அக்னி தேவி IPS 6 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னி தேவி IPS 6

New updates

LATEST
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221
Points
43
கமிஷனர் அனைவரையும் அவர் அறைக்கு அழைத்தார்.

நான் முதல் அமைச்சரின்
முக்கிய நிகழ்ச்சியில்
நான் அவருடன் பாதுகாப்புக்கு இருப்பதாலும்,

அந்த சமூக விரோதி
இன்னும் இரண்டு நாட்களுக்குள்
என்று கால அவகாசம் கொடுத்து உள்ளான்.

உங்களுக்கு அந்த க்ளுவை
மீண்டும் ஒரு முறை நினைவு
படுத்துகிறேன் என்று
அதைச் சொன்னார் கமிஷனர்.

அந்த க்ளு என்னவென்றால்
சம்புவராயர்
பக்ருதீன்
L TO R என்று
கமிஷனர் சொன்னார்.
இந்த முறை இரண்டு நாள்
கொடுத்து உள்ளான்.
விரைவில் கண்டு பிடியுங்கள்
என்றார் கமிஷனர்.

உங்களுக்கு வேறு ஏதாவது
உதவி வேண்டும் என்றால்
என்னிடமோ அல்லது துணை கமிஷனர் ராகவி IPS யிடமோ
உடனே கேளுங்கள் என்றார்.

ம்ம் சீக்கிரம் என்றார்.

அனைவரும் எழுந்து சல்யூட் அடித்து விட்டு கமிஷனர் அறையை விட்டு வெளியே வந்தனர்.

அவர் அவர் டேபிளுக்கு செல்லாமல்
அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

அறையில் எல்லோரும் நண்பர்கள் போல தான் இருப்பார்கள்.

சீனியர் ஜூனியர் என்று பாகுபாடு கிடையாது.

அனைவருக்கும் அந்த நேரத்தில்
டீ குடிக்க வேண்டும் என்று தோன்ற
சிவ ஸ்ருதிகா டீ போட
சென்றார்.
மற்ற நான்கு பேரும் கொறிக்க எதுவும் வேண்டும் என்று
சிம்பிளான ஸ்நாக்ஸ் செய்தனர்.

சிவ ஸ்ருதிகா டீயை போட்டு
முடிப்பதற்குள் நான்கு பேரும்
ஸ்நாக்ஸை தயாரித்தனர்.

அக்னி தேவி ஆலோசனையின்
பேரில் வெங்காய வடை செய்தனர்.

வெங்காய வடையில் எண்ணை
அதிகமாக இருக்கும் என்பதால்
சிவ ஸ்ருதிகாவிடம் டீ யில்
இஞ்சி சேர்த்து போடச் சொன்னாள்
அக்னி தேவி.

மாலை நேர சிற்றுண்டி முடிந்ததும்,
அடுத்து கடமையை பற்றி சிந்தித்தனர்.

முதலில் ஆளுக்கொரு ஒரு
வார்த்தைகளை கண்டு பிடிக்க
முயற்சி செய்தனர்.

அக்னியும், சார்மிகாவும்
சம்புவராயர் என்ற வார்த்தையை
தேர்ந்தெடுத்தனர்.

அடுத்து
ஹரிணியும்
சுஜிதாவும்
பக்ருதீன் என்ற வார்த்தையை
தேர்ந்தெடுத்தனர்.

சிவ ஸ்ருதிகா ஆட்டோமேட்டிக்காக
L TO R சென்றது.

அவர்களுக்கு கொடுத்த வார்த்தைகளை வைத்து
ஆதார் அட்டையில் முதலில்
தேடினார்கள்.
பிறகு
வாகன ஓட்டுநர் லைசென்ஸில்
தேடினார்கள்
பிறகு
வாக்காளர் அடையாள அட்டையில்
குடும்ப அட்டை
என அனைத்திலும் தேடினார்கள்.
எதிலும் கிடைக்கவில்லை.

அந்த பக்கம் ஹரிணியும்
சுஜிதாவும்
பக்ருதீன் என்ற வார்த்தையை
அக்னி தேவியும், சார்மிகாவும்
தேடியது போல தேடினார்கள் கிடைக்க வில்லை.

சிவ ஸ்ருதிகாவும்
L ல் ஆரம்பிக்கும் வார்த்தையை
வைத்து கூகுளில் தேடிப் பார்த்தார்
எதுவும் கிடைக்கவில்லை.

மீண்டும்,
Lல் ஆரம்பிக்கும் வார்த்தையை
கூகுளில் இந்த முறை
அக்னி தேவியும் சார்மிகாவும் தேடினார்கள்.
கிடைக்க வில்லை.

இந்த முறை சிவ ஸ்ருதிகா
பக்ருதீன் என்ற வார்த்தையை
ஹரிணியும் சுஜிதாவும் தேடிப் பார்த்த
முறையில் தேடிப்பார்த்தார் கிடைக்க வில்லை.

அந்த பக்கம்
ஹரிணியும் சுஜிதாவும்
அக்னி தேவியும் சார்மிகாவும்
முதலில் தேடிய
சம்புவராயர் என்ற வார்த்தையை
தேடிப் பார்த்தார்கள் கிடைக்க வில்லை.


அதற்குள் கமிஷனரிடம் இருந்து சிவ ஸ்ருதிகாவுக்கு போன் வந்தது.

ஒரு எமர்ஜென்சி உடனே
உங்கள் குழு
கவர்னர் காருக்கு கான்வாயாக
செல்லுங்கள் என்று ஆர்டர் போட்டார்.

உங்களுடன் துணை கமிஷனர் ராகவி அங்கே வருவார் என்றார்.

கவர்னர் திடீர் புரோகிராம் என்பதால்
உங்கள் குழு கவர்னர் மாளிகை
செல்லுங்கள் என்றார் கமிஷனர்.


உடனே அனைவரும் கிளம்பி
கவர்னர் மாளிகை சென்று காத்திருந்தனர்.

பிறகு கவர்னர் புரோகிராம் கேன்சல்
நீங்கள் போகலாம் என்று கவர்னர்
மாளிகை அலுவலர் வந்து சொன்னார்.

பிறகு சிவ ஸ்ருதிகா குழுவினர்
அவர்கள் அறைக்கு வந்தனர்.

மீண்டும் தேடலுக்கு முன்பு
சாப்பிட தயாரிகினர்.

சாப்பிட்டு விட்டு மீண்டும்
சுழற்சி முறையில் அந்த வார்த்தைகளை தேடினார்கள்.

அணிகளை மாற்றியும் தேடிப் பார்த்தார்கள்.

அக்னி தேவியும்
ஹரிணியும்,

இன்னொரு அணியில்
சிவ ஸ்ருதிகாவும் சுஜிதாவும்

சார்மிகா மட்டும் தனியாகவும்
இப்படி மாற்றி மாற்றி தேடி
இறுதியில் அசதியாகி விட்டது.

மீண்டும் சூடாக ஒரு டீ குடிக்க
தயாரிகினர்.

இந்த முறை அக்னி தேவி
நானே டீ போட்டு எடுத்து வருகிறேன்
என்று சொல்லி
டீ போட்டு எடுத்து வந்தார்.

இரவு 12 மணி ஆகியது
அந்நேரம் சுஜிதாவுக்கு
ஊரில் இருந்து அவள் பெற்றோர்
போன் செய்து அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

தேங்க்ஸ் டாட் அன்ட் மாம் என்றாள்.

அறையில் உள்ளவர்கள் என்ன என்று
கேட்க, இன்று என் பிறந்தநாள்
அதான் அப்பாவும் அம்மாவும் வாழ்த்துக்கள் சொல்றாங்க என்றாள்.

போன வருடம் அவர்களுடன் இருந்தேன்.

இந்த வருடம் என்று இழுக்கும் போதே,

இந்த வருடம் எங்களுடன் என்று சிவ ஸ்ருதிகா குழுவினர் சொன்னார்கள்.

சுஜாதாவின் பெற்றோர்கள் கால் கட்டான அடுத்த செகன்ட்
சுஜாதாவின் சித்தப்பா சித்தி,
அதன் பிறகு அவள் அத்தை வீட்டில்
என்று வரிசையாக போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

அறையில் உள்ள அவளின் குழுவினரும் அதற்குள் சின்னதாக
பர்த் டே பார்ட்டி செலப்ரேட்
செய்ய தயாராகினர்.

சுஜாதாவின் நெருங்கிய தோழியும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சொன்னார்.

எல்லோருக்கும் நன்றி சொல்லி முடிக்கவே ஒரு மணிநேரம் மேல் ஆனது.

இன்னும் வாட்சப்பில் வேற
நிறைய வாழ்த்துக்கள் வந்து குவிய
தொடங்கியது.

அதற்கும் ரிப்ளே செய்து முடிக்க
கொஞ்ச நேரம் ஆனது.

அவளின் குழுவினர் சின்னதாக ஏற்பாடு செய்த பார்ட்டியை
செலப்ரேட் செய்து முடிக்கவே
நேரம் இரவு மூன்றைத் தாண்டியது.

பின் அனைவரும் அசதியில் தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து
கமிஷனர் அலுவலகத்திற்கு விரைவாக சென்று களத்தில் இறங்கினார்கள்.

மீண்டும் ஒன்றும் கிடைக்கவில்லை.

பின் அனைவரும் ஒன்றாக ஒவ்வொரு வார்த்தையாக தேடும் போது கடைசி
க்ளுவான
L TO R
என்பது
Left to right என்று வந்தது.

மிகவும் சந்தோஷப் பட்டனர்.

அப்போது மீண்டும்
மேலே உள்ள இரண்டு க்ளுவும் இதே
மாதிரி வேறு அர்த்தம் ஆகத் தான் இருக்கும்.

பெயராக இருக்க வாய்ப்பில்லை என்று
மீண்டும் ஒரே குழுவாக தேடினார்கள்
பதில் கிடைக்கவில்லை.

சோர்ந்து போனார்கள்.

எதற்கும் கமிஷனரிடம்
போன் செய்து உதவி கேட்போம் என்று போன் செய்தார்கள்.
அவர் போனை எடுக்க வில்லை.

மீண்டும் துணை கமிஷனர் ராகவிக்கு போன் செய்தார்கள்.

அவர் அந்த Left to right கண்டுபிடித்தது சூப்பர் என்றார்.

நானும் மீதமுள்ள க்ளுவை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்
என்றார்.

அந்நேரம் கமிஷனர்
சிவ ஸ்ருதிகா குழுவுக்கு போன் செய்து, கண்டுபிடித்து விட்டீர்களா என்று கேட்டார்.

இல்லை மேடம் என்றும்
அந்த left to right யை மட்டும்
சொன்னார்கள்.

கமிஷனர் உடனே
அந்த வேப்பேரி போஸ் ஆபிஸ்
விசயத்தை கண்டு பிடித்த
அக்னி தேவி அப்பாவிடம் ஒரு முயற்சி செய்து பார்த்தீர்களா என்று கேட்டார்.

இல்லை என்றனர் அவரிடமும் முயற்சி செய்து பாருங்கள் நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன் என்றார்.

போன் கட் ஆனதும் என்ன
சொன்னாங்க மேடம் என்று அனைவரும் கேட்க,

மேடமும் முயற்சி செய்கிறேன் என்றார்.

எதற்கும் அக்னி தேவி அப்பாவிடமும்
ஒரு ஐடியா செய்து பாருங்கள் என்றார்.

அந்த வேப்பேரி சம்பவத்தை வைத்து என்றார்.

உடனே அக்னி தேவி,
நான் கூட அப்பாவிடம் இதைப் பற்றி
கேட்க மறந்து விட்டேனே!
என்றாள்.

மற்றவர்கள் சரி இப்போது கேளு
நாங்களும் முயற்சி செய்கிறோம்
என்றனர்.

அக்னி தேவி அப்பாவிற்கு போன் செய்து இங்கே நடந்த அனைத்தையும் கூற,

அக்னி தேவி அப்பா ,
காவல்துறையில் மதிநுட்பம் நிறைந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களிடம் முயற்சி செய்து பாருங்கள்‌ என்றார்.

இங்கே அனைவருக்கும் வேலை அதிகம்.
அதுமட்டும் அல்லாமல் முதலமைச்சரின் திடீர் சுற்றுப் பயணம் என்று நிறைய வேலை
இருப்பதால் தான்.
அதுவும் போக கமிஷனரும் உங்களிடம் ஒரு ஐடியா கேட்க சொன்னார் என்றாள்.

மகள் இப்படி சொன்னதால்
சரி சரி முயற்சி செய்கிறேன்.

ஆனால் நீங்கள் உங்கள் முயற்சியில்
துவண்டு விடக் கூடாது.
அதனால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்றார்.

பிறகு அருணனும் அந்த இரண்டு
வார்த்தைகளை வைத்து நிறைய
முயற்சி செய்து பார்த்தார்
எதுவும் கிடைக்கவில்லை.

அவரிடம் உள்ள ஏதாவது புத்தகத்தில்
இதற்கு ஏதாவது ஐடியா கிடைக்குமா என்று, புத்தகத்தை புரட்டிப் பார்த்தார் எதுவும் கிடைக்கவில்லை.


ஏதாவது கதைகளில் இருக்கிறதா
என்று கதைகள் ஆப்பில் சென்று
சில கதைகளையும் படித்து பார்த்தார்.
எதுவும் கிடைக்கவில்லை.

சரி நாம வேலையைப் பார்ப்போம்.
சில நேரங்களில் வேலை செய்யும் போது கூட அதற்கு விடை கிடைக்கும் என்று வேலையை ஆரம்பித்தார்.

வேலை முடியக்கூடிய நேரமும் வந்தது.

அப்போதும் அதற்கு விடை கிடைக்கவில்லை.

அந்நேரம் அக்னி தேவி போன் செய்து
எதுவும் ஐடியா கிடைத்ததா என்று கேட்டாள்.

இல்லை டா என்றார் அருணன்.

சரி முயற்சி செய்யுங்கள் அப்பா
நாளை ஒரு நாள் தான் உள்ளது என்றாள்.

நாங்களும் முயற்சி செய்கிறோம் என்றாள்.


என்ன தேடினாலும் திரும்ப திரும்ப
தேடிய விடை கிடைக்காமல் வேறு
விடையே வந்தது.

கமிஷனர் அலுவலகத்தில்
கமிஷனரை பார்க்க
தென் மாவட்டத்தில் உள்ள
ஒரு இயக்கத்தை சார்ந்த ஒருவர்
விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் போது சந்தேகத்திற்கு இடமாக இறந்துள்ளார்.

இறந்து போனவர் என் இயக்கத்தை
சார்ந்தவர் அதனால் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று
கமிஷனரை பார்த்து தன் கோரிக்கையை சொன்னார்.

நீங்கள் விசாரணை குழுவை
அனுப்பினால் தான் நாங்கள்
போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒத்துக் கொள்வோம் என்றார்.

நான் சென்னையில் இருந்ததால்
எனக்கு தகவல் கிடைத்ததும்
உங்களைப் பார்த்து சொல்லி
விட்டு போக வந்தேன் என்றார்.

கமிஷனர் நாங்கள் இங்கே ஒரு நெருக்கடியான சூழலில் உள்ளோம்.

நீங்கள் முதலில் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் இன்னும் இரண்டு நாளில் விசாரணை கமிஷன் வைக்கிறோம் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

உடனே அந்த கிளைச் சிறைக்கு போன் செய்து என்ன விசயம் என்று
தெரிந்து கொண்டார் கமிஷனர்.

அந்த இயக்க தலைவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுமதி கேட்டதற்கு கொடுத்து விட்டார்.
அதனால் எதுவும் பிரச்சினை இல்லை.

ஆனால் இரண்டு நாளில் உங்கள் கிளைச் சிறைக்கு விசாரணை செய்ய
ஒரு குழு
வரும் என்றார்.

(இதைப் படிக்கும் உறவுகளே
உங்களுக்கு யாருக்காவது
அந்த மீதமுள்ள க்ளு தெரிந்தால் சொல்லுங்கள்.
சரியாக இருப்பின் அதை
இந்த கதையிலே அவரின் பெயரையும் சொல்கிறேன்.)

(இரண்டு நாட்களுக்கு காத்திருக்கிறேன்.
அதன் பிறகே இதை தொடர்கிறேன்)




சம்பவம் நடைபெற்ற வேப்பலூரனி கிளைச் சிறை , நெல்லை காவல் துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ளதால்,

சென்னை கமிஷனர்,
நெல்லை கமிஷனரருக்கு போன் செய்து, அந்த இயக்கத்தின் தலைவர்
வந்ததை சொன்னார்.

நெல்லை கமிஷனர்,
சட்டப் படி உங்கள் குழு
இங்கு வந்து விசாரிக்கலாம் என்றால்
எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.

உடனே கமிஷனர்
சிவ ஸ்ருதிகாவையும் அக்னி தேவி
தன் அறைக்கு வரச்சொல்லி,
முதலில் நீங்கள் இருவரும்
நெல்லை காவல் துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள வேப்பலூரனி கிளைச் சிறையில் நடந்த மரணத்தை
விசாரித்து ஒரு ரிப்போர்ட் செய்யுங்கள்.

இந்த சமூக விரோதி
க்ளு சம்பவத்திற்கு நாளை ஒரு நாள்
உள்ளதால் நாங்கள் அதைப் பார்த்து கொள்கிறோம்.

நீங்கள் உடனே வேப்பலூரனி
கிளைச் சிறைக்கு சென்று
மரணத்திற்கான அறிக்கை
தயார் செய்யுங்கள் என்றார்.

இருவரும் சல்யூட் அடித்து விட்டு வெளியே வந்து உடனே
ஆம்னி பஸ்ஸில் ஏறி நெல்லை செல்ல தயாராகினர்.

நெல்லைக்கு வந்தார்கள்.
நெல்லை காவல்துறையால்
ஏற்பாடு செய்யப் பட்ட
வாகனத்தில் வேப்பலூரனி கிளைச் சிறைக்கு சென்றனர்.

அங்கே போய் அந்த கைதி
எப்படி இறந்தார் எனக் கேட்கும் போது
கிளைச் சிறையில் உள்ள ஒரு அதிகாரி தன் பிறந்தநாளை
முன்னிட்டு கைதிகள் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்தார்.

அதை சாப்பிட்ட பின் அந்த கைதி
மட்டும் மயங்கி விழுந்தார்.

பின் மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று தெரிந்தது.

இன்னும் போஸ் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.

போஸ்ட் மார்ட்டம் செய்ய அவர்கள் இயக்கத்தினர் அனுமதிக்க வில்லை
என்றனர் சிறையில் இருந்த
அதிகாரிகள்.

அந்த பிறந்தநாள் கொண்டாடிய
அதிகாரி எங்கே எனக் கேட்டனர்
சிவ ஸ்ருதிகாவும் அக்னி தேவியும்.

அவரை உள்ளூர் காவல்துறை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர் என்றார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

இறந்தவர் என்ன குற்றத்திற்காக
உள்ளே வந்தார் எனக் கேட்டனர்
சிவ ஸ்ருதிகாவும் அக்னி தேவியும்.

அவர்களின் இயக்கம் பெயரளவில்
சமூகத்திற்காகவும்
பின்னணியில் அவர்கள் சமுதாய இயக்கமாகவும் இருக்கிறது.

ஸ்வீட் கொடுத்த அதிகாரி
வேறு ஒரு சமுதாயம்.

அதுதான் இறந்து போனவரின்
இயக்கத்தினருக்கு சந்தேகம்.

ஸ்வீட் கொடுத்த அதிகாரி
உண்மையில் அவரின் சமுதாய உணர்வு என்று கிடையாது.
அனைவரும் சமம் என்பார்.

அது அந்த இயக்கத்துக்கும் தெரியும்.

பிறகு ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்
ஒரு சிறைக் காவலர்.

என்ன குற்றத்திற்காக அவர் உள்ளே
வந்தார் என்று சொல்ல வில்லையே?
எனக் கேட்டார் அக்னி தேவி.

ஒரு அரசு அலுவலரை தாக்க
முயன்ற குற்றத்திற்காகவும்

அந்த அரசு அலுவலர்
ஸ்வீட் கொடுத்த அதிகாரியின் தூரத்து உறவினர் என்றும்
வேறு ஒரு சிறைக் காவலர் சொன்னார்.

சிறையில் இறந்து போனவர்
இங்கே வந்து 10 நாட்கள் ஆகிறது.

சர்ச்சைக்குரிய அதிகாரியுடன்
நல்ல பழக்கம் தான்.

இந்த சம்பவத்திற்கு முதல் நாள்
தான் அந்த இறந்து போன
கைதியிடம் நீ தாக்க முயற்சி செய்தது என் தூரத்து உறவினர் தான்.

நீ தாக்க செல்லும் அளவுக்கு அவர் தவறு எதுவும் செய்ய வில்லை என்றும், அவரின் உதவியாளர்
ஏதாவது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்களை தரக்குறைவாக பேசியிருக்கலாம் என்றார்.

இன்னும் சில மாதங்களில்
அந்த சர்ச்சைக்குரிய அதிகாரியின்
தூரத்து உறவினரான அரசு
அலுவலருக்கு பதவி உயர்வு
கிடைக்க இருப்பதால் எந்த கேசும்
வேண்டாம் என்று நினைக்கிறார் என
அந்த கைதியிடம் சொன்னார்.

அந்த கைதியும் ஓ அப்படியா?
எனக்கு இரண்டு மூன்று பேர் தாண்டி தான் என் காதுக்கு வந்ததால்
நான் அவரை தப்பாக நினைத்து விட்டேன்.

இன்று என்னைப் பார்க்க என்
இயக்கத்தினர் வருவார்கள் அவர்களிடம் சொல்கிறேன் என்றார் கைதி.

அந்த இயக்கத்தினர் வரும் போது அவர்களிடம் இந்த விசயத்தை
சொல்ல, அவர்கள் இது நம்புவது போல இல்லை.

நம் இயக்கத்தின் தலைவர் சென்னை சென்று உள்ளார் அவரிடம் சொல்லி பார்க்கிறேன் என்றனர்.

அதன் பிறகு நேற்று அந்த சம்பவம் நடைபெற்ற தால் அந்த இயக்கத்தின் தலைவர் சென்னையில் இருந்ததால் அவரிடம் விசயத்தை சொல்ல
அவர் நேராக உங்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து
கம்ப்ளைன்ட் செய்தார் என்று
ஒரு சிறைத் துறை அதிகாரி
சொன்னார்.

இது அனைத்தும் அந்த அரசு அலுவலருக்கு சாதகமாக சென்றதால்
அந்த சர்ச்சைக்குரிய அதிகாரி
சமத்துவம் நிறைந்த மனிதனையும்
சமுதாய உணர்வு உள்ளவராக
காட்டியது என்றார்.

அந்த ஸ்வீட் பார்சலை
டெஸ்ட் செய்ய அனுப்பியாச்சா
என்று அக்னி தேவி கேட்டாள்.

அனைத்தும் காலியாகி விட்டன.
ஒரு ஸ்வீட் மட்டும் எக்ஸ்ட்ரா இருந்தது. அதையும்
அந்த இறந்த கைதி எடுத்து சாப்பிட்டார் என்றார் சிறைக் காவலர்.

அக்னி தேவி
ஸ்வீட் என்னது ஜிலேபியா?

சிறைக் காவலர் லட்டு என்றார்.

அந்த காலியான
ஸ்வீட் பாக்ஸ் எங்கே இருக்கிறது
என அக்னி தேவி கேட்க,
சிவ ஸ்ருதிகா குறித்து கொண்டார்.

அது கடைபெயர் உள்ள ஸ்வீட் பாக்ஸ் இல்லை.

ஒரு பிஸ்கட் பெட்டியில் மொத்தமாக பேக் செய்து கொடுத்து உள்ளனர் கடைக்காரர் என்றார் சிறைக் காவலர்.

அந்த கடை எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று சிவ ஸ்ருதிகா கேட்டார்.

சிறைக் காவலர் தெரியாது.
அந்த அதிகாரி தான் வாங்கி
வந்தார்.

ஆனால் வழக்கமாக வாங்கும் கடையில் இல்லை.

இது புதுக்கடை என்று சொன்னார்.

எல்லாமே குழப்பமாக இருக்கிறதே
என யோசித்து கொண்டு,

இறந்து போன கைதி உள்ளே
இருந்தவரை அவரை யாரெல்லாம் பார்க்க வந்தார்கள் என்று குறிப்பெடுத்து கொண்டாள் அக்னி தேவி.

அப்படியே அந்த பத்து நாட்களில்
வேறு யாரையும்
யார் யார் பார்க்க வந்தனர் என்பதையும் குறித்து கொண்டார் அக்னி தேவி.


அதில் இரண்டாவது நாள்
வேறு ஒருவரை அந்த இறந்து போன கைதியால் தாக்கப் பட்டதாக
சொன்ன அரசு அலுவலரின் பெயரும் இருந்தது.

அன்று அந்த ஸ்வீட் கொடுத்த அதிகாரி விடுமுறையில் இருந்தார்
என்பதையும் குறித்து கொண்டார் அக்னி தேவி.

லட்டு சாப்பிட்ட மற்ற கைதிகளுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே என
சிவ ஸ்ருதிகா கேட்க,
இல்லை என்றும் நானும் சாப்பிட்டேன்
ஒன்னும் ஆகவில்லை என்றார்
ஒரு சிறைக் காவலர்.

அந்த அரசு அலுவலர் பார்க்க வந்த கைதி எங்கே எனக் கேட்க,

அந்த கைதி இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னால் தான் ஜாமினில் வெளியே சென்றார்.

அவருக்கு உள்ள லட்டைத்தான்
அந்த இறந்த கைதி சேர்த்து சாப்பிட்டார் என்றார்.

அந்த வெளியே போன கைதி
என்ன குற்றத்திற்காக உள்ளே
வந்தார் எனக் கேட்டாள் அக்னி தேவி.

ஓடும் பேருந்தில் மதுபானம் அருந்திவிட்டு சத்தமாக அசிங்க வார்த்தை பேசியதை ஒருவர் வீடியோ எடுத்து முகநூலில் போட்டார் .

அதன் அடிப்படையில் உள்ளே வந்தார்.

அரசு அலுவலர் அவரை
எப்படி தெரியும் என்று பார்க்க வந்தார்.

நண்பர் என்று சிறைக் காவலர் சொன்னார்.

அனைத்தையும் குறிப்பெடுத்து விட்டு
சென்னை கமிஷனருக்கு தகவல்
அனுப்பினாள் சிவ ஸ்ருதிகா.

பிறகு காவல் நிலையம் சென்று
அந்த சிறை அதிகாரியை
விசாரிக்க செல்கிறோம் என்றனர்
சிவ ஸ்ருதிகாவும்
அக்னி தேவியும்.

காவல் நிலையம் சென்று
அவரிடம் விசாரணை செய்ய ஆரம்பித்தனர் சிவ ஸ்ருதிகாவும் அக்னி தேவியும்.

எல்லா பிறந்த நாளுக்கும்
இதே போல கைதிகளுக்கு ஸ்வீட்
வாங்கி தருவீர்களா என்று கேட்டாள் அக்னி தேவி.

அவர் இல்லை.
இது தான் முதல் தடவை என்றார்.

ஏன் இந்த வருடம் மட்டும் வாங்கி கொடுக்க தோன்றியது எனக் கேட்டாள் அக்னி தேவி.

திடிரென்று ஒரு ஆசை.
அதான் வாங்கித் தந்தேன்.
என் நேரம் அந்த கைதி இறந்து விட்டார்.
நல்லவர் தான் அவர் என்றார்.

பிறகு அரசு அலுவலருக்கு ஆதரவாக
சிறைச் சட்டத்தை மீறி நீங்கள் அந்த கைதியிடம் பேசியது தவறுதானே
என்று அக்னி தேவி கேட்டாள்.

அவர் ஆம் என்றார்.
இருவரும் நல்லவர்கள்.
மனிதாபிமான அடிப்படையில் கேட்டேன்.

சிறைசட்டப்படி நான் கைதியிடம் வழக்கை பற்றி பேசியது தவறு தான் என்றார்.


எந்த கடையில் ஸ்வீட் வாங்குவீர்கள்
எனக் கேட்டாள் அக்னி தேவி.
அவர் அந்த கடையை சொன்னார்.

அது நீங்கள் வழக்கமாக வாங்கும் கடையா? எனக் கேட்டாள் அக்னி தேவி.

அவர் இல்லை.இது புதுக் கடை என்றார்.

வழக்கமாக வாங்கும் கடையில் வாங்காமல் கடையை மாற்ற
வேண்டிய அவசியம் என்ன?
எனக் கேட்டாள் அக்னி தேவி.

வழக்கமாக வாங்கும் கடை இரண்டு நாள் லீவு.

அதான் இந்த புதுக்கோட்டையில் வாங்கினேன் என்றார்.

அந்த கடை எங்கே இருக்கிறது
என்று குறிப்பெடுத்து கொண்டாள்
அக்னி தேவி.

இன்று மாலை வரை
காவல் நிலையத்தில் இருங்கள்.
நாங்கள் அந்த கைதிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய
முயற்சி செய்கிறோம் என்று சொல்லி
அங்கு இருந்த கிளம்பினார்கள் அக்னி தேவியும் சிவ ஸ்ருதிகாவும்.

வேப்பலூரனி தலைமை
மருத்துவ மனைக்கு சென்று
அந்த இயக்கத்தினரிடம் பேசி
போஸ் மார்ட்டம் செய்ய
சம்மதிக்க வைத்தனர்
அக்னி தேவியும் சிவ ஸ்ருதிகாவும்.


கமிஷனரிடம் தற்போதைய சூழ்நிலையை சொன்னாள் சிவ ஸ்ருதிகா.

போஸ் மார்ட்டம் ரிப்போர்ட்டில்
அந்த லட்டில் விசம் இருந்தது
தெரிய வந்தது.

சிறையில் உள்ள உணவால் அல்ல
என்று ரிப்போர்ட் இருந்தது.

லட்டில் உள்ள விசத்தன்மையும்
குறைவுதான்.
அவர் இரண்டு லட்டு சாப்பிட்டதாலும்
ஏற்கனவே அவர் உடலில் சுலோ
பாய்சன் இருந்ததாகவும் ரிப்போர்ட்டில் இருந்தது.


அந்த இயக்கத்தினரிடம் ரிப்போர்ட்டை சொல்லி விட்டு,
அதைக்குறிப்பும் எடுத்து விட்டு
பாடியை அடக்கம் செய்ய
அனுமதித்தனர்.

பிறகு சிவ ஸ்ருதிகாவும் அக்னி தேவியும், அந்த ஸ்வீட் கடைக்கு சென்று விசாரணை செய்தனர்.

அவர்கள் போகும் போது
காலையில் பார்சல் கொடுத்த ஆள் சாப்பிட சென்றுள்ளார்.
வரத்தாமதமாகும் என்றார்
அப்போது இருக்கும் ஆள்.

இன்னும் 10 நிமிடத்தில் அந்த ஆள்
வேப்பலூரனி காவல் நிலையத்திற்கு
வர வேண்டும் என்று சொல்லி விட்டு
இருவரும் காவல் நிலை
யத்திற்கு சென்றனர்.

சாப்பிட போன ஆளுக்கு தகவல் பறக்க அவர் உடனே
வேப்பலூரனி காவல் நிலையத்திற்கு வந்தார்.

அங்கே அந்த சிறைத் துறை அதிகாரியும் இருக்க அவரிடம்
இவர் தானா எனக் கேட்டாள் அக்னி தேவி.

அவர் ஆம் என்றார்.

லட்டால் தான் இறந்தாரா?
அல்லது அவர் உடம்பில் ஏற்கனவே இருந்த சுலோ பாய்சனாலா?


இனி குற்றம் குறையும்
(தொடரும்)
 
Top Bottom