அழகிய பொன்மாலை பொழுது - 6 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய பொன்மாலை பொழுது - 6

New updates

LATEST

....

Member
Joined
Jun 18, 2026
Messages
61
Reaction score
25
Points
18
....
 
Last edited:

வாசகர்

New member
Joined
Jul 19, 2026
Messages
21
Reaction score
11
Points
3
இன்றைய அத்தியாயம் நல்ல அறிவுரைகளும், குறும்புத்தனமும் கலந்த கலவையாக இருந்தது. பல இடங்களில் பக்குவமான கருத்துகளை மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருந்தீர்கள். படிக்க மிகவும் ரசிக்கும்படியும், சிந்திக்க வைப்பதுமான அத்தியாயமாக அமைந்தது. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.
 

keerthi

New member
Joined
Jul 18, 2026
Messages
12
Reaction score
11
Points
3
நிரு, அவளுடைய விஷயத்தில் எடுத்த முடிவுகளும், நடந்துகொண்ட விதமும் முழுவதும் சரிதான். தன்னுடைய சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் காத்துக்கொள்ளும் தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் நிறைந்த பெண்ணாகவே என் கண்களுக்கு தெரிகிறாள். அதனால்தான் அவளுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஆகமொத்தத்தில், இன்றைய அத்தியாயம் மிகவும் நன்றாக இருந்தது.
 

titus shan

New member
Joined
Jul 6, 2026
Messages
13
Reaction score
11
Points
3
அழகிய பொன்மாலை பொழுது

அத்தியாயம் – 6


கார்த்திக் இவ்ளோ தூரம் எடுத்து சொன்னதுக்கப்புறம் தான் புரிஞ்சது... கோவம் மனுஷனோட மைந்த மழுங்க வச்சிருது… லைஃப் இன்னும் இருக்குனு புரிய ஆரம்பிச்சது... அவனுக்கு நிறைய விஷயத்தை புரிய வச்ச எனக்கு, இந்த விஷயத்தை புரிஞ்சுக்க தெரியாத முட்டாள் ஆகிட்டேன்... ☹

அவன் பார்த்து சிரிச்சுட்டு அவன் கன்னத்தை கிள்ளி விட்டு சொன்னேன்...

நிரு : எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்கணும்னு அவசியம் இல்ல... எனக்காக யோசிக்க உன்னை மாதிரி ஒரு பிரண்ட் இருந்தா போதும்... நான் என் லைஃப்ப வாழ்ந்துடுவேன்...

கார்த்திக் : ஹா ஹா ஹா... எனக்கு இருக்குற எந்த ஒரு லைஃப்ல உங்க எல்லாரோடையும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடணும்...

நிரு : லூசு...

கார்த்திக் : உன்னோட அப்பா, அம்மா அங்க ரொம்ப கவலையோட இருப்பாங்க... அவங்ககிட்ட உடனே பேசலாம்...

நிரு : ஹ்ம்... போன் பண்றேன்...

கார்த்திக் : போனா...? ஓடிரு... நேர்ல போய் பேசலாம்... நீ போன்ல பேசுனா உன்னோட பேச்சுல இருக்குற உண்மை தெரியாது... அதுவே நேர்ல பேசுனா உன்னோட முகமே உன் மனசுல இருக்குறதை சொல்லிடும்... வா... வா...

நிரு : ஹே, நான் வீட்டுக்கு போனதுக்கப்புறம் நானே பேசிக்கிறேன்..

கார்த்திக் : நீ ஈஸியா சொல்லிட்ட... அங்க உன்னை நினைச்சு தான் உன் அப்பா, அம்மா கவலையோட இருப்பாங்க... நீ வீட்டுக்கு போற வரைக்கும் அவங்க அப்படியே இருந்துட்டு போகட்டும் சொல்றியா...

நிரு : அட போடா... இந்நேரம் மதியம் சாப்பாட்டுக்கு வடை போடவா? பஜ்ஜி போடவானு? கலந்து பேசிட்டு இருப்பாங்க. அவங்க ஒரு காதல் பறவைகள்... சரி வா போலாம்…

கார்த்திக் : ஹா ஹா ஹா...

(கார்த்திக் நரேஷன்...)

நான் நிரு உட்கார வச்சு தள்ளிட்டு போனேன்...

நிரு : எப்படி டா இப்படிலாம் பேச கத்துக்கிட்ட...

கார்த்திக் : எல்லாமே உன்னோட தாக்கம் தான்... நா தப்பு பண்ணும் போது இதான் சான்ஸ்னு எப்படி உள்ள பூந்து அட்வைஸ் போட்டு தாக்குற... அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு தான் இப்படி பழி வாங்குறேன்...

நிரு : சீஈஈஈ... மோசமானவன் டா...

கார்த்திக் : நா மோசமானவன்னா நீ மோசமானவளையும் முக்கியமானவ...

நிரு : ஹே, போடா...

வெளிய வந்த உடனே நிரு ஒரு ஆட்டோல உட்கார வச்சேன்... அவளோட வீல் சேர் மடிச்சு ஆட்டோல வச்சுட்டு நா ஆட்டோ பின்னாடியே போனேன்... ஒரு சிக்னல் வந்தது... நாங்க போற வழியில சிக்னல் முன்னாடியே போட்டான்... முடிய போற செகண்ட்ஸ் தான் இருந்தது... அதனால ஆட்டோ காரன் சீக்கிரமா போகணும்னு வேகமா ரைஸ் பண்ணிட்டு போனான்...அதுக்குள்ளயும் சிக்னல் குளோஸ் ஆச்சு... என்னால போக முடியல...

பட், ஆட்டோகாரன் கிராஸ் பண்ணி போனதுல ஆப்போசிட் சிக்னல் ஓபன் ஆன உடனே அந்த சைடு இருந்து வண்டியெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு... ஆட்டோ காரன் போகவும், ஒரு பொண்ணு வண்டில கிராஸ் பண்ணவும் கரெக்ட்டா இருந்தது... இந்த ஆட்டோ காரன் அந்த பொண்ணு மேல இடிக்க போய் வேகமா பிரேக் புடிச்சான்...

கார்த்திக் : ஹேய்ய்ய்ய்ய்...

நல்லவேளை மோதல… அந்த பொண்ணு நடு ரோட்லேயே நின்னு ஆட்டோ காரனை ஓரம்கட்டுனா... மத்தவங்க எல்லாருமே அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போனாங்க... நானும் பைக் ஓரத்துல நிப்பாட்டிட்டு ஆப்போசிட்க்கு கிராஸ் பண்ணலாம்னு பைக் நிப்பாட்டி தள்ளிட்டே போனேன்...

(மீரா நரேஷன்...)

ஆட்டோ காரனை திட்டி ரோடு ஓரத்துக்கு இழுத்துட்டு போய் நிப்பாட்டி வச்சு சண்டை போட்டேன்... பிகாஸ், ஆட்டோ காரன் இடிக்க வந்தது என் மேல தான்...

மீரா : ஏன் டா... சிக்னல் தான் போட்டாங்குனு தெரியுதுல அப்பறம் என்ன டேஷ்க்கு நீ வண்டியை ஓட்டிட்டு வர...

ஆட்டோக்காரன்: இந்தா மா... சிக்னல் போடுறதுக்கு முன்னாடி உன்ன எவன் வர சொன்னான்... அதான் வரேனு தெரியுதுல நீ பொறுமையா வரது...

மீரா: உனக்கென்ன டா அப்படி அவுதி...

ஆட்டோக்காரன்: நீ எவன் கூடாயோ ஊர் சுத்த போறதுக்கு பறந்துட்டு போறில... அது மாதிரி ஆட்டோ வந்தா நிப்பாட்டி தான் போகணும்...

நாங்க சண்ட போடுறத பார்த்ததுமே கூட்டம் கூட ஆரம்பிச்சுடுச்சு...

மீரா: நா எவன் கூட சுத்துனா உனக்கென்ன... ஒழுங்கா மூடிட்டு நீ ஓட்டிருக்கணும்... நீ சோறு போட்டு என்ன வளக்குரியா..? ரொம்ப கவலை படுற... வந்தது உன் தப்பு... மேல மோதி எதாவது ஆகிருந்தா நீயா எனக்கு பதில் சொல்லுவ?...

ஆட்டோக்காரன்: இதோ பாருமா பொண்ணா ஆச்சேனு பாக்குறேன்... ரொம்ப பேசிட்டு இருந்தா பேஜாரா ஆகிடும்...

மீரா: அய்ய்யே... எங்க காட்டு உன் கோவத்த... பாக்கலாமா... யாருக்கு சப்போர்ட் கிடைக்குதுனு... உன்னால முடிஞ்சத பண்ணு டா...

ஆட்டோக்காரன்: நீ என்ன மா என் பொழப்ப கெடுக்குறதுகுனே வந்திருக்க போல...

மீரா: எனக்கு அதானே வேலை... உன் பொழப்ப பார்க்க நீ உயிரோட இருக்கணும்... எப்படி சிக்னல் போட்டதும் வந்தா உனக்கு ஊத வேண்டிய தான் சங்கு...

(கார்த்திக் நரேஷன்...)

நா பைக ஓரத்துல பார்க் பண்ணிட்டேன்... கிராஸ் பண்றதுக்குள்ளையும் போதும் போதும்னு ஆகிடுச்சு... அங்க வேற அந்த பொண்ணு சண்ட போட்டு இருக்கா... எல்லாருமே வேடிக்கை தான் பாக்குறாங்களே தவிர விலக்க மாட்டேங்குறாங்க... நானும் கொஞ்சம் கொஞ்சமா அந்த பெரிய ரோட கிராஸ் பண்றேன்...

(மீரா நரேஷன்...)

ஆட்டோக்காரன்: பொம்பள பிள்ளையா அடக்கமா பேசு... பஜாரி மாதிரி கத்திகிட்டு நிக்கிற... ரோட் தானே இது... உங்க வீட்ல சொல்லி கொடுக்கலையா ரோட்ல எப்படி நடந்துக்கணும்னு...

மீரா: நீ வேணா வந்து டியூஷன் எடுக்குறியா...

நிரு: ……………

மீரா: ரோட்ல எப்படி நடந்துக்கணும்னு கத்துக்குறேன்... ஏன் இப்படி வந்தானு கேட்ட எனக்கு பாடம் சொல்லி குடுக்க வரியா... உன்கிட்ட கேட்டேனா? எப்படி நடந்துக்கணும்னு...

ஆட்டோக்காரன்: இதோ பாருமா... ஒழுங்கா போய்டு...

மீரா: என்ன பண்ணிட முடியும் உன்னால...? ஆஹ்ன்…?

அதுக்குள்ளயும் டிராபிக் போலீஸ் வந்துட்டாரு... மனுஷன் எவ்ளோ நேரம் எங்க போனான்னே தெரியல... வாரான் இப்போ... எந்த போலீஸ்ட்ட நான் ஓவர் ஆ பேசுனா லைசென்ஸ் கேட்டுடுவான்... சோ, நடிச்சுட வேண்டியது தான்...

மீரா: சார் வாங்க... சிக்னல் முடிஞ்சும் இந்த ஆட்டோகார சார் வண்டிய ஓட்டிட்டு வந்து என் மேல மோத வாராரு... அப்படி பண்ணது மட்டும் இல்லாம என்கிட்ட ஓவரா பேசிட்டு இருக்காரு... நான் ஒரு பொண்ணு எப்படி இவர் பேசுறதெல்லாம் தாங்கிப்பேன்...

நிரு: ……………

ஆட்டோக்காரன்: இந்தம்மா ஏய்…

போலீஸ்: யோவ்வ்வ் என்னய்யா இதெல்லாம்...

ஆட்டோக்காரன்: சார்...

மீரா: தப்ப அவர் மேல வச்சுட்டு ஏன் இப்படி பண்ணீங்கனு கேட்டா, எங்க வீட்ல இருக்க ஆளுங்கள எல்லாம் இழுத்து சண்டை போடுறாரு... எனக்கு அவமானமா இருக்கு சார்... என்னால எப்படி இதெல்லாம் தாங்க முடியும்... வீட்டுக்கு தெரிஞ்சா நான் அவ்ளோ தான்...

நிரு: (மனசில்) அடி பாவி... என்ன ஒரு நடிப்பு...

போலீஸ்: விடு மா நான் பார்த்துக்குறேன்... நீ கிளம்பு மா... ஒரு பொம்பள புள்ள இங்க நிக்க வேணாம்...

மீரா: அப்போ நான் வாரேன் சார்... தேங்க் யூ என்ன காப்பாத்துனதுக்கு...

போலீஸ்: பரவால மா...

மீரா: (மனசில்) யெப்பாஆஆ... தப்பிச்ச போதும் டா சாமி...

போலீஸ்: யோவ் எல்லாரும் போங்கய்யா... கூட்டத்தை கலைங்க...(கார்த்திக் நரேஷன்...)

நான் எப்படியோ அந்த இடத்துக்கு வந்துட்டேன்.. கூட்டமெல்லாம் கலைஞ்சு போய்ட்டு இருந்தாங்க... அந்த பொண்ணும் ஸ்கூட்டிய எடுத்துச்சு... அப்போ தான் பார்த்தேன் அது யாருனு... மீரா...

கார்த்திக்: மீராவா அது?... அப்போ இவ்ளோ நேரம் சண்டை போட்டது மீராவை? இவளா இப்படி சண்ட போட்டா...

நிருவ பார்த்தேன்... அவ என்ன பார்த்தா...

கார்த்திக்: உனக்கு எதுவும் ஆகலல...

நிரு: நோ நோ... ஐ அம் ஆல்ரைட் டா...

போலீஸ் அந்த ஆட்டோகாரன்கிட்ட தனியா கூட்டிட்டு போய் பேசிட்டு இருந்தாரு...

கார்த்திக்: பெரிய பிராப்ளமா...

நிரு: அந்த பொண்ணு திட்டி தீர்த்துட்டா... முடியல... என்ன பேச்சு பேசுறா...

கார்த்திக்: அவ எனக்கு தெரிஞ்சவ தான்...

நிரு: உனக்கு தெரிஞ்சவளா... எப்படி பேசிட்டு போனா தெரியுமா... ஆனா, அப்படியே போலீஸ் வந்ததும் நடிச்சுட்டா...

கார்த்திக்: நடிச்சுட்டாளா...

நிரு: ஆமா டா... அவ்ளோ நேரம் சரிக்கு சரி சண்ட போட்டுட்டு இருந்தவ போலீஸ் வந்ததும்மே "ஒரு பொண்ணுகிட்ட இப்படியெல்லாம் கோவமா பேசுறான் இந்த ஆட்டோக்காரனு" நடிச்சுட்டா டா... அதான் அந்த ஆட்டோ காரர தனியா கூட்டிட்டு போய் போலீஸ் பேசிட்டு இருக்காரு...

அப்போ அந்த ஆட்டோ கார் வந்தாரு...

கார்த்திக்: கொஞ்சம் நின்னு போயிருக்கலாம்ல... பாருங்க இப்போ பிரச்சனை...

ஆட்டோக்காரன்: அந்த பொண்ணு சிக்னல் விழுறதுக்கு முன்னாடியே பைக் ஓட்டிட்டு வந்து விழுவுது... என்கிட்ட சண்டைக்கு வருது பா... நா என்ன பண்றது... இதெல்லாம் இப்போவே இப்படி வரிஞ்சி கட்டிட்டு வருதே, இன்னும் மாமியார் வீட்டுக்கெல்லாம் போன என்னனென்ன பிரச்சனையெல்லாம் இழுக்குமோ?... நல்லா பெத்துவுட்டுருக்கானுங்க...

நிரு: ஹா ஹா ஹா...

கார்த்திக்: ஹா ஹா ஹா...

(சிரிச்சதுக்கு அப்பறம் தான் எனக்கு தோணிச்சு)

கார்த்திக்: (மைண்ட் வாய்ஸ்) நா எதுக்கு இப்போ சிரிக்கிறேன். இது நம்மாளாச்சே... இவர் இப்படி சொல்றதுக்கு கோவம் தானே பாடணும்.

ஆட்டோக்காரன்: அந்த கிறுக்கால எனக்கு தான் Rs.500 தண்டம்... ச்சீ... சாவு கிராக்கிங்க... எனக்குனு வருது...

கார்த்திக்: சரி வெயிட் பண்ணுங்க நா... நா பைக் எடுத்துட்டு வந்ததும் கிளம்புங்க...மீராவா இப்படி... அன்னைக்கு என்னடானா, பீலிங்ச கொட்டி அவளையே எனக்கு அழகா காட்டிட்டு இருந்தா… இப்போ என்னடான்னா, சரிக்கு சரி சண்டைக்கு நிக்கிறா... அவள நினைச்சு சிரிச்சுட்டு போனேன்...

எவ்ளோ தைரியம் இப்படி சண்டைக்கு நின்னுருக்கா... பரவலா இதுவுமே அவளுக்கு அழகாத்தான் இருக்கு… எத ரசிகுறதுன்னே தெரியல... நானும் போய் பைக்க எடுத்துட்டு வந்தேன்... ஆட்டோவும் கிளம்பி வீட்டுக்கு போனது... நிருவ வீல் சேர்ல தூக்கி உட்கார வச்சு ஆட்டோக்கு பைசா கொடுத்துட்டு நிருகிட்ட பேச்சு கொடுத்தேன்...

கார்த்திக்: அங்க சண்ட போட்டாளே அவளோட பேரு மீரா...

நிரு: மீராவா... நேம் நல்லாருக்கு... ஆனா, அவ இருக்காளே அப்பப்பா...

கார்த்திக்: அவ நல்ல பொண்ணு தான்... செம தைரியமான பொண்ணு...

(அப்படி சிரிச்சிகிட்டே சொன்னதுமே என் மூஞ்ச டக்குனு பார்த்தா நிரு...)

நிரு: தைரியமான பொண்ணு ஓகே... பட், அத சொல்லும்போது ஏன் உன் வாயில இருக்குற பல்லெல்லாம் தெரியுது...?

டக்குனு நா க்ளோஸ் பண்ணேன்... விளையாட்டுக்கு முறைச்சுட்டு அவகிட்ட சொன்னேன்...

கார்த்திக்: வீடு வந்துடுச்சு... அப்புறம் சொல்றேன் அவள பத்தி...

வீட்டுக்குள்ள போனதுமே அப்பாவும், அம்மாவும் எங்களையே பார்த்தாங்க...

அப்பா: வா கார்த்திக்...

அம்மா: வா பா... உட்காரு... என்ன சாப்பிடுற...

கார்த்திக்: நான் இ ப்போ என்ன கேட்டாலும் நீங்க நல்லா செஞ்சு தர மன நிலைமைல நீங்க இருக்க போறதில்ல... சோ, இ ப்போதைக்கு எனக்கு எதுவும் வேணாம்... கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் சாப்பிட்டுகிறேன்... நிரு தான் ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்தா...அப்பாவும், அம்மாவும் அவளையே பார்த்தாங்க... அவளும் பேச ஆரம்பிச்சா...

நிரு: ரெண்டு பேர் ட்டையும் ஸாரி சொல்லிக்கிறேன்... நீங்க எனக்கு நல்லதுனு நினைச்சு பண்றீங்க... அது நான் எப்படி இருக்குறதாலையோ என்னவோ... தப்பா முடிஞ்சிடுது... அதனால நானும் ஹர்ட் ஆகி உங்களையும் ஹர்ட் பண்ணிடுறேன்... அதுக்கு ஸாரி...

அப்பா: விடு டா... உன்ன நல்லா பார்க்கணும்னு ஆசை... நாங்களும் ஒரு பொண்ணுக்கு சராசரி அப்பா அம்மா தானே... எங்களுக்கும் ஆசை இருந்தது அதான்... ஆனா, உன்ன கேட்காம முடிவெடுத்தது தான் தப்பு...

நிரு: இல்லப்பா... நான் அப்படி பிஹேவ் பண்ணிருக்க கூடாது... நான் கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணிருக்கணும்... அதுவும் பண்ணல... எனக்கு இது லேட்டா தான் புரிஞ்சது...

அம்மா: ……….

நிரு: எனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான் பா...

அம்மா முகத்துல அப்போ தான் சந்தோசம் வந்தது... எப்போதுமே நம்மள நம்ம சந்தோசமா இருக்குறதை விட நம்ம சுத்தி இருக்குறவங்கள சந்தோசப்படுத்தி பார்க்குறதுல தான் சந்தோசமே அடங்கி இருக்கு...

நிரு: இப்போ நான் ஓகே சொல்றது என்னோட அப்பா, அம்மாக்காக தான்... நீங்க என்ன நல்ல பொசிஷன்ல பார்க்கணும்னு ஆசை பட்டதுக்காக தான்... ஆனா, ஒரு கண்டிஷன்...

அப்பா: நீ சம்மதிச்சதே எங்களுக்கு சந்தோசம் தான்... என்ன கண்டிஷனா இருந்தாலும் நாங்க ஒத்துக்குறோம்...

நிரு: எனக்கு வர போறவன நான் தான் சூஸ் பண்ணுவேன்... என்னைய முழுசா ஏத்துக்கிட்டானு எனக்கு தோனனும். அப்போ தான் நான் கல்யாணமே பண்ணிப்பேன்....

அம்மா: இதெல்லாம் நடக்குமா டி...?

கார்த்திக்: மா... பேசுறது நிரு... அவள என்கரேஜ் பண்றதும், சப்போர்ட் பண்றதும் தான் நம்ம வேலை... நம்ம அவ கூட இருந்தாலே போதும்... அவள நல்லா வாழ வச்சுடலாம்...

ரெண்டு பேருமே என்னையும், நிருவையும் மாறி மாறி பார்த்துட்டு இருந்தாங்க... அப்பா ஸ்டார்ட் பண்ணாரு...

அப்பா: சரி டா... உனக்கு கார்த்திக் எப்படி ஃப்ரெண்டோ... அதே மாதிரி தான் நாங்களும்... நீயே நிறைய சொல்லிருக்க எனக்கு நீங்களும் ஃப்ரெண்ட் தான்னு... சோ, அப்படியே எப்பவும் வச்சுக்கோ... நாங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்... எப்போதுமே...

நிரு அப்பா பக்கத்துல போய் அப்பா நெஞ்சுல சாஞ்சு சிரிச்சுட்டு சொன்னா...

நிரு: லவ் யூ பா...

அப்பா: லவ் யூ டா...

அம்மா: நானும் உங்க கூட சேர்ந்துக்குறேன்...

அவங்க குழந்தைத்தனம் எப்படி சொன்னதுமே நிரு அவங்களையும் ஹக் பண்ண கை காட்டுனா... அவங்களும் நிருக்கு வந்து நெற்றில கிஸ் கொடுத்தாங்க...

நிரு: லவ் யூ மா...

இதெல்லாம் பார்த்தா எனக்கு ஹேப்பி ஆ இருந்தது...

(பொழுது தொடரும்…)
இன்றைய அத்தியாயம் மிகவும் அழகாகவும், பண்பாகவும் அமைந்திருந்தது. மீராவின் குறும்புத்தனமும், நகைச்சுவை கலந்த உரையாடல்களும் படிக்க மிகவும் ரசிக்க வைத்தது. மொத்தத்தில், மனதை கவர்ந்த ஒரு அருமையான அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 

....

Member
Joined
Jun 18, 2026
Messages
61
Reaction score
25
Points
18
Thank you so much... Ungaloda valuable comment enaku romba mukkiyam
 

....

Member
Joined
Jun 18, 2026
Messages
61
Reaction score
25
Points
18
இன்றைய அத்தியாயம் மிகவும் அழகாகவும், பண்பாகவும் அமைந்திருந்தது. மீராவின் குறும்புத்தனமும், நகைச்சுவை கலந்த உரையாடல்களும் படிக்க மிகவும் ரசிக்க வைத்தது. மொத்தத்தில், மனதை கவர்ந்த ஒரு அருமையான அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Mikka nandri 🥰
 

....

Member
Joined
Jun 18, 2026
Messages
61
Reaction score
25
Points
18
நிரு, அவளுடைய விஷயத்தில் எடுத்த முடிவுகளும், நடந்துகொண்ட விதமும் முழுவதும் சரிதான். தன்னுடைய சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் காத்துக்கொள்ளும் தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் நிறைந்த பெண்ணாகவே என் கண்களுக்கு தெரிகிறாள். அதனால்தான் அவளுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஆகமொத்தத்தில், இன்றைய அத்தியாயம் மிகவும் நன்றாக இருந்தது.
Thank you for you valuable comments 💐
 
Top Bottom