- Joined
- Apr 27, 2025
- Messages
- 6
- Reaction score
- 5
- Points
- 3
- Age
- 23
- Website
- karikalannovels.blogspot.com
எம். டி யின் அறையை விட்டு வெளியே வந்து பெரு மூச்சு ஒன்றை உள்ளிழுத்து வெளியே விட்டாள் மைதிலி. அவ்வளவு நேரம் அவளுக்காக வெளியே காத்திருந்த ராகவி அவள் அருகில் வந்தாள். ' வாட் ஹேப்பண்ட் மேடம்? ஆர் யு பீயிங் டென்ஸ்ட்?' (What happened madam? Are you being tensed?) என்று கண்களில் குறும்புடன் வினவினாள்.
அவளது குரலில் இருந்த குறும்பை கவனிக்காமல் இருந்த மைதிலி மீண்டும் பெருமூச்சை இழுத்து விட அவளை இடித்தாள் ராகவி. அப்போது தான் அவளது முகத்தைக் கண்டாள். அவள் கண்களில் குறும்பு மின்னுவதைக் கண்டவள் அவளை முறைக்க அவளோ, 'சாரி மேடம்' என்றாள்.
பின்னர் இருவரும் அவரவர் இடத்திற்குச் சென்று வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். மாலையில் வேலை முடிந்தவுடன் இருவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் அருகில் இருக்கும் காஃபி ஷாப்பிற்கு சென்றனர். காலையில் இருந்த குறும்புடன் மீண்டும் ராகவி தன் கேலியைத் தொடங்கினாள்.
'வாட் இஸ் யுவர் நெக்ஸ்ட் ஷெட்யூல் மேம்?' (What is your next schedule ma'am?)
இம்முறை ராகவியின் குறும்பை உணர்ந்த மைதிலி, 'அதுவாஆஆஆ! ஒரு எருமை வாயில சூடு வைக்கணும். என்னை காலைல தேவையில்லாம சீண்டுச்சு. இப்போ மறுபடியும் சீண்ட ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் அதுக்கு நேரம் எப்படி இருக்குன்னு.' என்று சீரியஸாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட ராகவிக்கு பயத்தில் வியர்த்து வழிய தொடங்கியது. ராகவிக்குத் தெரியும் மைதிலி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது அவளைச் சீண்டினால் இந்த மாதிரி தான் பதில் வரும். சில நேரங்களில் வாய் பேசுவதை விட கை தான் பேசும். எப்போதும் அவள் சிந்தனைக்குக் காரணம் தெரியும் என்பதால் அவள் தப்பித்து விடுவாள். ஆனால் இன்றோ காரணம் தெரியாததால் மாட்டிக் கொண்டாள்.
அதனால் சற்று விளையாட்டை விட்டு, 'என்ன ஆச்சு டி? ஏன் ஏதோ யோசனையில் இருக்க? எம். டி. ஏதாச்சும் சொன்னாரா? இல்ல உன் ஆளு ஞாபகம் வந்துடுச்சா?'
'இல்ல டி. நம்ம எம். டி. என்னைய லீவுல அனுப்பி இருக்கார். அதுவும் சும்மா இல்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் அப்டின்னு சொல்லிட்டார்.'
'நல்ல விஷயம் தானே. ஜாலியா ஊருக்குப் போய் என்ஜாய் பண்ணு. என்னை எல்லாம் விட்டா இந்நேரம் கிளம்பி இருப்பேன்.'
'உன்னைத்தான் காலேஜ்லயே தெரியுமே. அப்பறம் என்ன? ஆனா என்னன்னா அவருக்கு மைண்ட் டிஸ்டர்ப் ஆகுதாம் டி. அதான் என்னை ஊருக்கு விரட்டுறார்.'
'என்ன டி சொல்ற?'
மைதிலியும் அங்கு நடந்தவற்றை ஆதி முதல் அந்தம் வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த காஃபி வரவே அதனைப் பருகினர். பின்னர் ராகவி தொடர்ந்தாள்.
'நீ சொல்றது புரியுது டி. அவர் ரொம்ப கன்ஃபூசன்ல இருக்கார். அதனால அவர் கொஞ்ச நாள் தூரமான இடத்துல இருக்கலாம்னு நினைச்சிருக்காரு. உன் கிட்ட சொல்லியும் இருக்காரு. ஆனா நீ ஏன் டி ரிசைன் பண்றேன்னு சொன்ன?'
'என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் வேலைய ரிசைன் பண்ணிதான் டி ஆகனும். அதான் இப்பவே கேட்டேன். அது மட்டுமல்ல டி. நான் அவனைத் தேடி போகனும் டி. போய் அவனைப் போட்டு அடி பின்னி எடுக்கனும். அப்பறம் நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கனும். அவன் பதில் சொல்ல முடியாம திரு திருன்னு முழிக்கனும். கொஞ்ச நாளைக்கு அவன என் பின்னாடி அலைய வைக்கனும். அப்பறம் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் ப்ரொபோஸ் பண்ணனும். அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி வாழ்நாள் முழுக்க அவன் கூடவே இருந்து அவனை டார்ச்சர் பண்ணி அழ வைக்கனும். நிறைய லவ் பண்ணனும். குட்டி குட்டி சண்டை போடனும். அவன் பின்னாடி குட்டி போட்ட பூனை மாதிரி நான் சுத்தனும். அவனும் அதே மாதிரி என் பின்னாடி சுத்தனும். ஆனா இது எல்லாத்துக்கும் முன்னாடி நான் அவன நல்லா அழ வைக்கனும். என்னை எப்படி எல்லாம் அழ வெச்சான். மொத்தமா சேத்தி அவனுக்கு இருக்கு.'
'ஆனாலும் இவ்ளோ கோவம் ஆகாது டி உனக்கு. நம்ம எம். டி. ப்ரோபோஸ் பண்ணப்ப கூட நீ இவ்ளோ டென்ஷன் ஆகலையே டி. சரி. இப்ப நான் ஒன்னு கேட்பேன். ஒழுங்கா பதில் சொல்லனும். உன்னை காயப் படுத்தனும்னு கேட்கல டி. அத முதல்ல புரிஞ்சுக்கோ. நம்ம எம். டி. இப்ப லாங் லீவ் கொடுத்து அனுப்பி இருக்கார். ஒரு வேளை உன் ஆளு கடைசி வரைக்கும் கிடைக்கலனா என்னடி பண்ணுவ? திரும்ப இங்க வந்துருவியா? நான் ஒன்னே ஒன்னு சொல்வேன் டி. உன் ஆளுக்கு உன்னை பிடிக்குமான்னு தெரியாது. நீயும் உன் காதலை அவர் கிட்ட நேரடியாக சொன்னதில்லை. பேசாம நம்ம எம் டி ய கல்யாணம் பண்ணிக்க டி. சொல்ற எனக்கே ஒரு மாதிரி இருக்கு. இதைக் கேட்ட உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும். அதுக்கு மேல உன் விருப்பம் டி. நான் ஏதும் சொல்ல மாட்டேன். எனக்கு நீ நல்லா சந்தோஷமா இருக்கனும். அந்த ஒரு ஆதங்கம் மட்டும் தான்.'
சிறிது நேரம் இருவருக்கு இடையில் மௌனம் நிலவியது. பிறகு மீண்டும் ராகவியே பேச்சைத் தொடர்ந்தாள்.
'எல்லாம் சரி டி. உன் ஆள எங்க போய் தேட போற? அத சொல்லவே இல்லை.'
அவள் பேச்சை மாற்றுகிறாள் என்பதை உணர்ந்த மைதிலி, 'நான் எங்கும் தேட போறது இல்லை டி. அவன் உயிரோடு இருந்தான்னா என்னைத் தேடி வருவான். நாங்க சின்ன வயசிலிருந்து கடைசியாக பார்த்த வரைக்கும் வருஷாவருஷம் ஒரு இடத்துல ஒரு மாசம் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம். அந்த இடம் எங்க ரெண்டு ஃபேமிலி ஆட்களுக்கும் சொந்தம் தான் என்றாலும் நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் அந்த இடத்துல தனியா இருப்போம். அதனால அவன் வீட்டுக்குப் போவானோ இல்லையோ அங்க கண்டிப்பா வருவான். நானும் அங்க போய் ரொம்ப நாள் ஆச்சு. இப்போ அங்க போகனும் போல இருக்கு. அதான் எப்படியோ லீவ் வாங்கிட்டேன். நான் ரெண்டு நாள் கழிச்சு கிளம்புறேன் டி. அதுக்குள்ள ஊர்ல எல்லாருக்கும் திங்ஸ் வாங்கனும். அப்பறம் ட்ரெயின் டிக்கெட் கிடைக்கனும். அப்பறம் தான் கிளம்பனும்.'
'எல்லாம் சரி. ஏன் ட்ரெயின்ல போற? எப்பவும் ஃப்ளைட்ல போவ?'
'இந்த தடவை தோணுச்சு டி. அது மட்டுமல்ல டி. அவனுக்கு ட்ரெயின்ல போறது தான் பிடிக்கும் அதான்.'
பிறகு இருவரும் தாங்கள் அருந்திய காஃபிக்குப் பணம் செலுத்தி விட்டு தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர். ராகவி மைதிலியின் கல்லூரித் தோழி. இருவரும் ஒரே பாடப்பிரிவில் சேர்ந்தது முதல் ஒரே இடத்தில் வேலை செய்வதால் இன்று வரை நட்பு தொடர்கிறது. அட என்ன வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லவில்லையே. இருவரும் ஐடி துறையில் வேலை பார்க்கின்றனர். அட ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிச்சிருக்காங்க பா. இருவருக்கும் இடையே எந்த ஒரு ஒளிவு மறைவு இன்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வர். அதனால் தான் இன்றும் தன் மனதில் இருந்தவற்றை மைதிலி தன் தோழியிடம் கொட்டி இருந்தாள்.
நனைவாள்.........