What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்யாயம் 6

Joined
Aug 24, 2025
Messages
93
Reaction score
37
Points
18
Age
43
மணலி வழித்தடத்தில், 21C, 21D என்று இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். 21C பேருந்து திருவெற்றியூர் வழியாக மணலிக்கும், 21d மாதவரம் வழியாக மணலிக்கு வரும் பேருந்துகள்.

தாமரை தினமும் 21D யில் பயணம் செய்வாள். வந்ததிலிருந்து அதை கவனித்துக் கொண்டிருந்த அன்பு, 21D யை விட்டுவிட்டு, 21Cல் ரெஸ்யூமை வைக்க வேண்டும். என்று முதல் நாள் இரவே திட்டமிட்டு இருந்தான்.

அப்போதுதான் தாமரைக்கு, தான் வேலையில்லாமல் சுற்றுவது தெரியாது. என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், திட்டமிட்ட படி, ரூமில் இருக்கும் அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு, தீபா பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு முன்னால். பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றான். அப்போதுதான் 21C பஸ் உள்ளே நுழைந்தது.

"நல்ல வேளைடா... பஸ் சீக்கிரம் வந்துருச்சு." என்று எண்ணி கொண்டான்.

பஸ்ஸில் இருந்த ஒன்று இரண்டு பேர்கள், இறங்கிக் கொண்ட பிறகு, பஸ்ஸுக்குள் ஏறிய அன்பு, ஒவ்வொரு சீட்டிலும், ஒவ்வொரு ரெஷ்யூமை வைத்துவிட்டு இறங்க.

அந்த பஸ்ஸின் கண்டக்டர், "இந்தாப்பா... இங்க வா.... உன் இஷ்டத்துக்கு குப்பையை போட்டுட்டு போனால் யாரு எடுத்த போடறது?"

அன்பு, "அண்ணே இது குப்பை இல்லை. பயோடேட்டா."

"வேலை தேடுறவன் கம்பெனி, கம்பெனியா ஏறி, இறங்கணும். அதை வுட்டுட்டு பஸ்ல பயோடேட்டா வச்சிட்டு இருக்கிற? முதல அல்லாத்தையும் எட்டுனு ஓடிப் போயிரு."

"சரிண்ணே,சரின்ணே" என்றவன், தான் வைத்த பயோடேட்டாக்களை, வேகமாக பொறுக்கிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கும்போது...

தீபா, பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து விட்டாள்.

"இன்னொரு தப்பா உன்ன பார்த்தேன்... அவ்வளவுதான்." என்று கண்டக்டர் அவனை எச்சரிக்கும் போது, தீபா நெருங்கி வந்து, "என்னன்ணா? என்ன பிரச்சனை? என்று கேட்டிருந்தாள்".

"பஸ் உள்ள வேலை தேடுறாராமா..." என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான் கண்டக்டர்.

அன்புக்கு அவமானமாக இருந்தது. யாருக்கு தெரியக்கூடாது என்று எண்ணி இருந்தானோ... தற்போது அவளே தெரிந்து கொள்ளப்போகிறாளே... என்று நினைத்தவன், மேலும் அங்கு நிற்க முடியாமல். வேக வேகமாக நடந்து, பஸ்டாண்டை விட்டு வெளியேறி சென்றான்.

அவன் கையில் இருந்து நழுவிய ரெஷ்யூமை கையில் எடுத்துக் கொண்டாள் தீபா.

கொஞ்ச நேரத்தில் தாமரையை, அவளது அப்பா கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார்.

அவர்கள் செல்லவிருக்கும் பேருந்தும் வந்து நிற்க, இருவரும் ஒன்றாக ஏறி அமர்ந்தார்கள்.

தாமரை, தீபாவின் முகத்தை ஆராய்ந்து, "ஏன் தீபா இன்னைக்கு டல்லா இருக்கீங்க?"

தீபா, தன் கையில் வைத்திருந்த ரெஸ்யூமை தாமரை இடம் காட்டி, "இதுதான் காரணம் என்றாள்."

வாங்கி பார்த்த தாமரை, "ரெஸ்யூம்ல என்ன பிரச்சனை?"

தீபா, "இது யாரோட ரெஸ்யூம்னு தெரியுமா?"

தாமரை, "சொன்னாதானே தெரியும்."

"ரெண்டு மூணு நாளா... பஸ் ஸ்டாண்ட்ல நின்னு, உங்களையே ஒருத்தன் பாத்துட்டு இருப்பானே அவனோட ரெஸ்யூம்."

தாமரை, "அது எப்படி உங்களுக்கு கிடைத்தது?"

தீபா, தாமரை இடம் நடந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல.

தாமரை, "ரெஸ்யூமை வச்சதுக்காகவா... கண்டக்டர் திட்டுனாரு?"

"பாவம் தாமரை. தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட்ல இருந்து இங்கே வந்து, வேலை தேடிட்டு இருக்றான். அவரோட பஸ்ல வைக்க கூடாதுன்னு ஒத்த வார்த்தைல சொல்லி இருந்தா கூட பரவால்ல. வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசிட்டாரு."

தாமரை, "தீபா... இன்னைக்கு நீங்க அவனுக்காக ரொம்ப உருகுறீங்க போல."

தீபா, "அந்த நேரம் நீங்க இருந்திருந்தீங்கன்னா... அழுது இருப்பீங்க. அவன் முகம் போன போக்கை பார்த்தும் கண்டக்டருக்கு இரக்கம் வராமல் போனது தான் வருத்தம்."

"ஓகே தீபா... இந்த ரெஷ்யூமை, நீங்க வச்சு என்ன செய்யப் போறீங்க?"

"ஒரு ரெஸ்யூமை நம்ம கம்பெனிலையும், இன்னொன்னை எங்க அண்ணா கிட்டயும் கொடுக்கலாம்னு எடுத்து வச்சிருக்கேன்"

"சரி தீபா... இந்த ரெஸ்யூமை, நான் ஜிஎம்ட கொடுத்துடுறேன். அதை நீங்க உங்க அண்ணா கிட்ட கொடுத்துடுங்க."

"தேங்க்ஸ் தாமரை"

"முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்காக, ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற நீங்க கிரேட் தீபா. நான் உங்கட்ட இருந்து வாங்கி, அங்கே கொடுக்க போறேன் எனக்கு எதுக்காக தேங்ஸ் சொல்ரீங்க?"

"என்னை நீங்க ரொம்பவே புகழ்றீங்க",. என்று பேசிய படியே பேருந்தில் பயணப்பட்டார்கள்.

தாமரை, கம்பெனிக்குள் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து பிறகு, நிதானமாக அந்த ரெஸ்யூமை எடுத்து படித்துப் பார்த்தாள்.

நேம்: அன்பழகன் என்பதை பார்த்தவள், "உன்னோட பேரு அன்பழகனா? அவ்ளோ கூட்டத்துல அப்படி என்னை உத்து பாக்குறயே டா... அழகா". என்றவள், தனது நாக்கை கடித்து நாணம் கொண்டாள். "நானும் உன்னை டீப்பா வாட்ச் பண்ணிட்டு தான் இருந்திருக்கிறேன் போல இருக்கே" என்று எண்ணியவள், ஜி எம் அறைக்கு, அட்டன்டன்ஸ் புக். அவளது கையடக்க லெட்டர் பேடு. அத்தோடு அன்பழகனின் ரெஸ்யூமையும் சேர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

முதலில் அட்டனன்ஸ் புக்கை, ஜி எம் இடம் காண்பித்து. அவரது வருகையை பதிவு செய்து வாங்கிக்கொண்டு. தன்னுடைய லெட்டர் பேடை எடுத்து, எழுதி வைத்திருந்த குறிப்புகளை வரிசைப்படுத்தி, அவருக்கு தெரிவித்து விட்டு. இறுதியாக "சார் ஒரு அப்ளிகேஷன்..." என்று அன்பழகனின் ரெஸ்யூமை நீட்டினாள்.

மனோகர், ரெஸ்யூமை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று கேட்க.

தாமரை, மறுப்பு சொல்லாமல், "எங்க ஏரியாலதான் தங்கி இருக்கிறார்." என்று பதில் சொன்னாள்.

மனோகர், "ஓகே.
அப்போ ரெபர்டுபை தாமரைன்னு எழுதுறேன்." என்று அந்த ரெஸ்யூமின் அடி பக்கத்தில் எழுதிவிட்டு. மீண்டும் அவளிடமே கொடுத்து. இதை ஹெச் ஆர்ட்ட சப்மிட் பண்ணிடுங்க." என்று அனுப்பி வைத்தார்.

தாமரை மீண்டும் ரிசப்ஷன் ஹாளுக்குள் வர, அங்கே சங்கர் காத்துக் கொண்டிருந்தான்.

தாமரையை பார்த்தவுடன் "குட் மார்னிங் மேடம்" என்று சொல்லிவிட்டு. "எனக்கு ஏதாவது வேலை இருக்கா?" என்று கேட்டான்.

தாமரை, "இவன் எதைப் பற்றி கேட்கிறான்னு தெரியலையே..." என்று யோசித்தவள், "ஒரு சின்ன ஹெல்ப். "

சங்கர், "சொல்லுங்க மேடம். உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் இப்ப வந்தேன்."

தாமரை, கையில் வைத்திருந்த ரெஸ்யூமை, அவனிடம் கொடுத்து. "இதை ஹெட் ஆர்ட்ட கொடுத்துட்டு போயிடுங்களேன்..." என்று சொல்லிவிட்டு. அவளது டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சங்கர், ரெஸ்யூமை, புரட்டி புரட்டி பார்த்துவிட்டு. அந்த ஹாலை விட்டு வெளியேறினான் போகும் வழியில் படித்துக் கொண்டு சென்றான். பெயரைப் பார்த்தான், அன்பழகன் என்றிருக்க. அன்பழகா... நீ மேடமுக்கு அண்ணனா? தம்பியா? யாரா இருந்தா என்ன? எனக்கு நீதான் மச்சான்." என்று சொல்லிக் கொண்டான். ஹெச் ஆர் அறையில் சென்று, ஹெச் ஆர் ஐ பார்த்து கொடுத்துவிட்டு சென்றான்.

அன்பு, காலையில் பஸ் ஸ்டாண்டில், கண்டக்டர் இடம் விரட்டப்பட்டு வந்த பிறகு, பஸ் ஸ்டாண்ட் பக்கம் போவதற்கே பிடிக்காமல் ரூமின் உள்ளேயே அடைந்து கிடந்தான்.

மறுநாள், தாமரை வழக்கம்போல் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, அன்பு எங்காவது நின்று கொண்டிருக்கிறானா என்று கண்களால் அலசினாள்.

தீபா, "என்ன மேடம்? நேத்து வந்த திருடன். இன்னைக்கு ஏன் வரலைன்னு தேடுறீங்க போல இருக்கு."

தாமரை, "நான் ஒன்னும் அவனை தேடலையே..."

"யார் அந்த அவன்? திருடனா?" என்று கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்தாள் தீபா.

இப்படியே இரண்டு நாட்களுக்கு மேல் கடந்து விட்டது.

தாமரை, தீபாவிடம் வாய் விட்டே கேட்டுவிட்டாள். "அன்னைக்கு நடந்த இன்ஸிடெண்டுக்காக, அவன் பஸ் ஸ்டாண்டுக்கே... வர்றதில்ல போல இருக்கே?

"அவனும் மனுஷன் தானே தாமரை. இவ்ளோ கூட்டத்துல, அவனை அசிங்கப்படுத்தினால், எப்படி திரும்ப அதே இடத்துல வந்து தலை காட்டுவான்?"

தாமரை, "அதுவும் சரிதான்", என்று சோர்வாக பஸ் ஏறி அமர்ந்தாள்.

அன்று மாலையில்,
கணேஷ், மூர்த்திக்கு போன் செய்து, டேய்... எங்க கம்பெனியோட எலக்ட்ரிக்கல் என்ஜினியர், உன் தம்பியை பார்க்கிறதுக்காக கூப்பிட்டு இருக்காரு டா... அவனை திருவொற்றியூர் ஸ்டாப்ல வந்து நிக்க சொல்லு" என்று சொன்னான்.

மூர்த்தி, "சரிடா இப்பவே, நாங்க ரெண்டு பேரும் வர்றோம்."

கணேஷ், "நீ எதுக்கு? உன்ன பார்த்துட்டு, கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான். அவன் என்ன குழந்தையா? அவனை மட்டும் அனுப்பு."

மூர்த்தி, "சரிடா," என்று சொல்லிவிட்டு. அன்புவை 21சி பஸ் ஏற்றி, திருவொற்றியூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நிற்க சொல்லி அனுப்பி வைத்தான். அதோடு ஒரு ரெஸ்யூம், மற்றும் கணேசனின் போன் நம்பரையும், சேர்த்து கொடுத்து அனுப்பி இருந்தான்.

அன்பு திருவொற்றியூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அருகில் இருக்கும் காயின் பாக்ஸ் டெலிபோனில், கணேசனுக்கு போன் செய்து, தான் திருவொற்றியூர் வந்து விட்டதாக சொன்னான்.

கணேசன், இன்ஜினியரை அழைத்துக் கொண்டு, டூவீலரில் அன்புவின் முன்பு வந்து இறங்கினான்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், அன்புவை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு. ரெஸ்யூமை வாங்கி படித்துப் பார்த்தார். நீங்க வேலை பார்த்த இடத்தில, டெய்லி ஷெட்யூல் ஒர்க் என்ன பார்ப்பிங்க? என்று கேட்க.

அன்பு, "மெஷின்ல ஃபால்ட் வந்தா அட்டென்ட் பண்ணுவோம். பவர் கட் ஆனா ஜெனரேட்டரை ஆன் பண்ணி, பவர் சப்ளை கொடுப்போம்". என்று தயங்கி தயங்கி பதில் சொன்னான்.

இன்ஜினியர், "சரி எங்களுக்கு தேவைப்படும்போது, கணேசன் சார் கிட்ட சொல்லி அனுப்புறோம்." என்று சொல்லிவிட்டு. அவரது பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

மீண்டும் கணேசனும், அன்புவும், திருவொற்றியூரில் இருந்து, மணலிக்கு வந்து சேர்ந்தார்கள்.

ரூம் உள்ளே நுழைந்ததும்,
கணேசன், மூர்த்தியை பார்த்து, எதுக்கும் ஆகாத மண்ணாங்கட்டியடா உன் தம்பி? ஒரு கேள்வி கேட்டா... ஒழுங்கா பதில் சொல்ல தெரியல, இவன் எப்படி இந்த ஊர்ல இருந்து சமாளிப்பான். ஒவ்வொருத்தன், தெரியலன்னாலும் பில்டப் கொடுத்து பேசுவானே...அதுவுமா சொல்லி கொடுப்பாங்க?"

அன்பு, "அண்ணே... மொத மொதல்ல அவரை பார்க்கிறதுனால, கொஞ்சம் படபடப்பா இருந்தது. அதனால அப்படி பேசினேன். அதுவும் இல்லாம எனக்கு இங்கிலீஷ் அவ்வளவு நல்லா பேச வராது. மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பேனே தவிர, பேசுவதற்கு வராது."

கணேசன், "அவர் உன்கிட்ட இங்கிலீஷ்லயா பேசினார்? உனக்கு புரியிற மாதிரி தானே கேள்வி கேட்டாரு? அதுக்கு, அவருக்கு புரியிற மாதிரி பதில் சொல்ல எதுக்குடா இங்கிலீஷ் வேணும்? தமிழ் தான் நல்லா பேசுவியா? அதுலயே பதில் சொல்ல வேண்டியது தானடா? அந்த ஆள், ஒரு ஆள் வேணும்னு சொல்லி தான் வந்தாரு. இப்ப சொல்லி அனுப்புறேன்னு போறாரு. அப்ப உன்னோட பர்பாமன்ஸ் எப்படின்னு உனக்கே தெரியலயா?" என்று சலித்துக் கொண்டான்.

இப்படியே அந்த வாரம் கடந்து சென்றது. திங்கட்கிழமை, மதிய சாப்பாட்டை முடித்து அமர்ந்திருந்த மூர்த்திக்கு, ஏபிசி பெயிட் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது.

"ஹலோ அன்பழகன் சாரா?"

மூர்த்தி, "அன்பழகன் என்னோட தம்பி தான்" நீங்க யாரு?

"சார் கம்மிங் வெட்னஸ்டே அவருக்கு இன்டர்வியூ இருக்கு. abc பெயிண்ட்ஸ்க்கு வர சொல்லிடுங்க."

"ஓகே... ஓகே... கண்டிப்பா சொல்லிட்ரேன்."

மூர்த்திக்கு இந்த தகவலை கேட்ட பிறகு இருப்புக் கொள்ளவில்லை. எப்போது கம்பெனி முடியும் என்று நேரத்தை பார்த்துக் கொண்டே வேலையை கவனித்தான்.

ஆறு மணிக்கு, ரூமுக்கு வந்தவுடன், அன்புவை சந்தித்து, "டேய் ஏபிசி கம்பெனியில உன்னை இன்டர்வியூக்கு கூப்பிட்டு இருக்காங்க டா... புதன் கிழமை போகணும். அங்கையாவது ஒழுங்கா பதில் சொல்லுடா. நீ இங்கிலிஷ்ல பேச வேண்டிய அவசியமே இல்லை. உனக்கு தெரிஞ்சதை, தெளிவா தமிழ்லயே சொல்லித் தொலை. தயவு செஞ்சு தயங்கி தயங்கி பேசாதடா." என்று சொல்லி தயார்படுத்தி வைத்திருந்தான்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு, மணலி பஸ் ஸ்டாண்ட் சென்று, பஸ்ஸில் ஏறி அமர்ந்து, கண்டக்டர் இடம், ஏபிசி பெயிண்ட் நிறுவனம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு. அங்கே இறக்கி விடச் சொன்னான். பஸ் அவ்விடத்தில் நின்று, அன்புவை இறக்கிவிட,

மெயின் கேட்டில் இருக்கும் செக்யூரிட்டி இடம், தான் இன்டர்வியூக்கு வந்திருப்பதாக தகவல் தெரிவித்து விட்டு காத்திருந்தான்.

செக்யூரிட்டி இண்டர்ர்க்காமல் தொடர்பு கொண்டு, அன்பு வை எங்கே வரச் சொல்ல என்று கேட்டு? பின் ரிசப்ஷன் ஹாளுக்கு பாதை காண்பித்து அனுப்பி வைத்தார்.

அந்த நிறுவனத்தில், மெயின் கேட்டுக்கு எதிர்ப்புறத்தில், ரிசப்ஷன் ஹால் அமைந்திருந்தது.

அன்பு, சென்னை வந்த பிறகு, முதன் முதலாக ஒரு தொழிற்சாலைக்குள் இப்போதுதான் நுழைகிறான். முகப்பை பார்த்து பிரமித்தவன், மெல்ல நடந்து வந்து, கண்ணாடி கதவை திறக்க, கைநீட்டிய போது, கதவு தானாகவே திறந்து வழி விட்டது. ஆட்டோமேட்டிக் டோர் லாக் சிஸ்டத்தை கேள்விப்பட்டிருக்கிறான். இப்போதுதான் அதை நேரில் பார்க்கிறான். அதே பிரமிப்போடு நிமிர்ந்தவன், எதிரில் தோரணையாக அமர்ந்திருந்த தாமரையை பார்த்து வியந்து போய் நின்றான்.

தாமரை, "வெல்கம் சார்... இப்படி உட்காருங்க. இப்ப கூப்பிடுவாங்க." என்று அவனை இருக்கையில் அமர சொன்னாள்.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
அருமையான பதிவு

தாமரை & தீபாவின் உதவியால் அன்புவுக்கு வேலை கிடைக்க போகிறது.

இங்கு எப்படி சமாளிக்க போகிறான் பார்க்கலாம்.
 
Joined
Aug 24, 2025
Messages
93
Reaction score
37
Points
18
Age
43
அருமையான பதிவு

தாமரை & தீபாவின் உதவியால் அன்புவுக்கு வேலை கிடைக்க போகிறது.

இங்கு எப்படி சமாளிக்க போகிறான் பார்க்கலாம்.
நன்றி சகோ மிக்க மகிழ்ச்சி
 
Top Bottom