- Joined
- Apr 1, 2025
- Messages
- 56
- Reaction score
- 30
- Points
- 18

சிறுகதை
அம்மாவும் ... நானும்
***************
" அம்மா.. அம்மா..நான் வந்துட்டேன் உங்களுக்கு தெரியலையா!.. ஏம்மா!! என்னை உங்களாலப்பார்க்க முடியலையா?.. நான்தான் வந்துட்டேனே !..
இத்தனை நாள் எவ்வளவு அழுதீங்க? எத்தனை பேர் உங்களை அப்படி திட்டினாங்க. நான் வந்துட்டேன் கவலைப்படாதீங்க! ..அழுகாதீங்க! அம்மா.
அந்த "பாட்டியையும் ,அத்தையையும்" நான் வந்து பார்த்துக்கொள்கிறேன். உங்களை நான் கவனமாகப்பார்த்துக் கொள்கிறேன்! நீங்க அழுகாதீங்க மா.
அப்பா.. ஏம்ப்பா ..அமைதியா இருக்கீங்க. அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அப்பா .
"நான் " வந்துட்டேன் என்று சொல்லுங்கப்பா. அம்மாவ அழ வைக்காமல் நான் வந்துடுவேன் பா! நீங்க சொல்லுங்கப்பா.
"அம்மா" எங்கேயாவது திருவிழாவுக்கு தான் போறாங்களா... இல்லை.. ஊர் விசேஷங்களுக்கு தான் போறாங்களா !!!எங்கேயும் அம்மா போக மாட்டேன் என்கிறார்களே!!! அது என்னால் தானே.
தினமும் கேட்பார்களே அம்மாவை, ஏன் இன்னும் வரவில்லை? ஏன் இன்னும் வரவில்லை?? என்று கேட்பார்களே.
அவர்களுக்கென்ன வந்தது? என் 'அம்மாவை ' இப்படி கேள்வி கேட்பதற்கு. நான் வந்து விட்டேன் !வந்து அவங்களுக்கு நான் பதில் சொல்கிறேன் .
"என் அம்மாவை" நான் பார்த்துக் கொள்வேன்.
அப்பா ...அம்மாவை பார்த்து நீங்களும் அழுகிறீர்களா ?வேண்டாம் பா.
"நான் "இங்கே தானே இருக்கேன். உங்களுக்கு தெரியலையா? இரண்டு பேரும் ஏன் அழுகிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் ,"அம்மா" தன்னை வருத்திக் கொள்வார்களே !!என்னால் தானே வருத்துக்கொள்வார்கள் .
நான் வரவேண்டும் என்று தானே வருத்திக் கொள்வார்கள். எத்தனை தியாகம் செய்கிறாள் அம்மா.
எத்தனை விதமான மன அழுத்தங்கள் கொடுக்கும் சொற்கள், எத்தனை விதமான அறிவுரைகள், எத்தனை விதமான மருத்துவ சிகிச்சைகள், அப்பப்பா!!! என்னால் பார்க்கவே முடியவில்லையே என்னால்.
அதனால்தான் "அம்மாவை" கஷ்டப்படுத்த கூடாது! என்று நான் வந்து விட்டேன். எனக்கு இன்னும் கை, கால்கள் கூட வரவில்லையே!.. அம்மாவின் கண்ணீரை துடைக்க.
ஏன் ? "என்னால் "எழுப்ப முடியவில்லை." அம்மா ,என்னை" தூக்குங்க!.. நான்தான் வந்து விட்டேன் உங்களுக்கு தெரியலையா ??
விரதம் இருந்து உடம்பைக்கெடுத்துக் கொண்டார்களே அம்மா!!. அப்பாவும் எத்தனை நாள் யாருக்கும் தெரியாமல் கண் கலங்கி இருந்திருப்பார்.
"நானும் பார்த்தேனே! அவரின் அந்த இயலாத நிலையை.
"அம்மா ,என்னை" உணருங்கள். என் சுவாசம் உங்களுக்கு தெரியும். அப்பா..." அம்மாவிடம்" சொல்லுங்கள்.
அவங்களுக்கு நாளையில் இருந்து சந்தோஷம் மட்டும்தான்
கிடைக்கப்போகிறது.
"அம்மா "..வயிற்றில் நான் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு வளருவேன்.
உங்களின் கைகளில் தவழ்ந்து, உங்கள் அன்பைப்பெற்று நல்லபடியாக வாழ
வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது.
உமா சரவணன்
.