What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்யாயம் 7

Joined
Aug 24, 2025
Messages
93
Reaction score
37
Points
18
Age
43
அன்பு, அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்த வேளையில். தாமரைக்கு வந்த போன் அழைப்புகளை, அவள் அட்டென்ட் செய்து பேசிய அழகு தமிழும், கலப்பில்லா ஆங்கிலமும், அன்புவுக்கு வியப்பை மட்டும் தரவில்லை. அவளை பார்ப்பதற்கும் தான் தகுதியற்றவன் என்ற நினைப்பையும் தந்தது. கையில் வைத்திருந்த பைலை பார்ப்பது போல தலை கவிழ்ந்து அமர்ந்தவன், அதன் பின்னர், தாமரையை நிமிர்ந்தே பார்க்கவில்லை.

தாமரையின் கண்கள், அனிச்சையாகவே... அவ்வப்போது அன்பை நோக்கியது.

ரிசப்ஷன் ஹாலை கடந்து சென்றால் ஜி எம் அறை, அதைத் தொடர்ந்து குவாலிட்டி செக்கிங் அறை. என்று வரிசையாக அமைந்திருந்த அறையில், ஜிஎம் அறையில் வைத்து இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

அன்புக்கு முன்னால் சென்ற, சரவணன் என்ற இளைஞன் தேர்வு செய்யப்பட்டான். அவன், அன்புவிடம் தெரிவித்து விட்டு சென்றான். அவனுக்கு, அன்பு வாழ்த்து தெரிவித்து, வழி அனுப்பி வைத்தான்.

அன்புவின் முறை வந்ததும், ஜிஎம் அறைக்கு சென்று, கதவைத் திறந்து, "உள்ளே வரலாமா" என்று கேட்க.

"எஸ் கம்மின்." என்றார்கள்.

உள்ளே சென்றதும்,
அந்த அறையில், ஜிஎம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் முருகன், மெக்கானிக்கல் இன்ஜினியர் தினேஷ், என்று மூவர் அமர்ந்திருக்க. ஜி எம் இன் எதிரில் இருந்த சேர் வெறுமையாய் இருந்தது.

மூவரும், ஒன்றாக உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

மூன்று பேரை ஒன்றாக பார்த்ததும், அன்புக்கு தொடை நடுங்க ஆரம்பித்து விட்டது.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சேரின் நுனியில் அமர்ந்தான்.

தினேஷ், "நல்லா கான்ஃபிடன்ட்டா உட்காருங்க." என்றான்.

அன்பு கொஞ்சம் தள்ளி, நிமிர்ந்து உட்கார, கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தார்கள்.

முருகன், "இதுக்கு முன்ன எங்கே வேலை பார்த்தீங்க?"

அன்பு, "விளாத்திகுளத்தில் ஸ்பின்னிங் மில்ஸ்ல வேலை பார்த்தேன்."

ஜி எம், "ஸ்பின்னிங் மில்லோட நடைமுறை என்ன?"

அன்புவிடம், அமைதி.

தினேஷ், "நீங்க எந்த வருஷம் படிச்சு முடிச்சீங்க?"

அன்பு, "1998" என்றவன், எச்சிலை விழுங்கிக்கொண்டான்.

முருகன், "டைப்ஸ் ஆப் மோட்டார்ஸ்?"

அன்பு, "தேர் ஆர் டு டைப்ஸ்." என்று முடிக்கும் முன்பே

ஜி எம், "நீங்க தமிழ் மீடியமா? இங்கிலீஷ் மீடியமா?"

அன்பு, "தமிழ் மீடியம்."

தினேஷ், "பாலிடெக்னிக்ல எக்ஸாமினேஷன், தமிழ்ல எழுதினீங்களா? இங்கிலீஷ்ல எழுதுனீங்களா?"

அன்பு, "தமிழ்"

முருகன், "ஓம்ஸ் கரண்ட் லா சொல்லுங்க."

அன்பு, "ஒரு கடத்தி..."

ஜிஎம், "ஓம் எத்தனை லா சொல்லி இருக்கிறார்?"

அன்பு, திருத்திருவென விழித்துக் கொண்டிருந்தான்.

தினேஷ், "உங்களோட இயற்கை சுபாவமே சுலோ தானா?"

அன்பு, முகம் சுண்டி போனான்.

முருகன், "சென்னைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகுது?"

அன்பு, "ரெண்டு வாரம்"

ஜி எம், "உங்கள நாங்க செலக்ட் பண்ணுனா, எங்களுக்கு என்ன லாபம்?"

அன்பு, அமைதியாய் இருந்தான்.

தினேஷ், "உங்கள நாங்க ரிஜெக்ட் பண்ணிட்டோம்னா, அதுக்காக அழுவீங்களா?"

இந்த கேள்வியை எதற்காக கேட்டான்? என்று முருகனும், ஜிஎம்மும், திரும்பி பார்த்தார்கள்.

அன்பு, "இல்லை" என்று தலையசைத்தான்.

ஜி எம், "நான் உங்களை செலக்ட் பண்றேன்." என்றதும். முருகனும், தினேஷும், ஜி எம் ஐ அதிர்ந்து பார்த்தார்கள்.

ஜி எம், "நானும் மில்லில் வேலை பார்த்தவன்தான். மில்லில் பார்க்கிறவங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். நீங்களும் நிறைய தெரிஞ்சிருப்பிங்க என்கிற நம்பிக்கையோடு தான் உங்கள நான் இன்னைக்கு செலக்ட் பண்றேன். உங்கள ரெஃபேர் பண்ணவங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க பாருங்க. ஆல் தி பெஸ்ட்." என்று சொல்ல.

அன்புவால் நம்பவே முடியவில்லை. அவன், அட்டென்ட் செய்த விதம், அவனுக்கே நன்றாக தெரியும். இருந்தும் எப்படி தேர்வானோம்? எதற்காக தேர்வானோம்? என்று யோசனையோடு எழுந்து நின்றான். "வரேன் சார்" என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

தினேஷ் உடன் இருக்கும் போதே... நூறு காரணத்தை சொல்லிவிட்டு, சுற்றி வருபவர்கள். இப்போது தினேஷ் இன்டர்வியூ எடுப்பதற்கு, சென்றிருக்கும்போது கேட்கவா வேண்டும்?.

ராமும், சங்கரும் போட்டுக் கொண்ட உடன்படிக்கையின் படி, சங்கர் ரிசப்ஷன் ஹாளுக்கும். ராம் ஸ்டோர் ரூமுக்கும் சென்று விட்டார்கள்.

ராம், ஸ்டோர் ரூமுக்குள் சென்று, தீபாவின் முன் இருக்கையில் அமர்ந்தான்.

தீபா, "உங்களுக்கு வந்த பொருளை எல்லாம் எடுத்துட்டு போயிட்டீங்களே... இப்போ என்ன கேட்டு வந்திருக்கீங்க? எதுவும் ஆர்டர் பண்ணனுமா?"

ராம், "ஆர்டர் பண்ணனும். ஆனா வெளியில இருந்து இல்ல."

தீபா, "உள்ளுக்குள்ளேயே இருக்கிற பொருளை கேட்டு வாங்குறதுக்கும் ஸ்டோருக்குதான் வருவீங்களா சார்? யார்ட்ட இருக்கோ... அவங்ககிட்ட போய் கேட்க வேண்டியதுதானே?" என்று கடுகடுத்தாள்.

"எனக்கு ப்ரொசீஜர் கரெக்டா ஃபாலோ பண்ணனும். அதனாலதான் இங்கே வந்தேன். நீங்களே கொடுத்துட்டா... நான் உங்களை தொந்தரவே பண்ண மாட்டேன்."

"வாட் யூ மீன்"

"நீங்களே வாங்கி கொடுத்துட்டீங்கன்னா, அந்த பொருள் நம்மகிட்ட இருக்கா? இல்லையாங்கிற? ஒரு ஐடியா உங்களுக்கு கிடைக்கும் இல்லையா... அதை பத்தி சொன்னேன்."

தீபா, "அதைப் பத்தியே சொல்லிக்கிட்டு தான் இருக்கறீங்க. but அது என்ன பொருள்? யார்கிட்ட இருக்குன்னு மட்டும் சொல்ல மாட்டிங்கறீங்க. சொன்னாலும் கேட்டு வாங்கி கொடுத்துடுவேன்."

ராம், "நான் இங்க வர்றது உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கா?"

"சார் ப்ளீஸ். என்ன சொல்ல வந்தீர்களோ.... அதை ஸ்ட்ரைட்டா சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு."

"ஓகே தீபா, ஐ லவ் யூ. என்று வேகமாக சொல்லிவிட்டு. தலையை கவிழ்த்திக் கொண்டான்."

தீபாவுக்கு, ராமை ஓங்கி அறைந்து விடலாம் போல இருந்தது. ஆனாலும் பொறுமையாக, ஒரு துண்டு சீட்டில் போன் நம்பரை எழுதி ராம் கையில் கொடுத்து. "இது அண்ணாவோட மொபைல் நம்பர். அவருக்கு போன் பண்ணி என்கிட்ட சொன்னதை நேரடியா சொல்லிடுங்க."

"அண்ணான்னு சொன்னால் பயந்துடுவேன்னு பாத்தீங்களா? உங்க அப்பாவோட மொபைல் நம்பரை குடுங்க. நானே நேரடியா பேசிடுறேன்."

"இவன் அடங்க மாட்டான் போல இருக்கே" என்று அவன் கையில் கொடுத்த தாளை, வெடுக்கென்று பிடுங்கி, அதன் மறுபுறத்தில் அவளது முகவரியை எழுதி, அவன் கையில் கொடுத்தாள். "இது என்னோட அட்ரஸ். சண்டே எல்லாரும் வீட்லதான் இருப்போம். நீங்க நேரடியா பொண்ணு கேட்டு வந்துடுங்க."

"அடிப்பாவி குடும்பத்தோட சேர்ந்து என்னை கொலை பண்ண பாக்குறியா?" என்று எண்ணி கொண்டவன். அவள் கையில் இருந்த தாளை வாங்கிக் கொண்டு. ஸ்டோரூம்மை விட்டு வெளியே சென்றான்.

ரிசப்ஷன் ஹால் சென்ற சங்கரை, தாமரை கண்டுகொள்ளாமல், அவளது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஷங்கர், அவள் பார்வை படும்படி, அங்கும், இங்கும் நின்று கொண்டு. இன்டர்வியூ வந்திருப்பவர்களை விசாரித்துக்கொண்டும், பேசிக் கொண்டும், ஷோ காண்பித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் இன்டர்வியூ முடித்து வெளியே வந்த அன்பழகன், தாமரையின் புறம் திரும்பாமல், அந்த ஹாலை விட்டு வெளியேறினான்.

ஷங்கர், அவனைத் தொடர்ந்து சென்று, "ஹலோ... ஹலோ. என்ன ரிஜெக்ட் ஆயிட்டீங்களா? அதான் இவ்வளவு ஆவேசமா?"

"இல்லங்க செலக்ட் ஆயிட்டேன்."

வேகமாக அன்புவின் கையைப் பிடித்த சங்கர். "வாழ்த்துக்கள் சார்... உங்க பேர் என்ன?" என்று கேட்க.

"அன்பழகன்," என்று பெயரை மட்டும் சொன்னான்.

சங்கர், "ஓ... நீங்க மேடமோட பிரதரா?" அப்புறம் எப்படி உங்களை ரிஜெக்ட் பண்ணுவாங்க.? நீங்க கண்டிப்பா செலக்ட் ஆவீங்கனு எனக்கு அப்பவே தெரியும்."

அன்புக்கு விளங்கவில்லை "எப்போ?எந்த மேடம்?"

"உங்களோட அப்ளிகேஷனை கொடுத்து, ரெபர் பண்ணி இருந்தாங்களே அப்போ."

"யாரு?"

"ரிசப்ஷன்ஸ்ட் தாமரை மேடம்"

"அவங்க தான் என்ன ரெபர் பண்ணி இருந்தாங்களா?" என்று கேட்கும் போதே... "அவளுக்கு எப்படி என்னோட அப்ளிகேஷன் கிடைச்சது?" என்று ஒருபுறம் எண்ணம் ஓடியது.

"தாமரை மேடம், உங்களோட சிஸ்டர் தானே?"

இவன், தாமரையை, தனக்கு சகோதரி என்று சொல்வதை, அன்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "அவங்க என்னோட சிஸ்டர் இல்லை." என்று சொன்னவன், மறு வார்த்தை பேசாமல் மெயின் கேட்டை தாண்டி வெளியே சென்று விட்டான்.

சங்கர், "இவனுக்கு சிஸ்டர் இல்லன்னா... வேற என்ன உறவா இருக்கும்?" என்று உள்ளுணர்வு பயமுறுத்த நின்று விட்டான்.

பஸ் ஏறுவதற்காக காத்திருந்த அன்பு, "இந்த வேலை கிடைக்க காரணம் தாமரைதான். அவளுக்கு என்னோட பயோடேட்டா எப்படி கிடைச்சதுன்னு தெரியல. ஆனா என்னை அவளோட பிரதரா நினைச்சு, இந்த வேலைக்கு ரெக்கமெண்ட் பண்ணி இருக்கிறா. என்னால அவளை சிஸ்டரா ஏத்துக்க முடியாது. இங்கே வேலைக்கு வந்தால், தினம் தினம் பார்க்க வேண்டியதாயிருக்கும். நான் பார்க்க வேண்டாம்னு நினைச்சாலும், என்னோட மனசை, என்னால கட்டுப்படுத்த முடியுமான்னு தெரியல. பேசாம நான் விளாத்திகுளத்துக்கே போயிடலாம்னு நினைக்கிறேன்." என்று யோசித்தவன், அதை செயல்படுத்த ரூமுக்கு வந்தவுடன், மூர்த்தியிடம், இப்போதே தான் ஊருக்கு கிளம்புதாக சொன்னான்.

மூர்த்தி, "அந்த கம்பெனில வேலை கிடைக்காட்டி பரவால்லடா. வேற இடத்துக்கு ட்ரை பண்ணலாம். அதுக்காக ஊருக்கு ஏண்டா போகணுமுனு துடிக்கிற? "

"அந்த கம்பெனில எல்லாம், வேலை கிடைச்சிருக்கு. ஆனால் என்னால் அங்கே வேலை பார்க்க முடியாது."

"என்னடா சொல்ற? கிடைச்ச வேலையை உதறிட்டு. திருப்பி ஊருக்கு போகணும்னு சொல்ற."

"அச்சச்சோ வாய் உளறிட்டோமே..." என்று மனதிற்குள் எண்ணியவன், "ஆமா மூர்த்தி... அந்த கம்பெனில, எல்லாரும் தஸ்சுபுஸ்சுனு இங்கிலீஷ்ல பேசுறாங்க. எதுவும் சொன்னாலும் எனக்கு புரியாது. இப்படிப்பட்ட இடத்தில் என்னால் வேலை பார்க்க முடியாது மூர்த்தி."

அப்போது சரியாக சிவராமன் ரூமுக்கு வந்தான்.

அன்பு, "ப்ளீஸ் மூர்த்தி. என்னை தடுக்காதே நான் ஊருக்கு போறேன்."

சிவா, "என்ன ஆச்சு? உன் தம்பி ஊருக்கு கிளம்பிட்டான் போல இருக்கு." என்று மூர்த்தியை பார்த்து கேட்க.

மூர்த்தி, "வேலை கிடைச்சதும் எவனாவது ஊருக்கு போவாங்களாடா? வேலைக்கு வானு சொல்லி இருக்கிறாங்க. இப்ப இவருக்கு அங்கே பேசுற லாங்குவேஜ் புரியாதாம்மா. அதனால ஊருக்கு கிளம்புறாராம். இதெல்லாம் நம்பற மாதிரி இருக்கா?"

சிவா சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு. "அன்பு அந்த கம்பெனில யாரையும் லவ் பண்றியா டா?" என்று சரியாக கேட்டிருந்தான்.

அன்புக்கு தூக்கி வாரி போட்டது. "என்னண்ணே அப்படி சொல்றீங்க. வந்த ரெண்டு வாரத்துக்கு உள்ள, நான் எப்படி நீ லவ் பண்ண முடியும்?"

சிவா, ரெண்டு வாரத்துல காதல் வராது தாண்டா. உன்னோட பழைய காதலி இங்கே வேலை பார்க்கலாம். இல்ல உன்னோட பழைய நண்பர்கள் இங்கே வேலை பார்க்கலாம். இல்ல உன்னோட பழைய எதிரிகள் இங்கே வேலை பார்க்கலாம். அவங்கள நீ பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கலாம். திரும்பவும் அவங்க முகத்துல முழிக்க கூடாதுன்னு ஏதோ உதவாத ஒரு விஷயத்தை நீ தூக்கி சுமக்குறையோனு எனக்கு தோணுது. அதனால கேட்டேன். அப்படி எதுவும் இல்லைன்னால் நீ இந்த ஆகாத காரணத்த சொல்லி, ஊருக்கு கிளம்ப மாட்டே".

மூர்த்திக்கு தலையும் விளங்கவில்லை. காலும் விளங்கவில்லை. ஆனால் தன் தம்பி மீது இருந்த நம்பிக்கை குறையவில்லை. எப்படியும் அன்பு காதலித்து இருக்க மாட்டான். ஆனால் அவனை காயப்படுத்திய எதிரி யாரோ அந்த கம்பெனியில் வேலை செய்கிறார்கள் என்று எண்ணியவன். "அன்பு அவனைப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கி எத்தனை காலம்தான் வாழ முடியும்? கண் எதிர்க்க நீ ஜெயிச்சு காட்டணும்னு வைராக்கியத்தோட, அதே கம்பெனிக்கு வேலைக்கு போடா." என்று கெஞ்சுதலாக கேட்க.

அன்புக்கு, தட்டிக் கழிக்க வழி இல்லாமல் போனது. "சரி மூர்த்தி நான் அந்த கம்பெனிக்கு, இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து போறேன். ஆனா உன்னோட ரூம்ல தங்க மாட்டேன். கம்பெனி பக்கத்துலயே ரூம் பிடிச்சு போயிடுவேன். அதே போல வேற எங்கேயாவது வேலை கிடைச்சதுன்னா அங்கே உடனடியா மாறி போயிடுவேன்."

"எங்கநாளும் போடா. அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா ஊருக்கு மட்டும் போயிடாதே. மானம் போயிடும். போன கிழமை இருந்துட்டு, புதன்கிழமை திரும்பிட்டானு சிரிக்க போறாங்கடா."
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
அடேய் அன்பு,

தாமரைக்கும் உன்னைப் பிடித்திருப்பதா படுது. அவள் ஒண்ணும் சகோதரனா நினைக்கல.

அந்த லூஸு மாங்காய் மடையன் ஏதாவது சொன்னால் அதுக்கு இப்படியா அர்த்தம் காண்பிப்பது?

அவளின் தகுதிக்கு அவன் குறைவாக இருப்பதாக நினைப்பது பலரின் மனநிலையை காட்டியது.

வெயிட்டிங்...
 
Joined
Aug 24, 2025
Messages
93
Reaction score
37
Points
18
Age
43
அடேய் அன்பு,

தாமரைக்கும் உன்னைப் பிடித்திருப்பதா படுது. அவள் ஒண்ணும் சகோதரனா நினைக்கல.

அந்த லூஸு மாங்காய் மடையன் ஏதாவது சொன்னால் அதுக்கு இப்படியா அர்த்தம் காண்பிப்பது?

அவளின் தகுதிக்கு அவன் குறைவாக இருப்பதாக நினைப்பது பலரின் மனநிலையை காட்டியது.

வெயிட்டிங்...
நன்றி சகோ மிக்க மகிழ்ச்சி
 
Top Bottom