாருங்கள் வைத்திய பெருந்தகையே"...
இருவரும் முன்னேறி, கௌதமி நந்தர் முன்பு வந்து நின்றார்கள்.
திரியம்பகன் கொண்டு வந்திருந்த விபூதி பொட்டலத்தை, இளவரசன் கையில் கொடுத்தான்.
இளவரசன் இரு கைகளையும் நீட்டி பிரசாதத்தை வாங்கிக் கொண்டான்.
கௌதமி நந்தர், "இங்கே துர்க்கையை பிரதிஷ்டை செய்து, சுதர்சன சக்கரத்தை பிரதிஷ்டை செய்ததற்காக... எனக்கு நீங்கள் என்ன காணிக்கை கொடுத்தீர்கள் இளவரசே...
அமுதன், "என்ன காணிக்கை வேண்டும் என்று தயங்காமல் கேளுங்கள் குருவே"! என்று பணிந்து நிற்க.
"இந்த ராமநாதனின் விபூதி பிரசாதத்தை எனக்கு காணிக்கையாக தாருங்கள்" என்று கெளதமி நந்தர் விபூதி பிரசாதத்தை கேட்டு பெற்றுக் கொண்டார்.
விராடனுக்கும், அவனது தந்தை திரியம்பகனுக்கும் கௌதமிநந்தரின் செய்கை ஏதோ ஒன்றை உணர்த்தியதாக தோன்றியது . இருவரும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
கௌதமி நந்தரை பணிந்து வணங்கி, விடை பெற்று சென்றார்கள். அவர்கள் சென்ற பிறகு
கௌதமி நந்தர், இளவரசன் ஆராவமுதனிடம் "நாங்கள் தல யாத்திரைக்கு புறப்படுகிறோம் என்று சொல்லிவிட்டு" அவரது சிஷ்ய படை பரிவாரங்களோடு இமய மலைக்கு பயணப்பட்டார்.
அதேபோல அரண்மனைக்கு வந்திருந்த அண்டை தேசத்து அரசர்கள் இருவரும், தங்களது தேசத்திற்கு புறப்பட தயாராக இருக்கும்போது.
ராஜ விசுவாசியான காளிதாசர், இளவரசனை அழைத்து, தனிமையில், "தங்களது தாய் மாமனார், மற்றும் அண்டை தேசத்து அரசர் இருவரும் அவர்களது தாய்நாடு கிளம்ப தயாராக இருக்கிறார்கள். குரு கௌதமி நந்தர் வாக்கின்படி, பூஜைகள் முடிந்த பிறகு, தங்களுக்கு திருமணம் நடந்தாக வேண்டியது கட்டாயம். குருவே சொல்லி இருக்கிறார்.
அமுதன், "குரு சொன்னதற்கும், அவர்கள் புறப்படுவதற்கும் என்ன சம்பந்தம் சுவாமி?
காளிதாசர், "சம்பந்தம் இருக்கிறது இளவரசே... இரு மன்னர்களிடமும் தங்களுக்கு, அவர்களது பெண்ணை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த இரண்டு தேசங்களில், எங்கிருந்து பெண் எடுத்தாலும், உங்களுக்கு அவர்களது ஆதரவும், பாதுகாப்பும் சேர்ந்து கிடைக்கும். உங்கள் மனதில் இரண்டு பேரில் யார் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறதோ.... அவர்களிடம் உங்கள் சார்பாக நானே பெண் கேட்கிறேன். உங்களது அடிமையான எனக்கு, உங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியத்தையும் கொடுங்கள் இளவரசே.
ஆராவமுதன், "எனக்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது சாமி. அதே போல எனக்கு இரண்டு தேசத்திலும் பெண் எடுக்க ஆர்வம் இல்லை. வேறொரு நங்கை என்னுடைய மனதில் குடியிருக்கிறாள்.
இளவரசனும் காளிதாசாரும் தனிமையாக பேசிக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே... வேம்பாறு தேசத்து மன்னனும், ஆவுடைய தேசத்து மன்னனும் நின்றிருந்தார்கள்.
அறைக்குள்ளே அவர்கள் பேசுவதையும் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார்கள்.
காளிதாசர், "தங்கள் மனதில் இருக்கும் அந்த மாதரசி யாரோ? என்ன பெயரோ?"
ஆராவமுதன், காளிதாசரிடம் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசி விட வேண்டும் என்று எண்ணியவன், "தங்களின் புதல்வி ஆரவல்லியை எனக்கு பெண் கொடுப்பீர்களா சுவாமி" என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டான்.
காளிதாசருக்கு, இளவரசனிடம் என்ன பதில் சொல்ல, என்று ஒன்றும் புரியவில்லை. அதே நேரத்தில் இளவரசனுக்கு பெண் கொடுக்கவும் மனதில்லை. வஞ்சனை, சூது நிறைந்த அரண்மனையில், தன்மகள் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்ற, "எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை இளவரசே... எதற்கும் என் மனைவி, மகளிடம் கலந்து பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன். என்று சொன்னவருக்கு, அமுதனை பார்க்க வரும்போது இருந்த ஆர்வம், இப்போது துளியும் இல்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார். அறைக்கு வெளியே இரண்டு தேசத்து அரசர்கள் இருப்பதும், அவர் கண்களுக்கு புலப்படவில்லை. யாரிடமும் எதுவும் பேசாமல் தன்னுடைய வீடு நோக்கி பயணப்பட்டார்.
காளிதாசர் வெளியேறியவுடன் வாசலில் நின்று இருந்த பிறை சூடணும், ஜெயந்தி நாதனும் ஒன்றாக அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
அமுதன், வாருங்கள்! வாருங்கள்! இருவரும் ஒன்றாகவா புறப்படுகிறீர்கள்? சற்று நேரம் பொறுத்திருந்து விருந்து உண்டுவிட்டு, நிதானமாக செல்லுங்களேன்.
பிறைசூடன், "நாங்கள் வந்த வேலை முடிவடைந்து விட்டது. இனி எங்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?
ஜெயந்தி நாதன், "ஒரு முறை விருந்து உண்டு விட்டால் ஆயுள் முழுவதும் பசியாத அமுதமா உங்கள் வீட்டின் விருந்து.
அமுதன், "நீங்கள் இருவரும் எதனால் இப்படி பேசுகிறீர்கள்? எனக்கு ஏதும் புரியவில்லையே".....
பிறைசூடன், "நான் இங்கே, என்னுடைய அக்காவின் மகன் என்ற முறையில், உனக்கு பக்கபலமாக இருந்து, பூஜை புனஸ்காரங்களை நிறைவு செய்து, உனக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டு செல்லலாமே.... என்று தான் வந்தேன். ஆனால் நீ என்னை உனது தாய் மாமனாக மதிக்காமல், ஒரு பூசாரியின் தலைமையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொல்கிறாயே....
"பிறை சூடரே... தங்கள் பேச்சில் திருத்தம் தேவைப்படுகிறது. பூசாரியின் தலைமையில் திருமணம் அல்ல. பூசாரியின் மகளோடு திருமணம்" என்று விளக்கம் கொடுத்தான் ஜெயந்தி நாதன்.
அமுதன், இருவரது பேச்சையும் ஆர்வமாக கேட்டவன், நிதானமாக, பிறைசூடனிடம், "மாமா உங்கள் தலைமையிலேயே எனது திருமணம் நடக்கட்டும். ஆனால் மணப்பெண் நான் விரும்பும் ஆரவல்லி. அவளோடு தான் திருமணம் நடைபெறும்". ஜெயந்தி நாதனை பார்த்து, "தாங்களும் இருந்து திருமணத்தை நடத்தி வைத்து விட்டு செல்லுங்கள்"
பிறைசூடன், "போதும் அமுதா, நீ எனக்கு கொடுத்த மரியாதை போதும். நானாக உன்னிடம் வந்து கேட்டு வாங்கி பெற்றுக்கொண்ட மரியாதை போதும்! போதும்! நான் இப்போதே புறப்படுகிறேன். என்று வெறுப்பாக வெளியேறி சென்றான்.
அவனைத் தொடர்ந்து ஜெயந்தி நாதனும் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றான்.
இருவர் சொல்வதையும் பார்த்து கொண்டே.... அமுதன் நின்று விட்டான்.