What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவின் கர்மா (ஜோதி ரிவ்யூ)

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
#ஜோதி_ரிவ்யூ

#ஜோதிதமிழ்நாவல்ஸ்நாவல்போட்டி

JTN - 1 கனவின் கர்மா (கிரைம் திரில்லர்)

அதிக வாக்குகளை பெற்றும் ஆட்சியமைக்க வேறு கட்சியின் ஆதரவு தேவைப்பட்டதால் செயலாளர் மூலமாக அதற்கு ஏற்பாடு செய்து கவர்னருக்கும் தகவல் தெரிவிக்க, அந்த கட்சியை சார்ந்த தலைவர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை கோருகிறார்.

அவரும் சம்மதித்து மற்ற வேலைகளை கவனிக்க, அந்த நேரத்தில் உதவுவதாக சொன்ன கட்சி தலைவரின் மகன் காணாமல் போய் விடுகிறான். அதற்கு பிறகு நடப்பது என்ன? யார் அவனைக் கடத்தியது? அவனது நண்பர்களின் வாழ்க்கையில் நடந்தவை... என்று சில பல கேள்விகளுடன் போட்டிக்கதை நகர்கிறது.

பகலவன் காவல் அதிகாரியாக வந்து காணாமல் சென்ற அமைச்சரின் மகனை கண்டுபிடிக்க விசாரணை நடத்திய விதம் நன்றாக இருந்தது. அவரது திறமைகளையும், முன்பு பணிபுரிந்த அனுபவத்தையும் சொல்லிய விதமும், போலி சாமியர் மூலமாக புதையலை கண்டுபிடிக்க இருந்த நபர்களை கண்டுபிடித்த பாங்கும் சிறப்பு.

மூன்று நண்பர்களாக வருபவர்களும் அவர்களது வாழ்க்கையில் நடந்தவையும் அவர்களுக்கு அந்த தீங்கை விளைவித்தது யாராக இருக்கும் என்ற யூகத்தை கொடுத்து விடையையும் நம்மையே கண்டுபிடிக்க வைக்கிறார் எழுத்தாளர்.

பகலவன், மனைவி இருவரும் வரும் காட்சிகள் 👌👌

எழுத்தாளராக வருபவர் சொல்வது சரியாக இருந்தாலும், காவல் அதிகாரியிடம் உத்தரவிடுவதும், அவரது எண்ணம் தான் சரி என்பது போல வாதிட்ட இடமும் அத்தனை சரியாக படவில்லை.

அது போல கதை சொல்லலில் இன்னும் கொஞ்சம் பரபரப்பு விறுவிறுப்பு, எழுத்து நடையில் வேகத்தையும் கொண்டு வந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.

போட்டிக்கதை வாசிக்க நன்றாக உள்ளது. நீங்களும் வாசித்து பாருங்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ💐💐💐

கதைக்கான லிங் :

 
Top Bottom