அழகிய பொன்மாலை பொழுது
அத்தியாயம் – 7
நானும் நிறுவும் அவளோட ரூம்க்கு வந்துட்டோம்…
நிரு: தேங்க்ஸ் கார்த்திக்...
கார்த்திக்: ஹோ... தேங்க்ஸ் ஆ... எதுக்கு...?
நிரு: தோணிச்சி சொன்னேன்...
கார்த்திக்: ஹா ஹா ஹா... மேடம்... நீங்க பண்ணாததையா நான் பண்ணிட்டேன்...
நிரு: இல்ல டா... நானும் ஓவரா தான் பேசிட்டு வந்துட்டேன்... அப்புறம் தான் அவங்க பண்ண விஷயத்தோட வேல்யூ புரிஞ்சது...
கார்த்திக்: ……………
நிரு: நான் ஈஸியா இப்போ சொல்லிட்டு வந்துட்டேன்... என்னைய புரிஞ்சுட்டு, அட்ஜஸ்ட் பண்ணிட்டு, எல்லாத்துக்கும் ரெடியா வரவன் கூட கல்யாணம்னு… பட், இதெல்லாம் எப்படி நடக்கும்... நான் இப்படி இருக்கேன்... அவனுக்கு நான் ஒரு பாரமா இருந்துடுவேன்ல...
கார்த்திக்: ஏன் இப்படி நினைக்கிற லூசு... நீ நினைக்கிற மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்க... எல்லாருக்குமே மனசுனு ஒன்னு இருக்கு... பறவைகள் பலவிதம் மாதிரி மனசும் பலவிதம்... அது ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு விதமா இருக்கும்... சோ, நீ வேணா பாரு உன்னையும் உன் மனசையும் ஒருத்தன் முழுசா ஏத்துக்கிட்டு வருவான்...
நிரு: நீ சொல்றத கேக்கும் போது நல்லா இருக்கு... ஆனா, நடக்குமானு யோசிக்கும் போது, யோசிக்க வைக்குது...
கார்த்திக்: இப்போ நீ அத பத்தி யோசிக்காம இருக்குறது நல்லது...
நிரு: இல்ல அது...
கார்த்திக்: பேசாம இருக்கியா, இல்ல அடி வாங்குறியா...?
நிரு: சரி சார்... நான் எதுவும் பேசல... நீங்க சொல்லுங்க மீரா யாரு...? அவள பத்தி சொன்னதும் ஏன் பல்ல காட்டுன...?
மீரா...அவள பத்தி கேட்டதுமே வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்...
நிரு: நீ அவள பத்தி சொல்லு இல்ல சொல்லாம போ... ஆனா, இந்த கருமத்த மட்டும் பண்ணாத... வெட்கப்படுறத பார்த்து சகிக்க முடியல...
கார்த்திக்: சரி சரி... சொல்றேன்... மீரானு கேட்டாலே என்னனு தெரியல, சிரிப்பு தானா வந்துடுது...
நிரு: ஹோ... சரி... அப்புறம்...
கார்த்திக்: நிஜமாவே மீரா செம்மம்மம பொண்ணு தெரியுமா... செம்ம கேரக்டர்... அவள ஒரு 3 ஹவர்ஸ் (hrs) மட்டும் தான் தெரியும்... அந்த டைம் மட்டும் தான் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிருக்கேன்... அதுவும் நைட் 12' ஓ கிளாக்ல இருந்து 2 ஓ' கிளாக் வரைக்கும் தான் தெரியும்...
நிரு: நைட் ஆ...
கார்த்திக்: அவள மீட் பண்ணதே வித்தியாசமான சிச்சுவேஷன்ல தான்...
அப்போ தான் மீராவ பத்தி சொன்னேன்... எந்த சிச்சுவேஷன்ல அவள மீட் பண்ணேனும் சொன்னேன்... அவ லைஃப்ல நடந்த விஷயத்த என்கிட்ட ஷேர் பண்ணத எல்லாத்தையுமே சொன்னேன்...
நிரு: அப்போ மீரா கடைசிவரைக்கும் அவளோட லவ்வ அவன்ட சொல்லவே இல்லையா?
கார்த்திக்: இல்ல. ஆனா, அவளுக்குள்ளையும் லவ் இருக்குனு அவன உணர வச்சிட்டா. அதான் அவனும் அவளை சுத்தி வந்துருக்கான்…
நிரு: இப்போ ஆரோன் அவ கூட இருந்திருந்தா ஹேப்பியா இருந்திருப்பா ல...
கார்த்திக்: அவ ஹாப்பியா தான் இருந்துருப்பா… ஆனா, நான் சோகமா இருந்துருப்பேன்…
நிரு: நீ என்ன சொல்ல வர...
கார்த்திக்: அவள புடிச்சிருக்குனு சொல்ல வரேன்...
நிரு: என்னடா, அவள் ட்ட தடுக்கி விழுந்திட்டியோ…?
கார்த்திக்: ஆமா... விழுந்துட்டேன்... நல்லாவே தெரியுது நான் அவளுக்கு அடிக்ட் ஆகிட்டேனு... என்னமோ தெரியல அவ கூட இருக்கணும்னு தோணுது... நிறைய விஷயம் அவ கூட பேசணும்னு தோணுது... அவ கை புடிச்சுட்டு ரொம்ப தூரம் நடக்கணும்னு தோணுது... அவ மடியில படுத்துக்கணும்னு தோணுது... அவ கன்னத்தை கிள்ளி கொஞ்சணும்னு தோணுது இன்னும் நிறைய தோணுது...
நிரு: நிறுத்து போதும்… நான் சிங்கள் டா… இப்படியெல்லாம் பேசி என்னைய காண்டாக்காத…
கார்த்திக்: இவ்ளோ விஷயமும் எனக்குள்ள புதைஞ்சு கிடக்குதுனு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்... அதுவும் உன்னால தான் தெரிஞ்சிகிட்டேன்... அவள பத்தி நீ கேட்காம இருந்திருந்தா சத்தியமா எனக்கே தெரிஞ்சிருக்காது...
நிரு: சரி சொல்லு... அப்போ அடுத்த முறை அவளை பார்த்த உன் காதல அவ்வட்ட சொல்லிருவியா?
கார்த்திக்: ஃபர்ஸ்ட் பழகணும்... அவ எப்படி பட்ட கேரக்டரா இருந்தாலும் ஓகேனு விட்டு கொடுத்துப்பேன்... பட், நான் யாரு அவளுக்குனு புரிய வைக்கணும்... சோ, அதுக்கு நான் ஃபர்ஸ்ட் அவ கூட நல்லா பழகணும்... கொஞ்சம் லேட் ஆகும்னு நினைக்கிறேன்...
நிரு: பசங்கலாம் எப்போ ரொம்ப வேகமா இருக்காங்க... பார்த்தாலே ஐ லவ் யூ சொல்ற இந்த ஜெனரேஷன்ல நீ வெயிட் பண்ணனும்னு சொல்ற... மீரா அழகா வேற இருக்கா... தொலைச்சுடாம இரு...
கார்த்திக்: கொஞ்சம் பயமா தான் இருக்கு...
நிரு: நீ நடத்து டா... என்ன நடந்தாலும் இந்த நிரு உன் பக்கம் தான் சப்போர்ட்டா இருப்பா...
கார்த்திக்: இதான் என் நிரு...
நிரு கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணதுக்கப்புறம் தான் மீரா மேல இருந்த லவ் ஃபுல்லா எனக்குள்ள பரவ ஆரம்பிச்சது... எப்போ டா அவள அவளை மறுபடியும் பாக்க வாய்ப்பு கிடைக்கும்னு காத்திட்டிருந்தேன்...
(மீரா நரேஷன்...)
ஒருவழியா போலீஸ்ட்ட மாட்டிக்காம எஸ்கேப் ஆயிட்டு வந்துட்டேன்.... லைசென்ஸ் எடுக்கணும்னு போனா 8 போட சொல்றானுங்க... 8 போட ட்ரை பண்ணா 7 ½ ல முடிஞ்சிருது அதுக்கு நான் என்ன பண்றது... எதுக்கு வராதத முயற்சி பண்ணிட்டுனு விட்டுட்டு இப்படியே சுத்த ஆரம்பிச்சுட்டேன்...
இப்போ நான் என் செல்ல குட்டி, டியர், பெஸ்ட்டி சாருவ பாக்க தான் போயிட்டு இருக்கேன்... ரொம்ப டேய்ஸ் கழிச்சு பாக்க போறேன்... இன்னைக்கு தான் அவ சென்னை வந்தா... என்னோட பெஸ்ட் பிரண்ட் இவ தான்... என் அப்பாக்கு அப்புறம் சாரு தான் என் லைப்க்கு இம்பார்டன்ட்...
அப்புறம் தான் ஆரோன் கூட நெருக்கம் ஆனேன்... அவனுக்கே தெரியும் சாரு எனக்கு எவ்ளோ முக்கியம்னு... என்னோட சின்ன வயசுல இருந்து என் கூட இருக்குறது அவ தான்... நிஜமாவே செம லவ்லி கேரக்டர்... பொறுமைசாலி, புதுசா பாக்குறவங்களுக்கு சாப்ட்டா தெரிவா, அதையே பழகி பார்த்தவங்களுக்கு கொஞ்சம் ஜாலியா, வாயாடியா தெரிவா...
நான் தப்பு பண்ணா என் அப்பா கூட கண்டிக்க மாட்டாங்க... ஆனா, இவ கண்டிப்பா... அப்பா திட்டினாலும் இவ திட்டுவா... தப்பு பண்ணா என் அப்பாக்கு பயப்படுறேனோ இல்லையோ இவளுக்கு பயப்படுவேன்.. இவ செமையா படிப்பா... கொஞ்சம் அறிவாளி... பட், நான் இவளுக்கு அப்படியே ஆப்போசிட்...
சரியான மக்கு... இவ கூட நான் பிரண்ட் ஆனதே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்... அது ஒரு தனி பீல்... அப்போ 5th ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தோம்... இவ படிக்கிற பசங்க கூட மட்டும் தான் பிரண்ட்ஷிப் வச்சிருந்தா... இவள எல்லாருமே பாராட்டிட்டு இருப்பாங்க...அதனாலேயே அவள புடிக்க ஆரம்பிச்சது...
நம்மள தான் யாரும் பாராட்ட மாட்டாங்க நமக்கு புடிச்சவங்கள பாராட்டுறாங்களேனு அவ கூட பழகணும்னு ஆசை பட்டேன்... ஆனா, படிக்கிற பசங்க கூட மட்டும் தான் சுத்துவா... அப்போ தான் ஒரு சான்ஸ் கிடைச்சது...
(குட்டீஸ் பிளாஷ்பேக்)
ரகு : நீ ஏன் பிரியாவ விட இந்த டைம் அதிக மார்க் வாங்குன...
பிரியா : இந்த டைம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனா எனக்கு என் அப்பா சைக்கிள் வாங்கி தரேனு சொன்னாங்கனு சொன்னேன் உன்கிட்ட... உனக்கும் அதுல ரவுண்ட் தரேனு சொன்னேன்ல...
சாரு : நான் வேணும்னே வாங்கல மிஸ் தான் போட்டாங்க...
ரகு : நம்ம மூணு பேரும் தானே பிரண்ட்ஸ்... எப்போ நீ பிரியாவ விட்டு குடுக்காததால பாரு அவ அழுவுறா...
பிரியா : ………….
இதெல்லாம் நான் கேட்டுட்டு இருந்துட்டு அவங்களுக்குள்ள என்டர் ஆனேன்... சாருக்கு போய் ஹேண்ட்ஷேக் குடுத்து வேணும்னே பிரியாவையும், ரகுவையும் கடுப்பேத்த விஷ் பண்ணேன்...
மீரா : சூப்பர்ப் சாரு... இந்த டைமும் நீ தான் ஃபர்ஸ்ட் ரேங்க்... நீ எனக்கு சொல்லி கொடுத்தா நானும் எப்படியாவது பாஸ் ஆகிடுவேன்... எனக்கு சொல்லி தரியா... ப்ளீஸ்...
சாரு : ☹ ☹
மீரா : ஏன் சோகமா இருக்க...?
ரகு : சாரு எந்த டைம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்காம விட்டு குடுத்துருந்தா பிரியா ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிருப்பா... அவங்க டாடி சைக்கிள் வாங்கி குடுத்துருப்பாங்க... அதான் ஏன் நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனனு பிரியாக்காக பேசிட்டு இருந்தேன்...
மீரா : அட பாவி... இதுக்காக சாருவ நீ திட்டுனிய... உன்ன தானே அவ பிரண்ட்னு சொல்லிட்டு இருப்பா... ஆனா, இப்போ பிரியாக்காக நீ இவள திட்டுறியா... பாவம் தானே இவ...
ரகு : இல்லா நான் ஏன் இப்படி பண்ணேன்னு தான் கேட்டேன்...
மீரா : அட பாவி... ஏன் இப்படி பண்ணேன்னு கேட்டா...? அவ வேணும்னே பண்ணிருக்க மாட்டா... தெரியாம தானே பண்ணிருக்கா... உன் பிரண்ட்ட நீயே புரிஞ்சிக்க மாட்டியா...
பிரியா : நீ ஏன் எங்களுக்குள்ள வர... நீ போ மீரா... நாங்க பேசி தீர்த்துப்போம்...
மீரா : (மைண்ட் வாய்ஸ்) அடேய், குண்டா. என்னைய வா குறுக்க வரேன்னு கேக்குற. இருடி எப்படி கோர்த்துவிடுறேனு பாரு.
சாரு : ☹ ☹
மீரா : ஆனா, நீங்க ரெண்டு பேரும் சாருவ திட்டிட்டு தானே இருக்கீங்க... எனக்கே கஷ்டமா இருக்கு... உங்க பிரண்டா நினைச்சி… அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் பாவம் தானே அவ...
ரகு : ஏய் நீ போடி...
மீரா : இப்போ நீ என்ன போடி சொல்ற... கொஞ்ச நேரம் கழிச்சு பிரியாக்காக சாருவ போடி சொல்லிடுவ தானே...
ரகு : சாரு இவ பேச்ச கேக்காத...
சாரு : நான் ஏன் கேக்க கூடாது... நீ பிரியாக்கு தானே சப்போர்ட் பண்ற... எனக்கு சப்போர்ட் பண்ணாம திட்டுன தானே நீ...
பிரியா : அவன் ஏன் நீ இப்படி பண்ணனு தானே திட்டுனான்...
சாரு : நான் தெரியாம பண்ணேனு தானே சொன்னேன்... ஆனாலும் நீ திட்டுன தானே...
மீரா : ஹோ... நீ தெரியாம பண்ணேனு சொல்லியும் திட்டுனானா இவன்... பாவம் டா சாரு... அவளுக்கு பதில் பேச தெரியாதுனு எப்படிலாம் திட்டுற...
ரகு : நீ எப்போ பேசாம போகலனா அடிச்சுடுவேன்...
மீரா : என்னைய அடிப்ப, அப்புறம் சாருவையும் அடிப்ப தானே... பாரு சாரு உன்னையும் அடிப்பானாம்...
சாரு : இனிமே நீங்க என் பிரண்ட்ஸ் கிடையாது... இருங்க உங்க ரெண்டு பேரையும் மிஸ் டா சொல்லிடுறேன்... என்ன அடிப்பேனு சொன்னீல...
ரகு : சாரு நான் அப்படி சொல்லல...
மீரா : நீ தானே டா அடிப்பேனு சொன்ன...
பிரியா : விடு டா... நம்ம இனிமே இவ கூட பேச வேணாம்... இனிமே நீ எங்க பிரண்டே கிடையாது...
மீரா : போடி... சாரு நான் இனிமே உனக்கு பிரண் டா இருப்பேன்... நீ கவலை படாத...
ரகு : அவ சரியாவே படிக்க மாட்டா... பேட் கேர்ள் அவ...
சாரு : நான் அவளுக்கு சொல்லி கொடுத்து மார்க் வாங்க வைப்பேன்... போடா...
பிரியா : இனிமே உன்ன எங்க கூட கூட்டு சேர்த்துக்கவே மாட்டோம்...
சாரு : நீ என்ன சொல்றது... நான் தான் உங்க கூட சேர மாட்டேனு சொல்றேன்...
ரகு : கடைசியா சொல்றேன் எங்க கூட வருவியா இல்ல மீரா கூட போவியா...?
அப்போ சாரு என் தோள் மேல கை போட்டு என் காதுல சொன்னா... எனக்கு ஹேப்பியா இருந்தது...
சாரு : (காதுல) அவங்களுக்கு டூ விடலாம்...
மீரா & சாரு : டூ டூ துப்பாக்கி... போலீஸ் காரன் பொண்டாட்டி... வந்தா வாடி... வராட்டி போடி... லொல்... லொல்... லொல்...
ரகு & பிரியா : ☹
பிரியா : போ... நெக்ஸ்ட் டைம் நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என் டாடிட்ட சைக்கிள் வாங்கிட்டு உனக்கு ரவுண்ட் கொடுக்கவே மாட்டேன்... ரகுக்கு மட்டும் தான் கொடுப்பேன் போடி...
மீரா : சாரு நான் என்னோட சைக்கிள் உனக்கு வச்சுக்கவே கொடுக்குறேன் டி... வா நம்ம போலாம்...
பிரியா : ……..
ரகு : ………
அவ தோள் மேல நானும், என் தோள் மேல அவளும் கை போட்டு சிரிச்சுட்டே ஜாலி அஹ் நடந்து போனோம்... அப்போ பிரியாவையும், ரகுவையும் திரும்பி பார்த்து சாரு சொன்னா...
சாரு : இனிமே மீரா தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்... நீங்க ரெண்டு பேரும் சும்மா...
(பிளாஷ்பேக் எண்ட்)
இப்படி தான் நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆனோம்... சின்ன வயசுலேயே சேட்டையெல்லாம் பண்ணிருக்கேன்.. எனக்கு சாருவ ரொம்ப புடிக்கும் அதான் அப்படி பண்ணேன்... தப்பா தெரியல எனக்கு... ஏன்னா அது சின்ன வயசு... அதனால தெரியல... நாங்க சேர்ந்து செய்யாத லூட்டி இல்ல...
எப்படியோ அவ வீட்டுக்கு போயிட்டேன்... கேரளால இருக்க அவ பாட்டி வீட்டுல இருந்து இன்னிக்கு தான் இங்க வரா... இவ இல்லாம போர் அடிச்சது தான் மிச்சம்... அவ அப்பா, அம்மாட்ட பேசிட்டு ஒரு ஹக் வாங்கிட்டு மேல அவ ரூம்க்கு போனேன்... டோர் லாக் பண்ணாம க்ளோஸ் ஆகிருந்தது... நான் வேகமா ஓபன் பண்ணி பயமுறுத்தலாம்னு போனேன்...
மீரா : சாருருருருருரு…
ஆனா, அவள பார்த்த போது ஷாக் ஆகி நின்னேன்... அவ அழுதுட்டு இருந்தா... இதுவரைக்கும் சாரு அழுது நான் பார்த்ததே இல்ல. முதல் தடவையா இவ அழுவுறத பாக்குறேன். இவ அமைதியான பொண்ணு தான்…
பொதுவா அமைதியா இருக்குறவங்க மனசளவுல தைரியமா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்… அதை நேருளையும் இவ ரூபத்துல பார்த்துருக்கேன்… ஆனா, இவளே இப்படி உடைஞ்சி அழுவுறா, அப்போ என்ன நடந்திருக்கும்…? அவள இப்படி பாக்கவும் எனக்கு கஷ்டமா இருந்தது... ☹
(பொழுது தொடரும்…)