MRS BEENA LOGANATHAN | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.
MRS BEENA LOGANATHAN

Profile posts Latest activity Postings About

  • JTN 10. இரட்சிப்பாயா இராவணா

    கடின முகத்தில் கருணை மறைந்து,
    காயம் சுமக்கும் இதயம் நிறைந்து,
    இராவணனும் காதலால் மாறினால்,
    இரட்சிப்பு என்பதும் அன்பு தானே....
    JTN 9. இருள் விழும் முன்

    இருள் வருவதற்கு முன்பாகவே,
    இன்ப ஒளியாய் நீ வந்தாயே,
    பயம் மறந்த மனம் இன்று,
    பாசம் மட்டும் பேசுகிறதே.....
    JTN 8. எந்த நாளும் நீதானடி
    என்னோட ராசாத்தி

    எந்த விடியலும் உன் பெயராலே,
    என் கனவுகள் உன் நிழலாலே,
    ராசாத்தி... கை கோர்த்த நொடி முதல்,
    என் வாழ்க்கை முழுதும் நீதானடி.
    JTN 7. ஏதேன் தோட்டத்து முல்லை

    ஏதேன் தோட்டம் தேடிய வாசம்,
    ஏங்கும் நெஞ்சின் இனிய நேசம்,
    முல்லை பூவாய் மலர்ந்த பாசம்,
    முழு வாழ்வும் நீ என் சுவாசம்......
    ramya ammu crazy kirukkal
    ramya ammu crazy kirukkal
    ❤️ வாவ் சூப்பர் அக்கா 💐💐 மிக்க நன்றி கவிகுயில்
    JTN6. குற்றம் 9

    குற்றம் என்று உலகம் சொன்னாலும்,
    குணத்தை மட்டும் மனம் தேடுமே,
    உண்மை வெல்லும் ஒரு நாளில்,
    உயிரின் நீதி ஒளிர்ந்து நிற்குமே....
    JTN 5. கனல் சூடிய காரிகையே

    கனலாய் கோபம் கொண்ட விழிகள்,
    கரையும் அன்பை மறைக்கும் மொழிகள்,
    காயம் தந்தாலும் காதல் மாறாது,
    காரிகையே... என் மனம் விலகாது.....
    JTN 4. காதல் மேட்ரிமோனி

    இதயம் எழுதிய திருமண பத்திரம்,
    இணைந்த உயிர்கள் வாழ்வின் சித்திரம்,
    காதல் கட்டிய பந்தம் என்றும்,
    காலம் கடந்தும் அழியாத சொந்தம்...
    JTN 3. என் மெய் தீண்டும் கள்ள காமுகனே

    மெய் சிலிர்க்கும் உன் பார்வையிலே,
    மெளனம் கூட கவிதை ஆகுதே,
    கள்ளச் சிரிப்பில் மனம் திருடி,

    காதல் நாட்டில் என்னை சேர்த்தாயே.
    கள்ள காமுகனே....
    JTN2. கார்காலம் நீ தான் அன்பே

    கார்மேகம் சூழ்ந்தாலும் பயமில்லை,
    காதலாய் நீ இருந்தால் தனிமையில்லை,
    காற்றோடு வரும் உன் நினைவுகள்,
    காலமெல்லாம் என் உயிரின் உறவுகள்.
    JTN1. சொல்லாழி வெண்சங்கே

    சொல்லாமல் மனம் பேசும் இசையே,
    சொர்க்கத்தின் வாசல் திறந்த சுகமே,
    வெண்சங்கே முழங்கும் காதல் ராகமே,
    வாழ்நாளெல்லாம் நீயே என்
    வேதமே.....
    HI friends......
    முடிந்த கதைகளை
    முடிந்த வரை படித்து
    முடியும் வரை விரைவாக
    விமர்சனத்தை முன் வைக்கிறேன் தோழமைகளே....
    முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
    முடிக்க துடிக்கும் எழுத்தாளர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom