அக்னி தேவி IPS 25 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னி தேவி IPS 25

New updates

LATEST
Joined
Apr 10, 2025
Messages
289
Reaction score
221
Points
43
பஸ்ஸில் போகும் போது
ஜன்னல் வழியாக பார்த்து கொண்டே போனேன்.

அப்போது அந்த கிராமத்திற்கு செல்வதற்கு முன்னால் ஐந்து கிலோ மீட்டர் முன்பு உள்ள அந்த ஓட்டு வீட்டுக்குள் போனான் கவியரசன்.
நான் அதைப் பார்த்து கொண்டேன்.
அங்கேயே இறங்க முடியாத சூழ்நிலை.

அந்த பஸ் நேராக அந்த கிராமத்து வழியாக சென்று ஜான்சா புரம் சென்றது.

நான் ஜான்சா புரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கே அருகில் ஒரு தெருவில் ஒரு கடையில் கத்தி
ஒன்று வாங்கினேன்.

பிறகு மீண்டும் பஸ் ஸ்டாண்டு வந்தேன்.

திருச்செல்வம் பஸ் ஜான்சா புரம் டூ
சத்திர குளம் செல்ல தயாராக இருந்தது.

அந்த பஸ் கண்டக்டரிம் பஸ் சுற்றி போகுதா என்று கேட்டேன்.

அவரும் தெரிந்த கண்டக்டர் தான் ஆம் என்றார்.

100 ரூபாய் கொடுத்து சண்முகா புரம் டிக்கெட் எடுத்தேன்.

100 க்கு ரூபாய் சில்லறை இல்லாததால் டிக்கெட்டின் பின்புறம்
100 என்று குறித்து என்னிடம் கொடுத்து, இறங்கும் போது சில்லறை வாங்கி கொள்ளுங்கள் என்றார்.

நான் சரி என்றேன்.

பிறகு பஸ் கவியரசன் கிராமத்து வழியாக சென்றபோது,
அவன் மது அருந்தும் இடம் வருவதற்கு முன் கண்டக்டரிம்
எனக்கு வயிறு சரியில்லை என்று பொய் சொல்லி பஸ்ஸை நிறுத்த சொல்லி இறங்கினேன்.

பிறகு நேராக கவியரசன் இருக்கும் அந்த ஓட்டு வீட்டுக்கு சென்று அவனை கத்தியால் குத்திக் கொலை
செய்தேன் என்றார்.

பிறகு அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்
ஹரிஸ்.

பிறகு கோபிநாத் அக்கா,
அவர் தான் கொலை செய்தார் என்று எப்படி கரெக்டா கண்டு பிடித்தீர்கள் என்று நெல்லை கமிஷனர் அலுவலகத்தை நோக்கி
போலிஸ் காரில் போகும் போது கேட்டார்.

அதற்கு அன்னபூர்ணா,
சேது மாரி ஒரு போட்டோ அனுப்பி இருந்தார்.

அந்த போட்டோ
திருச்செல்வம் பஸ் டிரான்ஸ்போர்ட்டில் உள்ள cctv footage
ல் இவரின் போட்டோவை எடுத்து எனக்கு அனுப்பி இருந்தார்.

அதுவும் இந்த போட்டோ நேற்று இவர் அந்த பஸ்ஸில் போகும் போது எடுத்த
Cctv footage ல் உள்ள போட்டோ தான்.

மூன்று மாதங்களுக்கு முன்பு உள்ள cctv footage தேட லேட்டாகும் என்று,
சேதுமாரி தான் இந்த ஐடியாவை கொடுத்து தேடச் சொல்லியுள்ளார் என்றார் அன்னபூர்ணா.

பிறகு சேதுமாரி அனுப்பிய அந்த போட்டோவை காட்டினார்.

அதைப் பார்த்த கோபிநாத்,
சரி அக்கா அப்படியே ஆனாலும் இதில் இரண்டு பேர் இருக்கிறார்களே, பிறகு எப்படி இவர் தான் என்று கண்டு பிடித்தீர்கள் என்று சந்தேகமாக கேட்டார்.

அதற்கு அன்னபூர்ணா,
துரை வீட்டில் விசாரிக்கும் போது,
துரையின் மனைவி ஏதோ சொல்ல வந்தார் என்றார்.

அதற்கு கோபிநாத் ஆம் அக்கா
நானும் கவனித்தேன்.

அதற்குள் துரை வேறு ஏதோ சொல்லி சமாளித்தார் என்றார்.

ஆம் அதேதான்,
அந்த கோணத்தில் தான் நான் குலையன் குளம் காவல் நிலையத்தில் கவியரசன் மதுபோதையில் வாகனத்தில் போகும் போது யார் மீதும் மோதியதாக கேஸ் எதுவும் உள்ளதா என்றும்,
அதன் மூலம் எதிரிகளே இல்லாத
கவியரசனுக்கு ஒரு எதிரி இருந்தாலும் இருக்கலாம் என்று விசாரித்தேன்.

அப்போது தான், நான்கு மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்ததில் இறந்தார் என்ற
தகவல் கிடைத்தது.

அப்போது சேது மாரி எனக்கு போன் செய்து, அந்த டிக்கெட் எடுத்த ஆளைப் பற்றிய தகவல்களை கொடுத்தார்.

பிறகு துரை சொன்னதையும்
யோசித்தேன்.
என் மகனை என் அப்பா குடித்து விட்டு வாகனத்தில் போகும் போது கீழே போட்டார் என்ற தகவலும் நினைவுக்கு வந்தது என்றார் அன்னபூர்ணா.

பிறகு எல்லாத்தையும் கூட்டி பார்க்கும் போது, சேது மாரி அனுப்பிய போட்டோவில் இரண்டு பேர் இருந்ததில், நமக்கு எதிரில் இவர் இருந்ததாலும், அந்த டிக்கெட்டில்
கொலையான கவியரசன் இறந்த அன்று இவர் தான் அந்த பஸ்ஸில் இருந்து இறங்கியது என அனைத்தையும் யோசித்து பார்த்து,
அவரிடம் கேட்டேன், நீங்கள் தானே கவியரசனை கொன்றது என்று விளக்கமளித்தார் அன்னபூர்ணா.

ஓ அப்படியா என்று அதன் பிறகு புரிந்து கொண்டார் கோபிநாத்.

அக்கா , எங்காவது டீ குடிப்போமா என்று கோபிநாத் கேட்டார்.

சரி என்று சொன்னார் அன்னபூர்ணா.

உடனே கோபிநாத் டிரைவரிடம் அண்ணா, போகும் வழியில் டீ கடை
வந்தால் வண்டியை நிறுத்துங்கள்.
நாம் மூவரும் டீ சாப்பிடுவோம் என்றார்.

அதன்படியே ஒரு டீ கடையில் நிறுத்தினார் டிரைவர்.

மூவரும் டீ குடித்து விட்டு மீண்டும் வாகனத்தில் செல்லும் போது,

தமிழக காவல்துறை இணையதள முகவரியில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது அன்னபூர்ணாவுக்கு.

அதில் ஒருவரின் போட்டோ
இருந்த்து. இவர் பெயர் சங்கர்.
இவன் திருச்சி மத்திய சிறையில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் தப்பி விட்டான்.
இவன் மீது நிறைய கடத்தல் வழக்குகள் உள்ளன.
அதில் ஒரு வழக்கிற்காக இரண்டு வருடம் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் போது தப்பித்து விட்டான்.

இவனை விரைவில் பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது. இவன் தப்பித்தது இன்னும் மீடியாவுக்கு தெரியாது,
அதனால் விரைந்து பிடியுங்கள் என்று மெசேஜ் வந்தது.

அந்த மெசேஜ் தமிழக காவல் துறையில் உள்ள அனைவருக்கும் வந்தது.

அதைப் பார்த்த அன்னபூர்ணா இந்த போட்டோவில் உள்ள நபரை
எங்கோயோ பார்த்த ஞாபகம் என்றதும், உடனே நினைவுக்கு வந்தது. ஆம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்.
அதுவும் சேது மாரி அனுப்பிய
அந்த பஸ்ஸின் cctv footage ல் இருந்த
போட்டோ, அதில் இரண்டு பேர் இருந்தார்கள்.

ஒருவர் கவியரசனை கொன்ற கொலையாளி.

மற்றொருவர், அந்த திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி.

உடனே அன்னபூர்ணா கமிஷனர் அப்துல் ரகுமானுக்கு தகவல் கொடுத்து விட்டு,

சேது மாரிக்கு போன் செய்து, நீ
மீண்டும் அந்த பஸ் கம்பெனிக்கு போய்,
நீ எனக்கு அனுப்பிய போட்டோவில் இரண்டு பேரில், ஒருவரை கைது செய்து விட்டோம்.

மற்றொருவர் பெயர் சங்கர் என்றும்,
அவன் திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி என்றார்.

ஆம் அக்கா எனக்கும் மேசெஜ் வந்துள்ளது என்றார்.

அன்னபூர்ணா, இந்த விசயம் வெளியே தெரிய வேண்டாம்,
சும்மா விசாரிப்பது போல அந்த பஸ் கம்பெனியில் சங்கரை பற்றி விசாரி
என்றார்.

சரி அக்கா என்றார் சேதுமாரி.

இதற்கிடையில் ஒரு பரபரப்பு செய்தி ஒன்று பிரபல செய்தி சேனலில் ஓடியது.

அதை மொபைல் மூலம் பார்த்து கொண்டு இருந்தனர் கோபிநாத்தும்
அன்னபூர்ணாவும்.

அந்த செய்தி, குருவிப் பாறை
தொகுதியில் சுயேட்சையாக நிற்கும்,
கிஷோரின் ஐந்து வயது மகனை
யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என்று அவரும் அவரின் உறவினர்கள் சாலை மறியல் செய்கிறார்கள் என்று செய்தி ஓடியது.

மீண்டும் அந்த செய்தியை பார்த்தார் அன்னபூர்ணா.

அதில் பரப்புரை நேற்றுடன் முடிந்ததால், இன்று அந்த சுயேட்சை வேட்பாளர் தன் ஐந்து வயது மகனுடன் மாலை நேர நடைபயிற்சி செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று செய்தியில் விரிவாக சொல்லப் பட்டது.

இதற்கிடையில் சேது மாரி போன் செய்தார் அன்னபூர்ணாவுக்கு.

அன்னபூர்ணா அழைப்பை ஏற்றதும்,
அக்கா, அந்த பஸ்ஸின் கண்டக்டர் இவரை இதற்கு முன் நான் பார்த்ததில்லை என்றும், ஜான்சாபுரத்தில் இந்த பஸ்ஸை விட்டு இறங்கி, குருவிப் பாறை போகும் பஸ்ஸில் ஏறியதை
கண்டக்டர் பார்த்ததாக சொன்னார்.

பிறகு அன்னபூர்ணா மேற்கொண்டு
குற்றவாளி சங்கரை பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரி என்றார்.

சேது மாரி சரி அக்கா என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

கோபிநாத், அக்கா அந்த குற்றவாளி
சங்கர் போன இடம் குருவிப் பாறை.

அந்த சுயேட்சை வேட்பாளர் குழந்தை காணாமல் போனதும் குருவிப் பாறை.

இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கேட்டார்.

அன்னபூர்ணா அதற்கு தெரியவில்லை கோபிநாத் என்றார்.

பிறகு கமிஷனருக்கு போன் செய்தார் அன்னபூர்ணா.

திருச்சி மத்திய சிறையில்,
அந்த தப்பித்து போன குற்றவாளி சங்கரை யார் யார் பார்க்க வந்தார்கள் என்று கேளுங்கள் சார்.

அப்படியே குருவிப் பாறையில் சங்கருக்கு உறவினர்கள் யாரும் உள்ளார்களா என்று கேட்டு சொல்லுங்க சார் என்றார் அன்னபூர்ணா.

கமிஷனரும் நான் மேலிடத்தில் பேசி
இதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார்.

குருவிப் பாறையில் அந்த சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக அவரின் சமுதாய கட்சியும் வந்தது.

ஆனால் அந்த சுயேட்சை வேட்பாளர் உங்கள் ஆதரவு வேண்டாம் என்றார்.

நான் ஓட்டுக்காக வரவில்லை.
நம் சமுதாயத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்று கேள்வி பட்டு
வந்தேன் என்றார்.

அதெல்லாம் உங்கள் ஆதரவு எதுவும் வேண்டாம் போங்க என்றார் கோபமாக,

அந்த சமுதாயத்தின் தலைவரும் அங்கிருந்து சென்று விட்டார்.

அதற்குள் மீடியாவுக்கு குற்றவாளி சங்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பித்த செய்தி வைரலானது.

குற்றவாளி சங்கர் தப்பித்த விசயம்
வைரலானதால், குருவிப் பாறை சுயேட்சை வேட்பாளர் குழந்தை காணாமல் போன செய்தியும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் சென்றது.

சேதுமாரி அன்னபூர்ணாவுக்கு போன் செய்து வேறு எந்த விபரமும் கிடைக்க வில்லை அக்கா என்றார்.

சரி நீ அங்கிருந்து கிளம்பி வந்து விடு என்று அன்னபூர்ணா சொல்லும் போது, கமிஷனர் லைனில் வந்ததால்,
சேதுமாரியிடம் பிறகு பேசுகிறேன் என்று அழைப்பை துண்டித்து விட்டு,
கமிஷனரிடம் பேசினார்.

அப்போது கமிஷனர்,
குருவிப் பாறையில் சங்கருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை.

ஆனால், அந்த குருவிப் பாறை சுயேட்சை வேட்பாளரின் பழைய நண்பர் பிரதீப் தான்,
ஒரே ஒரு முறை திருச்சி மத்திய சிறையில் வைத்து குற்றவாளி சங்கரை பார்த்துள்ளார் என்று கமிஷனர் சொன்னார்.

அன்னபூர்ணா, எங்கே சுத்தினாலும்
கடைசியில் அந்த சுயேட்சை வேட்பாளர் பெயர் இந்த கேஸில் அடிபடுகிறதே என்று யோசித்தார் அன்னபூர்ணா.

கோபிநாத்திடம் அந்த சுயேட்சை வேட்பாளர் கிஷோரை பற்றிய தகவல்களை சேகரித்து உடனே சொல்லு என்று சொன்னார் அன்னபூர்ணா.

கோபிநாத்தும் சரி அக்கா, இதோ
முயற்சி செய்கிறேன் என்று சொல்லி
சுயேட்சை வேட்பாளர் கிஷோரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

அதற்குள் பிரதீப் பற்றிய தகவல்களை அன்னபூர்ணா வேறு
ஒரு காவல் துறை அதிகாரியிடம் விசாரிக்க சொன்னார்.

அந்த காவல் துறை அதிகாரி,
பிரதீப் பற்றிய தகவல்களை அன்னபூர்ணாவிடம் சொன்னார்.

சுயேட்சை வேட்பாளர் கிஷோருக்கும்
பிரதீப்புக்கும் கடந்த சில ஆண்டுகளாக நட்பு சொல்லி கொள்ளும் படி இல்லை என்றார்.

மே
லும் இந்த கிஷோர், எல்லா பொதுத் தேர்தல்களிலும் சுயேட்சையாக நிற்பார் என்றும்,
அப்போது எல்லாம் பிரதீப்புடன் நட்புடன் தான் இருந்தார்.

இப்போது சில ஆண்டுகளாக தான் நட்பு இல்லை என்று சொன்னார் அந்த அதிகாரி.

கோபிநாத்,
அன்னபூர்ணா விடம் அக்கா,
அந்த சுயேட்சை வேட்பாளர் கிஷோர் குழந்தை கடத்தல் ஏதோ fake போல
இருக்கிறது அக்கா என்றார்.

ஏன் அப்படி சொல்கிறாய் என்று சந்தேகமாக கேட்டார் அன்னபூர்ணா.

அதற்கு கோபிநாத்,
சுயேட்சை வேட்பாளர் ஓட்டு வாங்குவதற்காக , பரப்புரை முடிந்த மறுநாள் குழந்தை கடத்தல் என்று நாடகம் ஆடுகிறார் என்று தோன்றுகிறது. பரப்புரை முடிந்த பிறகு தனக்கு அனுதாப ஓட்டு வாங்குவதற்காக அப்படி செய்கிறார் என்று தோன்றுகிறது என்றார் கோபிநாத்.

அன்னபூர்ணா ஓ அப்படியும் இருக்கலாம் என்று சொன்னார்.

அதனால் சுயேட்சை வேட்பாளர் கிஷோர் குழந்தை காணாமல் போன சம்பவத்தை பற்றி கவலை வேண்டாம் என்றார்.

அதற்குள் சுயேட்சை வேட்பாளர் கிஷோரின் குழந்தை மீட்கப் பட்டதாக
செய்தி டிவியில் ஓடியது.

குழந்தையை கடத்தி சென்றவர்கள் தன் வீட்டில் விட்டு போனதாக செய்தியில் கிஷோர் சொன்னார்.

கோபிநாத்தின் யூகம் சரிதான் என்று அன்னபூர்ணா, கோபிநாத்தை பாராட்டினார்.

அடுத்து குருவி பாறையின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த குற்றவாளி சங்கரையும், லோக்கல் போலிஸ் இன்ஸ்பெக்டர் சுடர் கைது செய்தார் என்ற செய்தி வைரலாக டிவியில் ஓடியது.


அந்த கிராமம், குற்றவாளி சங்கரின் அம்மாவின் தாத்தா ஊர் என்று சின்ன வயதில் அம்மா சொல்லி கேட்டதாகவும், அதனால் இங்கே பதுங்கி இருந்தால் போலிசுக்கு நான் இங்கே இருப்பது தெரியாது என்று
பிடபட்டவுடன் சொன்னதாக செய்தியில் சொல்லப்பட்டது.

எப்படியோ குற்றவாளி சங்கர் பிடிபட்டு விட்டான்.

சுயேட்சை வேட்பாளரின் குழந்தையும் கிடைத்து விட்டது.

சுயேட்சை வேட்பாளரின் நண்பன்,
பிரதீப்பிடம், திருச்சி மத்திய சிறையில் ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு ஆவணப் படம் எடுக்க போகிறேன், அதனால் உங்கள் அனுபவத்தை பற்றி சொல்லலாமா என்று கேட்க சென்றேன்.

குற்றவாளி சங்கர் முடியாது என்று சொல்லி விட்டார் என்றார் பிரதீப்.

அனைத்து பிரச்சனைகளும் சரியான பின்,
நெல்லை கமிஷனர் அலுவலகத்தில்
வைத்து, சேது மாரியை பாராட்டினார் அன்னபூர்ணா.

நீ அனுப்பிய போட்டோவை நான் கமிஷனருக்கு அனுப்பினேன்.

அவர் உடனே குருவி பாறை
காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அவர்களும் விரைந்து அந்த திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி சங்கரை பிடித்தார்கள்
என்று பாராட்டினார்.

அதற்கு சேதுமாரி, எல்லாம் அந்த தனியார் பஸ் கண்டக்டர் தான் நான் வெளியே வரும் போது,
அழைத்து எங்கள் பஸ்ஸில் cctv உள்ளது.அதனால் cctv footage யை
எங்கள் ஓனரிடம் கேளுங்கள் என்று யோசனை சொன்னார் என்றார்.


குருவி பாறை -
சுயேட்சை வேட்பாளர் கிஷோருக்கு
குழந்தை காணாமல் போன சம்பவத்திற்கு ஆதரவு கொடுக்க
சென்ற , அவரின் சமுதாய தலைவரிடம் உங்கள் ஆதரவு வேண்டாம் என்று கிஷோர் சொன்னது அவருக்கு ஈகோவாக
இருந்தது.

மேலும் கிஷோரின் குழந்தை காணாமல் போன சம்பவம் நாடகம் என்று தெரிந்து கொண்டார்
அந்த சமுதாய தலைவர்.

அதனால் கிஷோரை பழிவாங்க
தேர்தல் முடிந்த மறுநாள்,
திருநெல்வேலி கோர்ட்டில்
குருவி பாறை காவல் நிலைய ஆய்வாளர் மீது அந்த சமுதாயத்தின் அமைப்பு மூலம் வழக்கு தொடுத்தது.

சுயேட்சை வேட்பாளரின் குழந்தையை கடத்திய குற்றவாளியை தப்பிக்க வைத்தார் என்றும், அதை சுயேட்சை வேட்பாளர் கிஷோர் மூலமாகவே குழந்தை கிடைத்தது என்று மிரட்டினார்கள் என்று வழக்கில் குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக
இன்னும் இரண்டு நாட்களில் குருவி பாறை இன்ஸ்பெக்டர் சுடர் திருநெல்வேலி கோர்ட்டில் வந்து
விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருநெல்வேலி கோர்ட்டில் இருந்து தபால் வந்தது குருவி பாறை காவல்
நிலையத்திற்கு.

உடனே இன்ஸ்பெக்டர் சுடர்,
நேராக சுயேட்சை வேட்பாளர் கிஷோர் வீட்டுக்கு சென்று, அவரின் சமுதாய தலைவர் அனுப்பிய வழக்கின் விபரத்தை சொல்லி விட்டு,

காணாமல் போன குழந்தை,
எப்படி மீண்டும் உங்கள் வீட்டுக்கு வந்தது என்று கிஷோரிடம் கேட்டார்.

கிஷோர், குழந்தை கடத்தல் நாடகம்
தெரிந்து , மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கே டாக்டர் கிஷோரை செக் செய்து விட்டு, ஒன்றும் இல்லையே என்று வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

கிஷோர் தான், இல்லை டாக்டர்
எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொன்னார்.

சரி நாளை காலை, டெஸ்ட் செய்தபின் பார்ப்போம் என்றார்.

ஆனால் உங்களுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை.

மனசு ரீதியாக ஏதோ பிரச்சினை என்று சொல்லி விட்டு கிஷோரை
மருத்துவ மனையில் அட்மிட் செய்ய சொன்னார்.

இதை அறிந்த அவரின் சமுதாய தலைவர்,

கிஷோர் இருக்கும் மருத்துவமனைக்கு வந்து,
கிஷோரை பார்த்து,
அந்த இன்ஸ்பெக்டர் சுடர் உன்னை மிரட்டினாரா, சொல்லு அவரை
என்ன செய்கிறேன் பார் என்று கோபமாக சொல்வது போல நடித்தார்.

அப்போது கிஷோர், தலைவரே உங்களிடம் நான் தனிமையில் பேச
வேண்டும் என்றார்.

உடனே அந்த சமுதாய தலைவர் உடன் வந்தவர்கள் அனைவரும், வெளியே சென்றனர்.

கிஷோர் ரொம்ப பவ்யமாக,
தலைவரே என்றார்.

தலைவர் உள்ளுக்குள் சிரித்து கொண்டார்.

சொல்லு என்றார் தலைவர்.

கிஷோர் ரொம்ப மெதுவாக,
என் குழந்தையை யாரும் கடத்தவில்லை.

அது சும்மா நாடகம்.

ஒவ்வொரு முறையும் சுயேட்சை வேட்பாளராக நின்று கொஞ்ச ஓட்டு மட்டுமே வாங்குகிறேன் நான்,
அதான் இந்த முறை அனுதாப ஓட்டு வாங்குவதற்காக பரப்புரை முடிந்த
மறுநாள் அந்த நாடகத்தை போட்டேன்.

அது நம்ம தொகுதியில் மட்டும் எதிரொலிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அது எதிர் பாராத விதமாக,
டிவி வரை சென்றது.

இந்த விசயத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று நினைக்கும் போது, குற்றவாளி சங்கர் திருச்சி மத்திய சிறையில் பாரிஸ் தப்பித்த
செய்தி வைரலானதால்,
என்னைப் பற்றிய செய்தி காணாமல் போனது.
பிறகு குழந்தை கிடைத்தது என்று
நான் சொன்ன பிறகு அது செய்தியில் வந்தும், காவல் துறையினர் அந்த குற்றவாளி சங்கரை பிடிப்பதில் தீவிரமாக இருந்ததால், என்னை
பற்றி மறந்து போனார்கள்.

இப்போது நீங்கள் திருநெல்வேலி கோர்ட்டில், குருவி பாறை இன்ஸ்பெக்டர் சுடர் மீது வழக்கு தொடுத்ததால், அவர் என்னை விசாரிக்க வந்த போது மயக்கம் வந்தது போல நடித்து இங்கே வந்து இருக்கிறேன் என்றார் கிஷோர்.

தலைவர் சிரித்த படி, எல்லாம் எனக்கு தெரியும்.

நான் பழிவாங்க நினைத்தது அந்த இன்ஸ்பெக்டர் சுடரை அல்ல,
உன்னைத் தான்.

அதான் எங்கே அடித்தால் உனக்கு வலிக்கும் என்று தெரிந்து அப்படி செய்தேன் என்றார்.

கிஷோர், தலைவரிடம் மன்னித்து விடுங்கள் தலைவரே, இந்த கேஸில் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி கேட்டார்.

தலைவருக்கு, இது தானே வேண்டும்,
இவன் நம்மிடம் கெஞ்ச வேண்டும் என்பது, அது நடந்ததால்,
திருநெல்வேலி கோர்ட்டில் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று அறிவிப்பு விடுத்தார்.

இந்த விசயத்தில் இரண்டு பேரும் சேர்ந்து, நம்மிடம் கேம் ஆடினதற்கு
ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று, குருவி பாறை இன்ஸ்பெக்டர் சுடர் ,

கிஷோர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும்,
மீண்டும் விசாரணைக்கு அவர் வீட்டுக்கு சென்றார்.

இன்ஸ்பெக்டர் மீண்டும் வீட்டுக்கு வந்ததும், கிஷோர் வீட்டில் இருந்தும் இல்லை என்று பதில் சொல்ல சொன்னார் தன் மனைவியிடம்.

அவரும் அவ்வாறே சொன்னார்.

இன்ஸ்பெக்டர் சுடர், உங்கள் கணவர் வந்ததும் ஸ்டேசனுக்கு வர சொல்லுங்க இல்லை என்று அவர் சொன்னதிலே புரிந்து கொண்டார்
கிஷோரின் மனைவி.

கண்டிப்பாக வரச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் இன்ஸ்பெக்டர் சுடர்,
வீட்டுக்கு கிஷோரும் அவரின் சமுதாய தலைவரும் மற்றும்
ஒரு சிலரும் சென்றார்கள்.

இன்ஸ்பெக்டர் சுடர்,
கிஷோரையும், அந்த சமுதாய தலைவரை மட்டும் வீட்டுக்குள் வரச் சொன்னார்.

இருவரும் உள்ளே வந்ததும்,
கிஷோர் என்னை மன்னித்து விடுங்கள், எல்லாம் நான் ஓட்டு வாங்க செய்த நாடகம் தான் என் குழந்தை கடத்தல் சம்பவம் என்றார்.

பிறகு சமுதாய தலைவரும் என்னையும் மன்னிக்கவும்,
நானும் இவனை பழி வாங்குவதற்காக உங்களை பயன் படுத்தினேன் என்றார்.

சுடர் மிகுந்த கோபத்தில், எந்திரிங்கடா என்று கத்தினார்.

காவல் துறை என்றால்,
என்ன நினைத்தீர்கள் என்று
காவல் துறையை பற்றி பாடம் நடத்தும் முன்பே இருவரும் சுடரின்
காலில் விழுந்தனர்.

அடச்சீ எந்திரிங்க,
எழுந்திருச்சு ஓடிடுங்க என்றார் கோபமாக இன்ஸ்பெக்டர் சுடர்.

இரண்டு பேரும் விழுந்து அடிச்சு,
இன்ஸ்பெக்டர் சுடர் வீட்டை விட்டு ஓடி வந்தார்கள்.


சென்னை -
இரண்டு முறை விசவாயு வைத்த சமூக விரோதி இந்த முறை,
வேறு இடங்களில் விஷவாயு வைத்து
அதை பரப்ப திட்டம் தீட்டி கொண்டு இருந்தான்.


சென்னை கமிஷனர் அலுவலகம் -
பொதுத் தேர்தல் முடிந்ததால்,
ஏற்கனவே விடுமுறை கேட்டவர்களில்
அனைவருக்கும் விடுமுறை கொடுக்காமல், அவசியம் கருதி விடுமுறை கேட்டவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அக்னி தேவி குழுவில்,
சுஜிதாவுக்கு மட்டும்
அவர் அக்கா திருமணத்திற்காக விடுமுறை கொடுக்கப்பட்டது.

சுஜிதா, ஊருக்கு செல்வதற்கு சில
பர்ச்சேஸ் செய்ய தன் குழுவினருடன்
ஷாப்பிங் மால் சென்றார்.

பர்ச்சேஸ் செய்து முடித்ததும் ஹோட்டலில் தன் குழுவினருக்காக,
இரவு உணவு செலவை ஏற்றுக் கொண்டார்.

சுஜிதாவை அவள் ஊரான மதுரைக்கு இரயில் ஏற்றி விட்டு அறைக்கு வந்தார்கள் அக்னி தேவி குழுவினர்.

இரண்டு நாட்கள் கழித்து,
சுஜிதாவுக்கு போன் செய்தாள் அக்னி தேவி.

அப்போது சுஜிதா மிகவும் பதட்டமாக பேசினார்.

மறுமுனையில் உள்ள அக்னி தேவி,
ஓ அப்படியா, முதலிலே அக்கா சொல்ல வில்லையா என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

எதிர் முனையில் உள்ள சுஜிதா,
ம்ம் அக்காவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நாளை
திருமணத்தை வைத்து கொண்டு இப்போது முடியாது என்று சொல்கிறார்.

என்ன காரணம் என்று கேட்டீர்களா என்று அக்னி தேவி கேட்டாள்.

ஒரு காரணமும் இல்லை,
ஆனால் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார்.
அதற்காக நான் காதலிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் என்று
அக்கா அழுத்தமாக சொல்கிறார்.

எனக்கு லீவு கிடைக்காமலே இருந்து இருக்கலாம் என்று வருத்தத்துடன் சொன்னார் சுஜிதா.

ஏன் அப்படி சொல்கிறாய் என்று அக்னி தேவி கேட்டாள்.

இங்கே வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் இந்த விசயத்தை சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும்,
அவர்கள் அக்கா முடியாது என்று சொன்னால் தங்கச்சியை பெண் கொடுங்கள் என்று கேட்பார்கள் என்று வருத்
தத்துடன் சொன்னார் சுஜிதா.

ஓ இப்படி வேற ஒன்னு உள்ளதோ?
என சொன்ன அக்னி தேவி,
கவலைப் படாதே, உன் அக்கா திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார் என்று அக்னி தேவி சுஜிதாவுக்கு
நம்பிக்கையோடு
தைரியத்தையும் சேர்த்து சொன்னாள்.


இனி குற்றம் குறையும்
(தொடரும்)
 
Top Bottom