- Joined
- May 4, 2024
- Messages
- 5,345
- Reaction score
- 3,210
- Points
- 113
ஹாய் பிரண்ட்ஸ்,
எத்தனையோ முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் அறிமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய என்னை தோழி வீணா, ரமணி சந்திரன் குரூப்பில் வைத்து, ஒரு எழுத்தாளராக நினைக்காமல் சக மனுஷியாக நேர்க்காணலை நிகழ்த்தினார். அத்துடன், எனது முகநூல் நட்புகள் மற்றும் வாசக தோழமைகளின் கேள்விகளையும் இணைத்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.
ஜோதி நேர்காணல்:
பெயர் : ஆனந்த ஜோதி
ஊர் : நாகர்கோவில். ஆலன் கோட்டை புதூர்
படிப்பு : BSC Chemistry
தளம் : Jothi Tamil novels, Sahaptam, Pratilipi
வருடம் : 1 வருடம் 3 மாதம்
படைப்புகள் : 7 தொடர்கதை 1 நாவல் 2 ஆன்கோயிங் 4 சிறுகதைகள்
Amazon Name & link : K. Anantha Jothi
https://www.amazon.in/s?k=K.+Anantha+Jothi&ref=nb_sb_noss
*******
தற்சமயத்து நாவல் லிங் :
கண்ணில் மிதக்கும் கனவா நீ (Anti hero):
https://jothitamilnovels.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%80%3F%3F?m=1
*******
முடிவுற்ற நாவல் லிங் :
கனவு கை சேரும் நாள் வருமோ! :
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-tamil-novel.622/
மின்னலே நீ வந்த வேளையில்!
https://annasweetytamilnovels.com/community/anandha-jothi/
******
படைப்புகளின் பெயர் :
சிறுகதை :
1. விழியால் உயிரில் கலந்து
2. வினோதனே
3. உன்னில் என்னைத் தொலைத்தேனடி
4. வருவேனே வாசல் தேடி
தொடர்கதை :
காத்திருந்தேன் கண்ணாளனே
காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)
விழியால் உயிரில் கலந்து
உயிரிலே கலந்தவன் யாரிவனோ (ongoing)
தேடி வந்த தேவதை
மறவேனென்று நினைத்தாயோ (நாவல்)
காவ(த)ல் கொண்டேனடி கண்மணி
கனவு கைசேரும் நாள் வருமோ!
மின்னலே நீ வந்த வேளையில்!
கண்ணில் மிதக்கும் கனவா நீ?? (ongoing, Anti hero Story)
*******
நீங்க என்ன படிக்கணும்னு ஆசைப்பட்டீங்க? விருப்பட்டத்தைத்தான் படிச்சீங்களா :
நான் 10 முடிச்சுட்டு Science group எடுக்க ஆசைப்பட்டேன். பிறகு வேதியியல் பாடத்தை ரொம்ப விருப்பத்துடன் படித்து வந்ததால் அதையே கல்லூரியிலும் எடுத்தேன். (BSC Chemistry)
ஆனால், மூன்றாவது வருடம் திருமணம் நடந்து விட்டது. பிறகு கல்கத்தா பயணம். வீடு, குழந்தை, குடும்பம் என்றாகி விட்டது.
******
பொதுவா புக்ஸ் படிக்கிறது அம்மா அப்பா இல்லேன்னா தோழிகள் யார் கிட்டேயிருந்து வந்தது:
கதை வாசிப்பு என்பது எனது அம்மா R. சுசிலா விடம் இருந்து வந்தது. எனது அப்பா தமிழ்நாடு காவலர். அவரது குடியிருப்பில் வசிக்கும் போதே ராணி முத்து வாங்கி வந்து கொடுத்து விடுவதால், வீட்டில் எப்போதும் நாவல்கள் இருக்கும். ஊருக்கு வந்து செட்டில் ஆன பிறகு, மாதா மாதம் வீட்டிற்கே வந்து விடும். எனது சித்தி கண்மணி நாவல் வாசிப்பார். நான் சிறு வயதில் ராணி காமிக்ஸ் வாசித்தேன். பிறகு அவர்களைப் போலவே இரண்டையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
******
ஆன்லைன் ரீடராயிருந்து விமர்ச்சகரான நீங்க, எப்போ ஏன் எப்படி ரைட்டர் ஆனீங்க:
நான் ரீடர் குரூப்பில் கதை வாசித்து விமர்சனம் செய்துட்டு RC group க்கும் செயர் பண்ணிட்டு இருந்தேன். பிறகு தான் தமிழ் நாவல் விமர்சனம் எனும் குரூப் இருப்பதே தெரிய வந்தது. எனது விமர்சனம் பலரின் மனதை வென்றதை சில மாதங்கள் கழித்த பிறகே தெரிந்து கொண்டேன். ரமணி சந்திரன் குரூப்பில் உள்ள சில நட்புகள், உங்கள் விமர்சனம் லிங் என்றால் ரைட்டர் யாருன்னு கூட பார்க்க மாட்டோம். உடனே லிங் காபி பண்ணிட்டு நட்புகளுக்கும் தெரிவிப்போம் என்றனர். அது ஒரு மகிழ்ச்சியான தருணம்.
அப்போது, ஒரு சில எழுத்தாளர்களின் எழுத்தில் தெரிந்த வித்தியாசம், ஒரு சில பக்கங்களை கூட புரட்ட முடியாத சலிப்பு, இது நாவலா என்கிற அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதிலும் ஒரு சிலரது எழுத்துகள் நான்கைந்து பேராக அமர்ந்திருந்து அரட்டை அடித்து கலகலவென்று சிரித்தார்கள், அந்த இடமே சிரிப்பில் குலுங்கியது என எழுதியிருக்கும். பட் ஜஸ்ட் ஒரு ஸ்மைல் கூட வரலை. காதலில் ஆழம் இல்லை. நகைச்சுவை எனும் பெயரில் யார் சிரிக்கிறாங்கன்னு தெரியலை. அதான் நாமும் டிரை பண்ணி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதன் வெளிப்பாடாக பிரதிபலியில் சிறுகதைப் போட்டி நடந்த போது சகோதர் சுஜின் செளந்தரராஜனின் உதவி மற்றும் ஊக்குவிப்பால் கலந்து கொண்டு 4 சிறுகதைகளை எழுதி முடித்தேன். பிறகு தொடர்கதை எழுத ஆரம்பித்தேன்.
*******
21 வதாவது நூற்றாண்டில் பிடித்த ஐந்து எழுத்தாளர் பெயரை குறிப்பிடவும். ஏன் பிடிச்சதுன்னும் சொல்லணும்:
ரமணி மேம், மணிமாலா மேம், காஞ்சனா மேம், சுமதி மேம், தேவிபாலா சார், ராஜேஸ்குமார் சார்.
ஏனென்றால் அவர்களது எழுத்தோட்டம், கதையின் நகர்வு, வாக்கியத்தின் அமைப்பு, கதை தேர்ந்தெடுக்கும் முறை எனலாம்.
ரமணி மேம் -> காதல், குடும்பம், ஆன்டி ஹீரோ எல்லா வகையும் கலந்து குடும்ப நாவலாக, அடுத்து என்ன வரும் என்று கண்டு பிடித்து விடவும், முடியாதது போலவும் கொடுப்பாங்க.(வைர நெஞ்சம்)
மணிமாலா மேம் -> காதல், அழுத்தம், குடும்பம், ஆன்டி, அழுகை, சஸ்பென்ஸ் எல்லாம் கலந்து கொடுத்து, யூகிக்க முடியாத வகையில் முடிவை கொடுப்பாங்க. சில கதைகளின் முடிவு அழுகையில் தான் முடியும் (பெண்ணல்ல நீயொரு பொம்மை)
காஞ்சனா மேம் -> இவங்க கதை 50 க்கு மேல வாசிச்சுருக்கேன். காதல், குடும்பம், கண்டுபிடிப்பு, மிரட்டல், வெளிநாடு, ஆர்ட், மாளிகை, ஹோட்டல் … வகையில், அவரது அழகான எழுத்து நடையில் பயணம் செய்யலாம். (அழகே வா அருகே வா)
சுமதி மேம் -> காதல், குடும்பம் வகையில் அழகான கிராமத்து கதைகளை வாசித்த அனுபவம் இருக்கிறது. அருமையான நகர்வுகளை கொண்டு சலிப்பில்லாமல் வாசிக்கலாம். இவரது கவிதை வரிகள் அட்டகாசம் (மாணிக்கப் பரல்கள், வசந்தத்தை தேடும் வானம்பாடி)
தேவிபாலா சார் -> காதல், சஸ்பென்ஸ், குடும்பம், போலீஸ் எல்லா வகையிலுமான அருமையான படைப்புகளை கொடுப்பார்கள்.
(பொட்டு வச்ச வட்ட நிலா, சிவசங்கரி
ராஜேஸ்குமார் சார்: போலீஸ் விசாரணை, சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக கொடுப்பார்கள்.
*******
முதன் முதலில் படித்த ரைட்டர் நேம் என்ன:
ரமணி சந்திரன் மேம்
******
மொத்தம் எத்தனை ரைட்டர் கதைகளைப் படிச்சிருக்கீங்க :
அது சொல்லில் அடங்காது. ஏற்கனவே சிறு வயதில் புத்தகமாக நிறைய எழுத்தாளர்களுடையது வாசித்து விட்டேன். தற்சமயம் 2 வருடங்களாக ஆன்லைனிலும் வாசித்து வருகிறேன். இனிமேலும் தொடரும்.
******
எனக்கு கொல்கத்தாமேலே பயங்கர க்ரஷ் உண்டு. வங்காளி அமைதியான படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மிலிட்டரி நார்த் சைட் வர்க் பண்ணிட்டு வர்றவங்க எல்லாம் ரொம்ப வெள்ளந்தியா அன்பா துவேஷமேயில்லாத குணத்தோடுயிருப்பாங்க. வங்காள கதைகள் மாதிரி நீங்க ஏதாவது கதைகள் எழுதற ஐடியாயிருக்கா?
இல்லை. நான் இதுவரையில் எனது சொந்த ஊர் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், சுற்றியுள்ள இடங்கள், பிரபலமான கோவில்கள் அப்படி தான் எழுதியிருக்கிறேன். இனிமேலும் எழுதுவேன். எனது எழுத்துக்கள் மூலம் எனது ஊரின் சிறப்புகள், கிராமங்கள் பற்றிய விபரங்கள் வெளி வருவதில் எனக்கு மகிழ்ச்சியே.
******
கொல்கத்தா வெயில் எப்படி? புயல் அதிகமா தாக்கும் இல்லையா?
உங்க நாகர்கோவிலையும் புயல் தாக்கும்.
நாம எந்த ஊர் போனாலும் புயல் நம்மை விடாதுன்னு என்னைக்காவது காலரை தூக்கிவிட்டுருக்கீங்களா?
புயல் அதன் பிறகு தான் ஆட்டம் காட்டவே ஆரம்பித்தது. பாவம் எத்தனை எத்தனை மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து போய் விட்டன.
நான் எனது கணவரின் காவலர் குடியிருப்பில் இருக்கும் போது நடப்பவை தான் இதெல்லாம்.
*******
கொல்கத்தாவில் பிரமிச்ச விசயம் என்ன? எப்ப தமிழ் தேசத்துக்கு வருவோம்ன்னு ஏக்கம் இருக்குமா?
பிரமிப்பான விசயம் என்றால், நம் தமிழகத்தில் நவராத்திரி கொண்டாடப்படும் போது அங்கு துர்கா பூஜை கொண்டாடப்படும். அது போல தீபாவளி சமயம் காளி பூஜை நடத்தப்படும். தாஜ்மகால் போல வித்தியாசமான கட்டமைப்புடன் அமைத்திருப்பார்கள். வெளியில் நின்று பார்க்கும் போது அத்தனை அழகாக இருக்கும். பிரமாதமான இடத்திற்கு வந்திருக்கிறோமே ஜோதி என்று நினைத்து உள்ளே சென்றால்
ஆமாம் இருந்தது. நான் அம்மாவின் செல்லப் பெண். அம்மா பார்க்கணும் பார்க்கணும் என்றேன். 4 மாதம் ஆகிவிட்டது. இதற்கு முன்பு இப்படி பாராமல் இருந்தது இல்லை. அழுகையாக வந்தது. 'ஆனந்தி, கல்யாணத்துக்குப் பிறகு புருஷன் தான் எல்லாம். அதனால இப்படி அம்மா அம்மான்னு அடம் பிடிக்க கூடாது' என்றார் கணவர்.
பிறகு திருமணமான நான்காவது மாதம் ஊருக்கு அழைத்தும் சென்றார்.. பெரிய மகன் வயிற்றில் உதித்த ஏழாவது மாதம் ஊருக்கு சென்ற பின், கிட்டதட்ட ஆறு மாதம் அம்மா வீட்டில் தான் நின்றேன். கணவர் வந்த பிறகே மறுபடியும் கிளம்பியது.
******
உங்க கதைகளை படிக்கிற உங்க அம்மா சித்தி உங்களை ஏதும் கிண்டல் செய்யலையா?
எனது கதைகள் இதுவரையில் புத்தகமாக வெளி வரவில்லை. அதனால் வாசிக்க வில்லை. இனி மேல் தான் என்ன சொல்றாங்கன்னு பார்க்கணும்.
எனது மருமகளும் அவளது கணவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருபவரும் வாசித்தனர். 'ரொம்ப நல்லா இருக்கு மாமி' என்றனர். அது மட்டுமல்லாமல் உறவினர்களில் சிலர் வாசித்து நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். தற்சமயம் ஊருக்கு சென்ற போது, 'உங்க வொய்ப் எழுதிய கதை வாசித்தேன். ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொன்னாதாக எனது கணவர் சொன்னாங்க. மகிழ்ச்சி அவருக்கும் எனக்கும்…
******
வடநாட்டுக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு.
தப்பில்லாம எப்படி எழுதுறீங்க:
அது கஷ்டமில்லை . தமிழ் மொழி மீது எப்போதுமே எனக்கு தனி ஆர்வம் உண்டு. கொல்கத்தாவில் இருக்கும் போது ஹிந்தி பேச, எழுத கற்றுக் கொண்டேன், பிறகு எர்ணா குளத்தில் 4 வருடம் இருந்த போது மலையாளம் பேச, எழுத கற்றுக்கொண்டு பின், விட்டு விட்டேன்.
கதை எழுத ஆரம்பித்த போது Font Size , என்ன App ல் அத்தியாயங்கள் எழுதணும் என்றெல்லாம் முதலில் தெரியவில்லை. அப்போது சிறிய எழுத்துகள், சிறிய ஆன்ட்ராய்டு மொபைலில் கண்ணுக்கு சரியா புலனாகவும் இல்லை. அதனால் பிழைகள் வரத்தான் செய்தது. அதை தாண்டியும் பிரதிலிபி மற்றும் முகநூல் வாசகத் தோழமைகள், நட்புகள் எனது படைப்புகளை அன்புடன் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்
தற்சமயம் Samsung tab வாங்கியிருக்கேன். பிழைகள், வார்த்தை கோர்வுகள் இல்லாமல் எழுதுவதாக தான் நினைக்கிறேன்.
******
வீட்டுக்காரர் போலீஸ் ....
ஆமாம் CISF காவலர் சத்தீஸ்கர். T. கிருஷ்ண குமார். எனது ஊரைச் சார்ந்த உறவினர் தான். சிறு வயதிலே என் வாயில் மாட்டி வசைப்படுவார். அது தற்போது வரையிலும் தொடர்கிறது
******
ராஜேஷ்குமார் சார் மாதிரி கதை எழுதற ஐடியாயிருக்கா:
ஆமாம். என்னுடைய "காவ(த)ல் கொண்டேனடி கண்மணி" கதையில் போலீஸ் விசாரணை, அதிரடி, என் கவுண்டர், கொலை எல்லாம் கொடுத்திருந்தேன். இன்னும் கொடுக்கணும் . 3 போலீஸ் கதை எழுதிவிட்டேன். இனி ஒரு மிலிட்டரி கொடுக்கணும்.
******
ஆன்டி ஹீரோ கதை அடுத்தது கிராமத்துக்கதை எழுதினா உங்க ஊர் பக்கமா? இல்லை வடநாட்டு கிராமமா:
கிராமம் என்றால் அது எனது ஊரான ஆலன் கோட்டை புதூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் தான்
*******
வேற பொழுதுபோக்குகள் என்ன சொல்லுங்க:
பாட்டு கேட்பேன். பாடுவேன், வாசிப்பேன், அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருப்பேன். இதற்கே நேரமின்மை.
******
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
நாயகன் : கேப்டன் விஜயகாந்த், இளைய தளபதி விஜய்,
ரியல் ஸ்டார் ஸ்ரீஹரி,
நாயகி : மீனா, சௌந்தர்யா, தேவயானி, சிம்ரன்
******
வங்காளி திரைப்படங்களைப்பார்க்கிறப்ப என்ன நினைப்பீங்க:
நான் திருமணம் முடிந்த புதிதில் தியேட்டருக்கு சென்று " Kabhi khushi Kabhi Gham" ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். செம மியூசிக், அட்டகாசமான திரைப்படம். பெரிய ஹீரோ, ஹீரோயின் அனைவரும் கலந்து ஆடுவது, பாடுவது, காதல், குடும்பம் என்று கலக்கலாக இருந்தது. அமிதாப்பச்சன் சார், அவரது மனைவி, சாருக்ஹான், ரித்திக் ரோசன், காஜல், கரீனா கபூர் .. நடிச்சிருந்தாங்க.
வங்காளி பார்ப்பதில்லை. Album Songs அருமையா இருக்கும். ஹிந்தி படம் மட்டுமே பார்ப்பேன்.
*****
சமையல்ல நார்த்தா & சௌத்தா:
நார்த் தான். என்னடா இப்படி செல்றேன்னு பார்க்கிறீங்களா? இருக்கும் இடத்தைப் பொருத்து நமது உணவு இருக்கும். சத்தீஸ்கரில் பெரும்பாலும் காய்கள் தான் கிடைக்கும். நம்மூர் மீன் அத்தனை சுவையிராது. 4,6 மீன் 150 ரூ என்பர். குழம்பு வைத்தால் உள்ளே போகாது. அப்போது காய்தான் பெரும்பாலான நாட்கள் செல்லும்.
அதே நேரம், நாகர் கோவிலுக்கு சென்று விட்டால் கடல் மீன்கள் தினமும் விதவிதமாக வாங்கி வருவார். சமையலும் களைகட்டும். ருசியும் அருமை. வயிரும் நிறைந்து போகும்.
சொல்ல போனால் திருமணமான புதிதில் எனக்கு காஃபி கூட போட தெரியாது. எனது அம்மா என்னை ஒரு இளவரசியை போல பார்த்துக் கொண்டார். வேலை செய்தால் அல்லவா தெரிவதற்கு. எனது குடும்பத்துக்கு நான் முதல் பெண் வாரிசு. அத்தனை பேரின் பாசமும், அக்கறையும் எனக்கு அதிகமாக உண்டு. அது, இப்போது வரையிலும் தொடர்கிறது.
ஆனால், பாவம் எனது கணவர். எனது சமையல் எப்படி இருந்தாலும் சகித்துக் கொள்வார். காஃபி போட, மீன் பொறிக்க, குழம்பு வைக்க, சிக்கன், காய் எல்லாம் செய்வதற்கு சொல்லிக் கொடுத்தாங்க. அருமையான மனிதர். அவரது சமையல் அபார ருசி. அத்தனை நாள் அப்படி சாப்பிட்டு பார்த்ததே இல்லை. பிறகு நானாக கற்றுக் கொண்டு செய்வேன்.
சில சமயம், சேமியா ரவா பாயசம் ஆகிடும், சாப்பாடு பொங்கல் ஆகிடும், சீனி காப்பி உப்பு காப்பியா மாறிவிடும்
*****
சில ரைட்டர் கதாநாயகனின் சில குணங்கள் தன்னோட கணவன் குணங்களை மிக்ஸ் பண்ணியிருப்பாங்க.
உதாரணமா முத்துலட்சுமி ராகவன் மேம் தன் கணவர் டெரர் பீஸ்ன்னு பப்ளிக்கா நிறைய டைம் சொல்லியிருக்காங்க.
அவங்க கதாநாயகன் மேக்சிமம் கம்பீரம்ன்ற பேர்ல டெரர் தான்.
உங்க கதாநாயகன் யாரை பிரதிபலிக்கிறாங்க
எனது கணவர் ஆன்டி ஹீரோ. நான் ஆன்டி ஹீரோயின். எனது குணாதிசயம் அனைத்து கதையிலும் வெளிப்படும். பட் அவரோட குணத்தை இது வரையில் எடுத்ததில்லை,
எனக்கு வேட்டைக்காரன் புகழ் தேவராஜ் IPS ரொம்ப பிடிக்கும். அவரது போலீஸ் படம் அத்தனையும் அட்டகாசமாக இருக்கும். தமிழில் விஜயகாந்த் சார் என்றால் தெலுங்கில் அவர் தான். தெலுங்கு பாசை தெரியா விட்டாலும் அவர் மீதான பாசத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து விட்டேன். எனது முதல் சிறு கதைக்கான பாத்திரம் ரகு . அது அவரது பெயரே. இணை யாரென்று வாசித்தவர்களுக்கு நியாபகம் இருக்கும்
******
எனக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் ஜஸ்ட் பார்வையாளாக மட்டுமே. உங்களுக்கு பிடித்த விளையாட்டுத்துறை:
நான் பள்ளி நாட்களிலே விளையாட்டு துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவள். நிறைய பரிசுகள் வாங்குவேன். சாட் புட், ஜாவ்லிங் இரண்டும் எனது விருப்ப விளையாட்டுகள். எங்களுடைய காவலர் குடியிருப்பில் பெண்களுக்கு தனியாக விளையாட்டுப் போட்டி வைக்கிறப்போது, 6 முறை பரிசு கிடைத்திருக்கிறது.
Ipl Cricket சில வருடங்களுக்கு முன்பு நடந்த போது, ஆரம்பம் முதல் கடைசி வரையில் நம்முடைய CSK அணி வெற்றி வாகை சூடி இறுதியில் தோல்வியை கவ்வியது. அதை ஏற்க முடியாமல் அழுது விட்டேன். பிறகில் இருந்து பார்க்க விரும்புவதில்லை. எனது கணவர் பார்ப்பாங்க.
******
உங்கள் கணவர்க்கு பிடித்த விளையாட்டு என்ன?
Cricket
*****
பொதுவாழ்க்கையில் வீட்டை அதிகமா பார்க்க முடியாது. சினிமாவுக்கு கூட்டிட்டுப்போகலைன்னு அடம்பிடிச்சது உண்டா:
இந்த மாதிரி நான் எப்போதுமே நடந்து கொண்டதில்லை. அவர்களது டியூட்டியை பொறுத்து, கிடைக்கும் நேரத்தில் வெளியில் சென்று வருவது வழக்கம்.
*****
டூ வீலரில் லாங் ட்ரைவ் சுத்தினதுண்டா :
ஆமாம். காவல் கிணவு LPSC ISRO Unit - ல் இருந்து கன்னியாகுமரிக்கு போயிருக்கிறோம். அருமையான அனுபவம்.
தென்றல் காற்றின் குழுமையில், சுற்றிலும் தெரிந்த பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், வயற்காடுகள், நீர் நிலைகளை ரசித்துக்கொண்டு. கணவர், மகன்கள் இருவருடன் சென்ற அனுபவம் இருக்கிறது. தனியாகவும் சென்றிருக்கிறோம்.
*****
வீட்டுக்காரர் போலீஸ் நாம பத்திரிக்கையில் ஏதாவது வேலை செய்யணும்னு நினைத்ததுண்டா :
இல்லைங்க.
******
முகநூலில் நிறைய பெண்கள் தங்கள் பொலம்பலை பொது வெளியில் பதிவாப்போடுறாங்க. உங்கக்கிட்டே பிரச்னை சொல்லி
ஏதாவது உதவிக்கேட்டதுண்டா :
எனது கண்ணில் படுகிற பதிவுகளைக் கண்டு, நானாகவே முன்னே சென்று கேட்டு, ஆறுதல் கூறிய துண்டு. சிலர் தனிப்பட்ட முறையில் சொல்வதைக் கேட்டு தேற்றியதும் உண்டு. ஆனால், இப்போது சற்று நிதானத்தைக் கடைபிடிக்கிறேன்.
*******