அசுரனும் அழகியும் அத்தியாயம் 36 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரனும் அழகியும் அத்தியாயம் 36

New updates

LATEST

பராசக்தி

Active member
Staff member
Joined
Oct 28, 2024
Messages
123
Reaction score
94
Points
43
ஆதிகேஸ்வரன் அக்சிதாவின் பிறந்த ஊரில் அவள் வீட்டில் அன்டர் கிரவுண்டில் அவளுக்காக பெரிய அறையை தயார் செய்திருந்தான் ஆதி.. அவனுடைய ஆபிஸ் வேலைகளை அவள் வீட்டிலிருந்து பார்த்து கொண்டான்.. கோயில் விவகாரத்தையும் பஞ்சாட்சரம் அவனை பார்த்துக்கொள்ள சொல்லி சாவியை கொடுத்தார்..

ரோஷனும் ராஜேஷ்வரனும் அங்கு சிறிது நாளில் வந்து தங்கினார்கள்..

அக்சிதாவுக்கு குழந்தை எப்படி இருக்கிறது என்று பார்க்க ஸ்கேன் மிஷினும் வாங்கி போட்டிருந்தான் ஆதி..

ஒரு டாக்டரையும் அவர்களுடன் அழைத்து வந்து வைத்திருந்தான்..

எல்லா ஏற்பாடுகளையும் சரியாக செய்து விட்டு அக்சிதாவையும் பார்த்து கொண்டான் ..அவளுக்கு இப்போது ஐந்து மாதம் ஆகியிருந்தது..

இங்கு வந்ததில் இருந்து அவனுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்று அவன் நினைத்து கொண்டிருந்தான்.. ஆனால் சந்திரபிரகாஷ் செய்த அத்தனை முயற்சிகளையும் ராஜேஸ்வரன் தடுத்து கொண்டிருந்தது ஆதிக்கு தெரியவில்லை..

அன்றும் அக்சிதாவை டாக்டர் மேடம் செக் செய்து விட்டு குழந்தை இப்போது நல்லாயிருக்கு.. இவ்வளவு நாள் நீங்க அவங்க எந்த அதிர்ச்சியும் ஆகாம பார்த்துக்கிட்டிங்க..இனிமேல் பயம் வேண்டாம் ..அவங்களும் குழந்தையும் நல்லாவே இருக்காங்க என்று சொன்னதும்..ஆதிக்கு இங்கு வந்த பிறகு அக்சிதா நன்றாக இருந்ததை நினைத்து சந்தோசமானான்.. அவள் நம்பும் நாராயணன் அவளை கைவிடவில்லை என்று நினைத்து கொண்டான்..இதே போல் அவனுடைய குழந்தையும் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்..

அன்று சந்திரபிரகாஷ் ஜெயின் ஆள் ஒருவன் நேரடியாகவே அங்கு வந்தான்...

அவன் தலையில் பெட்சிட்டை போர்த்தி கொண்டு பிச்சைக்காரன் போல வந்தான்..

ஆதியை அணைத்து கொண்டு படுத்திருந்தாள் அக்சிதா..மேலே ஏதோ சத்தம் கேட்டு ஆதி எழுந்தான்..அப்போது அக்சிதா முழித்து கொண்டு இருப்பதை பார்த்த ஆதி..நீ தூங்கலையா? பேபி வா அமைதியாக படுத்து தூங்கு என்றான் ஆதி..இல்ல மேல ஏதோ சத்தம் கேட்டது இல்ல என்றாள் அக்சிதா..அதெல்லாம் ஒன்னும் இல்ல..நீ அமைதியாக படு ..

இதுல மெலடி மியூசிக் இருக்கு இந்த ஸ்பீக்கரை காதில வச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டே தூங்கு என்று சொல்லிவிட்டு நான் மேலப்போய் பார்த்து விட்டு வர்றேன் என்றான்..

நீங்க என்னை விட்டு போகாதேள் என்றவளை பார்த்து வந்துடுவேன் பயப்படாம தூங்கு பேபி என்றான் ஆதி..

அவன் போய் மேலே யாரும் நடக்கும் சத்தம் கேக்கிறதா? என்று பார்க்க எந்த சத்தமும் வரவில்லை ..மேலே நின்று பார்க்க அந்த அறை கதவு சாத்தியபடியே இருந்தது ..மெல்லமாக ஏறி அவன் வந்த இடத்தை மூடிவிட்டு அங்கு இருந்த ஜன்னல் வழியாக பார்க்க தூரத்தில் யாரோ இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்..ஆதி வெளியே மெதுவாக வந்து பார்க்க ரோஷன் அவனை ஆதி இங்க வா என்றான் ..

என்னாச்சி ரோஷன் என்று ஆதி கேட்டதும்.. அதான் சொன்னேனே அந்த சந்திரபிரகாஷோட ஆளுங்க தான் ஆதி..

அவர் எப்படி தெரிஞ்சிக்கிட்டாரு என்ற ஆதியிடம்.. பாம்பின் கால் பாம்பறியும் என்றவன் ..நீ உள்ள போ என்றான்..

என்னால அவரை தனியாக சண்டை போட விட்டு வேடிக்கை பார்க்க முடியாது..

அங்கு அவர் மட்டும் இல்ல இன்னும் நிறைய பேர் சண்டை போடறாங்க பாரு என்றதும் சுத்தி பார்த்த போது சந்திரபிரகாசின் ஆட்கள் நிறைய பேருடன் ராஜேஸ்வரனின் ஆட்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.. சந்திர பிரகாசின் ஆள் முன்னேறி ராஜேஸ்வரனை நோக்கி செல்ல ஆதி அவனை பார்த்து விட்டு அவன் பின்னால் போனான் .. ராஜேஸ்வரன் மும்முரமாக எதிரிலிருந்தவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்..அவன் பின்னால் போனவன் வைத்திருந்த கத்தியை எடுத்து பின்பக்கமாக குத்தபோக ஆதி அவனை பிடித்து அவன் கையை முறுக்கி அவன் கையிலிருந்த கத்தியை கீழேபோட வைத்து அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட அவன் அலறி கொண்டே விழுந்தான்..

ஆதியை பார்த்த ராஜேஸ்வரன் ரொம்ப தேங்க்ஸ் புரோ என்றான்..

அதன் பிறகு எல்லாரையும் ராஜேஸ்வரனும் அவனுடைய ஆட்களும் ஆதியும் சேர்ந்து அனைவரையும் அடித்து வீழ்த்தினர்..

அவர்கள் மூவரும் வந்து உட்கார அப்போது போன் செய்த சந்திரபிரகாஷ் நீ எத்தனை நாளைக்கு அவங்களை காப்பாத்தற என்று பாக்குறேன் என்று சொல்ல ..நான் என் உடம்புல உயிர் இருக்க வரைக்கும் காப்பாத்துவேன்.. நீ உன் பேமிலில இருக்கவங்களை முதல்ல காப்பாத்திக்க பாரு என்றதும்.. எங்க பேமிலில இருக்கவங்களை நீயெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது என்று சொல்ல அப்படியா? நீ தப்பு கணக்கு போட்ட உன் பொண்ணும் மாப்பிள்ளையும் குழந்தைகளோட வெளிநாடு போயிருக்காங்க இல்ல..அவங்களுக்கு போன் செய்து எங்க என்ன பண்றாங்கன்னு பாரு என்றான் ராஜேஸ்வரன்..

நீ இப்படியே எல்லாத்தையும் சாதிச்சிட முடியும்னு நினைக்கறியா? நீ இன்டர்நேஷனல் கார்ப்பரேட் கிரிமினல் என்றால் நான் இன்டர்நேஷனல் மாப்பியா இது எங்க மூதாதையரோட சொத்து இது என்ன உன் பாட்டன் சம்பாதிச்ச சொத்தா? என் பாட்டனுக்கு முப்பாட்டனுங்க சம்பாதிச்சதுடா பரதேசி இதுக்கு மேல இந்த இடத்து மேல ஆசைப்பட்ட நான் என்ன பண்ணுவேன் தெரியாது ..முதல்ல உன் ஆளுங்களை பாரு என்றான் ராஜேஸ்வரன்..

அவன் போனை கட் செய்து விட்டு சிறிது நேரத்தில் ஏய் ராஜேஸ்வரா எங்கடா என் பொண்ணு பேரன் எல்லாம் என்றதும் .. எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல சவுக்கியமாக இருக்காங்க ..நீ இதோட உன் ஆட்டத்தை நிறுத்தல உனக்கு வம்சமே இல்லாம பண்ணிடுவேன் என்றதும் ..இங்க பாரு அந்த இடம் மட்டும் எனக்கு போதும் வேற எதுவும் தேவையில்லை ..உனக்கு நூறு கோடி தர்றேன் என்று கெஞ்சினான் சந்திரபிரகாஷ்..

அந்த இடத்தை காப்பாத்த தான்டா நானே வந்திருக்கேன் வென்று வேலையை பாரு உன் அடுத்த தலைமுறையை பாக்கணுமா? என்று கேக்க இன்னும் கொஞ்சம் நேரத்துல உனக்கு வீடியோ வரும் பாரு என்றான் ராஜேஸ்வரன்..

இங்க பாரு இனிமேல் நான் எதுவும் பண்ணல அவங்களை விட்டுடு என்றான் சந்திரபிரகாஷ்..

இருக்கட்டும் கொஞ்சம் நாளைக்கு எங்க கண்காணிப்புல தான் இருப்பாங்க .‌நீ எந்த போலிஸ் போர்சை அனுப்பினாலும் ஒன்னும் பண்ண முடியாது என்றதும்..இங்க பாரு உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு நான் எவ்வளவு வேணாலும் தர்றேன்.. தயவு செய்து அவங்கள விட்டுடு என்றான் சந்திரபிரகாஷ்..

அதன்பிறகு சிலநாட்கள் அமைதியாக இருந்தது ..அவர்களுக்கு அவனால் எந்த பிரச்சனையும் வரவில்லை..தினமும் போன் செய்து அவங்களை விட்டுடு என்று கெஞ்சுவது மட்டும் தொடர்ந்தது..

அக்சிதாவுக்கு நாராயணனை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது..

அவள் ஆதியிடம் ஆதி நான் என் நாராயணனை பார்க்கணும் என்றதும் .. வேணாம் பேபி நீ இருக்க இடம் யாருக்கும் தெரியாமல் இருக்குறதால தான் நாங்க நிம்மதியாக இருக்கோம் ..இப்ப உன் நாராயணனை மனசுலயே நினைச்சிக்க பேபி என்றான் ஆதி..

நான் இந்த நேரத்துல ஆசைப்படறதை செய்ய மாட்டேளா? என்றவளை பார்த்து..சரி அழைச்சிக்கிட்டு போறேன் என்று நடு இரவில் அவளை அழைத்து கொண்டு போனான் ஆதி..

அவர்கள் மெல்லமாக கதவை திறந்து கொண்டு கோயிலுக்கு போவதற்கு சாவியை எடுத்து அவள் மீது பெட்சீட்டை போர்த்தி அழைத்து கொண்டு போய் கோயிலை திறந்து அங்கிருந்த சாமியை இருவரும் பார்த்து கும்பிட்டு நாராயணா நீதான் என் ஆதிக்கும் மத்தவாளுக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்கணும்.. இந்த குழந்தை நல்லபடியாக பிறக்க வைங்க என்று வேண்டி கொண்டிருந்தவளை பார்த்தான் ஆதி..

பேபி போலாம் என்று சொல்ல அங்கிருந்த சந்திர பிரகாசின் ஆள் போன் பண்ணி சொல்ல தூக்கு அந்த பொண்ணை முடியலைன்னால் கொல்லுங்க என்றான்..

அவன் அங்கு மறைந்து மறைந்து வந்த போது அக்சிதா கோயில் பிரகாரத்தை சுற்றி வர அப்போது அவள் எதிரில் குதித்தான் அவன் ‌..ஆதி சுதாரிக்க அவன் கத்தியை எடுத்து அவள் வயிற்றில் சொருக போக அக்சிதா கத்தினாள் ..ஆதி அவன் கையைபிடித்து கொண்டு அக்சிதாவை நகர்த்தி விட்டான்..அவள் கத்தும் சத்தம் கேட்டு ராஜேஸ்வரனும் ரோஷனும் தேடினார்கள் ..கீழே அண்டர் கிரவுண்டில் தேடி பார்க்க அங்கு இல்லாதது கண்டு வெளியே ஓடி வந்த போது கோயிலுக்கு போயிருப்பாங்களோ?என்று அவர்கள் இருவரும் கோயிலை நோக்கி ஓடினார்கள்..கோயில் கதவு கொஞ்சமாக திறந்திருக்க இருவரும் கோயிலுக்கு சென்றார்கள்..ஆதி கையிலிருந்த கத்தியை அவன் உருவ அவன் கையில் இருந்து ரத்தம் கொட்டியது.. ஆதி என்று அக்சிதா கத்த அவளை நோக்கி குத்த போனான் அவன் ..அவன் காலுக்கடியில் இருந்த பாம்பு அவனை கொத்தியது ..அவன் கத்தியை போட்டு விட்டு கீழே விழுந்தான்..

அங்கு வந்த ராஜேஸ்வரனும் ரோஷனும் என்ன ஆதி இப்படி பண்ணிட்ட ..என்னோட குறிக்கோள் இந்த சொத்தை காப்பாத்தறது மட்டும் இல்ல ..உங்களை காப்பாத்தறதும் தான் ..ஏன்? புரிஞ்சிக்க மாட்டேங்கறிங்க .. அக்சிதாவை எங்க இருக்காங்கன்னு தெரியாம மறைச்சி வச்சிருக்கறது தான் நமக்கு பலமே ..நீங்க இப்படி காட்டி குடுத்திட்டிங்களே .. இனிமேல் அவன் எந்த எல்லைக்கும் போவான்..

இந்த இடத்தை டார்கெட் பண்ண அவன் இன்னும் என்ன பண்ண போறானோ? என்று புலம்பினான் ராஜேஸ்வரன்..

நீங்க அவரை திட்டாதேள் நான் தான் நாராயணனை பார்க்கணும்னு சொன்னேன் ..அவருக்கு கையில வேற அடிபட்டிருக்கு என்று சொன்னவளை முறைத்த ராஜேஸ்வரனை பார்த்து பயந்து ஆதி பின்னால் ஒலிந்து கொண்டாள் அக்சிதா..

இங்க பாருங்க ராஜேஸ்வரன் அவ இப்ப மாசமாக இருக்காள்.. சாமியை பார்க்கணும்னு ஆசைப்பட்டாள்.. அதான் அழைச்சிக்கிட்டு வந்தேன்..அவளை எதுவும் கஷ்ட்டப்படுத்தாதீங்க என்று சொல்லி விட்டு வா பேபி என்று அவளை அழைத்து கொண்டு போனவனை பார்த்து அவர்களும் பின்னால் போனார்கள்.. அவன் கையை பிடித்து ரத்தத்தை துடைத்து கட்டு போட்டாள். அங்கிருந்த டாக்டர்..அவனை அழுது கொண்டே பார்த்து கொண்டிருந்தாள் அக்சிதா.. பேபி எனக்கு ஒன்னுமில்ல நீ இந்த நேரத்துல அழக்கூடாது என்று அவளை அணைத்து கொண்டான் ஆதி.. இரண்டு நாட்களில் அந்த இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்யணும் என்று சொல்ல ராஜேஸ்வரன் இது போல எல்லாம் நீங்க ஆராய்ச்சி பண்ணமுடியாது ..கோயிலுக்கு சொந்தமான இடம் இதை எப்படி நீங்க ஆராய்ச்சி பண்ணுவீங்க என்றான் ஆதிகேஸ்வரன்..

அந்த காலத்து ராஜாக்களால என் மனைவியின் மூதாததையருக்கு எழுதப்பட்ட இடம் நான் கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கேன் என்று ஆதி சொல்ல அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்..

பாத்தியா? ஆதி இவங்க வந்ததுக்கு காரணம் அவன் தான் ..எப்படின்னு பாக்கறியா? தமிழ்நாட்டு அமைச்சரை கைக்குள்ள போட்டுக்கிட்டு இப்படி பண்ணியிருக்கான்..அவனோடது இந்த மூவ்வும் யோசிச்சேன்.. இந்த இடத்துல ஏதாவது இருக்கு என்று சொல்லி மக்களை தூண்டிவிடுவான்னு பார்த்தேன்..அப்படி செய்திடுவான்னுதான் நான் அக்சிதாவை வேறு இடத்துக்கு சிப்ட் பண்ண சொன்னேன் என்றான் ராஜேஸ்வரன்..

அது நடந்தாலும் இப்போதைக்கு இவங்க மக்களை தூண்டிவிட்டாலும்.. ஏற்கனவே இங்க பாம்பு கடிச்சி செத்தவனை பார்த்து பயந்து போயிருக்காங்க ..அதனால நான் ஒரு புரளியை கிளப்பி விட்டேன்..இங்க இந்த இடத்தை தொல்லியல் துறைன்னு செக் பண்ண வந்தவங்கள்ல அவனும் ஒருத்தன் ..இந்த கோயில்லயோ? இந்த இடத்துலயோ? என்னவோ? இருக்குன்னு சொன்னாங்க அதான் ..இவன் அதை தெரிஞ்சிக்க வந்து பாம்பு கடிச்சி செத்து போயிருக்கான் என்று சொன்னதும் அடங்கிட்டாங்க என்றான் ராஜேஸ்வரன்..

அதற்குள் அக்சிதாவை அவனுடைய ஆபிஸ் கீழ்தளத்தில் ரோஷனை பார்த்துக்கொள்ள சொல்லி அனுப்பி இருந்தான்.. அவனும் அங்கு சென்றான்..ஆதிகேஸ்வரனை பார்த்த அவனுடைய ஊழியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.. அவன் கீழ் தளத்துக்கு செல்ல அங்கு ரோஷன் நின்றிருந்தான்..ரோஷன் பேபி எப்படி இருக்கு என்றான் ..உன்னை கேட்டுதான் அழுவுது தங்கச்சி என்றான் ரோஷன்.. நான் இங்கேயே இருக்கேன் நீ போப்பா என்று அனுப்பி வைத்தான் ரோஷன்..ஆதி கீழே போனபோது அக்சிதா ஆதியை ஒடி வந்து கட்டி கொண்டாள்..பேபி என்ன எதுக்கு அழுவுற பேபி என்றான் ஆதி..நமக்கு எதுவும் வேணாம் ஆதி நாம எங்காவது போயிடலாம் பயமாக இருக்கு என்றவளை பார்த்து.. உங்கப்பா நம்மள நம்பி விட்டு போனதை அப்படியே விட்டு போக சொல்றியா? என்றான் ஆதி..

அவளை பார்த்தவனுக்கு கஷ்ட்டமாக இருந்தது.. என்ன வாழ்க்கை இது அக்சி பேபியை கல்யாணம் செய்து அவளை சந்தோசமாக வச்சிக்க முடியலையே என்று கஷ்டமாக இருந்தது..

அவளுக்கு இப்போது ஏழு மாசம் ஆகுது ..அவளுக்கும் எல்லாப் பொண்ணுங்களை போல கையில நிறைய வளையல் போட்டுக்கணும் ..சீமந்தம் பண்ணிக்கணும்னு ஆசையிருக்காதா? என்று நினைத்து கண்களங்கியவனை பார்த்து ..என்னை சொல்லிட்டு நீங்க ஏன் அழறேள் ..எனக்கு குழந்தை பிறந்ததும் நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம் என்றாள் அக்சிதா..

அவளை மடியில் உட்காரவைத்து கொண்டவன் ..உனக்கு கைநிறைய வளையல் போட்டு விடணும்னு ஆசை இருக்கு ..நான் என்ன பண்றது ..எனக்கு அந்த இடம் வேணாம் நீ மட்டும் போதும்னு சொன்னேனே.. நான் என்ன பண்ணுவேன் என்றவனை பார்த்து ..நீங்க கவலைப்படாதீங்க ..எனக்கு அதிலெல்லாம் ஆசையில்லை..நீங்க என் கூட இருந்தால் போதும் என்றாள் அக்சிதா..எனக்கு எங்க இருந்தாலும் பரவாயில்லை என்கூட நீங்க இருந்தால் போதும் ஆதி என்றாள் அக்சிதா..

அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டான்..நான் நீ நம்ம குழந்தை மூணு பேரும் சந்தோசமாக இருக்கலாம் ..கொஞ்சநாள் பொறுத்துக்க பேபி என்றான் ஆதிகேஸ்வரன்..

தொடரும் ...
 
Nisha

New member
Joined
Feb 20, 2025
Messages
4
Reaction score
0
Points
1

பாவம்
 
Top Bottom