அத்தியாயம் 4
அடுத்த நாள் காலை...
காலை நேரம்...
ஹாஸ்டல் வழக்கமான பரபரப்பில் இருந்தது.
ஒவ்வொரு ரூமிலும் மாணவிகள் எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தனர். சிலர் குளிக்கச் சென்று கொண்டிருக்க, சிலர் அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தனர்.
பார்கவி வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்திருந்தாள்.
நேற்று நடந்த சம்பவம் அவள் மனதில் இருந்தது.
"இன்னைக்கு மறுபடியும் அவன் கிட்ட மாட்டக்கூடாது..."
என்ற எண்ணத்தோடு அலாரம் வைத்த நேரத்துக்கு எழுந்து, வேகமாக குளித்து முடித்தாள்.
குளித்துவிட்டு தலையைத் துவைத்தபடி தன் ரூமுக்குள் வந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், தூக்கத்தில் இருந்த சாவித்திரி கண்களைத் திறந்து பார்த்தாள்.
எப்போதும் தன்னைவிட தாமதமாக எழும் பார்கவி இவ்வளவு சீக்கிரம் எழுந்து ரெடியாகி நிற்பதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"என்னடி... இது அதிசயமா இருக்கு. இன்னைக்கு சூரியன் மேற்குல உதிச்சுதா?"
சாவித்திரி சிரித்தபடி,
எப்பவுமே நான்தானே உன்னை மூணு தடவை எழுப்பி, நாலாவது தடவை போர்வையை இழுத்துதான் எழுப்பணும்... இன்னைக்கு அலாரம் அடிச்சதும் நீயே எழுந்துட்டியா? அதுவும் குளிச்சு முடிச்சுட்டு நிக்கிற!"
என்று கலாய்த்தாள்.
பார்கவி அவளை முறைத்துப் பார்த்தாள்.
சாவித்திரி படுக்கையிலிருந்து இறங்கி நின்றுகொண்டே குறும்பாகச் சிரித்தாள்.
"ஓஹோ..."
என்று நீட்டி சொன்னவள்,
"நேத்து ஹர்ஷா சார் வெளியே நிக்க வச்சதுல இருந்து உனக்கு புத்தி வந்துடுச்சு போல... அதான் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா ரெடியாயிட்ட."
என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே சொன்னாள்.
அதை கேட்ட பார்கவிக்கு எரிச்சல் ஏறியது.
"ஏன்டி... காலங்காத்தாலேயே ஆரம்பிச்சுட்டியா? சும்மா இருக்க மாட்டியா?"
என்று அவளை முறைத்தாள்.
சாவித்திரி இன்னும் சிரித்தபடியே,
"அட... நான் உண்மையைத்தானே சொன்னேன்."
என்றாள்.
"உண்மையாம்..."
என்று உதட்டைச் சுளித்த பார்கவி,
"அந்தச் சிடுமூஞ்சி நேத்து திட்டுனதால தான் இன்னைக்கு சீக்கிரமா கிளம்புறேன். மறுபடியும் அவன் கிட்ட மாட்டிக்கிட்டு நிற்கணும்னு எனக்கு ஆசை இல்ல."
என்று முகத்தைச் சுளித்தாள்.
"சரி சரி..."
என்று சிரித்த சாவித்திரி, தனது துணிகளை எடுத்துக்கொண்டு,
"இரு... நானும் பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடுறேன். என்னை விட்டுட்டு மட்டும் கிளம்பிடாத."
என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே ஓடி விட்டால்.
பார்கவி தலையை ஹேர் ட்ரையாரல்
உலர்த்தி விட்டு , தலைமுடியைச் சீவி பின்னிக்கொண்டு கட்டிலில் அமைதியாக அமர்ந்து அங்கு இருந்த ரம்யா மலரிடம் பேசி கொண்டிருந்தால்.
சில நிமிடங்களில்...
சாவித்திரியும் குளித்துவிட்டு வந்தாள்.
வேகமாகத் தயாராகிக்கொண்டவள்,
"ஆஹா... இன்னைக்கு நீ வெயிட் பண்ணியே இருக்கே! அதுவே பெரிய அதிசயம்."
என்று மீண்டும் வம்பிழுத்தாள்.
"வாய மூடிட்டு சீக்கிரம் வாடி."
என்று பார்கவி சொன்னாள்.
"இதோ வந்துட்டேன் அம்மா..."
என்று சிரித்துக்கொண்டே பையை மாட்டிக்கொண்டாள் பின்னர் இருவரும் ரம்யா மலரிடம் சொல்லி விட்டு ஹாஸ்டல் மெஸ் நோக்கி நடந்தனர்.
ஹாஸ்டல் மெஸ்ஸில் சென்று காலை உணவை சாப்பிட்டார்கள்.
அன்றைய காலை உணவை முடித்துக்கொண்டு, இருவரும் கல்லூரியை நோக்கி நடந்தனர்.
ஹாஸ்டலிலிருந்து கல்லூரி கட்டிடத்துக்கு நடந்து செல்லும் பாதையில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தனர்.
சிலர் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டே நடந்தனர்.
சிலர் நோட்டைத் திறந்து கடைசி நேரத்தில் ஏதோ படித்துக்கொண்டே சென்றனர்.
சாவித்திரி வழக்கம்போல ஏதாவது பேசிக்கொண்டே வந்தாள்.
இருவரும் வகுப்பறையை நோக்கி நடந்தனர்.
வகுப்பறைக்குள் நுழைந்ததும்...
ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.
யாரோ கடைசி பெஞ்சில் சிரித்துக்கொண்டிருந்தனர்.
பார்கவியும் சாவித்திரியும் வழக்கம்போல தங்களுடைய இடத்தில் வந்து அமர்ந்தனர்.
முன் வரிசையில் இருந்த சிலர் நோட்டைத் திறந்து நேற்று எடுத்த குறிப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின்புறம் அமர்ந்திருந்த சில பையன்கள்,
"டேய்... நேத்து சார் சொன்ன ஜர்னல் ஃபார்மேட் எழுதிட்டியா?"
"எழுதிட்டேன் டா... ஆனா அந்த லாஸ்ட் என்ட்ரி கொஞ்சம் டவுட்டா இருக்கு."
"நோட்டு கொடுடா... ஒருத்தடவை பார்த்துக்கிறேன்."
என்று பேசிக்கொண்டிருந்தனர்.
மற்றொரு பக்கம், சில மாணவிகள் நேற்று எழுதிய நோட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே மெதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
வகுப்பறை முழுவதும் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு பேச்சு.
அந்த நேரம்...
வகுப்பறை வாசலில் ஒரு நிழல் விழுந்தது.
அதைப் பார்த்ததும், பேசிக்கொண்டிருந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
அடுத்த சில நொடிகளில்...
வகுப்பறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
ஹர்ஷவர்தன் உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும், மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.
கையில் இருந்த வருகைப் பதிவேட்டை ஆசிரியர் மேசையின் மீது வைத்தவன், மாணவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"குட் மார்னிங்... சிட் டவுன்."
என்றான்.
"குட் மார்னிங் சார்..."
என்று அனைவரும் ஒரே குரலில் சொல்லிவிட்டு அமர்ந்தனர்.
எல்லோரும் அமர்ந்த பிறகு...
நடுவில் இருந்த மூன்று மாணவிகள் மெதுவாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
"ஏய்... இன்னைக்கு சார் இந்த சிவப்பு சட்டையில ரொம்ப செம்மையா இருக்காருடி..."
"ஆமாடி... இந்த கலர் அவருக்கு நல்லா செட்டாகுது."
"ஷ்ஷ்... மெதுவா பேசுங்கடி... கேட்டுட்டார்னா அவ்வளோதான்..."
என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தனர்.
அவர்களின் பேச்சை கவனிக்காதது போல இருந்த ஹர்ஷவர்தன், வருகைப் பதிவேட்டைத் திறந்து,
"ரோல் நம்பர் ஒண்ணு..."
என்று அழைக்க ஆரம்பித்தான்.
"பிரசன்ட் சார்..."
"ரோல் நம்பர் ரெண்டு..."
"பிரசன்ட் சார்..."
என்று ஒவ்வொருவராக எழுந்து பதில் சொல்லிக்கொண்டே அமர்ந்தனர்.
அப்படியே வரிசையாக அழைத்துக்கொண்டே வந்தவன்,
"ரோல் நம்பர் ஐம்பத்தொண்ணு..."
என்று அழைத்தான்.
பார்கவி எழுந்து நின்று,
"பிரசன்ட் சார்."
என்று சொன்னாள்.
ஒரு நொடி..
ஹர்ஷவர்தனின் பார்வை அவள் மீது நிலைத்தது.
அந்த பார்வையில் இருந்த இறுக்கம் பார்கவிக்கு நன்றாகவே புரிந்தது.
அவளும் எதுவும் பேசாமல் மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
அவன் அடுத்த ரோல் நம்பரை அழைத்து வருகைப் பதிவைத் தொடர்ந்தான்.வருகைப் பதிவு முடிந்ததும், ஹர்ஷவர்தன் பதிவேட்டை மூடிவைத்து ஆசிரியர் மேசையின் ஓரத்தில் வைத்தான்.
வகுப்பறை முழுவதையும் ஒரு முறை பார்வையால் அளந்தவன்,
"நேத்து நான் சொன்ன ஜர்னல் ஃபார்மேட்... எல்லாரும் நோட்ஸ்ல எழுதி முடிச்சிட்டீங்களா?"
என்று கேட்டான்.
"எழுதிட்டோம் சார்..."
என்று வகுப்பறை முழுவதும் ஒரே குரலில் பதில் வந்தது.
"குட்."
என்று மட்டும் சொன்னவன், சாக்கை எடுத்துக்கொண்டு போர்டை நோக்கித் திரும்பினான்.
போர்டில் பெரிய எழுத்தில் தலைப்பை எழுதியவன்,
அதற்குக் கீழே ஒவ்வொரு காலமும் எப்படி வர வேண்டும், எந்த இடத்தில் எந்த விவரம் எழுத வேண்டும், நரேஷன் எங்கே வர வேண்டும் என்று ஒவ்வொன்றாக பொறுமையாக விளக்க ஆரம்பித்தான்
"இந்த என்ட்ரியில எந்த அக்கவுண்ட் டெபிட் ஆகுது... ஏன் டெபிட் ஆகுது... எந்த அக்கவுண்ட் கிரெடிட் ஆகுது... அதுக்கான காரணம் என்ன..."
என்று ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தான்.
ஆனால்...
கடைசி பெஞ்சில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பார்கவியின் கவனம் மட்டும் அந்தப் பாடத்தில் இல்லை.
அக்கௌண்ட்ஸ் என்றாலே பார்கவிக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடம் நடக்கும்போது எப்போதும் அவள் கவனமாகக் கேட்பாள். ஆசிரியர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துகொண்டு எழுதிக்கொள்வாள்.
ஆனால் இன்று மட்டும்...
அவளால் அந்த வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
காரணம் அவள் விரும்பாத அந்த ஆசிரியர் தான்.
ஹர்ஷவர்தன் போர்டில் ஒவ்வொரு ஸ்டெப்பாக எழுதிக்கொண்டே இருந்தான்.
வகுப்பில் இருந்த அனைவரும் அவன் சொல்லிக்கொடுப்பதை கவனித்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் பார்கவி மட்டும்...
நோட்டை திறந்து வைத்திருந்தாலும், அவள் கண்கள் போர்டில் இல்லை.
சில நேரம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
சில நேரம் கையில் இருந்த பேனாவால் பெஞ்சில் கிறுக்கிக்கொண்டிருந்தாள்.
பக்கத்தில் இருந்த சாவித்திரியை மெதுவாக தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.
சாவித்திரி அவளைப் பார்த்து,
"ஏன்டி... கவனி. அப்புறம் மாட்டிக்குவ."
என்று மெதுவாக சொன்னாள்.
ஆனால் பார்கவி அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள்.
அவள் மனதில் ஒரே எண்ணம்.
"இவன் சொல்லுறதை ஏன் கேட்கணும்..."
என்ற எரிச்சல்.
இதையெல்லாம் ஹர்ஷவர்தன் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன் பாடத்தை நிறுத்தவில்லை.
அமைதியாக தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்தான்.
ஆனால் அவன் பார்வை மட்டும் அவ்வப்போது பார்கவியிடம் சென்றது.
அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கு அவள் மீது எந்த ஆர்வமும் இல்லை.
அவள் எப்படா சிக்குவா நம்ம ஏதாச்சும் சொல்லி அவளை காயப்படுத்தனும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே...
பார்கவி பாடத்தை கவனிக்காமல் சிக்கி கொண்டால்.
ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.
முதலில் பாடத்தை முடித்தான்.
பிறகு சாக்கை கீழே வைத்துவிட்டு வகுப்பை பார்த்தான்.
"எல்லாருக்கும் புரிஞ்சுதா?"
என்று கேட்டான்.
"புரிஞ்சுது சார்..."
என்று மாணவர்கள் பதில் சொன்னார்கள்.
"சரி... அப்போ நான் சொல்லிக் கொடுத்ததை வைத்து பார்க்கலாம்."
என்றவன்,
சிறிது நேரம் அமைதியாக நின்றான்.
பிறகு அவன் பார்வை நேராக பார்கவியிடம் சென்றது.
"ரோல் நம்பர் 51... எழுந்திருங்க."
என்றான்.
திடீரென தன் ரோல் நம்பர் கேட்டதும் பார்கவி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.
ஹர்ஷவர்தன் அவளை பார்த்தபடியே,
"இப்ப நான் சொல்லிக் கொடுத்த ஜர்னல் என்ட்ரியில அடுத்த ஸ்டெப் என்ன?"
என்று கேட்டான்.
பார்கவி போர்டைப் பார்த்தாள்.
ஆனால் பதில் சொல்ல முடியவில்லை.
அவள் அமைதியாக நின்றதை பார்த்ததும்...
ஹர்ஷவர்தனின் முகம் இறுகியது.
"என்ன?"
என்றான்.
பதில் இல்லை.
"இவ்வளவு நேரம் நான் சொல்லிக்கொடுத்ததை கவனிச்சீங்களா?"
என்று கேட்டான்.
அவள் அமைதியாக தலை குனிந்தாள்.
அதுவே அவனுக்கு பதிலாகிவிட்டது.
"நான் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும்போது கவனிக்காம, உங்களுக்கு வேற என்ன வேலை இருந்துச்சு?"
பார்கவியிடம் பதில் இல்லை.
"படிக்க வர்றீங்களா? இல்ல கிளாஸ்ல உட்கார்ந்து நேரத்தை வீணாக்க வர்றீங்களா?"
அவன் குரல் கடுமையாகியது.
அப்படி படிக்க பிடிக்கலனா நீங்கனா எதுக்கு காலேஜ் வரிங்க?
"ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை... பெஞ்ச்ல கிறுக்குறது... பக்கத்துல இருக்குறவங்ககிட்ட பேசுறது... இதையெல்லாம் நான் பார்க்கலன்னு நினைச்சீங்களா?"
பார்கவியின் முகம் அவமானத்தில் சிவந்தது.
"கிளாஸ்ல உட்கார்ந்தா, கிளாஸைக் கவனிக்கணும். இல்லன்னா வெளியே நின்னுக்கோங்க."
என்று கதவை நோக்கிக் கை காட்டினான்.
"ஹெட் அவுட்."
வகுப்பறை முழுவதும் அமைதியானது.
"நோட்டை எடுத்துக்கிட்டு வெளியே போய் நில்லுங்க."
என்றான்.
பார்கவி அவனை கோபமாக பார்த்தாள்.
ஆனால் எதுவும் பேசவில்லை.
நோட்டை எடுத்துக்கொண்டு, எல்லாரின் பார்வைக்கும் நடுவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றாள்.
பந்தம் தொடரும்...

Last edited: