What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நூலான நூதனமே ❤️‍🔥❤️‍🔥2

கனிமொழி

Active member
Staff member
Joined
Oct 17, 2024
Messages
144
Reaction score
31
Points
43
காலம் யாருக்காகவும் காத்திருக்காது அதுவும் நேரத்தை கூட நாளாக பாவித்து வேலையை முடிக்கும் யாஷிகாவிற்கு இரண்டு மாத அப்ராட் பயணம் கழிந்தது ஐந்து மாதமாக இருந்தது. தன் எஜமானி வரவிற்காக கம்பனி வாசலிலே காத்திருந்தான் யூகா. ‌ அவளை கடைசியாக பார்த்தது அன்று சசிதரனிடம் அக்ரீமென்ட் போட்ட போது தான் இன்றிலிருந்து அந்த அக்ரீமென்ட் ஆரம்பம் ஆகிறது. முதல் நாள் நியாயமாக யூகா பக்கத்தில் சசி நின்று அவளை வரவேற்றிருக்க வேண்டும் ஆனால் அவன் இல்லை அவனுக்கான இடத்தில் அவன் இல்லாததை கார் வந்து நின்ற ஒரு நொடியில் கண்டுக்கொண்டாள் யாஷிகா. காரிலிருந்து இறங்கிய யாஷிகா தன் ஊழியனை பார்த்த பார்வையிலே அவள் கேள்வியை உணர்ந்தவன்

"மேம்! சசி சார் இன்னும் ஆபிஸ் வரலை"

"ஆபிஸ் மட்டும் தான் வரலையா இல்லை இன்னும் ஊரில் இருந்தே வரலையா?" பெண்ணவள் சந்தேகத்தோடு கேட்க

"மேம்! சசி சார் நேற்றே ஊரில் இருந்து வந்துட்டார். இன்னும் ஆபிஸ் தான் வரலை"

"ஓகே! அவன் இன்னைக்கு ஆபிஸ் வர வேண்டாம். ஈவ்னிங் பார்டிக்கு வர சொல்லு. சொல்லும் போது அப்பா வருவார் என்பதை அழுத்தமாக சொல்லி சொல்லு"

"ஓகே மேம்"

"அப்பறம் புது ப்ராஜெக்ட் எப்படி போகுது?"

"மேம்! எல்லாம் ஓகே அதில் நீங்க சொன்ன புது டிசைன் மட்டும் சேர்த்துட்டா எல்லாம் சரியா இருக்கும்"

"நான் சொன்னதை சீக்கிரம் முடிங்க கூடவே நமக்கு தேவையான டிசைன் எல்லாத்தையும் சசி கிட்ட இருந்து வாங்குங்க"

"ஓகே மேம்" யூகா அவளிடமிருந்து விடைபெற்று நேராக சசி வீட்டிற்கு வந்தான். அவனோ தலையணையை தலைக்கு வைக்காமல் முகத்தில் போட்டு பகலவனின் ஒளி கொஞ்சம் கூட உள் நுழையாத வண்ணம் மறைத்திருந்தான். அதை வலுக்கட்டாயமாக அகற்றினான் யூகா.

"யாரு அது?" கோபத்தோடு எழுந்தவனை வித்தியாசமாக பார்த்தான் யூகா

"நீ.... நீ..." என யூகா இழுக்க அவனுடைய இழுவைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாய் திறந்தான் "நான் சசிதரன் நீ யூகா. உன் பெயர் கூட உனக்கு மறந்து போச்சா என்ன?"

"இல்லை ஆனால் சசி நீ பார்க்க புதுசா இருக்க"

"என்ன புதுசா இருக்க?"

"நீ எத்தனை கிலோ சொல்லு?"

"நான் இப்போ 98"

"என்ன 98 ஆ இது மட்டும் மேம்க்கு தெரிந்தால் உன்னை திட்டுவாங்க. இரண்டு மாசத்தில் பதினைந்து கிலோவா ஏறுவ. நீ அக்ரீமென்டில் படிச்சு பார்க்கலை உடம்பு வெயிட் போடக்கூடாதுன்னு"

"ஏன்டா இரண்டு மாசம் கொஞ்சம் நல்லா சாப்பிட்டேன் அது ஒரு தப்பா? ஏன் இப்படி அக்ரிமென்ட் எல்லாம் சொல்லி என்னை டென்ஷன் படுத்தற?"

"சசி! நீ வேணா இந்த அக்ரிமென்ட் திரும்ப ஒரு முறை படிச்சு பாரு உன் லவ்வரை பார்த்துட்டு வந்திருக்க இல்லை அதான் எல்லாம் மறந்துட்ட போல" அவன் கையில் வலுக்கட்டாயமாக அன்று போட்ட அக்ரீமென்ட் பேப்பரை திணித்தான். சசி அதை படித்தான் அதில் எழுதி இருந்ததை படிக்க படிக்க அவனுடைய விழி விரிந்தது அதை பார்த்த யூகா "நீ என்ன புதுசா படிக்கிற மாதிரி பிகேவ் பண்ற சசி?"

"நீ சொன்னது தான் இரண்டு மாசமா என் லவ்வர் கூட இருந்தேன் இல்லை அதில் எல்லாம் மறந்துடுச்சு அதான் எல்லாம் புதுசா படிக்கிற மாதிரியே இருக்கு"

"அப்போ படி ஆனால் எல்லாத்தையும் ஈவ்னிங் உள்ள படிச்சுட்டு கிளம்பு ராத்திரி நீயும் மேடமும் யாதவ் சார் கூட டின்னர் சாப்பிட போறீங்க அப்படியே மேம் உனக்கு ப்ரபோஸ் பண்ணுவாங்க அதை நீ ஏத்துக்கற சரியா"

"என்ன பிரபோஸ்?"

"ஒழுங்கா அக்ரீமென்ட் படி சசி. இதில் நீ என்ன செய்யனும் என்பது முழுசா சொல்லி இருக்கு? நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஷாக் ஆகற ஏன்? இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரிந்தது தானை"

"உன்னை செக் பண்ணேன் யூகா"

"நீ என்னை செக் பண்ணலை ஷாக் பண்ற"

"சரி விடுடா! ஆமாம் அப்பறம் என்ன கன்டினியூ பண்ணு"

"மேம் ப்ரபோஸ் பண்ணுவாங்க அதை நீ அக்ஸப்ட் பண்ணனும் அப்பறம் நைட் அவங்க கூட ஸ்டே பண்ண போற"

"எனக்கு ஒரு டவுட்"

"என்ன டவுட்?"

"பிரபோஸ் ஓகே ஆனால் இந்த ஸ்டே அது தான் எங்கேயோ இடிக்குது. ஒரே வீட்டில் ஒரு பையன், பொண்ணு எப்படி ஜென்டிலா இருக்க முடியும்"

"உனக்கு லவ்வர் இருக்கு அதனால் நீ ஜென்டிலா தான் இருப்ப"

"அப்போ உன் மேம்"

"அவங்க எப்பவுமே ஜென்டில் அவங்க உன்னை எப்பையாச்சும் இரண்டு நிமிஷத்துக்கு மேல் பார்த்து இருக்காங்களா இல்லை. இதில் இருந்தே தெரியலை அவங்களுக்கு நீ எல்லாம் ஒரு ஆளே இல்லைன்னு. அதுவும் இல்லாமல் எங்க மேம் மனசில் உன் மேல் காதலும் இல்லை கருணையும் இல்லை அதனால் பீல் பண்ணாதே"

"யூகா! உன் ராசிக்கு இன்னைக்கு கேலண்டரில் என்ன போட்டு இருந்துச்சுன்னு பார்த்தியா"

"இல்லையே"

"போய் பாரு இல்லைன்னா என் கையில் அடி வாங்கியே செத்துடுவ போடா" அவன் கத்த யூகா அங்கிருந்து சென்றான். கையில் இருந்த அக்ரீமென்ட் பேப்பரை ஒரு எழுத்து விடாமல் படித்தான் அவன். முழுவதும் படித்து முடித்த அடுத்த நொடி கோபம் வரவே தன் போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான். எதிர் முனையில் ஏற்கப்பட்டது தான் தாமதம்
"யோவ்! ஏன் என்னை‌ இதில் மாட்டிவிட்ட? நான் ஏதோ கார் ரேஸ் போய்ட்டு ஊர்‌ ஊரா சுற்றி சந்தோஷமா இருந்தேன். தம்பி பாசம் தக்காளி பாசம்னு சொல்லி என்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்க. இந்த பொண்ணு என்ன ஏது ஏதோ அக்ரிமென்டில் போட்டு இருக்கு. இப்போ பிரபோஸ் பண்ணுமா அதை நான் ஏத்துக்கனுமா அக்ரிமென்ட் முடியும் போது பிரேக் அப் பண்ணிடுமா இதெல்லாம் நியாயமா சொல்லு"

"பேராண்டி இதெல்லாம் வேணும்னா பண்றோம். இத்தனை வருஷம் நீயும் நானும் தனியா இருந்துட்டோம் ஆனால் இனி அப்படி இருக்க முடியாதே சசிக்கு சொந்தம் சொல்லிக்க நீயும் நானும் தான் இருக்கோம். அவன் எதிர்பாரத விதமாக அக்ரிமென்ட் போட்டு மாட்டிகிட்டான் கொஞ்ச நாள் அவனாக நடி வசி"

"தாத்தா! நான் நடிக்கிறேன் ஆனால் நீங்க ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் சசி நினைவு எல்லாம் எப்போ திரும்ப வருதோ அப்போ நான் இங்கே இருக்க மாட்டேன்"

"வசி! எனக்கு புரியுது நீ சொல்றது அவன் கோமாவில் இருந்து வெளியே வந்துட்டா கண்டிப்பா நீ அங்கே இருக்க வேண்டாம். உன்னை நானே அதில் இருந்து வெளியே கொண்டு வந்துடறேன்"

"சரி தாத்தா! ஆமாம் சசி எப்படி இருக்கான்?"

"இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை நாங்களும் டாக்டர்ஸ் கிட்ட பேசிட்டு தான் இருக்கோம்"

"தாத்தா! சசிக்கு சின்ன வயசில் இருந்தே மெலோடி சாங்க்ஸ் பிடிக்கும் அதை போடுங்க அப்பறம் அம்மாவை பற்றி பேசுங்க அவனுக்கு அப்பாவை விட அம்மாவை தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் அவங்க பழைய டைரி என்னோட ரூமில் இருக்கும் அதை எடுத்து வந்து படிச்சுகாட்டுங்க"

"டேய்! உன் தம்பி மேல் இவ்வளவு பாசமா என்ன?"

"தாத்தா! எங்க அப்பா அம்மா பிரிந்தாலும் அவன் மேல் பாசம் அப்படியே தான் இருக்கு. அதை யார் பிரிந்தாலும் பிரியாது சோ சீக்கிரம் சசியை பழைய நிலைக்கு கொண்டு வாங்க"

"சரி வசி! நீ பார்த்து இரு. அந்த யாஷிகா பொண்ணு ரொம்ப ஸ்மார்ட் அதனால் பார்த்து ஜாக்கிரதை"

"இந்த அக்ரிமென்ட் பார்த்தாலே தெரியுது அவள் எவ்வளவு ஸ்மார்ட் என்று இனி நான் பார்த்துகிறேன் நீங்க சசியை பார்த்துக்கோங்க"

"வசி! இந்த தாத்தா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்"

"மிஸ்டர். வாஞ்சிநாதன் போனை வச்சிட்டு வேலையை பாருங்க போங்க" இதழில் சின்ன சிரிப்போடு போனை வைக்க அவன் முன் யூகா வந்து நின்றான். அவனை சற்றும் எதிர்பாராதவன் முதலில் பயந்து அடுத்த நொடி பழைய நிலைக்கு வந்தான்.

"நீ சசி இல்லைன்னா யாரு நீ?"

"டேய்! இங்கே வந்து உட்காரு" எதிரே இருந்த சோபாவை காட்ட யூகாவும் எச்சரிக்கையோடு அமர்ந்தான் பின்ன அடித்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் ஆனால் அவனோ அதெல்லாம் செய்யாமல் உண்மையை அவனிடம் சொல்ல நினைத்தான் அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அவனுக்கு இப்பொழுது தனக்கு சாதகமான ஆள் வேண்டும் அதான் அவனிடம் உண்மையை சொல்ல நினைத்தான். அதுவும் அவனுடைய நிலையை அறிந்து தான் முன்பு பேச்சு கொடுத்த போதே கண்டறிந்தான் யூகா ஒரு நம்பிக்கைக்குரிய நபர் என்பதை அதனால் அவனிடம் உண்மையை கூற நினைத்தான். யூகா அவனை மேலிருந்து கீழ் வைர பார்த்தவன் "நீ நிஜமாவே யாரு ஒரு பக்கம் பார்த்தா சசிதரன் மாதிரி இருக்க‌ இன்னொரு பக்கம் பார்த்தா அவனை மாதிரி இல்லை உண்மையா நீ யாரு? உண்மையை சொல்லு"

"சரி! நான் உண்மையை சொல்றேன் ஆனால் நீ இதை யார்கிட்டையும் சொல்லக்கூடாது"

"ஏன்?"

"ஏன் என்றால் இதை சப்போஸ் நீ யார்கிட்டையாவது சொன்னா உன்னோட உயிர் போக கூட வாய்ப்பு இருக்கு"

"என்ன என் உயிர் போகற வாய்ப்பா?"

"ஆமாம்! சசிக்கு பதிலாக என்னை நடிக்க சொன்னதுக்கு உன் உயிர் தான் போகும்"

"நான் எங்கே உன்னை நடிக்க சொன்னேன்?"

"நீ என் பிராமிஸ் மீறி சொன்னா அது தான் நடக்கும். நீ சொன்னதால் தான் இதெல்லாம் பண்ணேன் அப்படின்னு சொல்லி என் கூட உன்னையுமா நரகத்துக்கு இழுத்துட்டு போய்டுவேன்"

"நீ நிஜமாவே சசி இல்லை அவனுக்கு இப்படி கிரிமினலா பேச தெரியாது. ஒழுங்கா சொல்லு நீ யார்? எங்க ப்ரண்ட் சசிதரனை என்ன பண்ண?"

"நான் எதுவும் பண்ணலை"

"அப்பறம் ஏன் அவனோட இடத்தில் நீ இருக்க"

"இங்கே பாரு யூகா. நான் சசிதரனோட அண்ணா வசீகரன்."

"என்ன அண்ணனா? அவனுக்கு அண்ணன் யாரும் இல்லையே"

"உங்களை பொறுத்த வரை இல்லை தான் ஆனால் நானும் அவனும் டிவின்ஸ் என்னோட பெயர் வசீகரன், அவனோட பெயர் சசிதரன்" உண்மையை தெளிவாக உரைக்க அதை கேட்டு யூகா மயங்கி இருந்தான்.
 
ramya ammu crazy kirukkal

Active member
Staff member
Joined
Mar 22, 2025
Messages
352
Reaction score
194
Points
43
சஊ

சூப்பர் மா
 
Top Bottom